பினாங்கு மாநிலத்தைச் சீரமைக்க ரிம100 மில்லியன், முதலமைச்சர் அறிவிப்பு

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பினாங்கு மாநிலத்தை சீரமைத்து அது பழைய நிலைக்கு மீட்சிபெற அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் ரிம100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய வழக்கமான நிலைக்குத் திரும்பி வந்து பினாங்கை அதன் முன்னாள் மகிமைக்கு இட்டுச் செல்வதற்காக…

தேசிய நல்லிணக்கச் சட்டத்திற்கான திட்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது!

    நாடாளுமன்றம்: திட்டமிடப்பட்டிருந்த தேசிய நல்லிணக்கச் சட்டம், இத்திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குமுன் அறிவிக்கப்பட்டது, இன்னும் நிறைவேற்றப்படவில்லை. முன்மொழியப்பட்ட இச்சட்டம் இன்னும் கைவிடப்படவில்லை. அது இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசெப் குருப் கூறினார். அதற்கு நேரம் தேவைப்படுகிறது, ஏனென்றால் நாங்கள் தேசிய ஒற்றுமை ஆலோசனை…

தலைமை நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்றத்திற்கு மலேசியன் பாரின் ஆறு…

  கட்டாயமாக ஓய்வு பெறும் வயதான 66 வருடங்கள் 6 மாதத்தைக் கடந்த பின்னர் நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் தலைமை நீதிபதியாகவும், நீதிபதி சுல்கெப்ளி அஹமட் மக்னினுடின் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவராகவும் நியமிக்கப்பட்டது சம்பந்தமாக மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் (பார்) பெடரல் நீதிமன்றத்திடம் ஆறு கேள்விகளை முன்வைக்க…

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறது

  ரோன்95 விலை ஒரு லீட்டருக்கு 7 சென் உயர்வு கண்டு ரிம2.31 க்கு விற்கப்படும். ரோன்97 ஒரு லீட்டருக்கு 6 சென் உயர்வு கண்டு ரிம2.60 க்கு விற்கப்படும். டீசல் விலை 3 சென் உயர்ந்து ஒரு லீட்டர் ரிம2.20 க்கு விற்கப்படும். இந்த விலை உயர்வு…

சிலாங்கூரின் கிஸ் பிரிம்மைவிட மிக மேலானது

  புத்ரா ஜெயாவின் பிரிம்மைவிட (BR1M) சிலாங்கூர் மாநிலத்தின் காசே இபு ஸ்மார்ட் சிலாங்கூர் (KISS) மிகச் சிறந்ததாக விளங்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் டாரோயா அல்வி கூறுகிறார். கிஸ்சிற்கு தகுதி பெறுபவர்கள் உணவுப் பொருள்கள் மற்றும் பள்ளி உடுப்புகளுக்கு ரிம200 பெறுவர், வருடத்திற்கு…

ஷாபி: நஜிப் ரிம9.5 மில்லியன் கொடுத்தார் என்பது முட்டாள்தனமானது

  பிரதமர் நஜிப் ரிம9.5 மில்லியனை வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு கொடுத்தார் என்று கூறப்பட்டு வந்துள்ளது பற்றி இதுவரையில் மௌனமாக இருந்து வந்த அவர், அவ்வாறு கூறப்படுவதை முட்டாள்தனமானது என்று கூறினார். அன்வார் இப்ராகிமின் தகா உறவு வழக்கு IIஇல் அரசு தரப்பு வழக்குரைஞராகச் செயல்பட்ட ஷாபி,…

2018-ல் வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருக்கும் , நிபுணர்கள் ஆருடம்

2008-ல், வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பட்டதாரிகள் மற்றும் வேலை அனுபவமும் இல்லாதவர்களுக்குத் திருப்திகரமான ஊதியத்தில் வேலை கிடைப்பது சவாலாக இருக்குமென வல்லுநர்கள் கூறுகிறார்கள். புதிய பதவிகளை வழங்குவதில் நிறுவனங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். குறைந்த ஊதிய வேலைகளைப் பெற அல்லது ‘உபர்’…

பூகிஸ் விவகாரம்: சிலாங்கூர் சுல்தானிடம் பிஎன் பிரதிநிதிகளின் மனு அளிக்கப்படும்

சிலாங்கூர் மாநில சட்டமன்றம் மகாதிர் "பூகிஸ்" என்று கூறியிருந்தது பற்றி பாரிசான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிதலை நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர்கள் நாளை சிலாங்கூர் சுல்தானிடம் ஒரு மனுவை அளிக்கவிருக்கின்றனர். மகாதிரை கண்டிக்க சிலாங்கூர் அரண்மனை எடுத்திருந்த முடிவை பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாக அந்த மனுவில் கூறப்படும்…

