தில்லியில் ஆட்சி அமைக்கும் விவகாரம்: கடிதங்கள், எஸ்எம்எஸ் மூலம் மக்களின்…

தில்லியில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டுமா? என்பது குறித்து மக்கள் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க ஆம் ஆத்மி கட்சி தீர்மானித்துள்ளது. இதையடுத்து, வரும் 22-ஆம் தேதி வரை கடிதங்கள், சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் போன்றவை மூலமாக…

தமிழகத்து ராஜபக்ச தான் கருணாநிதி: நாஞ்சில் சம்பத் காட்டம்!

கருணாநிதி தமிழகத்து ராஜபக்ச என்றும் ராஜபக்ச இலங்கையின் கருணாநிதி என்றும் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியின் இரண்டாண்டு சாதனை மற்றும் ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அரசு…

இலங்கை தமிழர்கள் தொடர்பில் நடத்தப்படும் போராட்டங்கள் பயனற்றது!- சீமான்

இலங்கை தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். வேலூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை…

இலங்கைச் சிறைகளில் உள்ள மீனவர்களை மீட்கக் கோரி போராட்டம்

இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்களையும் அவர்களது உடமைகளையும் உடனடியாக மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தி மீனவர் ஐக்கிய முன்னணி சார்பில் இன்று திங்கட்கிழமை புது தில்லியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மீனவர் ஐக்கிய முன்னணியின் மாநில இணைப் பொதுச்…

தமிழகத்துக்குள் இலங்கை தமிழ் போராளிகளா?! – பொலிஸார் தேடுதல்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வந்ததாக கூறப்படும் தமிழ் அகதிகள் பலரை தேடி தமிழகத்தில் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சாந்தன் என்ற இலங்கை அகதி ஒருவர் தனுஸ்கோடிக்கு அருகில் உள்ள அரிச்சல்முனை பகுதியில் நேற்று கைதுசெய்யப்பட்ட பின்னரே இந்த தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாம், தமிழகத்துக்கு வந்த படகில் பலர் தம்முடன் பயணித்ததாக…

போர்க்காலத்தை போன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்-…

போர்க்காலத்தை போன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் செல்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார். இந்தநிலையில் அயல்நாடு என்ற அடிப்படையில் இந்திய மத்திய அரசாங்கம் இந்த ஏதேச்சதிகார போக்கை கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் தலையிட்டால் இலங்கையுடனான உறவு பாதிக்கப்படும் என்று…

ராஜபாளையம் நாய்கள் சர்வதேச முத்திரை பெறுமா?

தெற்காசியாவிலேயே முதல் முறையாக குறிப்பிட்ட இரண்டு நாய் இனங்கள் குறித்த ஆய்வுகள் இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழகத்திலுள்ள ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை வகை நாய்கள் குறித்து சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் இயல்புகள் பட்டியிலப்படவுள்ளன. இந்த ஆய்வுகளை ஹரியானா மாநிலம் கர்னாலிலுள்ள தேசிய விலங்குகள் மரபின ஆராய்ச்சி மையமும் தமிழ்நாடு…

ரஷ்யா, பாகிஸ்தானை விட குறைவு; இலங்கை சீனாவை விட அதிகம்:…

மனித சமுதாயத்தையே அரித்தெடுக்கும் புற்றுநோயாக ஊழல் பெருகி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த ஒழிக்க, பலரும் பல வழிகளிலும் முயன்றும், இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள 177 நாடுகளில் ஊழல் குறித்து ஆய்வு நடத்தியதில் ஊழல் இல்லாத நாடே இல்லை என தெரிய வந்துள்ளது.…

ஆட்சியமைக்க கேஜரிவால் நிபந்தனை: தில்லி அரசியலில் புதிய திருப்பம்

தில்லியில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சனிக்கிழமை சந்தித்து விட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால். தில்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது குறித்து தங்களது கட்சி முடிவெடுப்பதற்கு முன்பு காங்கிரஸூம் பாஜகவும் தங்களது 18 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று ஆம்…

கூடங்குளம் பாதுகாப்பானதே! விஞ்ஞானிகள் பாராட்டு

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பான ஒன்று தான் என 11 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அணுஉலை பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு கன்னியாகுமரியில் கடந்த 11ந் திகதி தொடங்கியது. இந்த கருத்தரங்கில் பல்கேரியா, சீனா, செக்குடியரசு, பின்லாந்து, ஹங்கேரி, அர்மேனியா, ஈரான், ரஷியா, சுலோவிகா, உக்ரேன்…

ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம்: திருச்சியில் தேவகவுடா…

ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் இந்தியாவில் இருந்து ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம். டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை…

நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கடிதம்! ஆட்சி அமைப்பாரா அரவிந்த்…

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை உறுப்பினர்கள் 2 இடங்களையும் பிடித்தனர். 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 36 உறுப்பினர்களை கொண்ட கட்சி மட்டுமே குறைந்தபட்ச மெஜாரிட்டியுடன் ஆட்சி…

நக்சல் கொள்கையை பின்பற்றுகிறது ஆம்ஆத்மி : சுப்ரமணிய சாமி

மும்பை: ஆம் ஆத்மி, நக்சல் கொள்கைகளை பின்பற்றி வருவதாக பா.ஜ.,தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சிக்கு கொள்கைகள் என்பது இல்லை. அவர்கள் நக்சல் இயக்க சித்தாந்தங்களை பின்பற்றுகின்றனர். இந்த கொள்கையினால் சமுதாயத்தை முன்னேற்ற முடியாது. ஆம் ஆத்மி கட்சி…

இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் : மத்திய புள்ளியியல் துறை…

புதுடில்லி : ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் என மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆசியாவில் மட்டுமின்றி உலகிலேயே அதிக பணவீக்க விகிதத்தை கொண்ட நாடும் இந்தியா தான். கடந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி குறித்த புள்ளி விபரத்தை மத்திய புள்ளியியல் துறை அலுவலகம்…

2011-ல் ரூ4லட்சம் கோடி இந்திய கருப்பு பணம் வெளியேற்றம்!

வாஷிங்டன்: கடந்த 2011-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட கறுப்பு பணம் சுமார் 4 லட்சம் கோடி என குளோபல் பைனான்சியல் இன்டக்ரிடி ஆய்வி் மூலம் தெரியவந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும். மேலும் கறுப்பு பணத்தை வெளி நாடுகளுக்கு அனுப்பி…

மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால் கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்

இலங்கையின் அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக…

தில்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க மறுப்பு

தில்லியில் ஆட்சி அமைக்க வருமாறு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் விடுத்த அழைப்பை ஏற்க பா.ஜ.க. மறுத்துவிட்டது. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்கள் பணியாற்றவோ அல்லது மறுதேர்தலைச் சந்திக்கவோ தயாராக இருக்கிறோம்' என்று நஜீப் ஜங்கிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாக முதல்வர்…

ஜாதி, வகுப்பு மோதல்களைத் தூண்டினால் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா

தமிழகத்தில் ஜாதி மற்றும் வகுப்பு மோதல்களைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு திருப்திகரமாக உள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சமூக விரோத சக்திகளை காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும்…

செவ்வாய் கிரக பயணத்துக்கு 20,000 இந்தியர்கள் விண்ணப்பம்

செவ்வாய் கிரகத்துக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான பயணத்துக்கு, இந்தியர்கள் 20,000 பேர் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கான "ஒரு வழிப் பயணம்' ஒன்றை "மார்ஸ் ஒன்' என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப்…

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தவறிவிட்டன: ப. சிதம்பரம்…

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தவறி விட்டதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் புதன்கிழமை தேசிய அளவிலான பொருளாதார கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நிதிப் பற்றாக்குறைதான் நாம் விவாதிக்க வேண்டிய பட்டியலில் முதன்மையானதாக உள்ளது. நாட்டின்…

ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது : உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் ஓரின சேர்க்கை குறித்த பொது நலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கை என்பது சட்டப்படி குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்டப்படி தவறில்லை என்று…

இலங்கை இனப் படுகொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது: வைகோ அறிக்கை

ஈழத்தில் நடந்தது இனப் படுகொலைதான் என ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின்…

இலங்கை விடயத்தில் இந்தியா மென்மைப்போக்கை கடைப்பிடிக்கிறது: பாரதீய ஜனதாக்கட்சி குற்றச்சாட்டு

தமிழகத்தின் எதிர்ப்பு இருக்கும் போது இந்திய மத்திய அரசாங்கம், இலங்கையின் படையினருக்கு பயிற்சிகளை எவ்வாறு வழங்க முடியும் என்று பாரதீய ஜனதாக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அட்டல் பிஹாரி வாஜ்பாய், பிரதமராக இருந்தபோது பணத்துக்காக கூட இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை என்று இந்தியா தெரிவித்திருந்தது. எனினும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான…