மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்தும் அரசு பள்ளி மாணவர்கள்…

சென்னை: மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் வகுப்பறைகள் உள்ள போதிலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று மதிமுக பொதுச் செலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்…

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு தன்னை ஈடுபடுத்திக்கொள்ள…

ஆந்திராவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழர்களின் வழக்கில் இனிமேலாவது தமிழக அரசு தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகனூலில் பதிவு செய்துள்ளார். ’’ஆந்திரப் பிரதேசத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மரம் வெட்டும் கூலித் தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு நாளுக்கு நாள்…

தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: திருமாவளவன்

சென்னை: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாகவும் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: சென்னை மடிப்பாகத்தில் இன்று எனது நேர்முக உதவியாளர் வெற்றி செல்வன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…

மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி.. கையைத் தட்டி…

திருநெல்வேலியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியை…

கோவில் திருவிழாவில் பங்கேற்க தடை – ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள்…

வேலூர் மாவட்டம், மாதனூர் அடுத்த ஆசணாம்பட்டு கிராமத்தில் பல சாதியினரும் உள்ளனர். இங்குள்ள ஸ்ரீதேசத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். பல ஆண்டுகாலமாக அனைத்து மக்களும் கலந்துக்கொண்ட விழாவாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழாவில் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் மக்கள் கலந்துக்கொள்ள கூடாது என…

தொல்.திருமாவளவனின் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன் வெட்டிப் படுகொலை!!

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் தனிச் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் சென்னையில் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்தவர் வெற்றிச்செல்வன். அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் தனிச்…

நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு குற்றங்களில் இருந்து ஜெ. தப்பித்து இருக்கிறார்: ராஜீவ்…

ஜெயலலிதா மீது 1996-97 காலக்கட்டத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளில் அவர் கைதாகி இருந்தபோது, அவருக்கு ஜாமின் பெற்று தந்தவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து தற்போது அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நீதித்துறையையே…

20 தமிழர்கள் படுகொலை திட்டமிட்ட சதிச் செயல்! அம்பலப் படுத்திய…

20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் ஆந்திரா அரசு தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள்தான் என்பதை பலியானோரின் கைப்பேசி அழைப்பு விவரங்கள் அம்பலப் படுத்தியுள்ளது. திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 தமிழர்களை கடந்த மாதம் 7ம் திகதியன்று, ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினர் சுட்டு கொன்றனர். ஆனால்…

இது இனப்படுகொலையா… இல்லையா? – நெஞ்சை உலுக்கும் ஆவணப்படம்

இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளை ஆதாரங்களுடனும் தொகுத்து ‘இது இனப்படுகொலையா? இல்லையா?' என்கிற புதிய ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வ கௌதமன். இந்த ஆவணப்படம் உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில் சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில், 600 க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் மத்தியில்…

7 தமிழர்கள் விடுதலையை தமிழக அரசு உறுதி செய்ய ராமதாஸ்…

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் எந்தத் தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்டு 24 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர் விடுதலை செய்யப்படுவதை தமிதழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இவ்வழக்கில் ஆஜராவதற்கான மூத்த வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்…

சென்னை மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்! ஏராளமானோர் திரண்டு மெழுகுவர்த்தி…

இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரீனாக் கடற்கரையில் 17.05.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலில் பங்கேற்ற ஏராளமான தமிழ் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு…

அரியானாவில் கைது – ரூ. 20 கோடி செம்மரங்கள் பறிமுதல்

ஹைதராபாத்: அரியானா மாநிலத்தில் சர்வதேச கடத்தல் மன்னனை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின் பேரில் ரூ. 20 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த மாதம் செம்மரங்களைக் கடத்தியதாக ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். நாடு…

கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

வத்திராயிருப்பு : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று பெய்த பலத்த மழை காரணமாக திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலை உச்சியில்…

