“”உங்கள் தயாரிப்புகள் எங்களுக்கு வேண் டாம்!”

பிரம்மாண்டமான சுற்றுச்சுவர் இடிந்து கழிவுநீர் வெள்ளம் பாய்ந்து, உறங்கிக் கொண்டிருந்த வெளிமாநில கொத்தடிமைத் தொழி லாளர்கள் பத்து பேர் கொல்லப்பட்டார்கள். இத னால் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கிய 67 தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. முதலாளிகள், நிர்வாகிகள், அரசு அதி காரிகள் என பத்துபேர் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஆண்டு…

மந்திர சக்தியால் தங்க நெக்லஸ் வரவழைத்த மந்திரவாதி ஆச்சரியத்தில் மக்கள்

மராட்டிய மாநிலம் புனேயில் கல்வி நிறுவன விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சாமியார் குருவானந்த் சுவாமி கலந்து கொண்டு அனைவருக்கும் ஆசி வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட மராட்டிய முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா மேடை ஏறி சாமியாரிடம் ஆசி பெறச் சென்றார். அப்போது…

தமிழகத்தில் இருசக்கர அவசர உதவி சேவை தொடக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக, பெண்கள் இருசக்கர வாகங்களில் சென்று மருத்துவ முதலதவி வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ முதலுதவி திட்டத்தில் இணைந்துள்ள பெண் ஒருவர் '108' அவசர ஆம்புலன்ஸ் திட்டத்துடன் இணைந்து செயல்படும் இந்த திட்டத்தின் மூலமாக, உடனடி மருத்துவ வசதி தேவைப்படுவோருக்கு, தாமதமில்லாமல் அதை வழங்க…

சியாச்சினில் 6 நாட்கள் மரண போராட்டம்: ஜவான் உயிருடன் மீட்பு!

ஸ்ரீநகர்: சியாச்சின் பனிமலையில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்தில், நேற்று ஒரு வீரர் உயிருடன் மீட்கப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த லான்ஸி நாயக் ஹனுமந்தப்பா என்ற அந்த வீரரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். இமயமலைத் தொடரின் உயரமாக பகுதி…

இந்தியாவில் பயங்கரவாதம் அதிகரிக்கும் ஆபத்து: முன்னாள் ராணுவ அதிகாரி ஜி.பி.ரெட்டி…

''இந்தியாவில், வி.ஐ.பி.,க்கள் மற்றும், 'இசட்' பிரிவினருக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விடுத்து, உள்நாட்டு மக்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும்; இல்லையெனில், பயங்கரவாதம் பெரிய அளவில் தலைதுாக்கும்,'' என, முன்னாள் ராணுவ அதிகாரி ஜி.பி.ரெட்டி எச்சரித்துள்ளார். உள்நாட்டு பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம், சென்னை, குருநானக் கல்லுாரி வளாகத்தில், உள்நாட்டு…

32 ஆண்டுகளில் 879 பேரை பலிவாங்கிய சியாச்சின்

ஸ்ரீநகர்: இமயமலை பகுதியில் உள்ள சியாச்சினில், கடந்த, 32 ஆண்டுகளில், 879 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இமயமலையில் அமைந்துள்ள பனிப் பிரதேசமான சியாச்சினில், இந்திய ராணுவ முகாம் உள்ளது. கடந்த வாரம், இப்பகுதியில் திடீரென ஏற்பட்ட மோசமான பனிச் சரிவில் சிக்கி, தமிழகத்தை சேர்ந்த நான்கு பேர்…

தமிழக மீனவர்கள் போலவே இலங்கை தமிழ் மீனவர்களும் போராடுகின்றனர்: பொன்.ராதாகிருஷ்ணன்…

20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை தமிழ் மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை கிடைத்திருப்பதாகவும், தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அவர்களும் போராடுகின்றனர் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இரண்டு தரப்பிலும் தமிழ் மீனவர்கள் கஷ்டப்படக் கூடியதை தடுக்கக் கூடிய வகையில், இருதரப்பாருக்கும் இடையில் சுமூகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த மத்திய அரசு…

சியாச்சின் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது: மனோகர்…

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 19 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனிமலை பகுதியில் கடந்த வாரம் தமிழ்நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உள்பட 10 பேர் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. உடல்களை தேடும் பணி தொடர்ந்து முழு வீச்சில்…

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தமிழக முதல்வர் ஆக…

புதுச்சேரி: தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை புதுச்சேரியில்…

உலகமே அலறித் துடிக்கும் வேளையில் ஸிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து…

உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக…

ஜெயலலிதாவின் நடவடிக்கையால் சென்னை துறைமுகம் மூடப்படும் ஆபத்து: பாமக நிறுவனர்…

ஜெயலலிதாவின் நடவடிக்கையால் சென்னை துறைமுகம் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வருவாய் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாக திகழ்ந்த சென்னை துறைமுகத்தின் இன்றைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சில ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வரும் சென்னை…

