ரயில் குண்டு வெடிப்பு : சந்தேக நபரின் வீடியோ கிடைத்தது

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி - பெங்களூரு ரயிலில் வியாழக்கிழமையன்று வெடித்த குண்டுகளை வைத்ததாக கருதப்படும் சந்தேக நபரின் நடமாட்டம் அடங்கிய வீடியோ பதிவு கிடைத்துள்ளதாக தமிழக சிபிசிஐடி ஐஜி மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், சந்தேகிக்கப்படும் நபர்தான் குற்றவாளி என்று கூற முடியாது என்றும் இந்த வீடியோ…

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம்: மோடி அறிவிப்பு

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற இடத்தில் நேற்று பிரசாரம் செய்தார். ராஜம்பேட்டை தொகுதியில் பா. ஜனதா சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி புரந்தேசுவரியை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர்…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: பெண் என்ஜினீயர் பலி;…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததில் பெண் என்ஜினீயர் ஒருவர் பலியானார். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 14 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். பெங்களூருவில் இருந்து சென்னை…

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியின் பரபரப்பு வாக்குமூலம்: அதிர்ந்துபோயுள்ளது இந்தியா

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகங்களை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத உளவாளி சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்தியாவை பொருளாதார…

பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி தகவல்

வாஷிங்டன்: கடந்தஆறு ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேறி யுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2005-ம் ஆண்டு பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்து வந்தது. மேலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.…

குஜராத்தில் மோடி மீது 2 வழக்குகள் பதிவு: தேர்தல் விதிமீறல்…

தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, மோடி மீது இந்த 2 வழக்குகளை குஜராத் மாநில போலீஸார் புதன்கிழமை பதிவு செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில்…

காங்கிரஸ் மீது வெறுப்படைந்த மக்கள் மோடியை விரும்புகின்றனர்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாதில் புதன்கிழமை வாக்களித்துவிட்டு வெளியே வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர்.   "காங்கிரஸ் கட்சித் தலைமையின் மீதும், அக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களாலும் விரக்தி அடைந்துள்ள மக்கள், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட…

நான் வெற்றி பெறுவது முக்கியமல்ல: மோடி பேச்சு

புதுடில்லி: இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவதை விட, நாட்டு நலனே முக்கியம் எனவும், நாட்டின் நிலையற்ற தன்மை ஏற்படக்கூடாது எனவும் என பா.ஜ., பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 3டி தொழில்நுட்பம் மூலம் பா.ஜ.,பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது: மத்திய அரசு எதையும் செய்யவில்லை. மக்களின்…

ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை

ராஜீவ் வழக்கில் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் விடுதலை ஆவார்கள் என்றுதான் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஊரெங்கும் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்த பலரும், அற்புதம் அம்மாளுக்கு வாழ்த்துகளைச் சொல்லத் தொடங்கியிருந்தனர். விடுதலையானதும் செங்கொடியின் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு,…

சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

கடலோர நகரங்களில் வெள்ளப்பிரச்சனை தீவிரமடையும்   நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமையான பாதிப்புக்கள் காரணமாக புவியானது…

காஷ்மீர் பண்டிட்டுகளை வெளியேற்றியதுதான் மதவாதம்: ஃபரூக் அப்துல்லாவுக்கு மோடி பதிலடி

"ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா குடும்பத்தினரின் ஆட்சிக் காலங்களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதுதான் மதச்சார்பின்மைக்கு எதிரான மிகப் பெரிய தாக்குதல்' என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா,…

தமிழக அரசியல் அதிகாரத்தை மதிமுக கைப்பற்றும்: வைகோ நம்பிக்கை

தமிழக அரசியல் அதிகாரத்தை மதிமுக கைப்பற்றும் நாள் வந்துதான் தீரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 1994-ஆம் ஆண்டு மே 6-ஆம் நாள் தியாகத் தடாகத்தில் பூத்தது மதிமுக. நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழக…

ராகுல் காந்தி – தலித் கருத்து: பாபா ராம் தேவ்…

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தலித் மக்களைத் தொடர்புப்படுத்தி பேசிய பேச்சுக்காக, யோகா குரு பாபா ராம் தேவ் மீது பீகார் மாநில நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் மாநில உணவு அமைச்சருமான ஷ்யாம் ரஜக்…

சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை வெளியேற்றுவோம்: நரேந்திர மோடி எச்சரிக்கை

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் வெளியேற்றப்படுவார்கள் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது: இங்கு திரளாக கூடி இருக்கும்…

நவீன இடைமறி ஏவுகணை: இந்தியா சாதனை

நவீன இடைமறி ஏவுகணை பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வான் நோக்கி செலுத்தி சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. குறித்த ஏவுகணைக்கு பிரித்திவி எயார் டிபென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கடற்படை…

ராஜீவ் கொலை வழக்கு: அண்மைய தீர்ப்பு குறித்து கவலைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதிகளாக உள்ளவர்களின் விடுதலை தொடர்பான விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டதை மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்து, தீர்ப்பு வருமென்று கருதப்பட்ட வேளையில், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது ஏமாற்றம் அளிக்கிறது என்று…

மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவு? சல்மான் குர்ஷித்

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பது பற்றி காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், ஆட்சி அமைப்பதற்கு மூன்றாவது அணியிடம் இருந்து ஆதரவு பெறுவது பற்றியும் யோசிப்போம் என்றும் அவர்…

பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை, ரூ.6 லட்சம் கட்டணம்: அரங்கேறிய…

மத்திய பிரதேச மாநிலத்தில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சையளித்து ரூ.6 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். ஆனால் ஓரிரு நாட்களிலேயே அவர் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.…

‘டைம்’ பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரும் இந்த பட்டியலில்…

மோடியுடன் இணைந்த மன்மோகன் சிங்கின் தம்பி: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி பாஜக கட்சியில் இணைந்துள்ளதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசில் நேற்று பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித்…

கணவனை தவிர வேரொருவறுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களுக்கு…

கணவனை தவிர வேரொருவறுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போட வேண்டும் என்ற தனது கருத்தை மராட்டிய பெண்கள் கமிஷனில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார்.   பெண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவு வைத்தால், அந்த பெண்ணை தூக்கில் போட…

இந்தியாவின் தேசியப் பிரச்சினையாக உருவெடுக்கம் பலாத்காரம்: அதிர்ச்சி தகவல்

இந்தியர்களில் பெரும்பாலானோர் பாலியல் பலாத்காரத்தையே தேசியப் பிரச்சினையாக கருதுவதாக அமெரிக்காவின் ப்யூ ஆய்வு மையம் நடத்திய ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடந்தாண்டு டெல்லியில 23 வயது இளம் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய மக்கள் பலாத்காரத்தைத்தான் மிக முக்கியமான தேசிய…

ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு…

ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது. மேலும், 7 பேர் விடுதலை செய்யப்படுவது குறித்த  வழக்கு விசாரணையை 3 மாதத்தில் நடத்தி முடிக்க…