கைகளை இழந்த ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை

கொச்சி: ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில், மூன்றாண்டுகளுக்கு முன், வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்போது, இரு கைகளையும் இழந்த, அந்நாட்டின் ராணுவ அதிகாரிக்கு, கேரளாவின் கொச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, புதிதாக இரண்டு கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆப்கன் ராணுவ அதிகாரி அப்துல் ரஹீமுக்கு,…

மன்னார் வளைகுடாவில் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை ரத்து செய்க:…

சென்னை: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கினால், சுற்றுச் சூழல் நாசமடைவதோடு, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்துவிடும். இதனால் கடல் வளமும், மீன் வளமும் முற்றிலுமாக அழிந்துபோகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அச்சம் தெரிவித்துள்ளார். எனவே இயற்கை எரிவாயு…

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நாள்: இழந்த சுதந்திரத்தை மீட்டெடுப்போம.. வேல்முருகன்

சென்னை: மே 18ம் தேதி நடந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளையொட்டி இழந்த சுதந்திரத்தை மீட்டெடுப்போம். இனப்படுகொலையாளனை தண்டிப்போம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2009 ஆம் ஆண்டு மே 18-ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம்…

விபச்சாரத்திற்காக கடத்தப்படும் குழந்தைகள்! பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டெல்லியில் சமூக விரோத கும்பல்களால் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை டெல்லி பொலிசார் தொடங்கி உள்ளனர். தலைநகர் டெல்லியில் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது என வெளியாகி உள்ள புள்ளி விவரம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏப்ரல் 15ம்…

நேதாஜியின் உடமைகள் கொள்ளை ? நேரு மறைத்தது ஏன் திடுக்…

புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவுக்கு பின்னர் அவர் சேர்த்து வைத்திருந்த தங்க, வைர பொருட்கள் இரும்பு பெட்டியுடன் மாயமானதாகவும், இது குறித்து நேரு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஒரு தகவல் தற்போது எழுந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் முறைகேடாக இது கூறப்படுகிறது. நேதாஜி குறித்த தகவல்கள்…

எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: இந்தியா – சீனா முடிவு

இந்திய, சீன எல்லை பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண்பது என இரு நாடுகளும் கூட்டாக முடிவு செய்துள்ளன. சீனப் பிரதமர் லீ கெகியாங்கை, பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டப மாளிகையில் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், எல்லை பிரச்னை, வர்த்தகம், பயங்கரவாதம், முதலீடு, பருவ…

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும்: உத்தரகண்ட் ஆளுநரிடம் தருண்…

ஹரித்துவார் நகரில் வழிபாட்டு ஆரத்தி நடைபெறும் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று உத்தரகண்ட் மாநில ஆளுநர் கே.கே. பாலிடம் அந்த மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ஆளுநரை அவரது அலுவலகத்தில் தருண் விஜய் வெள்ளிக்கிழமை…

ஈராக்கில் 39 இந்தியர்கள் சுட்டுக்கொலை? தப்பியவர் பரபரப்பு தகவல்

சண்டிகர்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து தப்பி வந்தவர் அளித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் மொசூல் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி கட்டட வேலையில் இருந்த 39 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். தற்போது…

குழந்தை தொழிலாளர் முறையை சட்டபூர்வமாக்க அரசு முயல்வதா? பா.ம.க. கண்டனம்

குழந்தைத் தொழிலாளர் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதமும், தண்டனையும் அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் குலத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்ற வகையில் செய்யப்படவிருக்கும் திருத்தம் மிகவும்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

மே 17 மெரினா கடற்கரையில் இனப்படுகொலை நினைவேந்தல் நடைபயணம்

ஈழத்தில் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற காலம் 1948ம் ஆண்டு தொடங்கி இரத்த வெறி கொண்ட பேரினவாத சிங்களர்கள் அப்பாவி தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கட்டியமைக்கப்பட்ட இனப்படுகொலையை நடத்தி வந்திருக்கின்றனர். தொடர்ந்த ஒடுக்குமுறைகளும் தமிழர்களின் மீதான கொடூரமான வன்முறைகளும் தனித்தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு வித்திட்டன. இதன் விளைவாக மக்களுக்காக போராட…