அன்வாருக்குச் சிறந்த சிகிச்சை வழங்கப்படும், துணைப் பிரதமர் உறுதியளித்தார்

சிறைச்சாலையில் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிமுக்கு அரசாங்கம் சிறந்த சிகிச்சையை அளிக்கும் எனத் துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி உறுதியளித்தார். ஞாயிறன்று, தோள்களில் அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடப்பட்ட அன்வாருக்கு, நிபுணத்துவ மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் அவர் கூறினார். "பொருத்தமான, நிபுணத்துவ மருத்துவர்களால்…

லிம் : வெள்ள நிவாரணத்திற்கான புதிய நிதி எதனையும் நஜிப்…

பினாங்கில் வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கான புதிய ஒதுக்கீடுகள் எதனையும் பிரதமர் நஜிப் அறிவிக்கவில்லை என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர், மலேசிய திட்டத்தின் கீழ், வெளியிடப்படாத வெள்ள நிவாரண திட்டங்களுக்கான 1 பில்லியன் ரிங்கிட்டையே  நஜிப் குறிப்பிட்டார் என லிம் விளக்கப்படுத்தினார். நேற்று,…

பினாங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,294 ஆக உயர்ந்தது

  பினாங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,294 க்கு உயர்வு கண்டுள்ளது. போலீஸ் வெள்ள நடவடிக்கை அறையின் பேச்சாளர் இன்று மதியம் அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களிலுள்ள 50 நிவாரண நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். இன்று காலையில் செபராங் பிறை செலாத்தானில்…

அன்வாருக்கு அறுவைச் சிகிட்சை

  பக்கத்தான் ஹரப்பானின் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவரது தோளில் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சனைக்கு அறுவைச் சிகிட்சை செய்யப்படவிருக்குறது. செப்டெம்பர் 22 இல் ஏற்பட்ட ஒரு மோட்டார் சைக்கில் விபத்து காயத்தை மேலும் சீர்கெடச் செய்து விட்டதால் அறுவைச் சிகிட்சையை இனிமேலும் தள்ளிப்போட…

புதிய முறையில் தமிழ்ப் பாடம் நடத்திய மா.நன்னன் காலமானார்

மலேசியவாழ் தமிழ் மக்களுக்கு நீண்ட காலம் தொன்மொழியாம் தமிழைப் பயிற்றுவித்த மூத்த தமிழறிஞரும் இலக்கியப் படைப்பாளரும் இன உணர்வாளரும் பகுத்தறிவாளருமான பேராசிரியர் மா. நன்னன் தமிழகத்தின் தலைநகரில் காலமானார். ஆஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகளில் ஒன்றான வானவில்லின்வழி இவரது பாடங்கள் நமக்கு அறிமுகமாயின. தொடக்கப்பள்ளி ஆசிரியராக பொது வாழ்வைத் தொடங்கிய…

அருள் கந்தாவைச் சேர்த்தால், கஜனாவுக்கு போராபத்து, புவா கூறுகிறார்

  கஜனா நேசனல் பெர்ஹாட், அஸ்மான் மொக்தாருக்குப் பதிலாக அருள் கந்தா கந்தசாமியை அதன் நிருவாக இயக்குனராக வேலைக்கு அமர்த்தினால் அது கஜனாவுக்கு ஒட்டுமொத்தப் பேராபத்தாகும் என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறுகிறார். சிங்கப்பூர் ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் அஸ்மானில் இடத்தில்…

ஹுஸ்னி, ஊழல் குதிரையைப் பின்தொடராதீர்

  தீர்க்கப்படாத பல ஊழல் அவதூறுகளைச் சுட்டிக்காட்டி தாம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் அஹமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா "தூய குதிரையைப்" பின்தொடர வேண்டுமேயன்றி ஊழல் குதிரையை அல்ல என்று பிகேஆர் சுங்கைப் பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல் கூறினார். பக்கத்தானின் ஆறு குதிரைகளைவிட (தலைவர்கள்) தாம் ஒரு குதிரையை…

