நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
பெர்லிஸ் பெர்சத்து கிட்டத்தட்ட 4,000 அம்னோ உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டுள்ளது
14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பெர்லிஸ் பெர்சத்து கிட்டத்தட்ட 4,000 முன்னாள் அம்னோ உறுப்பினர்களை அதன் உறுப்பினர்களாக சேர்த்துக்கொண்டுள்ளது. யார் வேண்டுமானாலும் பெர்சத்துவில் சேரலாம். தொகுதி அல்லது மாரில அளவில் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டால், அவர்கள் நேரடியாக தலைமையகத்திற்கு மனு செய்யலாம் என்று…
ஒஸ்மான் சாபியான் : வாய்ப்பு, வசதிகள் அனைவருக்கும் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட…
இந்த நாடு பல துறைகளிலும் முன்னேற்றம் அடைய, அனைத்து இனங்களும் பாகுபாடின்றி தங்களை அர்ப்பணித்தன. ஆக, வாய்ப்பு, வசதிகள் இன, மத பேதமின்றி அனைவருக்கும் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியான் கூறியுள்ளார். நேற்றிரவு, ஜொகூர், தாமான் ஜொகூர் ஜெயாவில், ஜொகூர் பிகேஆர்…
நஜிப்: எண்ணெய் லிட்டருக்கு RM1.50 என்று அரசாங்கம் பொய் சொல்லத்…
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதாக உறுதியளித்து, பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான புதிய அரசாங்கம் மக்களை ஏமாற்றிவிட்டது என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றம் சாட்டினார். அந்த வாக்குறுதியை, ஹராப்பான் அரசாங்கத்தால் நிச்சயம் காப்பாற்ற முடியாது எனத் தனக்கு தெரியும் என்றும் அவர் கூறினார். “எண்ணெய் விலையை…
அரிப் மக்களவைத் தலைவர்: மகாதிர் உறுதிப்படுத்தினார்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பக்கத்தான் ஹரப்பானின் புதிய மக்களவைத் தலைவர் வேட்பாளர் முன்னாள் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகம்மட் அரிப் முகம்மட் யூசுப்-தான் என்பதை இன்று உறுதிப்படுத்தினார். செய்தியாளர் கூட்டமொன்றில் மகாதிரிடம் மக்களவைத் தலைவர் யார் என்று வினவியதற்கு “அவர் ஒரு முன்னாள் நீதிபதி” என்றவர் சொன்னார்.…
அன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டி
அன்வார் இப்ராகிம் எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார். அன்வார், ஓர் அறிக்கையில் நடப்புக் கட்சித் தலைவரும் தம் மனைவியுமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடனும் கட்சித் தலைமையிடமும் கலந்துபேசிய பின்னரே இம்முடிவுக்கு வந்ததாகக் கூறினார். வான் அசிசா இத்தனை ஆண்டுகளாய் …
முன்னாள் ஏஜி அபாண்டி இப்போது அம்னோ உச்சமன்ற உறுப்பினர்
அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிட் அம்னோ உச்சமன்றத்திற்கு 11 உறுப்பினர்களை நியமித்துள்ளார். அவர்களில் ஒருவர் முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) முகமட் அபாண்டி அலி. அபாண்டி சட்டத்துறை பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவர் இடத்தில் டோமி தோமஸ் ஏஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் முன்னாள்…
விக்னேஸ்வரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்
நாடாளுமன்ற செனட் சபையின் தலைவர் எஸ்எ விக்னேஸ்வரன் மஇகாவின் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தின் இடத்தில் மஇகாவின் 10 ஆவது தலைவராகிறார் விக்னேஸ்வரன். மஇகா தலைவர் பதவிக்கு விக்னேஸ்வரன் 1,808 நியமனப் பத்திரங்களைப் பெற்றதாகவும், அப்பதவிக்கு வேறு வேட்பாளர் யாரும்…
சிஜே: ஏற்கத்தக்க காரணங்கள் இருந்தால் வழக்கு ஒத்திவைப்பு அனுமதிக்கப்படும்
தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலஞ்சோம், 'மரணப் பிடியில் அல்லது கிட்டத்தட்ட மரணப் பிடியில் இருந்தால் மட்டுமே’ வழக்கு ஒத்திவைப்பு' என்று தமக்கு முன்னிருந்தவர் கடைப்பிடித்துவந்த முறையைத் தாம் பின்பற்றப் போவதில்லை என்று நேற்று மலேசிய வழக்குரைஞர் சங்கத்திடம் தெரிவித்தார். காரணங்கள் ஏற்கத்தக்கவையாக இருந்தால் வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதற்கு …
வாகன எண் பட்டை விற்பனை மூலம் பெர்லிஸ் ஆர்டிடி வருமானம்…
பெர்லிஸ் சாலைப் போக்குவரத்துத் துறை 2015-இலிருந்து கடந்த ஆண்டுவரை வாகன எண் பட்டைகளை ஏலத்தில் விட்டதன் மூலம் ரிம45.17 மில்லியனை வருமானமாகப் பெற்றது. கடந்த ஆண்டு விற்கப்பட்ட ‘RR’ தொடர் எண்கள் மூலம்தான் அதிக பணம், ரிம12.2 மில்லியன், கிடைத்ததாக அதன் இயக்குனர் ஷாருல் மாட் அலி கூறினார்.…
முகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறாரா ஜோ லோ?
