ஐ.எஸ் தீவிரவாதிகளை அதிர வைத்த அமெரிக்க ராணுவம்: சிரியாவில் தாக்குதல்கள்…

ஐ.எஸ் தீவிரவாதிகள் பீதியடையும் வகையில் அவர்கள் கடத்தி சென்ற 116 எண்ணெய் லொறிகளை அமெரிக்க ராணுவத்தினர் சுக்கு நூறாக அழித்து துவம்சம் செய்துள்ளனர். சிரியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்வதில் மாதம்தோறும் 40 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டி வருகின்றனர்.…

அடுத்த குறி வாஷிங்டன் தான்: மிரட்டல் வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ்.…

சிரியாவில் தங்களுக்கு எதிராக  தாக்குதல் நடத்தி வரும் அனைத்து நாடுகளும் கடுமையான விளைவை சந்திக்கும் என ஐ.எஸ். அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும்…

அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்: வேடிக்கை பார்க்கும்…

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருவதை தடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா சரியான திட்டங்களை வகுக்கவில்லை என அந்நாட்டு ஜனாதிபதி வேட்பாளர் சரமாரியாக கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் குடியரசு கட்சி சார்பில் ரிக் சாண்டோரம் என்பவர் ஜனதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது நேற்று புளோரிடாவில்…

துருக்கியில் வெடித்த மனித வெடிகுண்டு: ஜி-20 மாநாட்டை சீர்குலைக்க சதியா?

துருக்கியில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . துருக்கியின் அன்ட்டால்யா நகரில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இந்திய பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த…

பரிஸ் தாக்குதல் திட்டமிடல் பிசுபிசுத்ததால் தப்பியது யார்…?

பரிஸ் நகர தாக்குதல் உலகின் பல பாகங்களையும் சோகத்தில் ஆழ்த்தியதுடன் வரலாற்றில் அன்றைய தினம் கறுப்பு வெள்ளியாக பதிவானதுடன் தாக்குதலாளிகளின் திட்டம் நிறைவேறினாலும் பிரதான இலக்கு தவறியமை குறிப்பிடத்தக்கது. அரபு நாடுகளில் மேற்குலக நாடுகள் போர் தொடுப்பதும் தொடுத்துக்கொண்டிருப்பதும் யாவரும் நன்கறிந்த விடயம். அதனது தாக்கமே பரிஸ் நகரை…

‘சிரியாவுக்காக இந்த தாக்குதல்’: பாரீஸ் தாக்குதலின் போது முழங்கிய பயங்கரவாதிகள்

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 8 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, 'சிரியாவுக்காகத்தான் இந்த தாக்குதல்' என்று முழங்கியதாக, தாக்குதலை நேரில்…

தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியது பாரிஸ் நகரம்: – நிம்மதியாக வாழ…

பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் தீவிரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 6 முக்கிய பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் Francoise…

பத்து வயதில் கர்ப்பமாகும் குழந்தைகள்….உறவினர்களால் கற்பழிக்கப்படும் அவலம்!

இந்த உலகில் ஆண் பெண் என இருபாலரை படைத்த இறைவன், பெண்மைக்குள் மட்டும் ஒரு உயிரை சுமக்கும் கருப்பையை படைத்தது, அவர்கள் மூலம் இந்த உலகம் உருவாக வேண்டும் என்பதற்காகவே. சொல்லப்போனால் இந்த இடத்தில் பெண்களும் கடவுளுக்கு சமமானவர்களே, ஏனெனில் இந்த உலகில் முதல் மனித இனத்தை கடவுள்…

பாரிசில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: பலி எண்ணிக்கை 140 ஆக…

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 140-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸ் நகரில் கிழக்குப்பகுதியில் பட்டாக்கிளன் என்ற கான்சர்ட் ஹாலுக்குள், துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக…

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 348 தொகுதிகளை கைப்பற்றி ஆங் சான் சூகி…

 யாங்கூன், நவ.13- நான்கு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷன் கீழ்சபையில் அக்கட்சிக்கு அளித்துள்ள 21 இடங்களையும் சேர்த்து மொத்தம் 348 இடங்களில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக்…

தென்சீனா கடற்பரப்பில் பறந்த அமெரிக்கா போர் விமானங்கள்… சீனா கடுமையாக…

தென்சீனா கடற்பரப்பில் சீனா அமைத்த செயற்கை தீவுகளுக்கு அருகே அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் பறந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தென்சீனா கடற்பரப்பு முழுவதும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது சீனா. ஆனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருணே, மலேசியா உள்ளிட்ட நாடுகள் தென் சீனா கடற்பரப்பில் தங்களுக்கும்…

சிங்கங்கள் விழித்துவிட்டன…விரைவில் இரத்த கடல் ஓடும்: ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்த…

