மைசூர் மகாராஜா மரணம்

கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மாரடைப்பால் திடீரென இன்று காலமானார். மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார். இவர் கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை…

புதிய சாதனை ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சி

புதுடெல்லி, டிச.9-  ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில், டெல்லி மாநில சட்டசபைக்கு போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று புதிய சாதனை ஏற்படுத்தி உள்ளது. லோக்பால் மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் அன்னா ஹசாரே தீவிர போராட்டம் நடத்தினார். அப்போது வருமானவரித்துறை அதிகாரியான அரவிந்த்…

நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், காங்கிரசுக்கு, பலத்த அடி…

புதுடில்லி : அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படும், நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், காங்கிரசுக்கு, பலத்த அடி கிடைத்துள்ளது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் சூறாவளி பிரசாரத்துக்கு, அமோக வெற்றி கிடைத்துள்ளது. ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்,…

பிரபாகரனை காப்பாற்ற தமிழகத்தில் எல்லா தலைவர்களிடமும் ஓடினேன்! சுயநலத்தில் இருந்தனர்…

வன்னி மண் அழிகிறது மக்கள் மற்றும் எம் தானைத் தலைவனை பிரபாகரனை காப்பாற்றுங்கள் என்று தமிழகத்தின் எல்லாத் தலைவர்களிடமும் மன்றாடினேன் ஆனால் தமிழகத் தலைவர்கள் பொங்கல் கொண்டாடினார்கள். அவர்களின் அன்றைய  சுயநலத்தால்தான் தொடர்கிறது இன்றைய அவலம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளன்…

இந்தியாவில் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பல்லம் ராஜு

இந்தியாவில் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், இந்தக் காலிப்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார். இதுகுறித்து அவர் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்…

ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இந்தியா விலக்கப்படக்கூடும்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர்…

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ள ஊழல் கறை படிந்த அதிகாரிகள் வெளியேற்றப்படாவிடில் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக்கப்படக்கூடும் என்று பத்திரிகையாளர் செய்தி ஒன்றில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார். வரும் செவ்வாய்க் கிழமைக்குள் நல்ல நிர்வாகத்திற்கான விதிமுறைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் சமர்ப்பிக்கத் தவறினால்…

மூட நம்பிக்கை எதிர்ப்பாளர் கொலை தொடர்பில் இருவர் கைது

இந்தியாவில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கும் மந்திரவாதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்துவந்த செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் காவல்துறையினர் இரண்டு பேரைக் கைதுசெய்துள்ளனர். புனே நகரில், காலை-நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில், அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறிவரும் சாமியார்களையும்…

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க 5 கோவில்களில்…

போபால், டிச. 7–மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 25–ந்தேதி தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் சுமார் 140 தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியானது. இதற்கிடையே ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு ஓட்டு…

பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க தயார் நிலையில் ராணுவம்

காஷ்மீரில் எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவும் முயற்சிகள் நீடிப்பதாகக் கூறியுள்ள ராணுவம், இதனை முறியடிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலை கொண்டுள்ள ராணுவத்தின் 15-ஆவது படைப்பிரிவின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங் கூறுகையில், "எல்லைக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்களில்,…

மத்திய அரசு ஈழத் தமிழர் அழிவை ‘இனப்படுகொலை’ என்று ஒருநாளும்…

இன்றுவரை மத்திய அரசு ஈழத் தமிழர் அழிவை 'இனப்படுகொலை’ என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே. உங்களுக்குத் தெரிந்த இந்த உண்மை, நீங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் மன்மோகன் அரசுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது? இவ்வாறு குறிப்பிட்டு தமிழருவி மணியன் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு மடல் ஒன்றை வரைந்துள்ளார். மாண்புமிகு…

கேரள மாநிலத்திலிருந்து தமிழர்கள் விரட்டப்படுவதை தடுக்க வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேற வேண்டும் கேரள அரசு ஆணையிட்டிருக்கிறது. இதனால் அட்டப்பாடி தமிழர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அட்டப்பாடியில் தமிழர்கள் விவசாயம்…

தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் சென்னை ஐ.ஐ.டி.

வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளில் தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. லண்டனிலிருந்து வெளியாகும் "டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' பத்திரிக்கை, இந்தியா, சீனா, ரஷியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 22 நாடுகளில், மிகச்சிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை…

வளர்ச்சியடைந்த நாடுகளின் யோசனையை ஏற்க இந்தியா மறுப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், விவசாய மானிய உச்ச வரம்பு குறித்து அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் முன்வைத்த யோசனையை ஏற்க இந்தியா மறுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் விவசாயம் தொடர்பான ஒப்பந்தத்தில், உணவு தானியங்களுக்கு அளிக்கப்படும் மானியம் 10 சதவீதத்துக்கு மேல்…

இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சி: ஜீ.கே.வாசன் கண்டனம்

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் கைவிட வேண்டும் என்று இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இவ்வாறான கொள்கைக்கு தாம் எதிர்ப்பை வெளியிட்டு வந்தமையை வாசன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் மீண்டும் தமது எதிர்ப்பை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வாசன்…

காஷ்மீரை வைத்து இந்தியா-பாக்., இடையே எந்நேரமும் போர் வரும் :…

இஸ்லாமாபாத் : காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் 4வது முறையாக போர் நடைபெறும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை இந்தியாவில் இருந்த பிரித்து தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரின்…

பாபர் மசூதி இடிப்பு தினம்; சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில்…

நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் 06.12.2013 வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் புதன்கிழமை முதல் 5…

சியாச்சினை விட்டு இந்தியா வெளியேற வேண்டும்: பாகிஸ்தான்

சியாச்சின் பகுதியில் முகாமிட்டுள்ள இந்தியத் துருப்புகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ் புதன்கிழமை கூறியதாவது: சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவத்தினர் முகாமிட்டுள்ளதால் பாகிஸ்தானின் சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் நிலவுகிறது.…

கோத்தபாய ராஜபக்ச இந்திய அதிகாரிகளுடன் இரகசியமாக பேசியது என்ன?

ராஜபக்சவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச டெல்லிக்கு இரகசியமாக வந்து இந்திய கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையில் சமீபத்தில் கொமன்வெல்த் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்று…

இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! – இப்போது ப.சிதம்பரம்…

காங்கிரஸ் கட்சியின் காலைச்சுற்றிய பாம்பாக ஈழத்தமிழர் விவகாரம் மாற ஆரம்பித்து விட்டது. அதை அந்தக் கட்சியினரும் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளம்தான் சென்னையில் ப.சிதம்பரத்தின் சிறப்புப் பேச்சு! இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் கடந்த வாரம் ஒரு மணி நேரம் முழங்கினார் மத்திய…

குளிர்கால நாடாளுமன்ற தொடரில் இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரப்படும்:…

எதிர்வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போர் தொடர்பான சுயாதீன விசாரணை மற்றும் கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து பெற்றுக்கொள்ளல் ஆகிய விடயங்களை தீவிரமாக வலியுறுத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. திமுகவின் நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு இதனை அறிவித்துள்ளார். அத்துடன் அண்மையில் கொழும்பில் நடந்து முடிந்த பொதுநலவாய நாடுகளின் அமர்வு…

மீனவர் பிரச்னைக்கு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: சுதர்சன…

தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறினார். மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்  கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில்…

மருந்து, மாத்திரைகளால் ஏழைகளாகும் 4 கோடி இந்தியர்கள்! அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் மருந்து வாங்கியே ஏழைகளாகும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவித்துள்ளன. உலகின் பல நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மிகவும் தேவைப்படும் மருந்துகள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு…

எலிசபெத் ராணியைவிட மிகப்பெரிய பணக்காரி சோனியா காந்தி!

உலக அரசியல் தலைவர்களில் 12 வது பெரிய பணக்காரராக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திகழ்வதாக செய்தி வெளியாகி உள்ளது. உலக அரசியல் தலைவர்கள் 20 பேர்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த பட்டியலை 'ஹஃபிங்டன் போஸ்ட்' என்ற ஆங்கில இணைய தளம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்…