திட்டமிட்ட வழியிலேயே சேதுக்கால்வாய்: இந்திய அரசு

சேதுக்கால்வாய் திட்டத்தை தற்போது நிறைவேற்றிவரும் வழியிலேயே நிறைவேற்ற விரும்புவதாக இந்திய நடுவணரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்க சுப்பிரமணியசுவாமிக்கும் தமிழக அரசுக்கும் நவம்பர் வரை அவசகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டம், ஆதம் பாலம் என்று அறிவியலாளர்களாலும், ராமர் பாலம் என்று…

பாலாற்றின் எதிர்காலம் குறித்து கேள்விகள்

கர்நாடக மாநிலத்தில் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தை அண்டியப் பகுதிகளில் பெருமளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் பாலாறு நதி பாயும் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நதியை காப்பாற்ற…

இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு மோடி தகுதியானவர்: அத்வானி புகழாரம்

இந்தியாவில் வரும் 2014ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு ஆட்சேபனை எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானி தனது அதிருப்தியை ராஜ்நாத் சிங்கிடம்…

சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: சல்மான் குர்ஷித் நம்பிக்கை

சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். இந்திய மற்றும் சீன ஊடகங்கள் இடையே புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்திய-சீன ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் துவக்க விழா, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சல்மான் குர்ஷித்…

உ.பி.: கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை: மன்மோகன் சிங் உறுதி

உத்தர பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் முசாஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த 7ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.…

முசாஃபர் நகரில் ஆய்வு நடத்திய அகிலேஷ் யாதவுக்கு கருப்புக் கொடி

முசாஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட சென்ற அந்தமாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக கவால் பகுதி மக்கள் கருப்பு கொடி காட்டி எதிரப்பு தெரிவித்தனர். முசாஃபர் நகரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அதில், 47 பேர் உயிரிழந்தனர். கலவரம்…

தேசத்தின் தேவை வலுவான தலைமை: நரேந்திர மோடி

தேசத்துக்கு இப்போது வலுவான தலைமையே தேவை என்று, பாஜகவின் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியாணா மாநிலம், ரேவாரி நகரில் முன்னாள் ராணுவ வீரர்களிடையே ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் மற்றும் ஏராளமான முன்னாள்…

குடிநீர் விற்பனையில் இறங்கியது தமிழக அரசு

தமிழநாடு அரசு புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீர் வர்த்தகத்திலும் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு பத்து ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளது. சென்னையின் முக்கிய பேருந்து நிலையமான கோயம்பேடு உட்பட, முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் இந்த குடிநீரை விற்க…

அக்னி -5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; அணு ஆயுதம்…

பாலசோர்: இந்தியா தயாரித்த அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் வீலர் தீவு பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை சீனாவை மிரட்டும் அளவிற்கு…

கோபப்பட அத்வானிக்கு உரிமை உண்டு: ராஜ்நாத் சிங்

மூத்த தலைவரான அத்வானிக்கு கோபப்பட உரிமை உண்டு என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஷயத்தில் மூத்த தலைவரான அத்வானி அதிருப்தியில் இருப்பதாகவும், தன்னைப் புறக்கணித்து இந்த முடிவை கட்சி எடுத்ததில் அவர் கோபமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

அதிகாரத்தை ஈழத்தமிழர்கள் கைப்பற்ற வேண்டும்! மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்…

ஈழப்பிரச்சினைகளில் ஆழமான அறிவும் விரிவான பார்வையும் கொண்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். சமீபத்தில்,சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், இலங்கை என்பது தமிழர்களின் பூமி. தமிழீழ கனவு அனைவரின் விருப்பம் என்று பகிர்ந்திருக்கிறார். சோனியா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில்…

விக்னேஸ்வரனின் உதாரணமும் சீமானின் கண்டனமும்

இலங்கையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடக்கவிருக்கும் வடமாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தி ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார். அதில், இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று…

வானம் பார்த்த பூமியில் மானவாரி நெல்: விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் அருகே உள்ள சில கிராமங்களில் வானம் பார்த்த பூமியில் அண்மையில் பெய்து வரும் மழைக்கு மானவாரி நெல் பயிர்கள் முளைவிட தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூர், ஒழையூர், மேட்டூர், கரூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான புஞ்சை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் வேர்கடலை, எள்…

ஒடிசாவில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஒடிசாவில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் துப்பாக்கிச் சண்டையில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலம் மல்கான்கிரி பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். பாதுகாப்புப் படையினரை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை…

அத்வானி எதிர்ப்பை மீறி பாஜகவின் பிரதமர் வேட்பாளரானார் மோடி

இந்தியாவின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நரேந்திர மோடி பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார். இதற்கு பாஜகவின் மூத்த தலைவர் எல் கே அத்வானி உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய தலைநகர் புது தில்லியில்…

இலங்கைக்கு கப்பல் விற்பனையை இந்திய கப்பல்துறை அமைச்சர் எதிர்க்கிறார்!

இலங்கைக்கு இரண்டு கப்பல்களை நிர்மாணித்து வழக்கும் திட்டத்தை கைவிடுமாறு மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி கே வாசன் இந்திய பிரதமரிம் கோரிக்கை விடுக்கவுள்ளார். இலங்கைக்கு கப்பல்கள் விற்பனை செய்யப்படுவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக வாசன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பிரதமரை சந்தித்து வலியுறுத்தப் போவதாக வாசன் தெரிவித்துள்ளார். 13வது…

ஐநா சபையின் சர்வஜன வாக்கெடுப்பே இலங்கை தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வை…

ஐக்கிய நாடுகளின் அனுசரணையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும் போதே இலங்கையில் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்று தமிழக முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்று திரும்பியதன் பின்னர் மனித உரிமைகள் பேரவையில்…

கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையில் அயல்வீட்டுக்காரர் தலையிட முடியாது: தமிழக…

இலங்கையில் இடம்பெறுவது கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையாகும். இதில் தமிழக அரசியல் தலைவர்கள் வந்து விவாகரத்து பெறுமாறு கோரமுடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணத்துக்கான முதன்மை வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தாம் சண்டையிட்டு கொள்வோம் பின்னர் சேர்ந்துக் கொள்வோம். அடுத்த வீட்டுக்காரர் வந்து…

உ.பி. கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே சூசகமாகத் தெரிவித்தார். மாநிலத்தின் முசாஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை கலவரம் மூண்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆகியுள்ளது. வன்முறையில் காயமடைந்தவர்கள்…

செவ்வாய்க் கிரகத்துக்கு அடுத்த மாதம் விண்கலம் அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டம்

செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக அடுத்த மாதம் விண்கலம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று, "இஸ்ரோ'வின் செவ்வாய் வட்டச் சுற்றி திட்ட (மார்ஸ் ஆர்பிடர் மிஷன்) இயக்குநர் எஸ்.அருணன் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவில் இருந்து பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கும், சந்திரனுக்கும் ஏற்கெனவே செயற்கைக் கோள்கள்…

இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கக் கூடாது!

இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்திலுள்ள அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கும் நடவடிக்கை தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர்…

தமிழர்களை வாழவைக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் இலங்கை செல்கிறார்!

இலங்கையில் தமிழர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர்களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.…

தமிழநாட்டில் தமிழீழ சின்னம்! திறந்து வைக்க முதல்வர் வருவாரா?

2009 நாடாளுமன்றத் தேர்தலில் புயலைக் கிளப்பிய ஈழ விவகாரம்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கப் போகிறது. இலங்கையில் போர் உக்கிரமாக வெடித்து தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட நேரத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் ஜரூராக நடந்தன. இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள மிஸ்டர் கழுகு பகுதியில்…