பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நீர்ப் பங்கீடு: கேரள, தமிழ்நாடு முதலமைச்சர்கள் பேச்சு
தமிழ்நாடு - கேரளா இடையிலான நதி நீர்ப் பங்கீடு குறித்து இரண்டு மாநில முதலமைச்சர்களும் இம்மாதம் 26ஆம் திகதி நேரில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். தமிழ்நாடு, கேரளாவிடையே, காவிரி, முல்லை பெரியாறு, சிறுவாணி, பரம்பிக்குளம் ஆழியாறு, நெய்யாறு, பாண்டியாறு நீர்ப் பங்கீடு பிரச்னைகள் நீண்ட காலமாக உள்ளன.இந்தாண்டில், சிறுவாணி…
‘விக்ரம் லேண்டர் நொறுங்கவில்லை’ – தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்
லேண்டர் விக்ரம் வேகமாக தரை இறங்கியதால் அது சாய்ந்துள்ளதே தவிர உடைந்துவிடவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர், நிலவில் கால் பதிக்க 2.1 கி.மீ. மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அதனுடனான தகவல் தொடர்பு முழுமையாகத்…
தமிழர்களுக்காகவும் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி காலமானார்!
முன்னாள் மத்திய அமைச்சரும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி, உடல்நலக்குறைவால் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிக்கார்பூர் என்ற ஊரில் 1923ஆம் ஆண்டில் செப்டம்பர் 14ஆம் தேதி பிறந்தவர் ராம் பூல்சந்த் ஜெத்மலானி (Ram boolchand jethmalani). பள்ளிக் கல்வியில்…
சந்திரயான் 2: “விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துவிட்டோம்” – இஸ்ரோ தலைவர்…
நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சுற்றுவட்டக் கலன் (ஆர்பிட்டர்) விக்ரம் லேண்டரின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார். ஆனால், "இதுவரை லேண்டருடன் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நாங்கள் தொடர்பு செய்ய முயற்சித்து வருகிறோம்.…
பாதி வெற்றி.. ஆர்பிட்டர் இயங்கும்.. லேண்டருடன்தான் தொடர்பு துண்டிப்பு.. இஸ்ரோ…
டெல்லி: சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டர் தொடர்ந்து எப்போதும் போல 1 வருடம் இயங்கும் என்று இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் 2 நிலவில் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்துள்ளது.…
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒரு மாதம் – பிரச்சனை…
அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்று சாமானிய இந்திய மக்கள் நம்புகிறார்கள். இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியானதில் இருந்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரிய அளவில் வன்முறை ஏதும் நிகழவில்லை என்பதைக் கூறி இந்திய அரசும்…
ரூ. 7 ஆயிரம் கோடி கடன்.. எடுத்துக்கோங்க.. ரஷ்யாவிற்கு வாரி…
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் வளர்ச்சிக்காக இந்தியா 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார். இந்திய பிரதமர் மோடி தற்போது ரஷ்யா சென்று இருக்கிறார். நேற்று ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் பல்வேறு…
2 சீக்கிய பெண்களை மதம் மாற்றி திருமணம் – பாகிஸ்தானுக்கு…
பாகிஸ்தானில் 2 சீக்கியப் பெண்களை கடத்தி கட்டாய திருமணம் செய்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜக்ஜித் கவுர் என்ற சீக்கிய பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்ததாகவும், இதுகுறித்து பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண்ணின்…
காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு!
