இலங்கை உதவியுடன் தமிழகத்தை வேவு பார்த்தேன்: பாகிஸ்தான் உளவாளி

இலங்கை உதவியுடன் தமிழகத்தை உளவு பார்த்ததாகவும், இந்திய இறையாண்மை, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் போலி நாணயத்தாள்களைப் புழக்கத்தில் விட்டதாகவும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேனை தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர்.…

தமிழக காவல்துறையின் கொலைவெறித் தாக்குதல்!

கடந்த 26-11-2014,அன்று சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப்போரில் இன்னுயிர் ஈர்ந்த தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதற்க்கான முயற்ச்சிகளை இன உணர்வோடு முன்னெடுத்த திராவிடர் விடுதலை கழகத்த சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான முழக்கம் உமாபதியை சென்னை அமிராமிபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர்களான இளையராஜா,கலைசெல்வி,மற்றும் கவலர் வடிவேலு,ஆகியோர் கொண்ட குழுவினர் மிகக்கொடூரமாக…

பாகிஸ்தான் நமது நட்பு நாடு அல்ல: வி.கே.சிங்

பாகிஸ்தான் நமது அண்டை நாடு தானே தவிர, நமது நட்பு நாடல்ல என்று அமைச்சர் விகே சிங் தெரிவித்தார்.இந்தியா அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவு கொள்ள விரும்பினாலும் உரிய பாதுகாப்பை பெற்றிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஃபருக்காபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் மேலும்…

39 இந்தியர்களை படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்?

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மீதும் போர் தொடுத்தனர். இந்த போரின் போது ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் நகரத்தில் ஜூன் 10-ந் திகதியன்று 91…

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் பெருகி வரும் ஆதரவு!

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் நடைபெற்ற காவல்துறை மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், தீவிரவாதிகள் இந்தியாவை சீர்குலைக்க சதி செய்கின்றனர். இதனை செயல்படுத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.…

இந்திய பெருங்கடலில் சீன கடற்படை தளங்கள்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

பீஜிங்: இந்திய பெருங்கடலில் 18 இடங்களில் கடற்படை தளங்களை சீனா அமைத்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நமிபியா நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் குழு ஒன்று நடத்திய ரகசிய ஆய்வில், இந்திய பெருங்கடலில் இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் சீனா கடற்படை…

காஷ்மீரில் ராணுவம் – பயங்கரவாதிகள் மோதல்: 10 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் உள்ள பிண்டி கிராமத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலின்போது ராக்கெட் லாஞ்சரைக் கொண்டு செல்லும் ராணுவ வீரர். ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள், 4 பயங்கரவாதிகள், 3 அப்பாவிகள் என மொத்தம் 10 பேர்…

100 நாள்களுக்குள் மீட்பதாகச் சொல்லவில்லை: கருப்புப் பணம் குறித்து வெங்கய்ய…

"வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை 100 நாள்களுக்குள் மீட்பதாக பாஜக கூறவில்லை' என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். கருப்புப் பணத்தை மீட்பது குறித்து மக்களவையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பாஜக-வின் தேர்தல்…

சொத்து கணக்குகளை சமர்ப்பிக்காத எம்.பி.,க்கள் 48 மணி நேரத்தில் வெளியிட…

புதுடில்லி:'இதுவரை, சொத்து கணக்குகளை சமர்ப்பிக்காத, பா.ஜ., - எம்.பி.,க்கள், 48 மணி நேரத்தில், சொத்து விவரங்களை, பார்லி., இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்' என, பிரதமர் மோடி, நேற்று காலை, அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 90 நாட்களுக்குள், எம்.பி.,க்கள் தங்கள் சொத்து கணக்கை, அரசிடம்…

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய…

முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரளா முதலமைச்சர் உ‌ம்ம‌ன் சா‌ண்டி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கேரள முதலமைச்சர் உ‌ம்ம‌ன் சா‌ண்டி…

மாவீரர் நாள் நிகழ்வுகளை திட்டமிட்டே சீர்குலைக்கும் காவல்துறை அதிகாரிகள்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர், பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை: ’’உலகம் முழுவதும் 65 நாடுகளில் தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த போராளிகள், அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் தாய்த் தமிழ்நாட்டிலோ பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் வேண்டுமென்றே தடை விதித்தும் உணர்வாளர்கள்…

பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாட அனுமதி மறுப்பு

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்த நாள் விழாவை சிறைச் சாலையில் கொண்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்…

ஈழ அகதிகள் முகாமில் குடமுழுக்கு நடத்த தடை: காவல் துறையினர்…

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை ஈழ அகதிகள் முகாம் உள்ளது. இங்கு சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஒன்று சேர்ந்து விநாயகர் கோயில் கட்டியுள்ளனர். இந்த கோயிலின் குடுமுழுக்கு நாளை 27 ந் தேதி வியாழக்கிழமை நடத்த திட்டமிட்டு அதற்காக ஒலிபெருக்கி மற்றும் பாதுகாப்பு கேட்டு…

