பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மண்ணில் புதையுண்ட மலையக உறவுகள்! இருட்டடிக்கப்படும் தகவல்கள்: 500 இலிருந்து…
மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்பட்டவர்களின் காணாமற் போனவர்களின் எண்ணிக்கையை இருட்டடிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களை மக்களும், சமூக ஆர்வலர்களும் எழுப்புகின்றனர். கடந்த புதனன்று மண்சரிவு இடரில் 500, 400, 300 என குறிப்பிடப்பட்ட – உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்பட்டவர்களது காணாமற்போனவர்களது எண்ணிக்கையானது நேற்று…
யுத்த காலத்தில் வடக்கில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை விட தற்போது வட…
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். வட மாகாணத்துக்குச் செல்லும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும். வெளிநாட்டவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடானது, ஆபத்தான நிலைமைக்கு…
இந்தியாவுடன் ஒளித்து விளையாடும் இலங்கை
இலங்கையில் சீனாவின் இராணுவ பிரசன்னம் ஏதும் இல்லை என்று இந்தியாவிடம் மீண்டும் தலையில் அடித்து சத்தியம் செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு உருவாகியிருக்கிறது. சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பயணத்துக்கு முன்னதாக கொழும்புத் துறைமுகத்தில் சீனக் கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று தரித்த நின்ற…
கொபனே குர்திஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரான்சில்…
சிரியாவில் குர்திஸ்தான் இன மக்கள் வாழும் கொபனே (Kobane) என்ற நகரத்தை நோக்கி இஸ்லாமிய வாதிகள் படையெடுத்து ஒரு இனப்படுகொலையை நடாத்தி கொண்டிருக்கும் நேரத்தில், கொபனே (Kobane) வாழ் மக்கள் இஸ்லாமிய வாதிகளை எதிர்த்து, பாரிய தியாகங்களுடன் போராடி கொண்டிருக்கிறார்கள். கொபனே (Kobane) வாழ் மக்களுக்கு ஆதரவாக உலகம்…
புதைந்த மனிதர்களும் மௌனமாக இருக்கும் நாமும்.!
எங்கள் உறவுகள் மண்ணுக்குள் புதைந்த பொழுதில்தான் பலருக்கு தெரிகிறது இன்னமும் அவர்கள் அந்த லயன் என்ற கூண்டுகளுக்குள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று. அந்த கூண்டுகளே அவர்களின் கல்லறைகளாகவும் ஆகிவிட்ட பெருங்கொடுமை இப்போது. பெருமழையும் அதனை தொடர்ந்து மண்சரிவும் வெறுமனே இயற்கை அனர்த்தம் என்ற சொற்பதத்துடன் முடித்துவிட கூடியது அல்லவே. எந்த…
இந்தியாவின் எச்சரிக்கைக்கு மத்தியிலும் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு இலங்கை மீண்டும் அனுமதி
இந்தியாவின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியிலும் சீனாவின் மற்றுமொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஏற்கனவே…
வடக்கினில் காட்டாட்சியே தொடர்கின்றது! கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன்!!
2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு முதலில் சபாநாயகர் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மாண்புமிகு மகிந்த ராஜபக்ச அவர்கள் 2015 இல் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10 ஆவது வரவு செலவு திட்டத்தை…
காணாமல் போனர்வர்களின் உறவினர்களின் உரிமைகளை சிறீலங்கா அரசாங்கம் உறுதி செய்ய…
காணாமல் போனவர்களின் தற்போதை நிலைமை உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான, அவர்களின் உறவினர்களது உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்காக காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவுக்கு முழுமையான…
பதுளை அநாதை சிறார்களைப் பொறுப்பேற்க விருப்பம்! வடமாகாணசபை அறிவிப்பு!!
பதுளை மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து அநாதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை பொறுப்பேற்க வடமாகாணசபை ஆர்வம் கொண்டுள்ளது. நேற்று வடக்கு மாகாணசபையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உரையாற்றுகையில், மக்களின் உடனடிப் பாதிப்புக்களுக்கு மேலாக நீண்டகால விடயங்கள்…
தேசிய தலைவரின் பூர்வீகச் சொத்துக்ளை மடக்கச் சதி!
வல்வெட்டித்துறை நெற்கொழுப்புப் பகுதியிலுள்ள தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை சுவீகரிக்க சதி முயற்சிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேயிடத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இக்காணிக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் அதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜ் ஒத்துழைப்பு வழங்கி துரோகமிழைத்துள்ளதாக…
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை – கூட்டமைப்பு மீண்டும் நிபந்தனை
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நிபந்தனையுடன் பேச்சு நடத்த தாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். போர் முடிவடைந்த பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று அறிக்கைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்த தயார்…
இலங்கையில் பல விடயங்களில் முன்னேற்றமில்லை: ஐ.நா மனித உரிமைகள் குழு
இலங்கையில் போருக்கு பின்னர் பல முன்னேற்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் பல விடயங்களில் இலங்கை முன்னேற்றம் காணவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐந்தாவது மீளாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டபோதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இலங்கையால் கடந்த 7ஆம் 8…
மறைந்து போன மலையக மக்கள்!
