உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
தெலங்கானா தனி மாநிலம் அமைக்க எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் விஜயவாடா மக்களவைத் தொகுதி உறுப்பினருமான லகடபதி ராஜகோபால் கூறினார். தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தனித் தெலங்கானா…
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: முக்கிய எதிரி “போலீஸ்’…
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான "போலீஸ்' பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிடிபட்டான். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு அவரது அலுவலகத்தின் முன்…
மத்திய மந்திரிசபையில் இருந்து சிரஞ்சீவி உள்பட 4 மந்திரிகள் ராஜினாமா
ஐதராபாத், அக்.4- தனி தெலுங்கானா குறித்து மத்திய மந்திரிசபை முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் நேற்று ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. ஆந்திர மாநில மந்திரிகள் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டியை சந்தித்து பேசினார்கள். பின்னர் மத்திய மந்திரிசபையின்…
தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல்: ஐதராபாத் பொதுதலைநகர்
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளளது. தெலுங்கானா மற்றும் சீமாந்திரா பகுதியின் பொது தலைநகராக ஐதராபாத் இருக்கும் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் நகரம் தலைநகராக இருக்கும் என்று மத்திய…
13வது திருத்தம் தொடர்பாக இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது: மன்மோகன் சிங்
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் அறிந்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நியூயோர்க்கில் இருந்து புதுடெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே அவர் இதனை…
கோவில்களை விட கழிவறைகளே முன்னுரிமை கொடுத்து கட்டப்பட வேண்டியவை-நரேந்திர மோடி
கோவில்களை விட கழிவறைகளே முன்னுரிமை கொடுத்து கட்டப்பட வேண்டியவை என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர் விழாவில் அவர் பேசியதாவது: "ஹிந்துத்துவா' தலைவராக நான் அறியப்படுகிறேன். எனது இந்தத் தோற்றம் இவ்வாறு சொல்வதற்கு அனுமதிக்காவிட்டாலும், என்னுடைய உண்மையான…
2050-ல் மக்கள்தொகையில் இந்தியா முதலிடம் வகிக்கும்
சீனாவைக் காட்டிலும் அதிக மக்கள்தொகையுடன் இந்தியா 2050-ல் முதலிடம் வகிக்கும் என்று பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. பிரெஞ்சு மக்கள்தொகை ஆய்வு நிறுவனத்தின் தகவல்படி 2050ஆம் ஆண்டு 160 கோடி மக்கள்தொகையுடன் இந்தியா முதலிடம் வகிக்கும். மக்கள்தொகையில் தற்போது முதலிடம் வகிக்கும் சீனா 130 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாவது…
தண்டிக்கப்பட்ட உறுப்பினர்களை பாதுகாக்கும் அவசர சட்டம் வாபஸ்
இந்தியாவின் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை இந்திய நடுவணரசு புதனன்று திரும்பப்பெற்றுள்ளது. இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது என்று இந்திய நடுவணரசின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக சாடியதைத்தொடர்ந்து, இந்திய குடியரசுத்…
ராஜிநாமா என்ற பேச்சுக்கே இடமில்லை
குற்றப் பின்னணி உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகாமல் தடுக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த விவகாரத்தில் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசியிருந்த பின்னணியில் பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.…
டெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி கைது
வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானியை போலீசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி…
இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது!- தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும்…
கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு கொழும்பில் நவம்பர் 15-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்று, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. இந்தநிலையில் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது. ஏன்?’ என்ற விளக்கப் பொதுக்கூட்டம், தந்தை பெரியார்…
பாகிஸ்தான் பற்றி ஒபாமாவிடம் புகார் கூறவில்லை: சல்மான் குர்ஷித்
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பின் போது ஒபாமாவிடம் பாகிஸ்தான் பற்றி புகார் அளிக்கும் ரீதியில் மன்மோகன் சிங் எதுவும் கூறவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒபாமா, மன்மோகன் சிங் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்த…
முல்லை பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீஸார் வாக்குவாதம்
முல்லைப் பெரியாறு அணைக்கு வழக்கமான பணிகளுக்குச் சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரி, பொறியாளர்கள் உள்பட 5 பேரிடமும் கேரள போலீஸார் திங்கள்கிழமை வாக்குவாதம் செய்ததோடு, மதுபானம் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்து, 3 மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர். முல்லைப் பெரியாறு அணை பகுதி மற்றும் தேக்கடியில்…
பிரதமரை குறை கூற வேண்டாம்: சோனியா
பிரதமர் மன்மோகன் சிங்கை குறை கூற வேண்டாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற இரு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையொட்டி, மண்டியா விஸ்வேஷ்வரய்யா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில்…
மக்களாட்சியா? வாரிசு அரசியலா?