ரஷ்யாவை மிக விரைவில் தாக்குவோம் என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் நடுங்கவைக்கும் மிரட்டலை விடுத்துள்ளனர். ஐ,எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ரஷ்யாவும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது வான்வெளி தாக்குதடல் நடத்தி அவர்களின் முக்கிய தளங்களை அழித்துவந்தனர். இந்நிலையில்,…

பேச்சுவார்த்தைக்கு வருமாறு இராணுவ தலைவர்களுக்கு சூகி அழைப்பு

மியான்மரில் தேசிய நல்லிணக்க பேச்சு வார்த்தைக்கு வருமாறு இராணுவ தலைவர்களுக்கு ஆங் சாங் சூகி அழைப்பு விடுத்துள்ளார். மியான்மரில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 1990-ல் நடைபெற்ற தேர்தலில் என்எல்டி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிவை ராணுவம் ஏற்க…

உணவுகளை தூக்கியெறியும் அகதிகள்: மரியாதை கொடுப்பதை கற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறும் அரசியல்வாதி

ஜேர்மனியில் தங்கியிருக்கும் அகதிகள் அந்நாட்டு அரசுக்கு மரியாதை கொடுப்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று பார்வையிட்ட அரசியல்வாதியான Klaus Bouillon, என்பவர் அங்கு நடந்தவற்றை நேரிடையாக பார்த்துள்ளார். மேலும், அங்கு வசித்து வரும்…

மியான்மர் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை, ஆனால்…: ஆங் சான் சூ…

யங்கூன்: மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூ கியின் என்.எல்.டி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகளை முழுமையாக வெளியிடாமல் சதி நடப்பதாக என்.எல்.டி. கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 50 ஆண்டு காலமாக ராணுவ ஆட்சி நடந்து வந்த மியான்மரில் 25 ஆண்டுகள்…

சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை சுட்டுக் கொன்ற ஐஎஸ்: நெஞ்சை…

டமாஸ்கஸ்: சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மக்களை ஈவு இரக்கம் இன்றி கொலை செய்வதற்கு பெயர் போனவர்கள். இந்நிலையில் அந்த அமைப்புக்கு எதிரான…

இஸ்லாமிய அரசுக்கு எதிரான புதிய கூட்டணி

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்களும், அரேபியர்களும் அடங்கிய புதிய கூட்டணி ஒன்று இஸ்லாமிய அரசுக்கு எதிராக இராக்கிய எல்லைப் பகுதியில் களமிறங்கியுள்ளது. சிரியாவின் ஜனநாயகப் படைகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அந்த கூட்டணி, அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களையும் வான் தாக்குதல் ஆதரவையும் பெறுகின்றது. பிபிசியின் குயிண்டைன் சமர்வெல் அந்த…

மியன்மார் தேர்தல்: வெற்றி நம்பிக்கையில் எதிர்கட்சியினர்

மியன்மாரில் 25 ஆண்டுகளில் நடந்துள்ள சுதந்திரமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலின் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. அதிகார பூர்வ முடிவுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ சியின் கட்சி மியன்மாரின் பெரிய நகரான யங்கூனில் மொத்தமாகவுள்ள 27 இடங்களிலும் வென்றுள்ளது. 70 வீதமான இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று…

சீனாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

சீனாவின் நடவடிக்கைகளை ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் கண்காணித்து வருகின்றன என்று அமெரிக்கா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் எச்சரித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரீகன் தேசியப் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்ட்டர் பேசியதாவது: அமெரிக்காவும், ரஷியாவும் சர்வதேச அளவில்…

மியான்மரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தேர்தல்: ஆங் சான்…

அரை நூற்றாண்டாக ராணுவம் ஆட்சியில் உள்ள மியான்மரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அதிபராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பல…

யேமன் சண்டையில் 19 பேர் சாவு

யேமனில் சவூதி கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலிலும், ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையிலும் 19 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு ராணுவம் சனிக்கிழமை கூறியது. இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில், "இப்' மாகாணத்தையும், தாலே…

66 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீனா, தைவான் அதிபர்கள் சந்திப்பு

ஏறத்தாழ 66 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா மற்றும் தைவான் நாடுகளின் அதிபர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தைவான் அதிபர் மா யிங்-ஜியோவும் சிங்கப்பூரில் சனிக்கிழமை சந்தித்தனர். தைவானை ஒரு நாடாக சீனா அங்கீகரிக்காததால், இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டுக் கொடிகளும் இடம் பெறவில்லை.…

அமெரிக்க விமானத் தாக்குதலுக்குள்ளான சர்வதேச மருத்துவமனையில் 65 தலிபான்களுக்கு சிகிச்சை:…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானத் தாக்குதலுக்குள்ளான மருத்துவமனையில் 65 தலிபான் பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் "எல்லைகளைக் கடந்த மருத்துவர்கள்' (எம்.எஸ்.எஃப்) அமைப்பின் மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த மருத்துவமனை மீது அமெரிக்க விமானங்கள் கடந்த மாதம் 3-ஆம் தேதி குண்டு வீசித்…