மாலத்தீவுகளில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் சொற்போர், வாக்குவாதம் நடத்தப்பட்டது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி பாகிஸ்தான் தரப்பை கூச்சலிட்டு அமரச் செய்தனர். சர்வதேச தளத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் முயற்சி செய்து வந்தாலும் இதுவரை அதற்கு தோல்வியே எஞ்சியுள்ளது. மாலத்தீவுகளில்…
இந்தியப் பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி தந்த 1.76 லட்சம்…
இந்திய ரிசர்வ் வங்கி தமது உபரி நிதியில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டது, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், இந்தியப் பொருளாதாரத்தில் தற்போதுள்ள சிக்கல்களை இது தீர்க்குமா என்பது குறித்து சென்னைப்…
பாக். ஆக்கிரமித்துள்ள கில்கித்-பால்டிஸ்தானும் இந்தியாவின் ஒரு பகுதி: ராஜ்நாத்சிங் அதிரடி
லே(லடாக்): கில்கித்-பால்டிஸ்தானும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அதிரடியாக பேசியிருப்பது பாகிஸ்தானை பெரும் பீதியில் உறைய வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனை லடாக் யூனியன் பிரதேச மக்கள் கொண்டாடி வருகின்றனர்.…
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றி உச்சநீதிமன்றம் அக்டோபரில் விசாரிக்கும்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது. மேலும் இது குறித்த மனுக்களுக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும் என்றும், ஐந்து பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு அக்டோபரில் இந்த மனுக்களை…
கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொண்டு பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவிலேயே அழிக்கும் வழக்கம் சில இடங்களில் பரவியதால் கருவில் இருக்கும்…
டிரம்ப் – நரேந்திர மோதி சந்திப்பு: ‘எங்களின் பிரச்சனைகளை நாங்களே…
பிரான்ஸில் ஜி7 மாநாடு நடந்துவரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து பேசியுள்ளார்; இருவரும் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், ஜி7 மாநாட்டில், இருதரப்பு சந்திப்பின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர்…
ப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா?
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் “ஐ.என்.எக்ஸ்” மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பீ.ஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். 2004 முதல் 2008ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர் ப சிதம்பரம். இந்த “ஐ.என்.எக்ஸ்” மீடியா நிறுவனம், 2007 மார்ச் மாதத்தில்,…
இந்தியப் பொருளாதார நெருக்கடி – விற்பனை சரிவு, ஆட்குறைப்பு, சரியும்…
இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. வாகன தொழில்துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், வேலைகளை இழக்க நேரிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் தயாரிப்புகளை குறைத்துள்ளன. நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால்,…
இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு
"இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" என்று தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். ஆனால், தரவுகள் முற்றிலும் வேறுபட்ட பார்வையை வழங்குகின்றன. வருடாந்திர அடிப்படையில் பார்த்தோமானால், 1971ஆம் ஆண்டு முதலே இந்தியாவின் மக்கள்தொகை குறைந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி,…
முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்
டெல்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை…
“அமெரிக்கா, சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகம்” – நிர்மலா…
சமீபத்தில் இந்தியாவின் சில பெருநிறுவனங்கள் அறிவித்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் உண்டான வேலை இழப்பு, உற்பத்தித் துறையில் உண்டாகியுள்ள சரிவு உள்ளிட்டவற்றால் இந்தியப் பொருளாதாரம் சவாலைச் சந்தித்து வரும் நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்க இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச்…
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை தடுக்கத் திட்டம்!
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை மீண்டும் இந்தியாவுக்குள் திருப்பி விட திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரகம் உள்பட…
தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர்…
வேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதற்கிடையில், ஆதி திராவிடர்களின் இடுகாட்டிற்கென அரை ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நாராயணபுரம் கிராமத்தில் கடந்த…
Parle பிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: “ஆட்டோமொபைல் தொடங்கி சில்லறை வணிகம்…
பிரபல பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, விற்பனை சரிவின் காரணமாக 10,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. பிஸ்கட்டுகளுக்கான வரி 12 சதவீதம் இருந்த நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பின்னர் 18 சதவீதமாக அதிகரித்ததே இதற்குக் காரணம் என அந்நிறுவனம்…
ப. சிதம்பரம் சிபிஐ காவலில் எடுக்கப்பட்டார்; வாயில் கதவை ஏறி…
இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க இன்று மறுத்திருந்த நிலையில், அவர் இன்று, புதன்கிழமை…