கருப்பு பணத்தை மீட்பது எப்படி? மோடிக்கு சுப்ரமணியன் சாமி கடிதம்

கருப்பு பணத்தை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடந்த வர்த்தக மாநாட்டில் சுப்ரமணியன் சாமி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசுகையில், கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவது எப்படி என பிரதமருக்கு கடிதம்…

புறாவை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார்!

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் காஷ்மீரில் உளவு பார்க்க புறாவினை அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பதன் கோட் அருகில் ரமேஷ் சந்திரா என்பவர் வீட்டுத் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, ஒரு புறா வந்து இறங்கியுள்ளது. அந்த புறாவின் இறகுகளில்…

செம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறிய பொலிஸ் டி.எஸ்.பி.: பரபரப்பு தகவல்

செம்மரக்கடத்தலில் லட்சக்கணக்கில் பணம் புரண்டதால் வேலூர் கலால் பிரிவு பொலிஸ் டி.எஸ்.பி. தங்கவேலு செம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறியது தெரியவந்துள்ளது. ஆம்பூர் அடுத்த பாலூரை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் சின்னபையன் செம்மரக் கடத்தல் சம்பவத்தில் கடந்த 26ம் திகதி கொலை செய்யப்பட்டார். சின்னபையன் பதுக்கி வைத்திருந்த 7 டன்…

ஆந்திரத்தில் செம்மரக் கடத்தல்: 72 தமிழர்கள் கைது

ஆந்திரத்தில் செம்மரங்களைக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 72 தொழிலாளர்களை அந்த மாநில போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து கடப்பா மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கே.அன்புராஜன் கூறியதாவது: கடப்பா மாவட்டத்தில் உள்ள சின்னமண்டேம் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தை சோதனை செய்வதற்காக அதனை போலீஸார் தடுக்க முற்பட்டனர்.…

ஆந்திராவில் 20 தமிழர் படுகொலை- சி.பி.ஐ. விசாரணைக்கு தேசிய மனித…

ஆந்திராவில் 20 தமிழர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேர் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி கடந்த ஏப்ரல் 7-ந் தேதியன்று அம்மாநில வனத்துறை, போலீசாரால்…

பெரியாரை தமிழர் தலைவராக ஏற்க முடியாது: சீமான் பரபரப்பு பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை தமிழர் தலைவராக ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், தமிழர் என்று யாரை வரையறை செய்கிறீர்கள் என்று சீமானிடம் கேட்டதற்கு, தமிழை தாய்…

ஊட்டச்சத்து குறைவிலும், பட்டினியிலும் சீனாவை முந்திய இந்தியா

டெல்லி: இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 19 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலக நாடுகளில் மற்ற எந்த நாட்டை காட்டிலும் இந்தியாவில் அதிகப்படியாக 19 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

உயிர் காக்கும் மருந்து விலையை குறைத்து மாஃபியாக்களை ஒடுக்கப்போகிறோம்: மத்திய…

கொச்சி: பேஸ்மேக்கர், மூட்டு சிகிச்சை கருவி மற்றும் செயற்கை வால்வுகள் ஆகியவற்றையும் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆர்டர் (டிபிசிஓ) திட்டத்தின்கீழ் கொண்டு வந்து, மருந்து மாஃபியாக்களின் ஆதிக்கத்தை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உரம் மற்றும் மருந்துத்துறை அமைச்சர் ஆனந்த்குமார் தெரிவித்தார். கொச்சியில் நடந்த மோடி அரசின்…

காவிரியில் கழிவுநீர் கலப்பால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஆபத்து…

சென்னை: பெங்களூருவில் இருந்து வெளியாகும் கழிவு நீர் காவிரியில் கலக்கப்படுவதால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஆபத்து எழுந்துள்ளதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு நாளும் காவிரியில் 148.2 கோடி கழிவு நீர் திறந்து விடப்படுவதால் காவிரி…

ராமர் கோயில் குறித்து சரியான நேரத்தில் முடிவெடுப்போம்: சொல்வது அமித்ஷா

சூரத்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். குஜராத்தின் சூரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ராமர் கோயில் விவகாரத்தில் நாங்கள் பின்வாங்கவில்லை. இது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும். ராமர்…

ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்: அமெரிக்க நீதிமன்றத்தில்…

ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கக் கோரி சீக்கியர் அமைப்பு சார்பில், அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் மீண்டும் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக தொடுத்த வழக்கை நியூயார்க் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்துவிட்டது. இந்நிலையில், இந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மேற்கொண்ட கட்டாய…

ஆளுநரை பதவி நீக்கம் செய்ய டெல்லி சட்டசபையில் அதிரடி தீர்மானம்!…

ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் வகையிலான அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி டெல்லி சட்டசபையில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. இதில் அதிகாரிகள்…

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலுக்கு பலியானவர்கள் – 1100 பேர்

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100-க்கு மேல் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 269 பேர்…

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசு

இலங்கையின் கடற்பரப்பில் வருடத்தில் 65 நாட்கள் மீன்பிடிக்க, இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை இன்று காலி துறைமுகத்தில் வைத்து தெரிவித்துள்ளார். 65 நாட்களல்ல 65 மணித்தியாலங்களை கூட இந்தியாவுக்கு விட்டு தர முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த…

காவிரியில் கழிவுநீர்: ஜூலை 28–ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க கர்நாடகாவுக்கு பசுமை…

சென்னை, மே.26– தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வக்கீல் சுதன் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் காவிரியில் கழிவுநீர் கலப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட பசுமை தீர்ப்பாயம் காவிரியில் கழிவுநீர்…

ராஜினாமா கடிதத்தை ரெடியாக வையுங்க “ஜெஜெ” .. சு.சுவாமி கிண்டல்

டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ஜெயலலிதா தமது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர்…

ஆந்திரா, தெலுங்கானாவில் கோரத்தாண்டவம் ஆடும் சூரியன்… பலி 750ஐத் தாண்டியது!

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 750ஐத் தாண்டியுள்ளது. கோடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களின் உச்சகட்ட வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் உக்கிரம் தாளாமல் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்…

மோடியின் ஓராண்டு ஆட்சியில் பெரிய முதலீடுகள் எதுவும் இல்லை: சிஐஐ

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு கால ஆட்சியில், பெரிய அளவிலான முதலீடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் சுமித் மஜும்தார் தெரிவித்தார். மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து தில்லியில் அவர் கூறியதாவது: தொழில் தொடங்க எளிமையான சூழலை உருவாக்கும்…

இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய தமிழர்கள் முதன்முதலாக இன…

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு ஞாயிற்றுக்கிழைமை மாலை நடைபெற்றது. மாநாட்டில் பேசிய சீமான், இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய மக்கள் முதன்முதலாக இன உணர்வுடன் இங்கு  கூடியுள்ளனர். மாற்று அரசியல் புரட்சியை முன்வைக்கிறோம். ஈழம் விடுதலை…

நாடு முழுவதும் வீசும் அனல் காற்று: பலியானோரின் எண்ணிக்கை 335

முசோரி: நாடு முழுவதும் வீசும் அனல் காற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 335ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6500 அடி உயரத்திலிருக்கும் மலைவாச தளமான முசோரியில் கூட வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.…

பார்வையற்ற மாணவனின் புதிய சாதனை: கின்னஸ் புத்தகத்துக்கு பரிந்துரை

பழனியை சேர்ந்த பார்வையற்ற மாணவனின் சாதனை கின்னஸ் புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பழனியை அடுத்துள்ள பாறைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசுவின் மகன் ஸ்ரீ ராமானுஜம் (10), பார்வையற்றோர் தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டும் என்று அந்த சிறுவனுக்கு மிகுந்த ஆர்வம்…

மற்றவர்களுக்கு பசுவதைக்கு எதிராக பிரசாரம் செய்து விட்டு மிகப் பெரிய…

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ஓராண்டு ஆட்சியில் இறைச்சி ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கூறுகையில், பிரதமர்…

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நாளை…

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நாளை (24-05-15),ஞாயிற்றுக்கிழமை திருச்சி, எடமலைப்பட்டிபுதூரில் நடைபெறுகிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு இரவு 10 மணிவரை நடைபெறுகிறது. உலகம் முழுக்க இருந்தும் இந்த மாநாட்டிற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த…