இலங்கை வரலாற்றில் மலையாக மக்கள் ஒரு பாரிய சக்தி என்றே சொல்ல வேண்டும். தோட்ட வீடமைப்பில் உள்ள குறைபாடுகளே பதுளை மாவட்ட கொஸ்லந்தை நிலச்சரிவின் போது அதிகமான லயன்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த லயன்களில், மோசமான சூழ்நிலையில் தோட்டத்…
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அறிக்கை…
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கண்காணிப்பட்ட விடயங்கள் மற்றும் மீளாய்வு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் மனித உரிமைகள் குழு இன்று 112 ஆவது அமர்வில் போது, கண்காணிப்பின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள், முன்னரை…
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்புக்குழு யாழ்ப்பாணம் விஜயம்
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்பு நிபுணர்கள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் யாழ்ப்பாணம் சென்றனர். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கேட்டுக்கொண்டமைக்கு இணங்க, பயங்கரவாத தடுப்பின் போது மனித உரிமைகள் உட்பட்ட விடயங்களின் நடைமுறை தொடர்பில் ஆராயும் முகமாகவே…
வட மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டில் சாதித்த விடயங்களை CVK…
வட மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியின் பின்னர் மாகாண சபை அமர்வு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஒருவருட பூர்த்தியின் பின் இன்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் மாதாந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. இன்றைய கூட்டத்தில் கடந்த ஒருவருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்…
பௌத்த மயமாக்கலுக்கு துணைபோக மாட்டோம்: தவராசாவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி
தமிழர்களின் வரலாற்று பொக்கிஷங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப் போவதில்லை. அவ்வாறான பொக்கிஷங்களை பாதுகாப்பதற்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்கும் என வடக்கு முதல்வர் சீ. வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன், பௌத்த மயமாக்கலுக்கு துணைபோக மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வடமாகாண சபையின்…
இலங்கை- சீனாவுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை! ஜூனில் கையெழுத்து
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கையெழுத்தாகவுள்ளதாக பிரதி திறைசேரி செயலாளர் எஸ் ஆர் ஆட்டிக்கல தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த உடன்படிக்கை 2014ஆம் ஆண்டு இறுதியில் கையெழுத்தாகயிருந்தது. எனினும் சில தடைகளினால் அது பிற்போடப்பட்டு வந்தது. இலங்கையில் சீனா 2005ஆம்…
ஓசை படாமல் மீண்டும் வந்த சீன நீர் மூழ்கி கப்பல்:…
சமீபகாலமாக சீனா மற்றும் இலங்கை இடையேயான உறவுகள் வலுப்பெற்று வருகிறது. சீன அதிபர் இலங்கை சென்றவேளை அவர் பாதுகாப்புக் கருதி சீனா தனது அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை கொழும்புக்கு அனுப்பிவைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்பு வந்து…
சிங்களவர் – தமிழர்கள் பிரச்சினைக்கு வித்திட்ட தர்மபாலவுக்கு இந்திய அரசு…
இலங்கையில் சிங்களவர்-தமிழர்கள் பிரச்சினைக்கு வித்திட்ட அனகாரிக தர்மபாலவுக்கு இந்திய அரசு தபால் தலை வெளியிட்டதை கடுமையாக கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணி மாநில தலைமை செயற்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது,…
இந்தியாவில் தங்கியிருக்க விரும்பும் இலங்கை அகதிகள்: ஆய்வில் தகவல்
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருக்கவே விரும்புவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. டிஐஎஸ்எஸ் என்ற மும்பாயில் உள்ள சமூக தரவுகள் அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன்படி இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகளில் 67 சதவீதமானோர் இந்தியாவில் தொடர்ந்தும்…
ஜனநாயகப் போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும்: மாவை எம்.பி
ஜனநாயக ரீதியான போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…
ஐநா விசாரணை சாட்சியத்துக்கான படிவத்தை வைத்திருந்தவர் கைது
இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்கின்ற விசாரணைக்கான விண்ணப்ப படிவத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி, இரணைமாதா நகர் என்ற இடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும், 58 வயதான சின்னத்தம்பி கிருஸ்ணராசா என்ற இந்த நபர் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற காரணத்திற்காகவும், இரண்டு…
