பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் சாதனை படைக்கும் இந்தியா
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகின் முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக உணவு, விவசாய அமைப்பு பொருளாதார கூட்டமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு…
கொட்டும் மழையில் சீமான் பாடிய “ம.க.இ.க”வின் வந்தே மாதரம்!
சென்னை : அப்துல் கலாம் நினைவு பொதுக்கூட்ட மேடையில் மழையையும் பொருட்படுத்தாமல் பேசிய சீமான், தனதுபாணியில் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். சென்னையில் நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு பொதுக்கூட்டத்தின் போது கொட்டும் மழையில் சீமான் பேசினார். நீதியரசர் ஒருவர் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று…
இந்தியாவின் ரூ.3,600 கோடி ஏவுகணைத் திட்டம் தோல்வி: வெளியான தகவல்
இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைத் திட்டம், அனைத்து சோதனைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என மத்திய கணக்கு தணிக்கையாளர் குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசின் கணக்கு தனிக்கையாளர் குழு எனப்படும் சிஏஜி அனைத்து துறை தொடர்பாக அறிக்கைகளை தயார் செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து…
வாங்க, முதல்ல தமிழ்நாட்டைப் பாதுகாப்போம்.. உலகத் தமிழர்களுக்கு அழைப்பு!
ஹூஸ்டன்(யு.எஸ்): தமிழகத்தைப் பாதுகாக்க வாருங்கள் என்று உலகத் தமிழர்களுக்கு கார்த்திகேய சிவசேனாபதி அழைப்பு விடுத்துள்ளார். ஹூஸ்டனில் கார்த்திகேய சிவசேனாபதி, ஒரிசா பாலு ஆகியோருடன் நேரடி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பங்கேற்று பேசிய கார்த்திகேய சிவசேனாபதி, "ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு, விவசாயிகள் தற்கொலை, நீர் ஆதாரம், மணல்…
தன்னம்பிக்கை நாயகன்
அரியானா மாநிலத்தை சேர்ந்த மதன் லால் என்பவர் தனது இரு கைகளையும் இழந்த போதிலும் தன்னம்பிக்கையோடு தனது இரு கால்களையும் வைத்து தையல் தொழில் செய்து வருகிறார். பிறப்பிலேயே தனது இரு கைகளையும் இழந்த மதன் லால், தான் எதிர்காலத்தில் ஒரு தையல்காரராக வருவார் என கனவில் கூட…
சீமான் மீது 4 பிரிவுகளில் பொலிசார் வழக்குப்பதிவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தின் அஸ்தம்பட்டியில், தமிழ் தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கடந்த 4ஆம் திகதி நாம் தமிழர் கட்சி…
ஆழ்கடல் மீன் பிடிப்பு பயன்படுத்துவதன் மூலம் மீனவர்கள் பிரச்சினைகளில் இருந்து…
ராமேசுவரம், ராமேசுவரத்தில் நடைபெற்ற விழாவில் அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குதேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார். மண்டபம் கடலோர காவல் படை குடியிருப்பு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு ஆழ்கடல் மீன் பிடிப்பு அனுமதி ஆணைகள்…
சிக்கிம் பதற்றத்துக்கு இடையே இந்தியா–சீனா பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை
பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் 2 நாள் கூட்டம் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது. பீஜிங், பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் 2 நாள் கூட்டம் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது. சீனா சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் இந்தியா, சீனா, பிரேசில்,…
பிராந்திய கட்சிகளை சிதைத்து 2019 ல் மீண்டும் பிரதமராகப் போகிறாரா…
கடந்த சில நாட்களாகவே நடக்கப் போகிறது என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்த நாடகம், நேற்று, ஜூலை 26 ம் தேதி பிஹாரில் வெற்றிகரமாக நடந்தேறி விட்டது. ஆம். பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்து விட்டார். காரணம் பிஹாரின் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான…
அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர்… நமக்கு அப்துல்…
அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம். இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர். அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா.....நெருங்குடா பாப்போம் என தெறிக்க விட்டவர். ஒரு பின்…
தமிழக விவசாயிகளுக்கு உதவ, அமெரிக்காவில் நடக்கிறது மொய் விருந்து!
