பா.ம.க தலைமையில் கூட்டணி: 8 கட்சிகளுக்கு அழைப்பு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் மாற்று அணி அமைக்கப்படும் என்று அக் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக கூட்டணிக்கு வருமாறு மதிமுக, ஜி.கே.வாசனின் புதிய கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்தார். பாமகவின் சிறப்புப் பொதுக்…

ரூ.12 கோடி போலி கரன்சி நோட்டுகள் பறிமுதல்

புதுடில்லி: பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வர முயன்ற இந்திய போலி ரூபாயின் மதிப்பு ரூ.12 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. போலி இந்திய ரூபாய்களை பெரும்பாலும் நேபாளம், வங்கதேசம், இலங்கை தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானம் மூலம்…

லடாக்கில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு: ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக்கில் உள்ள அக்சாய் சின் பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். அக்சாய்சின் பகுதி தொடர்பாக இந்தியா, சீனாவுக்கு இடையே சர்ச்சை உள்ள நிலையில், இதுதொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லே பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக்…

வேர்களை வெறுக்கும் விழுதுகள்: சிதையும் குடும்பத்தின் சிதிலமான முதியோர்

தமிழ்நாட்டில் தற்போது முதியோர் பராமரிப்பு என்பது மிகப்பெரிய சமூக சிக்கலாக மாறியதற்கான முதன்மைக்காரணிகளில் முக்கியமானது தமிழ்ச்சமூகத்தில் உடைந்து சிதறிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும், பெருகிவிட்ட சிறுகுடும்ப வாழ்வும் என்கிறார்கள் சமூகவியலாளர்கள். ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு என்பது குடும்பம் என்கிற அமைப்பு. பல தலைமுறைகளாக தமிழ்ச்சமூகம் என்பது கிராமப்புற…

முல்லைப் பெரியாறு: தொழிலகப் படை பாதுகாப்பு கோரி தமிழகம் மனு

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவின் விவரம்: "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தும் உத்தரவை…

மோடியின் அடுத்த இலக்கு இலங்கை விஜயம்! கச்சதீவு மீட்கப்படுமா?

இலங்கைக்கு நல்லெண்ணப் பயணமாக அடுத்த ஆண்டு (2015) தொடக்கத்தில் செல்ல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி கொழும்பு செல்லவுள்ளதால், அவரது பயணத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் நோக்குடன் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டாகச் செயல்பட்டு வருகின்றன.…

5 இந்திய மீனவர்கள் விடுதலை

மரண தண்டனையிலிருந்து மீண்ட தமிழக மீனவர்களுடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் வொய்.கே.சின்ஹா   போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து…

கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் செயலுக்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்  செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் உத்தரவுகளை மீறும் வகையில் காவிரி நதி நீரை சுமார் 48 டிஎம்சி…

ஹரியாணா ஆசிரமத்தில் வன்முறை: போலீஸாருடன் மோதல்; 100 பேர் காயம்

சாமியார் ராம்பாலை கைது செய்வதற்காக ஆசிரமத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைய முயன்றபோது, தடுத்து நிறுத்திய அவரது ஆதரவாளர்களை தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்த போலீஸார். ஹரியாணாவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சாமியார் ராம்பாலை கைது செய்வதற்காக, அவருடைய ஆசிரமத்துக்குச் சென்ற போலீஸாருக்கும், ராம்பாலின் ஆதரவாளர்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை…

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்:- சுஷ்மா ஸ்வராஜ்…

தமிழக மீனவர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று தமிழக பாஜக தலைவர்கள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார். டில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றைச் சேர்ந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று…

சிந்துவெளி குறியீடுகள் திராவிட மொழிக்குறியீடுகளே

சிந்துசமவெளியின் முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து அடையாளம் கண்டதில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் துவக்க காலசொற்குறியீடுகள் என்கிற முடிவுக்கு தாம் வந்திருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தமது சுமார் 50 ஆண்டுகால ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.…

உலக அளவில் சிறந்த முடிவெடுப்போர் பட்டியல்: மோடிக்கு முதலிடம்

உலக அளவில் சிறந்த முடிவெடுப்போர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவின் முன்னணி வெளிநாட்டுக் கொள்கை பத்திரிகை வெளியிட்டுள்ள "100 உலக சிந்தனையாளர்கள்' பட்டியலில், "சிறந்த முடிவெடுப்போர்' பிரிவில், உலக அளவில் மோடி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, 2-ஆவது இடத்தில் ஜெர்மன் பிரதமர்…

தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் –…

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றது. மேலும் சில அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி இருக்கிறார்கள். மது அருந்துவது இழிவானது என்ற நிலைமை…

கொத்தடிமைகள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம்

உலகில் இன்றளவும் சுமார் மூன்று கோடியே அறுபது லட்சம் பேர் அடிமைத்தளையில் வாழ்கின்றனர் என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. இந்தியாதான் உலகிலேயே மிக அதிகமான அடிமைகளைக் கொண்டுள்ள நாடு என க்ளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் அமைப்பு கூறுகிறது. வேலையிடத்தில் சுரண்டப்படும் தொழிலாளர் எண்ணிக்கையில் இந்தியாதான் மிகவும் மோசம்…

குறைந்து வரும் பெண் குழந்தை விகிதம்: கருவிலேயே கண்டறிந்து அழிக்கப்படும்…

சென்னை: தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்து வருவதாகவும், கருவிலேயே கண்டறிந்து அழிக்கப்படுவதே இதற்கு காரணம் என சமூக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் செயல்படும் மனித ஆர்வலர்களுக்கான அமைப்புகள் சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசிடம் கேட்டு பெற்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

600 க்கும் மேற்பட்ட படுகொலைகளுக்கு நீதி என்ன? சிங்கள கடற்படை…

எட்டு தமிழ் மீனவர்கள் மீதான தூக்கை இரத்து செய்து விடுதலைசெய்யக்கோரி இன்று மே 17 இயக்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கனவர்கள் கலந்து கொண்டனர். இதில் 600 க்கும் மேற்பட்ட படுகொலைகளுக்கு நீதி என்ன? சிங்கள கடற்படை தளபதிகளை கைது…

புரியாத புதிர்… முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை…

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறந்துவிட இயலாது என தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 140 அடியைத் தாண்டிவிட்டுள்ள நிலையில், அந்த அணை உடைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகின்ற கேரள மக்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக,…

தமிழின அழிப்பு ஈழத்திலிருந்து தமிழகத்துக்கும்

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று முன்பு வர்ணிக்கப்பட்டது. மிகையான அழகும் வளமும் பொருந்திய  இத்தீவு ஶ்ரீலங்கா மற்றும் தமிழீழம் ஆகிய இரு நாடுகளை கொண்டது. இதில் தமிழீழம் வளம் மிகுந்த பெரிய கடற்பரப்பையும் நிலவளங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட நாடாகும். தமிழ் தேசமெங்கும் சிங்கள இனவெறியர்களின்…

கருப்புப் பணத்தை மீட்க முன்னுரிமை: மோடி

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், ஜி20 மாநாட்டுக்கு இடையே சந்தித்த (இடமிருந்து வலம்) ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் தில்மா ரூசோஃப், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்பதற்கு தனது…

கிராமங்களை தத்தெடுக்கும் வேட்டையில் அரசியல் பிலபலங்கள்!

இந்திய மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தத்தெடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொரு எம்.பி.யும், ஒவ்வொரு கிராமத்தை தத்து எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த திட்டத்தின் கீழ் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ஜெயாப்பூர்…

ஜெயலலிதாவின் பதவி பறிப்பு: அறிவிப்பை வெளியிட்ட சட்டசபை செயலாளர் பதவி…

ஜெயலலிதாவின் பதவி பறிப்பு அறிவிப்பை முறைப்படி வெளியிட்ட தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன், அந்த பொறுப்பில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக் கில் பெங்களூர் தனி நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 27ம் திகதி அறிவித்தது.…

142 அடியை எட்டப்போகும் முல்லைப் பெரியாறு அணை

  35 வருடத்திற்கு பின்னர் 142 அடியை எட்டப்போகும் முல்லைப் பெரியாறு அணை.   தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ளதால், நீர் திறப்பு வினாடிக்கு 900 கனஅடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.   முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்கலாம்…

கருத்தடை அறுவைசிகிச்சையில் 13 பெண்கள் பலி: மூடி மறைக்க சத்தீஷ்கர்…

குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டு உயிரிழந்த பெண்களின் குடும்பங்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் இச்சம்பவத்தை சத்தீஷ்கார் அரசு முடிமறைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.   சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூர் புறநகர் பகுதியான பென்தாரி கிராமத்தில், தேசிய குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் கீழ்…