நம் நாட்டுக்குத் தேவை அரசியலமைப்பின்படி செயல்படும் ஜனநாயக ஆட்சியா? அல்லது ஒரே குடும்ப ஆட்சியா? என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி. வட மேற்கு தில்லி ரோஹிணியில் உள்ள "ஜப்பானிஸ் பார்க்' திடலில் பாஜகவின் பிரமாண்டப் பொதுக்கூட்டம்…
தமிழக மீனவர்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டது: ஜெயலலிதா
இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகும் ஏழை தமிழக மீனவர்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 136 மீனவர்களையும், அவர்களுடைய 29 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர்…
பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணை அடையுங்கள்: ஷெரீப்பிடம் மன்மோகன் சிங் கண்டிப்பு
தங்கள் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதச் செயல்களின் ஊற்றுக்கண்ணை கண்டறிந்து அதை அடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். பயங்கரவாதச் செயல்களுக்கு துணை போவதும், பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி, ஆயுத உதவி மற்றும் நிதியுதவி அளிப்பதை…
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ; 72 மணி நேரத்தில் 3…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் சென்ற கான்வாய் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் காயமுற்றார். இதனையடுத்து சனாட் நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 6 கி.மீட்டர் தொலைவில் உள்ள சனாட்டா நகரில் ராணுவ வீரர்கள் தங்களின் வாகனங்கில்…
ராஜபட்சவை சந்திப்பதை தவிர்த்த பிரதமர் மன்மோகன் சிங்
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். வெள்ளிக்கிழமையன்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற ராஜபட்ச, இலங்கை திரும்புவதற்கு முன்னதாக, மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசலாம் என்ற எண்ணத்தில் அவரது வருகைக்காக நியூயார்க்கில்…
பயங்கரவாதத்துக்கு துணைபோக வேண்டாம்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் எச்சரிக்கை!
பயங்கரவாதத்துக்கு துணைபோவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் கோரிக்கையை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று அவர் திட்டவட்டமாகத்…
பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது: மன்மோகன் சிங்
பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களின் மையமாகத் திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். நியூயார்க்கில் வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தாம் சந்தித்துப் பேசினாலும் அதனால் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். ஒருவார அரசு முறைப் பயணமாக வாஷிங்டன் வந்துள்ள…
தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை பாதுகாக்கும் அவசரச் சட்டம் முட்டாள்தனமானது!
"குற்றவியல் வழக்கில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியை பாதுகாக்கும் வகையில் மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் கிழித்து எறிய வேண்டும்' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாகக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை…
கத்தாரில் தமிழ் கட்டுமானத் தொழிலாளர் படும் கஷ்டங்கள்
தனிநபர் வருமான அடிப்படையில் உலகிலேயே மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் மத்திய கிழக்கின் சிறு தீவுத் தேசமான கத்தாரில், நேபாள கட்டுமானத் தொழிலாளர்களின் நிலை கவலையளிக்கும் விதத்தில் மோசமாக உள்ளது என்று சர்வதேச தொழிலாளர் நல அமைப்புகள் கவலை வெளியிட்டிருந்தது பற்றி தமிழோசை ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.…