100 நோயாளிகள், 4 குழந்தைகள் பினாங்கு மருத்துவமனையிலிருந்து இடமாற்றம்

பினாங்கில், கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், 104 நோயாளிகள் மற்றும் புதிதாகப் பிறந்த நான்கு குழந்தைகள், நேற்று பினாங்கு மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். வடகிழக்கு வட்டாரத்தில் இதுவரை இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அறை, பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை அறை மற்றும் கீழ்…

15 மணி நேர தொடர் அடைமழை, பலத்த காற்று –…

நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து, சுமார் 15 மணி நேரம் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால், பினாங்கு மாநிலம் நிலைகுத்தியது. வெள்ளம் காரணமாக, நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், 5 மாவட்டங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், கனத்த மழையோடு, மதியம் 2 மணிக்குத் தொடங்கிய பலத்த காற்று அதிகாலை 5 மணி…

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும்

  வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அது இறுதியில் மலேசியர்களுக்குப் பயன் அளிக்கும் என்று கஜனாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகமட் ஷெரிப் முகமட் காசிம் கூறினார். வெலிநாட்டுத் தொழிலாளர்கள் தொழி/ர்சங்கத்தில் சேர்ந்தால், அவர்களின் சம்பளம் உயரும். அவர்களின் சம்பளம் உயர்ந்தால். முதலாளிகளுக்கு மலிவான…

லியோ : மது, சலவை பிரச்சனையில் மதத்தைத் திணிக்க வேண்டாம்

இன, மத அடிப்படையில் இந்த நாட்டைப் பிரிக்க மலேசியர்கள் விரும்பவில்லை. எனவே, மதத்தை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது என மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறினார். சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘பீர் திருவிழா’ மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான சலவை கடை இரண்டையும் தொட்டு அவர் பேசினார். “ஒரு…

ஜோமோ : இந்தியர்களைக் கவர, பிரதிநிதிகளின் வழி பணப் பட்டுவாடா

இந்தியர்களின் மனதைக் கவர, பிரதமர் நஜிப் ரசாக் பிரதிநிகளின் வழி பணப் பட்டுவாடா செய்வதாக, பொருளாதார நிபுணர் டாக்டர் ஜோமோ குவாமெ சுந்தரம் கூறினார். “பிரதமர், பிரதிநிதிகளின் வழி, ம.இ.கா.வினர் மட்டுமல்ல-பிறர் மூலமாகவும், சிறு சிறு இயக்கங்களை நிறுவி, பணத்தைக் கீழ்மட்டம் வரை கொண்டு செல்கின்றனர் (இந்தியர்களுக்கு). "அவர்…

எப்ஜிவி (FGV) ஊழல் 1எம்டிபியைவிட மிகப் பெரியது, ஜோமோ கூறுகிறார்

  பெல்டா குளோபல் வெண்சர்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எப்ஜிவி) ஊழல் 1எம்டிபியைச் சுற்றியிருக்கும் ஊழலைவிட மிகப் பெரியது என்று பொருளாதார வல்லுனர் ஜோமோ  குவாமெ சுந்தரம் கூறுகிறார். எதிரணியிலிருக்கும் ஒவ்வொருவரும் 1எம்டிபியின் மீது கவனம் செலுத்தும் போக்கைக் கொண்டுள்ளனர். ஆனால், பல முட்டாள்தனமான நடத்தைகள் நடைபெற்றுக்குக் கொண்டிருக்கின்றன. இவை…

பாஸுக்கு ரிம90 மில்லியன் கொடுத்ததை நஜிப் மறுக்கிறார்

  பாஸுக்கு தாம் பணம் கொடுக்கவில்லை. அதனால்தான் பாஸ் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கின் முடிவுக்காக நாம் காத்திருப்போம். கிளேர் இப்போது குழப்பத்தில் இருக்கிறார் என்று நஜிப் கூறுகிறார். "பாஸுக்கு நாம் ரி90 மில்லியன் கொடுக்கவில்லை. அது பற்றி நான் கருத்துக் கூறமுடியாது, ஏனென்றால்…

