கிட் சியாங் கேலாங் பாத்தா தொகுதியிலிருந்து வெளியேறலாம், தகவல்கள் கூறுகின்றன

ஜொகூரில், பிகேஆரின் 3 பாரம்பரிய இடங்களை, கிட் சியாங்கிற்காக டிஏபி குறிவைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. "அவர் அந்த மூன்று இடங்களையும் கண்காணித்து வருகிறார்," என்று, பெயர் குறிப்பிட விரும்பாத பக்காத்தான் ஹராப்பான் தலைவர் ஒருவர் பெரித்தா டெய்லிக்குத் தெரிவித்தார். "ஆனால், ஜொகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டால்,…

மகாதிர்: வருந்த வேண்டியது நானல்ல, ‘பாவி’ ஹாடிதான்

  மகாதிர் முகமட் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு ஒரு தெய்வீகச் செய்தி வைத்திருக்கிறார் - வருந்துவீர்! மாராங் நாடாளுமன்ற உறுப்பினரான ஹாடி ஒரு பிரம்மாண்டமான பாவம் செய்திருக்கிறார் என்று அவரை குற்றம் சாட்டிய மகாதிர், ஹாடி அவரது "அமனாட் ஹாடி-யை (ஹாடியின் உரை) திரும்பப்பெற வேண்டும்…

1எம்டிபி மீதான போலீஸ் விசாரணையில் இன்னும் போதுமான சாட்சியங்கள் இல்லை,…

  போலீஸ் செய்து கொண்டிருக்கும் 1எம்டிபி மீதான விசாரணையில் இன்னும் போதுமான சாட்சியங்கள் இல்லாதிருப்பது தெரிய வந்துள்ளதாக சட்டத்துறைத் தலைவர் (எஜி) அபாண்டி அலி இன்று கூறினார். 1எம்டிபி மீதான வழக்கு மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது, அது சரியானதல்ல என்றாரவர். விசாரணை அறிக்கைகள் தொடர்ந்து சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்படுகிறது.…

ஹை ரோஸ், எங்களிடம் மாற்றுத் திட்டம் “பி” இருக்கிறது, மகாதிர்…

  எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பதிவு செய்வதில்லை என்று மன்றங்கள் பதிவாளர் முடிவு செய்தால், அம்முடிவுக்கு எதிரானத் திட்டம் "பி" பக்கத்தான் ஹரப்பானிடம் இருக்கிறது. அத்திட்டம் இவ்வாரம் வெளியிடப்படும் என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறினார். எங்களிடம் பல தொடர் செயல் நடவடிக்கைகள் இருக்கின்றன. அவை இவ்வாரம் அறிவிக்கப்படும். ஆனால்,…

இர்வான் செரிகார் : அரசாங்கம் இன்னும் எண்ணெய் விலைக்கு மானியம்…

2014-ஆம் ஆண்டிலேயே அகற்றி இருக்க வேண்டிய, எண்ணெய் விலைகான மானியத்தை அரசாங்கம் இன்னும் வழங்கி வருவதாக, 2018 வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தின் பங்கேற்பாளர்கள் கூறினர். குறிப்பாக, வாராந்திர விலையில் சரிசெய்தலின் போது, எண்ணெய் விலை உயர்ந்தால், அம்மானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகக் கருவூலத் தலைமைச் செயலாளர், இர்வான்…

பெர்சே 2.0 : 14-வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க 3000…

14-வது பொதுத் தேர்தலில், வழக்கத்திற்கு மாறான மற்றும் மோசடி நடைமுறைகளைப், பொது மக்கள் புகார் செய்வதற்கு இலகுவாக, தேர்தல் கண்காணிப்பு குழு - பெர்சே 2.0, இன்று ‘கண்காணிப்பாளர்’ (பெமந்தாவ்) எனும் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியது. கடந்த 2013-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அக்கூட்டணியில், பெர்சே 2.0, மலேசிய மக்கள்…

அமைச்சர் : ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்குப் பின், சுமார் 300 பொருள்களின்…

ஏப்ரல் 2015-ல், பொருள், சேவை வரி அமல்படுத்தப்பட்டதில் இருந்து, கண்காணிக்கப்பட்ட 1,396 பொருள்களில், சுமார் 16% முதல் 26% வரை விலை குறைந்துள்ளது. உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு, பாஸ் – குபாங் கிரியான் எம்.பி. அஹ்மத் பாயாகி அட்டிகுலா எழுப்பிய கேள்விக்கு, எழுத்து பூர்வமாக…

