பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
எல்லைகளை மறுவரையறை செய்ய முடியாது: பாகிஸ்தானுக்கு ஜேட்லி கண்டிப்பு
இந்தியாவின் எல்லைகளை மறுவரையறை செய்ய முடியாது. இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். பாஜக சார்பில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: எந்த விதமான வழிமுறையைப் பயன்படுத்தினாலும் தங்களால் இந்தியாவின் எந்தப் பகுதியையும்…
பெரியாறு அணை நீர்த்தேக்க உயரம்: கேரள அரசின் மறுசீராய்வு மனு…
இந்திய உச்சநீதிமன்றம் பெரியாறு அணை விவாகாரம் தொடர்பாக கேரளா மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அளிக்கப்பட உத்தரவு சரியானதுதான் என்று கூறியுள்ள நீதிமன்றம், இதனால் கேரளா அரசின் மறு…
முல்லைப் பெரியாறில் கேரளத்தின் அராஜக செயல்! வைகோ கண்டனம்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசுக்கு சட்டப்பூர்வமான அதிகாரமும், உரிமையும் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயரத்திற்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணை உள்ளிட்ட பகுதிகளை பராமரிப்பு செய்து மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலோடு…
போபால் விபத்து – நடந்ததும் நடப்பதும்!
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள் காலையில் தினசரிகளைப் படித்த, வானொலி செய்தியைக் கேட்ட, தொலைக்காட்சியில் பார்த்த உலகத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சோகப் பொழுது அது. ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, உலகமே அதிர்ந்த துயரம் முப்பதாண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் நிகழ்ந்தது.…
புலிகளை ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன்: சுவாமி…
விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று பாரதிய ஜனதாகட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டியில், ராஜிவ் காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளை நான் என்றைக்கும் ஏற்க மாட்டேன். அவர்களை ஆதரிப்பவர்களையும்…
கருப்பு பணத்தில் ஒரு சல்லி காசு கூட விடாமல் இந்தியாவுக்கு…
புதுடெல்லி: வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தில் ஒரு சல்லி காசு கூட விடாமல் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி எடுப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி பட தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடி கடந்த மே மாதம் பொறுப்பேற்ற பிறகு எனது அரசாங்கம் என்ற இணைய தளத்தின்…
இந்திய நிலத்தில் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை பாகிஸ்தான்…
புது டெல்லி, டிச.2- ஜம்மு-காஷ்மீர் எல்லையோரம் உள்ள சுமார் 78 ஆயிரம் சதுர பரப்பளவு கொண்ட இந்திய பகுதியை பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 1948-ம் ஆண்டுக்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் எல்லையோரம் உள்ள சுமார் 78 ஆயிரம் சதுர பரப்பளவு…
கற்பழிப்பது… கொலை செய்வதே ஐஎஸ்ஐஎஸ்யின் வேலை: இந்திய வாலிபனின் பரபரப்பு…
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து தற்போது நாடு திரும்பியுள்ள அரீப் மஜீத் என்ற வாலிபர் அந்த அமைப்பை பற்றி கூறியுள்ளார். சிவில் என்ஜீனியரிங் மாணவரான மஜீத், ஈராக் போய்ச் சேர்ந்ததும் பல்வேறு கடினமான வேலைகளைச் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளார். நான் வேலை பார்க்க வரவில்லை, போரிடவே வந்ததாக கூறியுள்ளார். ஆனால் துப்பாக்கிப்…
இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
இலங்கையின் ராஜபக்ச சகோதரர்களுக்காகவும் சீனா தேசத்துக்காகவுமே சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. தமிழக மீனவர்களின் தூக்கு விவகாரத்தில் தலையிட்டு ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்புகிறார் சு.சுவாமி. அப்படியானால் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு என்ன வேலை? இந்த நாட்டின் பிரதமர் யார் என சந்தேகமாக இருக்கிறது…
ரயில் விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் 18,735 பேர் தண்டவாளத்தில் மரணடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தும் பழக்கம் குறைவாகவே உள்ளது அதாவது ரயில் விபத்துக்காளால் நாளொன்றுக்கு 60 பேர் சாவதாக இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இதில் மிகக் குறைந்த…
சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போன மர்மம் தொடர்பான தகவல்களை வெளியிட…
புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போன மர்மம் தொடர்பான தகவல்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அளித்த பதிலில், பிரதமர் அலுவலகத்தில் நேதாஜி குறித்த 39 கோப்புகள் உள்ளன.…
கருணாநிதியின் குடும்ப தொழில்கள் என்னென்ன? பட்டியலிடும் சாமி