தில்லி – சென்னை புல்லட் ரயில் சேவை: சீனாவில் உயர்நிலைக்…

தில்லி - சென்னை இடையே அதிவேக புல்லட் ரயில் சேவைக்கான வழித்தடம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயவும், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் இந்திய ரயில்வேயின் உயர்நிலைக் குழுவினர், சீனாவில் முகாமிட்டுள்ளனர். இந்திய ரயில்வேயின் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் உயரதிகாரி சதீஷ் அகர்வால் தலைமையிலான உயர்நிலைக் குழு, பெய்ஜிங்குக்கு…

எல்லைப் பிரச்சனை! சீனாவுடன் பேச்சு நடத்த சிறப்பு அதிகாரியை நியமித்தார்…

இந்தியா சீனா இடையே நீடிக்கும் எல்லைப் பிரச்சனை குறித்து, சீன அதிகாரிகளுடன் விவாதிக்கவும், முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவும் சிறப்பு அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில் இருநாடுகளும் எல்லைப்…

செம்மரக்கட்டைகள் பறிமுதல்: தமிழகத்தைச் சேர்ந்த 38 பேர் கைது

செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 38 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். ஆந்திராவின் சந்திரகிரியிலிருந்து தமிழகத்திற்கு செம்மரங்கள் கடத்தப்படுவதாக, திருப்பதி புறநகர் எஸ்.பிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, டிஎஸ்பி இலியாஸ் பாஷா தலைமையிலான போலீசார், முத்தியாள ரெட்டி பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்களைக் கடத்தி வந்த…

19,500 கோடி மதிப்புள்ள தமிழக ரயில் திட்டங்களை ரத்து செய்வதா?…

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை : ’’தமிழ்நாட்டில் ரூ.19,500 கோடி செலவில் செயல்படுத்த திட்டமிட்டிருந்த 14 தொடர்வண்டித் திட்டங்கள் உட்பட மொத்தம் 160 திட்டங்களை ரத்து செய்ய மத்திய தொடர்வண்டித்துறை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்போக்கான அணுகுமுறையுடன் கூடிய இம்முடிவு கண்டிக்கத்தக்கது. தொடர்வண்டித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம்…

மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை : வைகோ பேச்சு

படிக்கும் காலத்தில், மாணவர்களுக்கு, அரசியலும் சாதியும் தேவையில்லை,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.   பூரண மதுவிலக்கு கோரி, ம.தி.மு.க., சார்பில் கோவை சுந்தராபுரத்தில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை துவக்கி வைத்து, வைகோ பேசியபோது,  ‘’மதுப்பழக்கம், இன்று பல குடும்பங்களை சீரழித்து வருகிறது. ஆட்சியிலிருப்போர்,…

14 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது

இலங்கையின் வட-கடலில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களை மூன்று படகுகளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆரம்ப விசாரணைகளின் பின்னர் இவர்கள் ஞாயிறு மாலை யாழ். மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய…

வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பூச்சிக்கொல்லி மாத்திரை பெற்றோரையும் கொல்லும்

தமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதையொட்டிய விருதுநகர் மாவட்டங்களில் நடப்பதாக கருதப்படும் முதியோர் கொலைகள் சமீபகாலமாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தொகுக்கப்பட்டு வருகின்றன. அப்படியான முதியோர் சந்தேக மரணங்கள் மற்றும் கொலைகளை தடுப்பதற்கான களப்பணி செய்துவரும் தொண்டு நிறுவன ஊழியர் முத்துப்பிள்ளை. இந்த இரு மாவட்டங்களில் முதியோர் கொலைகள்…

காஷ்மீர்: வாஜ்பாய் கண்ட கனவை நனவாக்குவேன்: நரேந்திர மோடி

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வாரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், தொண்டர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி. ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சிக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கண்ட கனவை, தாம் நனவாக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீரில்…

தினமும் பாலில் குளிக்கும் சாமியார்: குடிக்கும் பக்தர்கள்

அரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் தினமும் பாலில் குளிப்பதாக தெரியவந்துள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் சாமியார் ராம்பால் ஆசிரமம் அமைத்து ஏராளமான பெண் சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தங்கி இருந்தார். ஆசிரமத்தையும், தன்னையும் பாதுகாக்க தனியாக பாதுகாப்பு படை அமைத்து தனி ராஜ்ஜியம்…

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கவும்! வைகோவை கைது செய்யவும்!-…

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில்  அவர் விடுத்துள்ள அறிக்கையில், ம.தி.மு.க. சார்பில் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி தியாகத் திருநாள்…