தொழில் அதிபர் ஜோ லோ, ஆண்டுத் தொடக்கத்தில் அவரது ஆடம்பரக் கப்பல் ஈக்குவானிமிடி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து முகத்தைத் திருத்தி அமைக்கும் சிகிச்சை செய்துகொண்டு புதிய முகத்துடன் உலவுகிறாராம். த ஸ்டார், அடையாளம் குறிப்பிடப்படாத ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி இதைத் தெரிவித்தது. மலேசிய, சிங்கப்பூர் போலீசார் லோ …
ஹரப்பான் அரசு பத்திரிகைச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும்
பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. மலேசியா இப்போது ஜனநாயக முதிர்ச்சி பெற்ற நாடு என்ற இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கூறிய வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா, அந்த இலக்கை அடைவதற்கு ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது என்றார். அரசாங்கம் வெளிப்படையாக நடந்து கொள்கிறது, …
‘எதிர்கால மலேசிய அரசியலைக் கட்டமைப்போம்’ – பி.எஸ்.எம்
மலேசிய சோசலிசக் கட்சியின் 20 ஆவது தேசிய மாநாடு, ‘பி.எஸ்.எம். - மக்களின் எதிர்கால அரசியல்’ என்ற கருப்பொருளோடு, இன்று பேராக், ஈப்போவில் தொடங்கியது. 14 ஆவது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், பல அரசியல் கட்சிகள் தங்கள் சேவை மையங்களை மூடிய வேளை, சில அரசியல் கட்சிகள்…
முறையாக அறிவிக்கப்படவில்லை என்றால், ரொஸ்மாவின் ஆபரணங்களைப் பறிமுதல் செய்யலாம் –…
முன்னாள் பிரதமரின் மனைவி ரொஸ்மா மன்சோர் -க்கு அனுப்பப்பட்ட லெபனான் நிறுவனங்களின் பொருட்கள், சுங்கத்துறையிடம் முறையாக அறிவிக்கப்படவில்லை என்றால், அவை பறிமுதல் செய்யப்படலாம். போலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 44 செட் நகைகள் பற்றி கேட்டபோது, சுங்கத்துறை இயக்குநர் ஜெனரல் டி சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார். "போலிசார் எங்களைத் தொடர்பு…
சுங்கை காண்டிஸ் இடைத்தேர்தலில் ஹரப்பான் பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்தும்
சுங்கை காண்டிஸ் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துவார் என்பதை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இன்று உறுதிப்படுத்தினார். இம்முடிவு ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அமிருடின் கூறினார். பிகேஆர் சின்னம் சுங்கை காண்டிஸில் நன்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. அந்த இருக்கைகையை தொடர்ந்து…
ஸகீரை திருப்பி அனுப்புவதற்கான முறையான வேண்டுகோளை இந்தியா விடுத்துள்ளது, இராமசாமி…
சர்ச்சைக்குரிய இந்தியாவின் இஸ்லாமிய சமய போதகர் ஸகிர் நாய்க்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியா முறையான வேண்டுகோள் விடுத்துள்ளதா என்பது பற்றி முரண்பாடான கோரிக்கைள் எழுந்துள்ளன. இந்தியா முறையான வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற கருத்தை மலேசிய அமைச்சர்கள் கோபிந்த் சிங் டியோவும் மு. குலசேகரனும்…
இந்திய பாரம்பரிய தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறை, தீர்வு கண்டிட மனிதவள…
(அமைச்சர் குலாவுடன் முத்துசாமி திருமேனி, ஜவுளிக்கடை உரிமையாளர் சங்க செயலாளர் திருமதி மகேஸ்வரி உட்பட இந்திய வர்த்தக-தொழிற்சங்க பொறுப்பாளர்கள்) மலேசிய இந்திய பாரம்பரியத் தொழில்கள், தொழிலாளர் பற்றாக்குறையால் தொடர்ந்து நலிந்து வரும் நிலையில், தற்பொழுது இது குறித்து உள்துறை அமைச்சரிடம் பரிந்துரை செய்யப் போவதாக இந்திய வர்த்தக சங்கத்…
முகைதின் மருத்துவ விடுப்பில்; மகாதிர் உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார்
உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் மருத்துவ விடுப்பில் இருப்பதால், பிரதமர் மகாதிர் உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். கணையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அறுவைச் சிகிட்சையைத் தொடர்ந்து முகைதின் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். அடுத்த மாதம் அவர் மீண்டும் பணியைத் தொடங்குவார். முகைதினுக்கு செய்யப்பட்ட அறுவைச் சிகிட்சை…
கோபிந்த்: ஸக்கீர் நாய்க் விவகாரத்தை அமைச்சரவை விவாதித்தது
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸக்கீர் நாய்க்கின் விவகாரம் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது என்று தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த சிங் இன்று கூறினார். இந்திய அரசாங்கம் ஸக்கீரை திருப்பி அனுப்புவதற்கான சரியான சட்ட விளக்கத்தை அளித்தால், அரசாங்கம் சட்ட ஆளுமையைப் பின்பற்றி அதற்கேற்ப…
ஜோ லோ சீனாவில் இல்லையாம்: சீனா அதிகாரி கூறுகிறார்
மலேசிய தொழில் அதிபர் ஜோ லோ சீனத் தலைநிலத்தில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுவதை சீனா அதிகாரி ஒருவர் மறுத்தார் என சவுத் சைனா மார்னிங் போஸ்ட் கூறியது. அந்த நாளேடுதான் ஏற்கனவே லோ, மக்காவிலிருந்து தலைநிலத்துக்குத் தப்பி ஓடியதாக செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அச்செய்தியை சீனா அதிகாரி நிராகரித்தார்.…
சட்டத்துறையில் முஸ்லிம்- அல்லாதார் ஆதிக்கத்தால் முஸ்லிம்கள் அதிருப்தியாம் : பாஸ்…
பக்கத்தான் ஹரப்பான் நாட்டின் சட்டத்துறையில் செய்துள்ள நியமனங்களைக் கண்டு முஸ்லிம்கள் அதிருப்தியுற்றிருப்பதாக பாஸ் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார். மூத்த நீதிபதி ரிச்சர்ட் மலஞ்சோம் நாட்டின் தலைமை நீதிபதியாகவும் லியு வுய் கியோங் சட்ட அமைச்சராகவும் டோம்மி தாமஸ் சட்டத்துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருப்பதைத்தான் நஸ்ருடின் குறிப்பிடுகிறார். நாட்டின் …
செலவு குறைக்கப்பட்டதால் எல்ஆர்டி3க்குப் பச்சைக் கொடி
எல்ஆர்டி3 திட்டத்தைத் தொடர்வதற்கு அரசாங்கம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. அத்திட்டத்துக்கான செலவு ரிம16.63 பில்லியனுக்குக் குறைக்கப்பட்டதை அடுத்து அதைத் தொடர அரசாங்கத்தின் அனுமதி கிடைத்துள்ளது. செலவு 47 விழுக்காடு குறைக்கப்பட்டது என்றும் இதனால் நாட்டுக்கு ரிம15.02 பில்லியன் மிச்சப்படும் என்றும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். …
ரிச்சர்ட் மலான்ஜும் புதிய தலைமை நீதிபதியாக பதவி உறுதிமொழி எடுத்துகொண்டார்
சாபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் இன்றிரவு புதிய தலைமை நீதிபதியாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். நாட்டின் மிக உயர்ந்த நீதிபதி பதவிக்கு போர்னியோ மாநிலங்களிலிருந்து நியமிக்கப்பட்ட முதல் நபர் இவர் ஆவார். மலாயாவின் தலைமை நீதிபதி அஹமட் ம'ரோப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்…
அடுத்த நாடாளுமன்ற மக்களைவைத் தலைவர் முன்னாள் நீதிபதியா?
முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் அரிப் யூசுப் நாடாளுமன்ற மக்களவையின் தலைவராக நியமிக்கப்படுவதில் பக்கத்தான் ஹரப்பான் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இப்பதவிக்கு முன்னர் முன்மொழியப்பட்ட வேட்பாளர்கள், குறிப்பாக பிகேஆர் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல், சர்ச்சைகளை உண்டுபண்ணியுள்ளனர். இப்போது அப்பதவிக்கு தேர்வு செய்யப்படக்…
























