டெல்லியில் நான் இருந்திருந்தால், மோடியின் இடுப்பில் கயிற்றை கட்டி சிறைக்கு…

மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, முர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது,  பா.ஜ.,வுக்கு எதிராகவும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. மோடிக்கு பணிந்து அக்கட்சி உள்ளது. காங்கிரஸ் இடத்தில் நான் டெல்லியில் இருந்திருந்தால், மோடியின்…

முல்லைப் பெரியாறு பிரச்சனையை இனிமேலும் அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க…

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்யாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

காங்கிரஸ் இடத்தில் நான் இருந்திருந்தால் மோடியை சிறைக்கு அனுப்பியிருப்பேன்

மேற்குவங்கத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரும், பாடகருமான இந்திரநீல் சென்னுடன், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி.  "மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இருந்திருந்தால் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் இடுப்பில் கயிற்றைக் கட்டி சிறைக்கு அனுப்பியிருப்பேன்' என்று மேற்கு வங்க…

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை தேவை; வெற்று…

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கால நேரத்தை விரயமாக்கும் வெற்று அறிக்கைகள் வேண்டாம் என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இந்திய உச்ச நீதிமன்றம்…

மே-18 கேளிக்கை நாள் அல்ல! அது துக்க நாள்: ஐபிஎல்…

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசினது உச்சகட்ட இனப்படுகொலை நடந்தேறிய மே18ம் நாளினை ஒர் கேளிக்கை நாளாக கொள்ளாமல் துக்க நாளாக கொண்டு, சென்னையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு தமிழகத்தில் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் உள்ள காவல்துறை ஆணையரிடம் புகார்…

இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் புழல் சிறையில்…

சென்னையில் பதுங்கி இருந்த இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கியூ பிரிவு போலீசார் விசாரணைக்கு எடுத்து இன்றுடன் 3 நாட்கள் முடிவடைந்தது. இதனையடுத்து ஜாகீர் உசேன் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் கடந்த…

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு : அலங்காநல்லூரில் கருப்புகொடி

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பதை தொடர்ந்து அலங்காநல்லூர் கிராம மக்கள் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் நேற்று தடை விதித்தது. இந்த உத்தரவு அலங்காநல்லூர் உள்பட மதுரை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் உள்ள ஜல்லிக்கட்டு…

எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பணப் பட்டுவாடா நடந்துவிட்டது : பிரவீன்குமார்…

மதுரை: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பணம் பட்டுவாடா நடந்துவிட்டது. இதை எந்த கட்சி செய்தது என கூற முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும்…

தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஜெயலலிதா

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது, நெய்வேலி பழுப்பு…

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி, மே.7– தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, மிருக நலவாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் நடைபெற்றன. தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட…

முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு…

புதுடெல்லி, மே. 7– முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக - கேரள அரசுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2006–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை…

மின்வெட்டுப் பிரச்னையால் நோயாளிகள் பலி: இதைவிட தமிழகத்தில் வேறு கொடுமை…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின் தடையாலும், ஜெனரேட்டர் இயங்காததாலும் செயற்கை சுவாக கருவிகள் வேலை செய்யவில்லை.  இதனால் விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வந்த பத்திரிகையாளர் பொன்முருகன் பரிதாபமாக பலியானார். மேலும், மாங்காட் டைச்சேர்ந்த ரவீந்திரன் என்பவரும் பலியானார். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

கிரிமினல் வழக்குகளில் அதிகாரிகளிடம் விசாரணைக்கு அரசு அனுமதி தேவையில்லை

கிரிமினல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்தியாவில், மத்திய புலனாய்வுத் துறை மேற்கொள்ளும் வழக்கு விசாரணைகளின் போது, அதில் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரணை…

சிறுபான்மைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியை கட்டாயப்படுத்த முடியாது

சிறுபான்மைப் பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்வி: மாநில அரசு ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை   சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும், மாநிலத் தாய்மொழி வழியில் மட்டுமே தொடக்க கல்விக்கான பாடத்திட்டத்தை பின்பற்றுவதை கட்டாயப்படுத்தும் கர்நாடக அரசின் உத்தரவை, இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில் அனைத்து சிறுபான்மை…

காங்கிரஸ் கோட்டையில் விழுந்தது ஓட்டை; சீமாந்திரா தேர்தலில் கட்சிக்கு கடும்…

விஜயவாடா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்த, ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில், தற்போது, அந்த கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தெலுங்கானா மாநில அறிவிப்பால், அங்கு நடக்கவுள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ், படுதோல்வியை சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு…

2ஜி: பிரதமர் அனுமதி பெற்றே அலைக்கற்றை ஒதுக்கீடு: சிபிஐ நீதிமன்றத்தில்…

தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான  மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா. "மத்திய அமைச்சர்கள், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருடன் விவாதித்து கடைசியில் பிரதமர் ஒப்புதல் பெற்றே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தேன்; அதில் எனது தனிப்பட்ட நலன் ஏதும்…

ராமரை குறிப்பிட்டுப் பேசியதால் சர்ச்சை: நரேந்திர மோடி பிரசாரம்

ஃபைசாபாதில் ராமர் உருவப்படத்துடன் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து திங்கள்கிழமை உரையாற்றும் மோடி.  "சொன்ன சொல்லைத் தவறாத ராமபிரான் அவதரித்த மண்ணில் வசிக்கும் மக்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய காங்கிரஸூக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ராமர் அவதரித்ததாகக் கருதப்படும்…

பழுதான கண்காணிப்புக் கேமராக்கள் : சென்ட்ரல் குண்டுவெடிப்பு குற்றவாளிகளைப் பிடிப்பதில்…

பெங்களூர்-சென்னை சென்ட்ரல் இடையிலான சில ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத நிலையிலும் பொருத்தப்பட்ட இடங்களில் அவை சரிவர வேலை செய்யாததாலும் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை (மே 1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவாஹாட்டி…

தேர்தல் வன்முறை புகார் தவறு எனில் என் மீது நடவடிக்கை…

""தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. இவ்வாறு கூறுவதற்காக தேர்தல் ஆணையம் வேண்டுமானால் என் மீது வழக்கு தொடரட்டும்'' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார். மேலும், மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறைகள் மற்றும் கள்ள வாக்களிப்பதை…

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 18 பேர் பலி, 145 பேர்…

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர். மும்பையில் இருந்து 120 கிலோ மீற்றர் தொலைவில், திவா - சஸ்வந்த்வாடி பயணிகள் ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.40 மணியளவில் நாகோதானே - ரோஹா ரயில் நிலையங்களுக்கு…

பிரதமரானாலும் விசாரணையை சந்திக்க தயார்: நரேந்திர மோடி பேட்டி

புதுடில்லி:நான் தவறு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டால் அல்லது சட்ட விரோதமாக செயல்பட்டதாக கூறப்பட்டால், மற்றவர்களை போல் இல்லாமல், விசாரணையை சந்திக்க தயாராக உள்ளதாக பா.ஜ.,பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தான் பிரதமரானாலும் விசாரணையை சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர்…

அஸ்ஸாம் வன்முறைக்கு மோடியின் பேச்சே காரணம்: ஒமர்

அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியே காரணம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "அஸ்ஸாம் மாநிலத்தில் மோடி தனது பிரசாரத்தின்போது, அங்கு…

அஸ்ஸாம் தாக்குதல் குறித்து மன்மோகன் சிங் கண்டனம்

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள போடோலாந்து பிராந்திய நிர்வாக மாவட்டங்களில், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பை சேர்ந்த கிளர்ச்சிக்காரர்களால் முஸ்லிம் கிராமவாசிகளிக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும்…