பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஐந்து ஆண்டுகளில் யாழ்.மாவட்டத்தில் இத்தனை குற்றச்செயல்களா?
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 19ம் திகதி வரை யாழ்.குடாநாட்டில் 3 கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 50 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான 16 வழிப்பறிக் கொள்ளைகளும், 23 வீடுடைப்பு கொள்ளைகளும் இடம்பெற்றதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 2011ம் ஆண்டு முதல் 2016ஆண்டு…
தமிழினி சொல்லும் ஒவ்வொரு சொல்லும் கொல்லும்! ஒரு கூர்வாளின் நிழலில்..…
தமிழினி - புலிகளை அறிந்தவர்களுக்கு புதுப்பெயர் அல்ல. மகளிர் படைப் பிரிவினின் மகத்தான போராளியாக முதலிலும், அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இறுதியிலும் இருந்தவர். இறுதிக் கட்டப் போரின் இறுதியில் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்தவர். புற்றுநோய் பாதிப்பால் தனது இறுதிப் பயணத்தை 43 வயதிலேயே அடைந்தவர்.…
இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதி! சர்வதேச விசாரணை கோரும்…
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினர், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட த கார்டியன் ஊடகம் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
யாழிற்கு சென்ற அமெரிக்கப் பிரதிநிதிகள் வேலை வாய்ப்பு குறித்து ஆராய்வு
யாழ்.மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், முதலீட்டாளர்களை கவருவதற்கும் யாழ்.மாவட்டத்தில் செய்யப்பட வேண்டிய விடயங்களை ஆராய்வதற்காக அமெரிக்க நாட்டின் குழு ஒன்று இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்திருப்பதுடன் காங்கேசன்துறை- நடேஷ்வரா கல்லூரிக்கும் விஐயம் செய்துள்ளது. மிலேனியம் சலஞ்சஸ் தொடர்பா ன மதிப்பீடு செய்வதற்கான குழுவே இன்றைய தினம் யாழ்.வந்திருந்தது. வடக்கிற்கு…
காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் பன்னாட்டு நிபுணர்…
ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என பன்னாட்டு நிபுணர் குழு ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றஞ்சாட்டியுள்ளது. சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு நிபுணர்களை குழுவே (MAP) குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. காற்றில் பறக்கும் சிறிலங்காவின்…
முள்ளிவாய்க்காலில் வெளிக்கிளம்பிய ஆயுத தளபாடங்கள் யாருடையவை?
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறுதியுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்ட ஆயுத தளபாடங்கள் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நடைபெற்ற பகுதிகளில் குடியேறியுள்ள குடும்பம் ஒன்றின் காணியில் கிணறு வெட்டும் போது சில இராணுவ தளபாடங்கள் வெளிக்கிளம்பியுள்ளமை தெரியவந்துள்ளது. இராணுவ அடையாளங்களுடன் கணப்படும் மேற்படி…
ஈழத் தமிழர்களுக்கு அநீதியிழைத்தால் கச்சத்தீவை மீட்க இந்திய அரசு தயங்காது!…
இலங்கையில் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அநீதியிழைக்கும் பட்சத்தில் கச்சத்தீவினை மீட்க இந்திய அரசாங்கம் தயங்காது என இந்திய மத்திய அமைச்சர் பொன். ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து…
இந்தோனேஷியாவில் தவிக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவும் மலேஷியா!
இந்தோனேஷிய அச்சே பகுதியில் தஞ்சமடைந்துள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவத் தயார் என மலேசியா அறிவித்துள்ளது. இதன்படி, நிர்க்கதியாகியுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அந்நாட்டின் பினாங் மாநில பிரதி முதலமைச்சர் பீ.ராமசாமி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இந்தோனேஷிய உதவி…
போர் முடிந்து 7 ஆண்டுகளுக்கு பின்னரும் கண்ணிவெடி பீதியில் தமிழ்…
இலங்கையில் போர் முடிவடைந்து 7 வருடங்களாகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் படை முகாம்கள் விலக்கிக் கொள்ளப்பட்ட சில இடங்களில் இன்னமும் வெடிப் பொருட்கள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது. அந்த இடங்களில் மிதிவெடி அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் காணப்படுவதால் இராணுவம் விலக்கிக் கொண்ட தங்கள் காணிக்குள் செல்ல முடியாதிருப்பதாக காணி…
அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி
இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் செல்லும் வழியில் அகதிகள் படகு இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், தரைதட்டியது. ஒரு வாரகாலமாக படகில் இருந்து இறங்க…
பொறுப்புக்கூறும் விடயத்தில் இழுபறி நிலை வேண்டாம்
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று நல்லாட்சி அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உறுதி வழங்கியிருந்தபோதிலும் அதற்கான உரிய நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கவில்லை என்ற அதிருப்தி தமிழ் மக்கள் மத்தியில்…
நிகழும் சம்பவங்களைக் கண்டு நெஞ்சம் வெடித்துப் போகிறது!