மலேசியப் போதகர் ஹஸ்லின் பாரிமுக்கு சிங்கப்பூர் தடை விதித்தது

  இரண்டு முஸ்லிம் போதகர்களுக்கு, ஒருவர் மலேசியர், சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. அவர்கள் இருவரும் சமயம் சார்ந்த கடற்பயணம் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஸ்மாயில் மென்க் என்பவர் ஜிம்பாவியன்; மற்றவர் உஸ்தாஸ் போலிவுட் என்ற அழைக்கப்படும் மலேசியர் ஹஸ்லின் பாரிம். த ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் செய்திப்படி, உள்துறை…

பி40 இந்தியர்கள் தொழில் செய்ய மானியம், சிலாங்கூர் அரசு வழங்குகிறது

  60 ஆண்டுகளாக உதாசீனப்படுத்தப்பட்டுள்ள ஏழை இந்தியர்களுக்கு (பி40 என்று வகைப்படுத்தப்பட்டவர்கள்) நிதியும் திறன் பயிற்சியும் அளிக்க சிலாங்கூர் மாநில அரசு இந்திய அரசுசார்பற்ற அமைப்புகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டது வருந்தத்தக்கது என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார். இந்தியர்கள்…

அஸலீனா: 1எம்டிபி விசாரணையை மேலும் தொடர வேண்டும் என்று எஜி…

  1எம்டிபி விவகாரம் குறித்து போலிஸ் அதன் விசாரணையை மேலும் தொடர வேண்டும் என்று சட்டத்துறைத் தலைவர் (எஜி) போலிஸ்சை கடந்த அக்டோபர் 24 இல் கேட்டுக்கொண்டுள்ளார் என்று பிரதமர் துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான சைட் கூறினார். கடந்த நான்கு மாதங்களில் இவ்விவகாரம் பற்றிய போலிஸ் விசாரணை…

மகாதீரின் மன்னிப்பு, 14-வது பொதுத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது

30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஓப்பராசி லாலாங் சம்பவத்திற்கு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் மன்னிப்பு கேட்க வேண்டுமென அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, அண்மையில்  கோரிக்கை விடுத்தது. ஆனால், மகாதீர் மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும், வாக்காளர்களின் ஆதரவை அது பாதிக்காது என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அரசியல்…

பட்ஜெட் 2018 : பிடிபிடிஎன் பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை, சமூக…

மாணவர் ஆர்வலர் ஆடம் ஆட்லி, கடனில் தள்ளுபடி செய்தல் மற்றும் திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டித்தல் போன்ற அரசாங்கத்தின் ஆலோசனைகள், தேசிய உயர்க்கல்விக் கடனுதவி திட்டத்தின் (பிடிபிடிஎன்) சுமையைக் குறைக்காது, அது ஒரு சரியான நடைமுறையல்ல எனக் கூறியுள்ளார். ஒரே தடவையில், தங்கள் கடன்களைக் கட்டி முடிக்கக் கூடியவர்களுக்கு…

90 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க தனியார் நிறுவனங்களை எம்.டி.யு.சி.…

மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யு.சி), தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 90 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் எனும் புத்ராஜெயாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என முதலாளிகளை வலியுறுத்துயுள்ளது. தனியார் துறை தொழிலாளர்களின் நலனில், முதலாளிகள் அக்கறையின்றி இருக்கக்கூடாது என்று அதன் தலைமைச் செயலாளர் சோலமன்…

ஹரப்பான் நிழல் பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு ஒன்றுமில்லை, சுப்ரமணியம் அறிவிக்கிறார்

  இந்தியர்கள் கொண்டாடி மகிழ்வதற்கு ஹரப்பான் நிழல் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் நஜிப் ரசாக்கின் 2018 பட்ஜெட்டில் நிறைய இருக்கின்றன என்று மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார். ஹரப்பான் பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு பயனளிக்கும் எதையும் தாம் காணவில்லை என்றாரவர். "இந்தியர்கள் மீது கவனம் செலுத்தும் எதையும் நான்…

மூன்று ரெலா உறுப்பினர்கள் ஒரு “டத்தோஶ்ரீ”யால் தாக்கப்பட்டனர்

  நேற்று, ஜாலான் அம்பாங்கிலுள்ள ஒரு கோயிலில் ஒரு டத்தோஶ்ரீ மூன்று ரெலா உறுப்பினர்களைத் தாக்கியுள்ளார். இச்சம்பவம் காலை மணி 6.30 அளவில் நிகழ்ந்தது. இதனால் மெல்வின் சியோங் முன் காய்,19, லீ வெங் போ, 27, மற்றும் லியோங் ஜியுன் ஜி, 21, ஆகிய மூவருக்கும் தலை,…

பட்ஜெட் 2018 : எதிர்க்கட்சியினர் என்ன சொல்கின்றனர்?

