மாவீரர் நாள் நிகழ்வுகளை திட்டமிட்டே சீர்குலைக்கும் காவல்துறை அதிகாரிகள்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர், பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை: ’’உலகம் முழுவதும் 65 நாடுகளில் தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த போராளிகள், அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் தாய்த் தமிழ்நாட்டிலோ பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் வேண்டுமென்றே தடை விதித்தும் உணர்வாளர்கள்…

பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாட அனுமதி மறுப்பு

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்த நாள் விழாவை சிறைச் சாலையில் கொண்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்…

ஈழ அகதிகள் முகாமில் குடமுழுக்கு நடத்த தடை: காவல் துறையினர்…

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை ஈழ அகதிகள் முகாம் உள்ளது. இங்கு சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஒன்று சேர்ந்து விநாயகர் கோயில் கட்டியுள்ளனர். இந்த கோயிலின் குடுமுழுக்கு நாளை 27 ந் தேதி வியாழக்கிழமை நடத்த திட்டமிட்டு அதற்காக ஒலிபெருக்கி மற்றும் பாதுகாப்பு கேட்டு…

தில்லி – சென்னை புல்லட் ரயில் சேவை: சீனாவில் உயர்நிலைக்…

தில்லி - சென்னை இடையே அதிவேக புல்லட் ரயில் சேவைக்கான வழித்தடம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயவும், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் இந்திய ரயில்வேயின் உயர்நிலைக் குழுவினர், சீனாவில் முகாமிட்டுள்ளனர். இந்திய ரயில்வேயின் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் உயரதிகாரி சதீஷ் அகர்வால் தலைமையிலான உயர்நிலைக் குழு, பெய்ஜிங்குக்கு…

எல்லைப் பிரச்சனை! சீனாவுடன் பேச்சு நடத்த சிறப்பு அதிகாரியை நியமித்தார்…

இந்தியா சீனா இடையே நீடிக்கும் எல்லைப் பிரச்சனை குறித்து, சீன அதிகாரிகளுடன் விவாதிக்கவும், முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவும் சிறப்பு அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில் இருநாடுகளும் எல்லைப்…

செம்மரக்கட்டைகள் பறிமுதல்: தமிழகத்தைச் சேர்ந்த 38 பேர் கைது

செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 38 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். ஆந்திராவின் சந்திரகிரியிலிருந்து தமிழகத்திற்கு செம்மரங்கள் கடத்தப்படுவதாக, திருப்பதி புறநகர் எஸ்.பிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, டிஎஸ்பி இலியாஸ் பாஷா தலைமையிலான போலீசார், முத்தியாள ரெட்டி பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்களைக் கடத்தி வந்த…

19,500 கோடி மதிப்புள்ள தமிழக ரயில் திட்டங்களை ரத்து செய்வதா?…

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை : ’’தமிழ்நாட்டில் ரூ.19,500 கோடி செலவில் செயல்படுத்த திட்டமிட்டிருந்த 14 தொடர்வண்டித் திட்டங்கள் உட்பட மொத்தம் 160 திட்டங்களை ரத்து செய்ய மத்திய தொடர்வண்டித்துறை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்போக்கான அணுகுமுறையுடன் கூடிய இம்முடிவு கண்டிக்கத்தக்கது. தொடர்வண்டித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம்…

மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை : வைகோ பேச்சு

படிக்கும் காலத்தில், மாணவர்களுக்கு, அரசியலும் சாதியும் தேவையில்லை,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.   பூரண மதுவிலக்கு கோரி, ம.தி.மு.க., சார்பில் கோவை சுந்தராபுரத்தில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை துவக்கி வைத்து, வைகோ பேசியபோது,  ‘’மதுப்பழக்கம், இன்று பல குடும்பங்களை சீரழித்து வருகிறது. ஆட்சியிலிருப்போர்,…

14 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது

இலங்கையின் வட-கடலில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களை மூன்று படகுகளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆரம்ப விசாரணைகளின் பின்னர் இவர்கள் ஞாயிறு மாலை யாழ். மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய…

வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பூச்சிக்கொல்லி மாத்திரை பெற்றோரையும் கொல்லும்

தமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதையொட்டிய விருதுநகர் மாவட்டங்களில் நடப்பதாக கருதப்படும் முதியோர் கொலைகள் சமீபகாலமாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தொகுக்கப்பட்டு வருகின்றன. அப்படியான முதியோர் சந்தேக மரணங்கள் மற்றும் கொலைகளை தடுப்பதற்கான களப்பணி செய்துவரும் தொண்டு நிறுவன ஊழியர் முத்துப்பிள்ளை. இந்த இரு மாவட்டங்களில் முதியோர் கொலைகள்…

