பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி, இராணுவத்தினரின் நிர்ப்பந்த்தின் மத்தியிலேயே வாழும் நிலையில்…
இலங்கையில், இராணுவ பலாத்காரத்துக்கும் அச்சுறுத்தலும் முகம்கொடுத்த தமிழ்ப்பெண்கள், அதே இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 8ஆம் திகதி அனைத்துலக பெண்கள் நாளினையொட்டி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சர் பாலாம்பிகை…
அரசியல் தீர்வினை கொண்டுவர தயக்கம் காட்டினால் அதன் விளைவை அரசு…
அரசியல் தீர்வொன்றை கொண்டு வர இனிமேலும் அரசு தயக்கம் காட்டுமானால் அந்த விடயமானது அத்தோடு மரணித்துப் போகும் விடயமாக இருக்கப் போவதில்லை. பிரச்சினைகள் தொடரும். அதனுடைய விளைவுகளை நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டி வரும். இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். எதிர்வரும் 9ம்…
அழிந்து கொண்டிருக்கும் ஆதிவாசிகளின் பரம்பரை! வன்னியலத்தோ கவலை
இலங்கையில் ஆதிவாசிகளின் பரம்பரை துரித கதியில் அழிவுகளை எதிர்நோக்கியுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார். பீ.பீ.சி. சந்தேசய செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், முன்பு போன்று வேடர்கள் தற்போது வேட்டையாடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என கூறியுள்ளார்.…
இந்தியாவின் உதவியுடன் சமஷ்டியை நோக்கி நகரும் சி.வி.விக்னேஸ்வரன்!
வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய உதவியுடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் காய்நகர்த்தி வருவதாக சிங்கள ஊடகமொன்றில் வெளியாகியுள்ள விவரணக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் இலங்கை அரசாங்கத்தைப் புறம் தள்ளி இந்திய மத்திய அரசுடன் நேரடி உறவு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும்…
நடேசன் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தார்: நேரில் கண்ட பெண் இரகசிய சாட்சியம்
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பேர் வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைந்ததாகவும் அவர்களை பேருந்தில் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக பெண் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். கடந்தவாரம் கோப்பாயில் காணாமற்போனோர் குறித்து சாட்சியங்களைப் பதிவு செய்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிடமே இதுபற்றிய…
சமஷ்டி ஆட்சி முறை இந்தியாவுக்குப் பொருந்தும்! இலங்கைக்கு பொருத்தமற்றது!
சமஷ்டி ஆட்சி முறை இந்தியா போன்ற பெருநிலப்பரப்பைக் கொண்ட நாடுகளுக்கே பொருந்தும் என்றும், இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்குப் பொருத்தமற்றது என்றும் சட்டத்தரணி கோமின் தயாசிறி வலியுறுத்தியுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரும், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் தொடர்பான சட்ட நிபுணருமான கோமின் தயாசிறி…
போர்க்குற்ற விசாரணைகளில் நம்பகத்தன்மையை ஐக்கிய நாடுகள் சபை விரும்புகிறது! பர்ஹான்…
இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் போர்க்குற் றம் தொடர்பான உண்மையான விசாரணைகளினூடாக நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதனையே ஐக்கிய நாடுகள் சபை விரும்புவதாக ஐ.நா. செயலாளரின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார். முறையான விசாரணையினூடாக நல்லிணக்கம் மற்றும் இருதரப்பு பொறுப்புக்கூறலினூடாக உண்மையான மறுசீரமைப்பிற்கு சிறந்த சந்தர்ப்பமாக தற்போதைய சூழல் அமைந்துள்ளதாகவும் அவர்…
கவலை கொண்டார் பிரபாகரன்! மனம் திறந்தார் சந்திரிகா!
தமிழ் மக்களுக்கு தனது ஆட்சிக் காலத்தில் அதிகளவான உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையே முன்வைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்றும் வரும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
நிலங்களை மீள கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த தங்களை மீள்குடியேற்றக் கோரி 32 நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தை இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு தொடங்கியிருக்கும் நிலையில் மாலை 5 மணி வரையில் கு றித்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. பலாலி விமான…
தமிழ்க் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுஜன அமைப்புகள் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன. தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரணை…
நம்பிக்கையை ஏற்படுத்தும் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்!
நாட்டில் புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காண்பது தொடர்பாக அவ்வப்போது நம்பிக்கைதரும் சமிக்ஞைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அரசாங்கம் எவ்வாறான தீர்வுத் திட்டத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் என்பது தொடர்பில் இதுவரை தெளிவில்லாத தன்மை காணப்படுகின்றது. அரசாங்கத்தை பொறுத்தவரை தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு நியாயமான…
ஐ.நா கூட்டத்தொடரில் ஆணையாளர் மௌனம்! அனைத்துலக நிபுணர் குழுவின் செயற்பாடு…
ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில், The Sri Lanka Monitoring and Accountability Panel (“MAP”) சிறிலங்காவை மையப்படுத்திய நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர் குழுவின் செயற்பாடு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைச்பையின் 31வது கூட்டத் தொடர் பெப்29 திங்களன்று ஜெனீவாவில் தொடங்கியுள்ளது.…
இன்னும் 300 புலிகள் எம்மிடம் முகாம்களில் உள்ளார்கள்- ஒத்துக் கொள்ளும்மேஜர்…
முன்னர் இருந்த இலங்கை அரசாங்கம் , தடுப்பு முகாமில் இனி எந்த ஒரு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் இல்லை என அறிவித்தார்கள். இதேபோல தற்போது உள்ள ரணில் அரசாங்கமும் , இனி எங்களிடம் யாரும் இல்லை. காணமல் போனவர்கள் இறந்துவிட்டதாக தான் கருதவேண்டும் என்று யாழில் வைத்துப்…
கைதிகள் எவரும் யுத்த மனோநிலையில் இல்லை!- விடுதலையான கோமகன் கண்ணீர்
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் எட்டு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உட்பட சகல தமிழ் கைதிகளும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை அல்லது யுத்தத்தை முன்னெடுக்கக் கூடிய மனோநிலையில் இல்லை என விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கோமகன் கண்ணீருடன் தெரிவித்தார். பெற்றோர், மனைவி…
வடக்கு கிழக்கு இணைந்ததாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!- சம்பந்தன்
எமது மக்களின் அபிலாசைகளை தீர்க்காத எந்தவொரு தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது வடக்கு கிழக்கு இணைந்தாகவும் ஆனால் தமிழ் மக்களை பிரிக்காததாகவும் அமைய வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மத்தியில் சமகால நிலைமைகள் பற்றி அவர் நேற்று திங்கட்கிழமை…
இது தன் எனது மகன்: சனல் 4 வெளியிட்ட வீடியோவில்…
சனல் 4 ஊடகம் வெளியிட்ட இலங்கையின் போர்குற்ற ஆதார புகைப்படத்தில், காணாமல் போன தமது மகனும் உள்ளாரென ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் பெற்றோர் சாட்சியமளித்துள்ளனர்.யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் குறித்த பெற்றோர் சாட்சியமளித்துள்ளனர். தமது மகன்…
இந்திய மீனவர்களால் தாக்குதலுக்கு உள்ளான இலங்கை மீனவர்கள்
தெய்வேந்திரமுனை கடற்பரப்பிலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற மீனவர்கள் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 16ஆம் திகதி ”தில்ருக் புதா-6” என்ற படகின் மூலம் சென்ற 6 மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 20 பேர் கொண்ட இந்திய மீனவ குழுவினால் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக…
சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுத்தர வேண்டும்! முதலமைச்சர்
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்காகத் தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பேரவையின் வல்லுநர் குழுவின் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றபோதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அதற்கன…
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் சுயநலத்தினால் உருவான சிக்கல்!
இந்திய மீனவர் விவகாரம் சமீப தினங்களாக மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலைமையில் மீனவர் விவகாரமானது தமிழக, இலங்கை தமிழர்களுக்கிடையில் நிரந்தர விரோதத்தை ஏற்படுத்தி விடுவதற்கு இடமளிக்கலாகாது. இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதை சட்டபூர்வமானதாக்க வேண்டுமென்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுவடைந்து வருவதாலும், அவ்வாறு இந்திய மீனவர்கள்…
காணிகளை இழந்த மக்களின் அவல வாழ்க்கை தொடர்வதற்கு இனியும் இடமளிக்கக்கூடாது!
வடக்கு, கிழக்கில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது பொதுமக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அவை இதுவரை முழுமையாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் அப்பாவிப் பொதுமக்களின் காணிகளை மீள்வழங்குமாறு வலியுறுத்தப்பட்டு வந்த போதும்…
நல்லிணக்கத்தை அடைய இலங்கை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது! அமெரிக்கா
நல்லிணக்கம் மற்றும் நீதி என்பவற்றுக்காக இலங்கை இன்னும் அதிக பணிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி ராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கையால் இந்த பணிகளை தனித்து நிறைவேற்றமுடியாது. எனவே அமெரிக்க நண்பனாகவும் பங்களாராகவும் இலங்கைக்கு உதவும் என்று ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி…
இறுதி யுத்தத்தில் கணிசமானளவு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மை! பரணகம
இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான எண்ணிக்கையை சரியாக கூற முடியாததால் எண்ணிகையை என்னால் வெளியிட முடியாது. ஆனாலும் கணிசமான அளவு பொது மக்கள் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டார்கள் என்பது மட்டும் உண்மை என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இறுதி யுத்தம்…
தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சிக்குத் தயார்! தமிழ்த் தேசிய…
நாம் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்ட்டி ஆட்சி முறைக்குத் தயாராக உள்ளோம். அச் சமஸ்ட்டி ஆட்சி முறையானது மத்தியில் தேசங்களின் கூட்டும் மாநிலத்தில் சுயாட்சியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள்…
