பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சுவிஸ்நாட்டில் அகதிகள் தஞ்சம் கோரிய 2000 ஆயிரம் பேரின் நிலை?
சுவிட்ஸர்லாந்தில் தஞ்சக் கோரிக்கை தோல்வியடைந்தவர்களை திருப்பியனுப்பும் நடவடிக்கையில் நிலவிய தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சென்று தஞ்சம் கோரி தோல்வியடைந்தவர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்துவருவதாக மத்திய அரசின் குடியேறிகளுக்கான அலுவலகத்தின் பேச்சாளர் சிலீன் கோல்ப்ராத் பன்னாட்டு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும், திருப்பி அனுப்பப்படுவதற்கு இருந்த தற்காலிகத்…
உள்நாட்டு விவகாரங்களில் இலங்கைத் தூதரகம் தலையீடு: மு. குலசேகரன் குற்றச்சாட்டு
கோலாம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் மலேசியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 15ம் திகதி 3 தமிழீழ அகதிகள் மலேசிய உள்துறை அமைச்சால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அந்த மூவரும் பயங்கரவாதிகள் எனக் கூறப்பட்டு…
மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூவரினதும் பாதுகாப்பு குறித்து சர்வதேச…
மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ள இரண்டு அகதிகள் மற்றும் அடைக்கலம் கோரிய ஒருவரின் பாதுகாப்பை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்தக் கோரிக்கையை இன்று விடுத்துள்ளது. இவர்கள் மூவரும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகரக பாதுகாப்பில் இருந்தவர்களாவர். மலேசியா 1951 ஆம் ஆண்டின்…
‘‘இந்தியாவும் ஈழத்தமிழரும்” -அவலங்களின் அத்தியாயங்கள்!- நிராஜ் டேவிட்
ஈழப் போராட்டம் இலங்கையில் நடந்தாலும், இந்தியாவின் கால் நூற்றாண்டு கால அரசியலைப் பாதித்த போராட்டம். இந்திய அமைதிப்படையை அனுப்பி 1987-ம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு யுத்தம் தொடங்கியது முதல் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கோரக் கொலைக்கு இராணுவரீதியாக உதவிகள் செய்தது வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எடுத்த…
“தமிழர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய” மோடி கோரிக்கை
மோடி மஹிந்த சந்திப்பு இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடனான அதன் உறவுகளை இந்தியா மதிப்பதாக ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட இலங்கையில் சமத்துவம், நீதி மற்றும் சமாதானம் மிக்க ஒரு வாழ்க்கைக்கான தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை…
மகிந்தவை சந்தித்துப் பேசினார் மோடி
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் பணியகத்தில் பணிகளைப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதையடுத்து…
‘மக்களைக் கொல்ல ஆணையிட்டவர்களுக்கு தூதரக பதவி’
இலங்கையில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தும் மக்களைக் கொல்வதற்கு ஆணைவழங்கிய இராணுவ அதிகாரிகளை அரசாங்கம் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வழங்கி ஊக்குவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் கொழும்புக்கு அருகே கம்பஹா மாட்டத்தில் வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான…
‘பெண்கள் மீதான கொடூரங்களை நிறுத்துக’: மன்னாரில் பேரணி
வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, குறிப்பாக பெண்களின் கழுத்தை அறுத்தும் வாளால் வெட்டியும் கொலை செய்யும் கொடூரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றுகோரி மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடந்துள்ளது. நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நானாட்டான் கடைவீதி வரையில்…
40 கரும்புலிகளை பிடிக்க இண்டர்போல் பிடிவிராந்து: சிங்களப் பத்திரிகை
குண்டு தாக்குதலைகளை நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் 40 கரும்புலிப் படை உறுப்பினர்களை கைது செய்ய இண்டர்போல் பொலிஸார் சர்வதேச பிடிவிராந்து பிறப்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இவர்கள் பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இவர்களில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின்…
விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் தீவிர தேடுதல்
மலேசியாவில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பக்கிட் அமான் விசேட பயங்கரவாத தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்போது இதுவரைக்கும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு…
புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக் கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக்கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கோபி, தேவியன் உள்ளிட்டவர்களை கொலை செய்தமைக்கு பழி தீர்க்கப் போவதாக பிரான்ஸிலிருந்து அவர்களை வழிநடத்திய சந்தோசம் சூளுரைத்துள்ளார். எனவே வடக்கு…
13வது சரத்தை முன்னெடுக்க இலங்கையுடன் இந்தியா பேசும்: பாரதீய ஜனதாக்கட்சி
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆம் சரத்து விடயத்தை செயற்படுத்த, இந்தியா முனையும் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில் 13வது சரத்தை அமுல்படுத்த அவரின் அரசாங்கம் முனையும் என்று கட்சியின் பேச்சாளர் நிர்மலா சித்தாரணம் தெரிவித்துள்ளார்.…
விசாரணைக் குழுவின் தலைவராக கொபி அனான்! இலங்கையை சிக்க வைக்க…
இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையியின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்…
மலேசியாவில் அல்லலுறும் இலங்கை அகதிகள்- தலையிடுமா மனித உரிமை அமைப்புகள்
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், காணாமல் போகச்செய்தல், சட்டத்துக்குப் புறம்பான கைது, படுகொலை என்பவற்றால் பாதிப்படைந்து UNHCR யையே முழுதாக நம்பி 5000 ற்கும் மேற்பட்டோர் அகதியாக பதிவுசெய்து மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். எனினும் சமீப காலமாக UNHCR இன் செயல்பாடுகள் கவலையளிப்பதாகவும், சந்தேகத்துக்கிடமானதுமாக உள்ளது.…
தமிழினத்தின் தலைவிதியைத் தொடர்ந்தும் தவறாகவே எழுத முயலும் இந்திய ஆட்சியாளர்கள்!
ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பிற்குப் பின்புலமாக அனைத்து வளங்களையும் அள்ளி வழங்கிய காங்கிரஸ் கட்சியின் அதே நியாயப்பட்டை தற்போது ஆட்சியில் ஏறவுள்ள பாரதிய ஜனதா கட்சியும் புதுப்பித்துள்ளது. சிறிலங்கா அரசுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளாவிட்டால், இலங்கையிலுள்ள தமிழர்களை யார் பாதுகாப்பது?என்று பாரதிய ஜனதா கட்சியின் கல்யாணராமன் தெரிவித்துள்ளார். நரேந்திரமோடி அவர்களது…
நவநீதம்பிள்ளை, ஜெயலலிதா ஆகியோரும் புலிகளின் கைப்பொம்மைகளே என்கிறார் உதய கம்மன்பில
புலிகளை கொன்றமைக்கு பழி தீர்க்கவே நவநீதம்பிள்ளை அவசரப்படுகின்றார். நவநீதம்பிள்ளை முதற்கொண்டு ஜெயலலிதா வரையிலும் இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைவரும் புலிகளினால் வழிநடத்தப்பட்டு வருபவர்களின் கைப்பொம்மைகள். என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையினை நடத்த ஐ.நா. ஆணையாளர்…
முதலமைச்சர் போல் நடத்தாத அரசாங்கத்துக்கு விக்னேஸ்வரனை அழைக்க அருகதை இல்லை!-…
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் போல் அரசாங்கம் நடத்தவில்லை. இந்தநிலையில் இந்தியாவிற்கு வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க ஜனாதிபதிக்கோ, அரசுக்கோ எந்தவித உரிமையோ, அருகதையோ இல்லை. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பா.உ. தெரிவித்தார். இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி திங்களன்று பதவியேற்க…
பலிக்குமா மோடியின் இராஜதந்திரம்?
வரும் 26ஆம் தேதி தில்லியில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழா, மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது. சாதாரணமாக பிரதமர் மற்றும் அரசியல் சட்ட அமைப்புகளின் உயர் தலைவர்களது பதவி ஏற்பு நிகழ்ச்சி, குடியரசுத் தலைவர் மாளிகையில் அசோகா அரங்கத்தில்தான் நடைபெறுவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக, குடியரசுத்…
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தெரிவித்து ஐரோப்பிய…
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய தொழிற்கட்சி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்கள், தொழிற்கட்சியின் உறுப்பினர்களான க்ளவுட் மொராயஸ் மற்றம் கராக் தோமஸ் ஆகியோரை இரகசியமாக…
உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதனை கொச்சைப்படுத்துவதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.…
உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதனையும் எங்கள் மனக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதனையும் சிறீலங் கா அரசாங்கம் அரசியல்ரீதியாக பார்ப்பதனையும் கொச்சைப்படுத்துவதனையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அவை எமக்கு மிகுந்த மனவேதனையினை கொடுத்திருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2009-மே-18ம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுடைய நினைவு…
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மோடியின் நிலைப்பாடு எவ்வாறிருக்கும்?- ஆய்வாளர் சுதர்மா
இந்தியாவில் வீசிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அலை இலங்கைத் தமிழர் விவகாரத்தில் எவ்வாறு வீசலாம் என கனடாவைச் சேர்ந்த ஆய்வாளர் சுதர்மா கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில், நரேந்திர மோடி அரசாங்கம் இராஜதந்திர அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினை நெருக்குதல்களுக்குள்ளாக்கலாம். 13வது சட்டத்திருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு காணி,…
அமெரிக்காவினால் இந்தியா வல்லரசாக மாற்றப்படும்! இலங்கையில் மஹிந்தவுக்கு பதிலாக ரணிலையே…
இலங்கை அரசாங்கம் நினைப்பது போல இந்திய புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு விசுவாசமானவராக இருக்கமாட்டார் என்று ஐக்கிய தேசியக்கட்சி தரப்பு தெரிவித்துள்ளது. 2003 ம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,…
மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார். அந்தப் பதவியேற்பு விழாவில்…