காஷ்மீர்: வாஜ்பாய் கண்ட கனவை நனவாக்குவேன்: நரேந்திர மோடி

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வாரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், தொண்டர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி. ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சிக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கண்ட கனவை, தாம் நனவாக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீரில்…

தினமும் பாலில் குளிக்கும் சாமியார்: குடிக்கும் பக்தர்கள்

அரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் தினமும் பாலில் குளிப்பதாக தெரியவந்துள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் சாமியார் ராம்பால் ஆசிரமம் அமைத்து ஏராளமான பெண் சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தங்கி இருந்தார். ஆசிரமத்தையும், தன்னையும் பாதுகாக்க தனியாக பாதுகாப்பு படை அமைத்து தனி ராஜ்ஜியம்…

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கவும்! வைகோவை கைது செய்யவும்!-…

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில்  அவர் விடுத்துள்ள அறிக்கையில், ம.தி.மு.க. சார்பில் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி தியாகத் திருநாள்…

காதல்–கலப்பு திருமணங்கள் பதிவு விவகாரம்

மதுரை, நவ. 22– மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் கே.கே.ரமேஷ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– சமீப காலமாக கவுரவ கொலைகள், காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் தற்கொலை செய்து கொள்வது, காதல் திருமணம் செய்து கொள்வோரின் பெற்றோர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து…

சேது சமுத்திர திட்டப் பிரச்சனையில் விரைவில் தீர்வு: நிதின் கட்கரி

சேது சமுத்திர திட்டப் பிரச்சனையில் தீர்வை நெருங்கிவிட்டதாக மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் கலந்து கெண்டு பேசிய அவர், ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படுத்தாமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு கண்டறிந்துள்ளது.…

பா.ம.க தலைமையில் கூட்டணி: 8 கட்சிகளுக்கு அழைப்பு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் மாற்று அணி அமைக்கப்படும் என்று அக் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக கூட்டணிக்கு வருமாறு மதிமுக, ஜி.கே.வாசனின் புதிய கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்தார். பாமகவின் சிறப்புப் பொதுக்…

ரூ.12 கோடி போலி கரன்சி நோட்டுகள் பறிமுதல்

புதுடில்லி: பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வர முயன்ற இந்திய போலி ரூபாயின் மதிப்பு ரூ.12 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. போலி இந்திய ரூபாய்களை பெரும்பாலும் நேபாளம், வங்கதேசம், இலங்கை தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானம் மூலம்…

லடாக்கில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு: ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக்கில் உள்ள அக்சாய் சின் பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். அக்சாய்சின் பகுதி தொடர்பாக இந்தியா, சீனாவுக்கு இடையே சர்ச்சை உள்ள நிலையில், இதுதொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லே பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக்…

வேர்களை வெறுக்கும் விழுதுகள்: சிதையும் குடும்பத்தின் சிதிலமான முதியோர்

தமிழ்நாட்டில் தற்போது முதியோர் பராமரிப்பு என்பது மிகப்பெரிய சமூக சிக்கலாக மாறியதற்கான முதன்மைக்காரணிகளில் முக்கியமானது தமிழ்ச்சமூகத்தில் உடைந்து சிதறிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும், பெருகிவிட்ட சிறுகுடும்ப வாழ்வும் என்கிறார்கள் சமூகவியலாளர்கள். ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு என்பது குடும்பம் என்கிற அமைப்பு. பல தலைமுறைகளாக தமிழ்ச்சமூகம் என்பது கிராமப்புற…

முல்லைப் பெரியாறு: தொழிலகப் படை பாதுகாப்பு கோரி தமிழகம் மனு

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவின் விவரம்: "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தும் உத்தரவை…

மோடியின் அடுத்த இலக்கு இலங்கை விஜயம்! கச்சதீவு மீட்கப்படுமா?

இலங்கைக்கு நல்லெண்ணப் பயணமாக அடுத்த ஆண்டு (2015) தொடக்கத்தில் செல்ல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி கொழும்பு செல்லவுள்ளதால், அவரது பயணத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் நோக்குடன் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டாகச் செயல்பட்டு வருகின்றன.…

5 இந்திய மீனவர்கள் விடுதலை

மரண தண்டனையிலிருந்து மீண்ட தமிழக மீனவர்களுடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் வொய்.கே.சின்ஹா   போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து…

கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் செயலுக்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்  செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் உத்தரவுகளை மீறும் வகையில் காவிரி நதி நீரை சுமார் 48 டிஎம்சி…