13 இற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்க இந்தியா…

இந்திய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்தவில்லை என  ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

இலங்கை அகதிகள் பற்றி பேச்சு இல்லை!

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவுடன் இந்தியா பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அணுசக்தியில் ஒத்துழைப்பு முதல், கால்நடைகளைத் தாக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர் பற்றியோ இலங்கை அகதிகள் பற்றியோ பேச்சே இல்லை.…

இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!- ஷோபா சக்தி

கொரில்லா’வில் தொடங்கி 'கண்டி வீரன்’ வரையிலும் தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்துவக் குரல். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இயங்கி, பின்னர் அதில் இருந்து விலகி, புலிகளை இப்போதுவரை கடுமையாக விமர்சித்து வருபவர். சமகாலத்தின் சிறந்தகதைசொல்லிகளில் ஒருவரான ஷோபா சக்தி, இப்போது கதாநாயகன். 'தீபன்’ என்ற பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில்…

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் சிறந்தவை: அமெரிக்கா

இலங்கையின் புதிய அரசாங்கம், பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் ஆரம்ப முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. 30 வருடங்களுக்கு பின்னர் மனித உரிமைகள் காப்பு மற்றும் நல்லிணக்கத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதி கெய்த் ஹாப்பர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாகவே பேரவையில்…

ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு ஏமாற்றம்! வாய்மூல அறிக்கையினை மார்ச்சில்…

சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை ஒத்திவைத்துள்ளமையானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மார்ச் மாத அமர்வில் வாய்மூல அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா…

பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு முட்டுக்கட்டையா? – பிரித்தானிய தமிழர் பேரவை…

இனப்படுகொலையைக் கண்டித்து பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு, இலங்கை ஆட்படுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை. கடந்த வாரம் லண்டனில் தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்…

பூனையாக பதுங்கிய வடமாகாண சபை புலியாக மாறிவிட்டது: ஞானசார தேரர்

இனவாத பிரிவினைக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் வட மாகாண சபையும் முயற்சிப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட…

ஐ.நா அறிக்கை ஒரு முறை மட்டுமே ஒத்திவைக்கிறதாம் – ஐ.நா…

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கையை வெளியிடுவதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அளித்த…

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு! கவலையோ, மகிழ்ச்சியோ இல்லை!- த.தே.கூட்டமைப்பு

ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள தீர்மானம், தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6…

இலங்கையில் உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருவியாக இருக்கும்: பிரித்தானியா

இலங்கையில் நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்கு போரின்போது இடம்பெற்ற சம்பவங்களின் உண்மைகளை வெளிக்கொணர்வது முக்கிய விடயமாக இருக்கும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை செப்டம்பருக்கு பிற்போட்டுள்ளமை தொடர்பில் கருத்துரைத்துள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இதனை…

புதிய அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சந்தேகம் எழுந்துள்ளது: கிருஸ்ணபிள்ளை…

2005ம் ஆண்டு மஹிந்தவை ஜனாதிபதியாக்கியதும் எமது தமிழ் மக்களே, தற்போது மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆட்சிக்கு அமர்த்தியதும், தற்போதைய பிரதமரையும் அமைச்சரவையையும் ஏற்படுத்தியதும் தமிழர்களே. ஆனால் இன்று அவர்களால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றோர்களோ என்ற சந்தேகம் எழுகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமைல) தெரிவித்தார்.…

இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: த.தே.கூட்டமைப்பு

இலங்கையில் மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழலிலேயே தமிழ்க் கூட்டமைப்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு…

பிரணாப் முகர்ஜி, சுஷ்மா ஆகியோரையும் இன்று சந்திக்கவுள்ளார் மைத்திரி!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட்ட குழுவினர் நேற்று இந்தியா சென்றடைந்தனர். இதற்கமைய டில்லியில் உள்ள இந்திரா காந்தி…

இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குவது உண்மையை மறுதலிக்க செய்துவிடும்

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் விசாரணை அறிக்கையை வெளியிடமாமல் தாமதப்படுத்தி இலங்கை அராங்கத்துக்கு மேலும் காலஅவகாசத்தை வழங்குவது நீதியை தாமதிக்கச் செய்துவிடுவது மட்டுமல்லாது, நிரந்தரமாகவே மறுதலிக்கவும் செய்துவிடும். தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் அல்ஹுசைனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளது.…

ஐ.நா விசாரணை அறிக்கை விவகாரம்! கைவிரித்தார் பான் கீ மூன்!

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையை வெளியிடுவதை தாமதப்படுத்துவது தனது கையில் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கைவிரித்து விட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஐ.நா விசாரணை அறிக்கையைப்…

மூடி மறைக்கப்படும் தமிழினப் படுகொலை! நீதிகேட்டு அணிதிரள்வோம்: சுவிஸ் ஈழத்தமிழரவை

அறுபது வருடங்களுக்கு மேலாக சிறீலங்கா அரசின் கொடிய இனப்படுகொலைக்கு முகம்கொடுத்து, அதற்கெதிராக பல ஒப்பற்ற உயிர்த் தியாகங்கiளை விலையாகக் கொடுத்து போராடிவரும் அடக்கப்பட்ட மக்களாகிய நாம் இன்று அரசியல் ரீதியாக என்றுமில்லாதவாறு ஓர் அனர்த்த நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். கடந்து சென்ற சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலில் தமிழீழ மக்கள் தமது…

உள்ளக விசாரணை இலங்கையில் சாத்தியம் இல்லை: ஐ.நா ஆணையாளருக்கு சிவில்…

சர்வதேச விசாரணையை முன்னெடுத்துக் செல்லுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி அனுப்பி வைத்துள்ளது. இலங்கை தொடர்பான விசாரணை என்ற தலைப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், ஐ.நா மனித உரிமை ஆணையாளார் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கும்…

அரசாங்கம் தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சுமந்திரன் எம்.பி

வடக்கில் காணிகளை விடுவிப்பதாக மாயையான செயற்பாடுகளை காட்டி மக்களை ஏமாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுமென அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…

ஐ.நா செயலாளரை இலங்கைக்கு வருமாறு மங்கள அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பான் கீ மூனுக்கும் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை தாம் இலங்கைக்கு வருமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் அழைப்பு…

தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்ப வேண்டாம்! மைத்திரி…

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அகதிகளை திரும்ப அழைப்பதற்கு  இலங்கை…

புலத்து மக்களின் போராட்டத்தை கூர்மைப்படுத்தியுள்ள இனவழிப்பு தீர்மானம்

வடமாகாண சபையில் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தமிழின விடுதலைப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைகின்றது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது. அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், இத் தீர்மானத்தை நிறைவேற்றுவதுக்கு கடினமாக உழைத்தவர்களுக்கு…

முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை!- ஹக்கீம்

முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிநாட்டு கோரிக்கைகளை முன்வைத்ததில்லை. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாஸையாகும். மக்களின் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக்க தமிழ் பேசும் அரசாங்க பிரதான அதிகாரியொருவரை நியமிக்குமாறு…

வடமாகாண சபையின் இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றம்: பாதிப்பை அளவிட முடியாது…

இலங்கையின் வடமாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தமிழர் மீதான இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை எந்தளவில் பாதிக்கும் என்பதை தற்போதைக்கு அளவிடமுடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகளை கோடிட்டு தெ ஹிந்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. வடமாகாணசபையின் தீர்மானம்…