வெற்றுக் கூச்சல்களும், அடாவடி சவால்களும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றாது: ஞானதேசிகன்

காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்  வெளியிட்ட அறிக்கையில், ’’இலங்கையின் வடக்குப் பகுதியில் தேர்தல் நடந்து, ஐனநாயக முறையில் ஓர்  அரசு தேர்ந்தெடுக்கப் பட்டு ஆட்சி செய்ய உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மகத்தான வெற்றியை இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது. வாக்களித்த மக்களுக்கு என் வாழ்த்துகள். இலங்கையின் வடக்கு,…

ஒரே மேடையில் அத்வானி, மோடி

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அதன் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும், அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டப் பிறகு அவரும், எல்.கே. அத்வானியும் ஒரே மேடையில்…

நேர்மையான நகரம்: இரண்டாமிடத்தில் மும்பை!

ஊழல் குறித்த கணக்கீடுகள் வெளியிடப்படும்போது இந்தியா பெரும்பாலும் முன்னிலை இடங்களில் இருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆனால், சமீபத்தில் நகரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பை வித்தியாசமான முடிவைக் காண்பித்தது. உலக நாடுகளின் முக்கிய நகரங்கள் 16 தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தெருவில் கைவிடப்படும் பணப்பைகளில் எத்தனை திருப்பி ஒப்படைக்கப்படுகின்றன…

நரேந்திர மோடிக்கு ஆதரவாக களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்! திருச்சியில்…

திருச்சியில் வரும் 26.09.2013 வியாழக்கிழமை நடக்கும் பாஜக மாநாட்டிற்கு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி வருகை தருகிறார். இதனையொட்டி ஒவ்வொரு ஊரிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் பாஜக தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் பாஜகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தர…

எம்.பி., எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்தை தடுக்க அவசரச் சட்டம்?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குற்ற வழக்குகளில் சிக்கி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாகத் தகுதிநீக்கம் செய்யும்…

ஹைதராபாத் இணைப்பு: அத்துமீறல்கள் குறித்து வெளிவராத அறிக்கை

இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட போது, இடம்பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது. ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு…

காந்திஜி வழியைதான் பின்பற்றுகிறார் மோடி:சுப்பிரமணிய சுவாமி

மும்பை: பா.ஜ.க., குஜராத் முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் முறையை நடைமுறைப்படுத்தியது.இம் முறைக்கு பா.ஜ.க., தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். கட்டாயப்படுத்தவில்லை:இதில் தவறு என்ன இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை…

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: ப. சிதம்பரம் நம்பிக்கை

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த்…

மாநில அதிகாரத்தில் மத்திய அரசு குறுக்கீடு: தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

"மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு குறுக்கீடு செய்யும் போக்கு தொடர்ந்து நீடித்து வருவதாக' தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. தில்லியில் 16-வது தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழக முதல்வர்…

வகுப்புவாத மோதல்களுக்கு மாநில அரசு தான் பொறுப்பு: மன்மோகன்சிங் பேச்சு

புதுடில்லி: அதிகரிக்கும் வகுப்பு மோதல்கள் கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், வகுப்பு ‌மோதல்களை தூண்டிவிடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 16-வது தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் இன்று டில்லி விஞ்ஞான் பவனில் , பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடியது.…

மாணவர்கள் தயாரித்த காரில் தீபா மாலிக் தில்லி பயணம்

அர்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீராங்கனை தீபா மாலிக், சென்னை சத்தியபாமா கல்லூரி மாணவர்கள் தயாரித்த புதிய காரில் தில்லி பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் இக் காரை தயாரித்த 7 மாணவர்களும் உடன் செல்கின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில், தில்லி கார் பயணத்தை பல்கலைக்கழக…

மீனவர்களிடையே சென்னையில் பேச்சுவார்த்தை: ஜெ அழைப்பு

இந்திய இலங்கை மீனவர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து டிசம்பரின் சென்னையில் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இருநாட்டு மீனவர்களும் கடல் எல்லையில் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அவர்களிடையே எதிர்வரும் டிசம்பரில் சென்னையில்பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உதவவேண்டும் என…

தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை வைத்திருந்தார்: பாபா ராம்தேவ் பிரிட்டன்…

தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை வைத்திருந்ததாக கூறி யோகா சாமியார் பாபா ராம்தேவ் பிரிட்டன் விமான நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் 8 மணி நேரம் பிடித்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சரமாரி கேள்விகள் கேட்டு அதிகாரிகள் தொடுத்ததாகவும்,…

இந்திய யோகா கலைக்கு உஸ்பெகிஸ்தானில் வரவேற்பு

தாஷ்கண்டு: உஸ்பெகிஸ்தானிலும், இந்திய, யோகக் கலை, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உஸ்பெகிஸ்தானில், 1995ல், "இந்திய கலாசார மையம்' துவங்கப்பட்டது. பின், 2005ல், இந்திய கலாசாரத்துக்கான, "லால் பகதூர் சாஸ்திரி மையம்' என்று, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. "உள்ளூர் மக்களிடையே, யோகா மிகவும் பிரபலமடைந்துள்ளது. இங்கு நடத்தப்படும், யோகா வகுப்புகளில்,…

போலீஸார் பற்றாக்குறையால் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸார் பற்றாக்குறை காரணமாக கொலை, கொலை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டத்தில் 28 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லையில் மட்டும் 16 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். வருவாய்…

மீனவர் பிரச்னை: தமிழக அரசின் ஆதரவின்றி தீர்வு காண முடியாது

இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் விவகாரத்துக்கு தமிழக அரசின் துணையின்றி தீர்வு காண முடியாது என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார். கச்சத்தீவைப் பொருத்தவரை, அது இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நட்புப் பகுதியாக இருக்க வேண்டும் என காங்கிரஸ்…

மும்பையில் பயங்கரவாதி தப்பியோட்டம்

இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் அப்சல் உஸ்மானி, வழக்கு விசாரணைக்காக மும்பை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது தப்பியோடிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர திட்டமிடப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்ட (எம்.சி.ஓ.சி.ஏ) நீதிமன்றத்துக்கு வெளியே அவர் "காணாமல் போய்'விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 37 வயதாகும் உஸ்மானி, தன் மீது…

மீனவர் பிரச்சினை! இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும்: ஜீ.கே.வாசன் எச்சரிக்கை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் தடுப்புக்காவலை தொடர்ந்து நீடிப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மீனவர்களுக்கு துரோகம் செய்தால் இந்தியா-இலங்கை உறவு பாதிப்பு ஏற்படும் என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் எச்சரித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு…

அமெரிக்க நிர்பந்தத்துக்கு அடிபணிகிறது இந்திய அரசு!

அணுஉலை விபத்து இழப்பீடு விவகாரத்தில், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு மத்திய அரசு அடிபணிவது, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அவமதிப்பதுடன், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வரும் 27-ம்…

கணவர் இறந்ததால் கதறிய 3 மனைவிகள்! தீடீரென உயிருடன் வந்ததால்…

கணவர் இறந்து விட்டதாக வந்த தவறான தகவலை நம்பி கோயம்பேடு காவல் நிலையத்தில் 3 பெண்கள் கதறி அழுது கொண்டிருந்த போது திடீரென அவர்கள் கணவர் உயிருடன் வந்த சம்பவம் இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவர் திடீரென நெஞ்சுவலியால் துடிக்கவே,…

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் மதச்சின்னமல்ல

தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை மாற்ற வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அதுநாள்வரை சென்னை…

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு தலா…

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு மீண்டும் தலா ரூ. 1 லட்சம் நிதி வழங்கினார், முதல்வர் ஜெயலலிதா. மேலும், அவர்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக படகுகள் வாங்குவதற்கு தலா ரூ.30 லட்சம் மானியம் மற்றும் ரூ.30 லட்சம் வங்கிக் கடன் ஆகியவற்றை செய்து தரவும்…

மத்திய அரசு சிக்கன நடவடிக்கை: சொகுசு விமானப் பயணம், ஆடம்பர…

மத்திய அரசின் நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த 5 நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்கள் நடத்தவும், விமானங்களில் சொகுசு பயணம் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசு துறைகளின் நிதி ஆலோசகர்களுடன் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் சிக்கன நடவடிக்கைகள்…