இந்தியாவில் 45 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு: பிரணாப்…

இந்தியாவில் இருக்கும் 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளில், 45 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்தார். இதுதொடர்பாக தில்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் (ஐஏஆர்ஐ) வெள்ளிக்கிழமை நடைபெற்ற 54ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: கடந்த…

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: இந்தியா-இலங்கை ஒப்புதல்

தமிழக மீனவர் பிரச்னைக்கு புதிய மற்றும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக கூடுதல் செயலர் ரேணு பல் கூறியதாவது: மீனவர் பிரச்னை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்…

மதுவிலக்கு பொது மக்களின் கோரிக்கை: பாடகர் கோவன்

திருச்சி: அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்பது, மக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளதாக மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் தெரிவித்துள்ளார். பாடகர் கோவன் தமிழக அரசுக்கு எதிராக மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடி, சில மாதங்களுக்கு முன்பு புழல் சிறையில்…

தமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு: இளைஞர்களிடையே வரவேற்பு

கோயில்களில் ஆடை கட்டுப்பாடு குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பெரும்பாலான இளைஞர்கள் கட்டுப்பாடு தேவை என தெரிவித்துள்ளனர். தமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு தேவை என்பதை பெரும்பாலான இளைஞர்கள் கலாச்சாரம் கருதி வரவேற்றுள்ளனர். கோயில்களில் கட்டாயம் ஆடை கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றும், அதனால் மனத்தூய்மையுடன் வழிபாடுகளில் பங்கெடுக்க முடியும் எனவும் இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலான…

மதங்களுக்கிடையே நல்லுறவை வலுப்படுத்த புதிய கமிஷன்.. மோடி அரசு அதிரடி…

டெல்லி: இந்தியாவில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்புடனும், அச்சமின்றி வாழவும், மத ரீதியான மோதல்களுக்கு முடிவு காணவும் புதிய கமிஷன் ஒன்றை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்,…

இலங்கை பிரதமர் ரணிலுடன் சுஷ்மா சந்திப்பு! இருநாட்டு கூட்டு ஆணைய…

டெல்லி/கொழும்பு: இலங்கைக்கு 2 நாட்கள் பயணமாக சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார். கொழும்பில் ந்டைபெற்ற 9-வது இலங்கை- இந்தியா கூட்டு ஆணைய கூட்டத்திலும் சுஷ்மா பங்கேற்றார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கையில்…

குறைந்த விலையில் நாப்கின் தயாரித்த சாதனையாளர் முருகானந்தத்தை பாராட்டிய அகிலேஷ்…

கோவை: குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தத்தைப் பாராட்டி உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் கடிதம் எழுதியுள்ளார். கோவையைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் கடந்த 1962-ல் பிறந்த அருணாச்சலம், தனது ஒரே கண்டுபிடிப்பினால் இன்று உலக அளவில் பிரபலம்.…

இந்தியாவில் பசுவை வழிபடும் இந்துக்களை தாக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டம்

இந்தியாவில் பசுவை வழிபடும் இந்துக்களை தாக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் பல இந்தியர்களை அணுகி அவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 16 பேரை தேசிய புலனாய்வு…

காஷ்மீரில் பனிச்சரிவு:பத்து இந்திய வீரர்களைக் காணவில்லை

காஷ்மீரில் உள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பத்து இந்திய வீரர்களைக் காணவில்லை என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. காணாமால் போனோரைத் தேடும் பணிகள் தீவிரம் ராணுவமும் விமானப் படையின் தேடுதல் அணிகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் காணாமல் போனவர்களைத் தேடிவருவதாக, ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல்…

காவிரியில் கழிவு நீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை…

பெங்களூரு: பெங்களூருவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் காவிரியில் கலப்பது பற்றி கேட்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை, திருவாரூர் உள்ளி்ட்ட மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் காவிரியில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு…

தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு தொடரும்: கோவை கூட்டத்தில் மோடி…

கோவை: டீ விற்பனை செய்த ஏழை ஒருவர் நாட்டின் பிரதமராக முன்னேறியது சிலருக்கு பெரும் வயிற்றெரிச்சலை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி, கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கோவை கொடீசியா மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள்…

தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் தலித் எதிர்ப்பு மாவட்டங்கள்!

தமிழ்நாட்டில் ஜாதிய வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுவது தலித்துகள் என்கின்றன புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் இருக்கும் குருவித்துரை கிராமத்தில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழாக் கொண்டாட்டங்களின்போது தலித்துகளுக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிமோதலை நேரில் சென்று விசாரித்த ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம், அந்த குறிப்பிட்ட கிராமத்தை…