மலேசியக் கோப்பை வெற்றி பணத்தை, ஜேடிதி வெள்ள நிவாரண பணிக்கு…

ஜொகூர் காற்பந்து குழுவான, ஜொகூர் டாருல் தக்‌ஷிம் (ஜேடிதி), மலேசிய கோப்பையை வென்று பெற்ற வெகுமதி பணத்தை, பினாங்கு வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக தெரிகிறது. கடந்த சனிக்கிழமை, 2017 மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டியில், கெடாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று, ஜேடிதி மலேசியக் கோப்பையை…

இஸ்லாம் அல்லாதவர்கள் சூராவ்வில் தங்க அனுமதித்தேன் – பிலால் ஒப்புக்கொண்டார்

ஜோர்ஜ்டவுன், தாமான் ஃப்ரி ஸ்கூல் சூராவ்வில், சீன ஆடவர்களும் பெண்களும் தங்க தான் அனுமதித்ததை, அதன் பிலால் ஒப்புக்கொண்டார். சீனர்கள் சிலர் அந்தச் சூராவ்வில் தங்கியிருந்த படங்கள், தகவல் ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சப்னோ துகிஜோ எனும் அந்த 50 வயது பிலால், பெரித்தா ஹரியான் இணையப் பத்திரிக்கையிடம்…

ஏசுவின் சிலை உடைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது

  மலாக்கா மாநிலத்தில் போர்ச்சுகீஸ் குடியிருப்பில் ஏசுநாதர் சிலையின் பிரதி உடைக்கப்படுவது மந்திரி பெசார் இட்ரீஸ் ஹருனின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், இந்த நிறுத்தி வைப்பு தற்காலிகமானதே என்று மலாக்கா வரலாற்று நகரமன்ற (எம்பிஎம்பி) உறுப்பினர் ஜோசெப் சாந்தா மாரியா கூறியதாக தெ ஸ்டார் செய்தி கூறுகிறது.…

வெள்ள நிலையை நேரில் காண, துணைப் பிரதமர் பினாங்கு சென்றார்

வெள்ள நிலையை நேரில் கண்டறிய, பினாங்கு மாநிலம் சென்ற துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடியை, மாநில முதல்வர் லிம் குவான் எங் இன்முகத்துடன் வரவேற்றார். அவருடன் டிஏபியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கும் உடன் இருந்தார். “நாங்கள் வெவ்வேறு கருத்துகள் மற்றும் அரசியல் பாதை கொண்டிருந்தாலும், வெள்ளத்தில்…

போலீஸ் 1எம்டிபி விசாரணை அறிக்கைகளை எஜியிடம் கொடுத்து விட்டது

  1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் (எஜி) அலுவலத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதென்றும் எஜியிடமிருந்து அதற்கான பதிலுக்காக போலீஸ் காத்திருப்பதாகவும் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். போலீஸ் விசாரணை அறிக்கை பல தடவைகளில் எஜியின் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. மேற்கொண்டு…

ஷாபி எம்எசிசிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளர், உதவியாளர் கூறுகிறார்

  இன்று காலையில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பார்ட்டி வாரிசான் சாபாவின் தலைவர் முகமட் ஷாபி அப் மீண்டும் அழைத்துள்ளதாக ஷாபியின் உதவியாளர்களில் ஒருவர் கூறினார். "சில ஆவணங்கள சரிபார்ப்பதற்கு அவர் தேவைப்படுகிறார்" என்று தமது பெயரை வெளியிட விரும்பாத அந்த உதவியாளர் மலேசியாகினியிடம் கூறினார்.…

பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரிம1 மில்லியன் சிலாங்கூர் அளித்தது

பினாங்கு மாநிலத்தை முடக்கியுள்ள பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில அரசு ரிம1 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது. இதனை சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி நேற்றிரவு அறிவித்தார். இத/ற்கும் மேலாக, சிலாங்கூர் மாநில அரசின் ஊழியர்கள் பினாங்கை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் உதவுவதற்கும் பயன்படுத்தப்படுவர் என்று…

இன்னும் அதிகம் வேண்டுமானால், பி.என்.-ஐ ஆதரியுங்கள், சீனர்களிடம் நஜிப் வேண்டுகோள்

14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, சீனர்களிடம் அக்கட்சியைப் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டுமென, இன்று பிரதமர் நஜிப் ரசாக் மசீச பேராளர்களைக் கேட்டுக்கொண்டார். “பொதுத் தேர்தலில் வென்றாலும், ஜனநாயக செயற்கட்சியால் (டிஏபி) அரசாங்கத்தை அமைக்க முடியாது என சீன சமூகத்திடம் சொல்லுங்கள்,” என பிரதமர் கூறினார். “அவர்களால்…