அஸ்மின் அலி : வாழ்க்கைச் செலவினங்கள் உயர ஜி.எஸ்.டி. காரணம்

எதிர்க்கட்சி மீதான தாக்குதல்களுக்கு இடையே, 2018 வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர், நஜிப் ரசாக் போலல்லாமல், சிலாங்கூர் மந்திரி பெசார் முகம்மது அஸ்மின் அலி , சிலாங்கூர் 2018 பட்ஜெட்டை, மாநில அரசின் மீது கவனம் செலுத்தி தாக்கல் செய்தார். இருப்பினும், நேற்று பிற்பகல்…

நஜிப்புக்கு ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை 3’ சொற்போர் நடத்த மகாதிர் சவால்

  பிரதமர் நஜிப்புக்கு தம்முடன் பொது விவாதம் நடத்த வருமாறு மகாதிர் முகமட் மீண்டும் சவால் விட்டுள்ளார். மலேசியாகினி வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையில் பிரதமர் நஜிப் முன்னாள் பிரதமர் மகாதிர் மீது நடத்திய மறைமுகத் தாக்குதல்கள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. அத்தாக்குதல்கள் ஒவ்வொன்றுக்கும் மகாதிர் அவரது வலைத்தளப் பதிவில் இன்று…

மகாதிரின் மன்னிப்பு கோருதலை ஆண்டவன் ஏற்றுக்கொள்ளலாம், நான் மாட்டேன், நசிர்…

1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓப்பராசி லாலாங் நடவடிக்கைக்காக டாக்டர் மகாதிர் மன்னிபுக் கோரினால், அது மனப்பூர்வமானதாக இருக்காது என்று மலேசிய சோசலிசக் கட்சியின் தலைவர் டாக்டர் முகம்ட் நசிர் ஹசிம் கூறுகிறார். நான் ஒரு சாதாரண மனிதன். மகாதிர் மன்னிப்பு கோரினாலும், நான் அதை என் மனதில்…

பட்ஜெட் 2018 : கிட்டதட்ட 100 இஸ்லாமிய அரசு சாரா…

கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிட்டதட்ட 100 இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் பிரதமரிடம் மனு சமர்பித்துள்ளன. இன்று புத்ராஜெயாவில், அக்கூட்டமைப்பைப் பிரதிநிதித்து , தீபகற்ப மாணவர் கூட்டமைப்பின் (காபுங்கான் பிலாஜார் செமனாஞ்ஞோங்) தலைவர், ஷம்ப்ரி முகமட் இசா,…

அட்டர்னி ஜெனரல் : கருத்து ஏதும் இல்லை

அரசு தரப்பு துணை வழக்கறிஞர் கெவின் மொரைசிடமிருந்து, பிரதமர் நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்கு வரைவை பெற்றதாக சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரெவ்கேல்-பிரவுனின் கூற்றுக்குக் கருத்துரைக்க அட்டர்னி ஜெனரல் மறுத்துவிட்டார். இன்று மதியம் தொடர்பு கொண்டபோது, முகமது அபாண்டி அலி,  "எனக்கு எந்த கருத்துகளும் இல்லை,"…

பாஸ்தர் கோ வழக்கு : 4 சந்தேக நபர்களும் போலிஸ்…

பாஸ்தர் கோ கடத்தலில் கைதான 4 சந்தேக நபர்களும் போலிஸ் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டனர் என பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த விசாரணை அதிகாரி ஏஎஸ்பி சுபாரி முகமட் கூறினார். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கடத்தப்பட்ட கோக் வழக்கில், ஈடுபட்டதற்கான எந்த தகவலும் விசாரணையில்…

கிளேர் : நஜிப்புக்கு எதிரான வழக்கு வரைவு ஒன்றை கெவின்…

எம்.ஏ.சி.சி.-யின் துணை அரசு வழக்கறிஞர் கெவின் மொரைஸ், நஜிப்புக்கு எதிரான 1எம்டிபி தொடர்பான வழக்கு வரைவு ஒன்றை தனக்கு அனுப்பியதாக, சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌன் கூறியுள்ளார். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், யுகேயில் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், தமது தற்காப்பு…

குவான் எங் : பினாங்கு மாநில அரசு ஊழியர்கள் இவ்வாண்டு…

பினாங்கு அரசாங்கம், அடுத்த மாதம் ‘நன்கு செயல்படும் மற்றும் ஒழுக்கநெறி மிக்க’ அனைத்து பொது ஊழியர்களுக்கும் 2,000 ரிங்கிட் போனசும்; பிற பொது ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் போனசும் வழங்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக, பினாங்கு மாநிலத்திற்கான 1.21 பில்லியன் ரிங்கிட் வரவு செலவு திட்டத்தை லிம் தாக்கல்…