நேற்று, நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தாக்கல் செய்த, 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், 260.8 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து 280.25 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. மேலாண்மை செலவினங்களுக்காக 234.25 பில்லியன், அபிவிருத்தி திட்டங்களுக்கான செலவினங்களுக்கு  46 பில்லியன் மற்றும் கையிறுப்பு சேமிப்புக்காக 2 பில்லியன்…

சுகாதாரச் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. அகற்றப்படவில்லை, மருத்துவர்கள் ஏமாற்றம்

மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) சுகாதார சேவைகளுக்கு வரி விலக்கு தரவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், இன்னமும் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவது தொடர்பில் சுகாதார நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மற்ற துறைகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்த பிரதமர் நஜிப், சுகாதார துறைக்கான வரியை அகற்றாததது ஏமாற்றம் அளிப்பதாக, எம்.எம்.ஏ.-வின் தலைவர்…

கஸ்தூரி பட்டு : மலேசியாவில் இசா சட்டம் இன்னும் உயிரோடுதான்…

‘ஒப்பராசி லாலாங்’ முடிந்து 35 ஆண்டுகள் கடந்த பின்பும், உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (இசா) ‘ஆவி’, தடுப்புக்காவல் சட்ட அமலாக்கத்தின் உருவில் இன்னும் நாட்டில் உயிரோடுதான் இருக்கிறது என்று, பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு இன்று தெரிவித்தார். பிரதமர் நஜிப் ரசாக் இசா சட்டத்தை அகற்றுவதற்கான…

நஜிப்பின் உரையின் முடிவில், “கொள்ளைக்கார ஆட்சி” கூக்குரல் வெடித்தது

  பட்ஜெட் 2018: பிரதமர் நஜிப் அவரது 2018 ஆம் ஆண்டுக்கான இரண்டரை மணி நேர பட்ஜெட் உரையை முடித்ததும். நாடாளுமன்ற எதிரணி உறுப்பினர்கள் "கொள்ளைக்கார ஆட்சி" என்று முழக்கமிட்டனர். "14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு வெற்றியைக் கொண்டுவர நமது இறுதிச் சொட்டு இரத்தம் வரையில்", என்று…

நஜிப் கேட்கிறார்: அஸ்மினும் லிம்மும் சிலாங்கூரையும் பினாங்கையும் விற்கின்றனரா?

  பட்ஜெட் 2018: தமது அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக சீனாவிலிருந்து, மூலதனம் பெற்றதை குறைகூறியவர்களை பிரதமர் நஜிப் அவரது பட்ஜெட் உரையில் சாடினார். அவரது இலக்கு சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி மற்றும் பினாங்கின் குவான் எங் ஆவர். சமீபத்தில் நஜிப்புக்கு ஒரு செய்தி கிடைத்ததாம். அதன்படி,…

ஏழூ ஆண்டுகளில் முதல்தடவையாக பிரிம் உதவித் தொகையில் ஏற்றம் இல்லை

  பட்ஜெட் 2018: இன்று நாடாளுமன்றத்தில் 2018 பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர் நஜிப், பிரிம் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரொக்கம் ரிம1,200 வரையிலான நிதி உதவி நிலைநிறுத்தப்படும் என்றார். பிரிம் மூலம் 7 மில்லியன் மக்கள் பயன்பெற்றுள்ளனர். அதற்கு ரிம6.8 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. "ஆகவே,…

பூகிஸ் சமூகத்தை அவமதித்த ஒரு “ஆளை”, நஜிப் சாடினார்

  பட்ஜெட் 2018: இன்று பட்ஜெட் 2018 ஐ தாக்கல் செய்வதற்கு முன்னதாக பிரதமர் நஜிப் அவரது திறப்பு உரையில் பூகிஸ் சமூகத்தை அவமதித்த ஒரு "ஆளை" சாடினார். நாம் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கையில் அந்த "ஆள்" எப்படி பூகிஸ் மூதாதையர் மரபை அவமதிக்கலாம் என்று நஜிப்…

தியன் சுவா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்

  பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா ஒரு மாதச் சிறைதண்டனைக்குப் பிறகு இன்று காஜாங் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறை அதிகாரிகள் தம்மை காலை மணி 5.00 க்கு படுக்கையிலிருந்து எழுப்பி விட்டு பின்னர் காலை மணி 7.00 அளவில் அதிகாரப்பூர்வமாக விடுவித்தனர் என்று தியன் சுவா கூறினார்.…