போரில் தோற்றுப்போன தமிழினம் ஒற்றுமையாக இருந்து மீண்டு எழ வேண்டிய நேரம் இது.இருந்தும் எங்களிடம் ஒற்றுமை இல்லாமல் போனது மட்டுமன்றி, சமூக இணக்கப்பாடும் கலாசாரப் பேணுகையும் வேரறுந்து போவதுதான் மிகப்பெரிய கொடுமை. அதிலும் குறிப்பாக பாடசாலைகளில் இடம்பெறும் சம்பவங்களை அறிந்து நெஞ்சம் வெடித்துப் போகிறது. ஏன்தான் இப்படி நடக்கிறது…
இலங்கையின் இராணுவ முகாம் தாக்குதலில் இந்திய ரோ!! திடுக்கிடும் புதுத்…
தற்போது ஜெனீவாவில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள் இலங்கை அரசின் நிலையால் மாற்றப்பட்டிருக்கின்றதா? என்பது தொடர்பிலும் இந்திய ஏகாதிபத்திய அரசியலில் இலங்கையின் நலன் எப்படி இருக்கின்றது என்பது தொடர்பிலும் இந்த வார வட்ட மேசையில் ஆராயப்பட்டுள்ளது. அவிஸாவளை பகுதியில் கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட…
நாங்களும் தமிழர்கள் தான். எமக்காகவும் பேசுங்கள்! – அகதிகள் முகாமின்…
உலகில், உச்சபட்ச வன்முறை என்றுமே ஆயுதங்களால் நிகழ்வதில்லை, அது தன் சக மனிதன் மீது அன்பு செய்ய மறுப்பதால்தான் நிகழ்கிறது. நிச்சயம் ஒரு மனிதனை அன்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஏங்கவிட்டு, அலைய விடுவதைவிட ஒரு வன்முறை இப்புவியில் இருந்துவிட முடியாது. ஆனால், நாம் தினமும் அந்த வன்முறையை நிகழ்த்திக் கொண்டே…
இறுதிப்போரில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதியாகியுள்ளது! தெ காடியன்
இலங்கையின் இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன் செய்தி வெளியிட்டுள்ளது. தெ காடியன் செய்தித்தாள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு ஆதாரங்களாக வன்னியில் இருந்து மீட்கப்பட்ட…
இந்தோனேசிய தமிழ் அகதிகள் விவகாரம்: புரிந்து கொள்வது எப்படி?
இந்தோனேசிய கடற்பரப்பில் இனஅழிப்பிலிருந்து தப்பி தம் உயிரை காக்க போராடும் தமிழ் ஏதிலிகள் விவகாரம் மனதை உலுக்குகின்றது. இது முதற் தடவையல்ல.. பல தடவை இந்த அவலத்திற்கு தமிழர்கள் முகம் கொடுத்தே வந்துள்ளனர். பல நூற்றுக்கணக்கனவர்களை நாம் இந்த கடற்பயணங்களின் போது இழக்கவும் நேரிட்டிருக்கிறது. 2009 மே 18…
மைத்திரி அரசு இரகசியமாக எல்லாவற்றையும் செய்து வருகிறது: சின்னமணி கோகிலவாணி
இன்றைய ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பலர் பங்குபற்றி இலங்கை தொடர்பில் தத்தம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். சுவீடன் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் பீற்றர் சாக் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் போராளியும்…
அகதிகள் விவகாரம்! இந்தோனேசியாவுக்கு வலுக்கும் கடுமையான எதிர்ப்பு
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளள. சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு பயணமான இலங்கை அகதிகள் படகு இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தரைதட்டியது. குறித்த அகதிகள்…
ஆபத்தில் ஜெனிவா!! குழப்புவதில் தமிழர்கள் வெளிவரும் உண்மைகள்…!
ஐக்கிய நாடுகள் சபையின் 32ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், இலங்கை தொடர்பில் பல்வேறு பட்ட வாத பிரதிவாதங்கள் ஐ.நா சபையின் வெளியிலும் உள்ளேயும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதில் இலங்கையின் நிலைபாடுகள் எப்படி இருக்கப்போகின்றன? இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு ஐ.நா சபையின்…
பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு…
ஆச்சே கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு போதிய உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தஞ்சம் அளிக்கவேண்டும் என்று தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண அரசாங்கத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி நன்றி தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு…
ஐ.நா.வில் ஒளிபரப்பப்பட்ட வடக்கின் குரல்கள்!
ஜெனிவாவில் இன்று மாலை ஜேர்மனியை தளமாகக் கொண்டியங்கும் Society for Threatened Peoples International (STPI) அமைப்பினால் இன்றைய தினம் 3:30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்தாய்வின் போது ‘வடக்கின் குரல்கள்` என்ற தலைப்பில் ஆவணப்படுத்தப்பட்ட காணொளி ஒன்று ஒளிபரப்பட்டிருந்தது. அக்காணொளியில் வழக்கறிஞர் ரட்ணவேல், மற்றும் அருட்தந்தை ரவிச்சந்திரன்…
இலங்கை கடினமான நீதிப்பொறிமுறை தொடர்பான பயணத்தை ஆரம்பித்துள்ளது: ஐ.நா விசேட…
கடந்த 13ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமை சபை 32வது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பில், ஈழத் தமிழர்கள் தொடர்பில் பேசப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அங்கு ஈழத் தமிழர்கள் பற்றிய நிகழ்ச்சிநிரல் காணப்படவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் இலங்கை சென்றிருந்த, நீதிபதிகள் மற்றும்…
கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்…
இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் படகு இந்தோனேசியாவின் அச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது. குறித்த…