இளவரசர் சார்லஸ்-கமிலா தம்பதியினர், மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை

வேல்ஸ் இளவரசர் சார்லஸ், தமது துணைவியார் இளவரசி கெமிலாவுடன், மலேசியாவுக்கு 7 நாள்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார். மலேசியா – இங்கிலாந்து இருதரப்பு உறவின் 60-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி அவரின் வருகை அமைந்துள்ளது. அரச தம்பதிகளை ஏற்றிவந்த இராணுவ விமானம், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மாலை…

கிளேரின் கடுமையான குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்துங்கள், அம்பிகா கூறுகிறார்

  பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌன் மீது யுகேயில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் தமது தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்த கிளேர் அதில் மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசனின் பெயரை இழுத்துள்ளார். பாஸ்…

பூகிஸ் கடற்கொள்ளையர்களா?, மகாதிரை சிலாங்கூர் சுல்தான் கண்டித்தார்

  "பூகிஸ் கடற்கொள்ளையர்கள்" என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஏளனமாகப் பேசியதற்கு சிலாங்கூர் சுல்தான் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாதிரின் அக்கருத்து பூகிஸ் சமூகத்தினரை அவமதிக்கும் ஒரு முயற்சி என்பதோடு அவர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டிவிடுவதாகும் என்று சுல்தான் கூறினார். முன்னாள் பிரதமர் மகாதிரின் பேச்சு தேசநிந்தனைச் சட்டம்…

ஷைட் இப்ராஹிம் : மகாதீரை இனி மக்கள் கவனித்துக் கொள்வர்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மெய்க்காப்பாளரை விலக்கிக் கொண்ட காவல்துறையையும் அரசாங்கத்தையும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் குறை கூறினர். டிஏபி-யைச் சேர்ந்த ஷைட் இப்ராஹிம், போலீஸ் மற்றும் பிரதமர் நஜிப் டாக்டர் மகாதிருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றார். "இந்நடவடிக்கை எரிச்சலூட்டுகிறது, நடக்கக்கூடாத ஒன்று ... ஆனால், பரவாயில்லை,…

அம்பிகா மற்றும் கிளேர் மீதான தாக்குதல் திசைதிருப்பும் தந்திரம், ஸைட்…

  வழக்குரைஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா மற்றும் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌன் மீதான தாக்குதல்கள் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் என்று ஸைட் இப்ராகிம் கூறுகிறார். இது ஏன் என்றால் பாஸ் வேகமாக ஆதரவை இழந்து வருகிறது. அடுத்த தேர்தலுக்கு அம்னோவுடன் இணைந்து வேலை செய்யும்…

செந்தமிழ்ச் செல்வியின் குற்றச்சாட்டுகளை நஜிப்பும் ரோஸ்மாவும் மறுத்தனர்

  பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கு எதிராக காலஞ்சென்ற தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் துணைவியார் எ. செந்தமிழ்ச் செல்வி தொடர்ந்துள்ள வழக்கில் அவர்களுக்கு எதிராகக் கூறப்பட்ட்டுள்ள குற்றச்சாட்டுகளை நஜிப்பும் ரோஸ்மாவும் மறுத்தனர். கோரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தனித்தனியாய் மறுக்கப்படுகின்றன…

கிளேருக்கு எதிரான பாஸின் வழக்கில் நஜிப் ஒரு சாட்சியாக இருக்கக்கூடும்,…

  பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்-பிரௌனுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள ரிம90 மில்லியன் சம்பந்தப்பட்ட வழக்கில் பிரதமர் நஜிப் ஒரு சாட்சியாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் ஹனிபா மைடின் கூறினார். இந்த வழக்கில் ஒரு சாட்சியாக…

மக்களவையில் பாரிசான் சின்னம்: நஜிப் தப்பித்து விட்டார்

  நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து பிரதமர் நஜிப் ஆற்றிய உரையின் நேரடி ஒலிபரப்பின் போது பாரிசான் நேசனல் சின்னம் காட்டப்பட்டது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல என்று மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கூறினார். அந்தத் தவறு சம்பந்தமாக அளிக்கப்பட்ட விளக்கத்தையும் மன்னிப்பு கேட்கப்பட்டதையும்…