மோடி அரசை குறை கூறிய ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுப்ரமணிய சாமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது, மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பிட்ட சில தொழில் அதிபர்களுக்கு மட்டுமே…
இலங்கை அரசியலமைப்பின் மூலம் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்:…
இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் மூலம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர்களுக்கு சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என இந்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று தெரிவித்துள்ளார். மாநில அளவில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு அங்கத்தவர்களை சேர்க்கும் பணிகளை ஆரம்பித்து பேசும் போதே அவர் இதனை…
ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு…
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி, கல்வி முறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 48 ஆண்டுகால கல்வி முறையை மாற்றி அமைத்து புதிய கல்வி கொள்கையை புகுத்த வேண்டும் என்று…
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு அமைப்புகள் சதி: ராஜ்நாத் சிங்…
குவாஹாட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற காவல்துறைத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பாகிஸ்தான் அரசு சார்ந்த அமைப்புகளே இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும்…
இலங்கை உதவியுடன் தமிழகத்தை வேவு பார்த்தேன்: பாகிஸ்தான் உளவாளி
இலங்கை உதவியுடன் தமிழகத்தை உளவு பார்த்ததாகவும், இந்திய இறையாண்மை, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் போலி நாணயத்தாள்களைப் புழக்கத்தில் விட்டதாகவும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேனை தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர்.…
தமிழக காவல்துறையின் கொலைவெறித் தாக்குதல்!
கடந்த 26-11-2014,அன்று சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப்போரில் இன்னுயிர் ஈர்ந்த தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதற்க்கான முயற்ச்சிகளை இன உணர்வோடு முன்னெடுத்த திராவிடர் விடுதலை கழகத்த சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான முழக்கம் உமாபதியை சென்னை அமிராமிபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர்களான இளையராஜா,கலைசெல்வி,மற்றும் கவலர் வடிவேலு,ஆகியோர் கொண்ட குழுவினர் மிகக்கொடூரமாக…
பாகிஸ்தான் நமது நட்பு நாடு அல்ல: வி.கே.சிங்
பாகிஸ்தான் நமது அண்டை நாடு தானே தவிர, நமது நட்பு நாடல்ல என்று அமைச்சர் விகே சிங் தெரிவித்தார்.இந்தியா அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவு கொள்ள விரும்பினாலும் உரிய பாதுகாப்பை பெற்றிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஃபருக்காபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் மேலும்…
39 இந்தியர்களை படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்?
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மீதும் போர் தொடுத்தனர். இந்த போரின் போது ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் நகரத்தில் ஜூன் 10-ந் திகதியன்று 91…
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் பெருகி வரும் ஆதரவு!
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் நடைபெற்ற காவல்துறை மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், தீவிரவாதிகள் இந்தியாவை சீர்குலைக்க சதி செய்கின்றனர். இதனை செயல்படுத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.…
இந்திய பெருங்கடலில் சீன கடற்படை தளங்கள்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
பீஜிங்: இந்திய பெருங்கடலில் 18 இடங்களில் கடற்படை தளங்களை சீனா அமைத்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நமிபியா நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் குழு ஒன்று நடத்திய ரகசிய ஆய்வில், இந்திய பெருங்கடலில் இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் சீனா கடற்படை…
காஷ்மீரில் ராணுவம் – பயங்கரவாதிகள் மோதல்: 10 பேர் பலி
ஜம்மு-காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் உள்ள பிண்டி கிராமத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலின்போது ராக்கெட் லாஞ்சரைக் கொண்டு செல்லும் ராணுவ வீரர். ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள், 4 பயங்கரவாதிகள், 3 அப்பாவிகள் என மொத்தம் 10 பேர்…
100 நாள்களுக்குள் மீட்பதாகச் சொல்லவில்லை: கருப்புப் பணம் குறித்து வெங்கய்ய…
"வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை 100 நாள்களுக்குள் மீட்பதாக பாஜக கூறவில்லை' என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். கருப்புப் பணத்தை மீட்பது குறித்து மக்களவையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பாஜக-வின் தேர்தல்…