சென்னை : வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் மொய்விருந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பருவமழை பொய்த்தது, நீர் வறண்டது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. நீரின்றி தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு போனதோடு, பயிர்களும் கருகி நாசமானதால் விவசாயிகள் பலர் மனகஷ்டத்திலும்,…
ஐ.நா அமைதிக்கான விருது: தமிழக சிறுவன் பரிந்துரை
பழங்குடியின சிறுவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் தமிழகத்தைச் சேர்ந்த சக்தி என்ற சிறுவன் ஐ.நா-வின் சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளான். தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சக்தி. இச்சிறுவன் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். முதலில் பாசிமணி விற்றுக் கொண்டிருந்த…
ஓஎன்ஜிசிக்கு தொடரும் எதிர்ப்பு- கதிராமங்கலத்தில் 14வது நாளாக நீடிக்கும் காத்திருப்பு…
கும்பகோணம்: ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க வலியுறுத்தியும் கதிராமங்கலம் கிராம மக்கள் 14வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பராமரிப்பு பணியின் போது ஏற்பட்ட கசிவால் அப்பகுதியில் குடிநீரும் விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.…
ரூ. 2000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்!
டெல்லி: ரூ 2000 புதிய நோட்டுகளை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ 2000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் ரூ 500, 1000 நோட்டுகளை ஒழிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு…
பெங்களூரு சிறையில் சசிகலா நடத்திய சட்டவிரோத சாம்ராஜ்யம்… அதிரவைக்கும் புதிய…
பெங்களூரு: சசிகலா பெங்களூரு சிறையில் எந்தெந்த அதிகாரிகளை வளைத்துப் போட்டு எப்படியெல்லாம் சட்டவிரோத சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தார் என்கிற அதிரவைக்கும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வந்ததை முன்னாள் டிஐஜி ரூபா அம்பலப்படுத்திய நிலையில் புதிய கடிதம் ஒன்றில் ஏராளமான அதிர்ச்சி…
3 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு.. கோட்டைப்பட்டினத்தில் சோகம்
கோட்டைப்பட்டினம்: நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 3 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கம்…
மனுதர்மத்தை, இந்துத்துவாவை ஏற்காத முற்போக்கான அறிவியல் மதம் வீரசைவம்: கர்நாடகா…
பெங்களூரு: பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வை திணிக்கும் மனுதர்மத்தையும் இந்துத்துவாவையும் ஏற்காத முற்போக்கான அறிவியல் பூர்வமான மதம்தான் லிங்காயத்துகளின் வீரசைவம் என கர்நாடகா அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி கூறியுள்ளார். கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள லிங்காயத்துகளை லிங்காயத்துகள்- வீரசைவர்கள் என தனி மதமாக…
இன்னும் எத்தனை திவ்யபாரதிகளும், வளர்மதிகளும் குபேரன்களும் தேவை இந்த அரசுக்கு?
சென்னை: மாணவர்கள் உள்ளிட்ட இளம்தலைமுறையினர் மக்கள் நலன் போராட்டங்களில் பங்கேற்கூடாது என மிரட்டும் வகையில் கைது நடவடிக்கைகள் தொடர் நிகழ்வாகிவிட்டது. தற்போது மதுரையில் மாணவராக இருந்த போது போராட்டம் நடத்தியதற்காக ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. மெரினா…
உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு தனி பஸ்… முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி…
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக பெண்களுக்கான பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்த பஸ்கள் பிங்க் நிறத்தில் இருக்கும். ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருக்கும். இவற்றில் ஆண்கள் பயணம் செய்ய முடியாது. பெண்களும், குழந்தைகளும் மட்டும்…
வேலையிழப்பால் தடுமாறும் ஐ.டி. துறை: தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வழி…
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் எட்டு முதல் பத்து சதவீதத்தை ஈட்டித்தரும் தகவல் தொழில்நுட்பத் துறையில், ஆயிரக்கணக்கில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தினமும் செய்திகள் வெளியாகின்றன. தற்போது வரை இந்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள வேலை இழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை வெளியிடப்படவில்லை. இதுவரை…
மலையை அசைப்பது ஈஸி.. எங்களிடம் மோதுவது கஷ்டம்.. இந்தியாவிடம் சீனா…
பீஜிங்: சீனாவின் இறையாண்மையை யாராலும் அசைக்க முடியாது என்றும் இந்தியா தங்கள் படைகளை திரும்ப பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை…
காஷ்மீரில் ஹுரியத் பிரிவினைவாதிகள் 7 பேர் அதிரடி கைது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானியின் மருமகன் உள்ளிட்ட 7 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வருவதாகத் தகவல்கள் வெளியாகின. காஷ்மீரில் அமைதியின்மை ஏற்பட்டபோது பிரிவினைவாதிகள் தீவிரவாதிகளிடம்…
டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் முதலிய கோரிக்கைகளை ,மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செருப்பு, துடைப்பத்தால் அடித்துக்கொண்டும், மொட்டை…
