‘இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகள்’ – தந்தை

  இந்தப் புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்து பிபிசியால் முழுவதுமாக சரிபார்க்க முடியவில்லை.   விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா இராணுவ காப்பரண் ஒன்றிற்குள் ஒன்றிற்குள் இருப்பது போன்று ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படத்தில் அவருடன் இருப்பவர் மல்லாவி யோகபுரம் கிழக்கைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவருடைய…

மன்னாரில் சிங்களக் குடியேற்றம்: சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

வட இலங்கையில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களைப் புதிதாகக் குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலர்…

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்: மோடியிடம்…

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம் என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை…

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை!

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் தமிழ்நாட்டு அரசுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்கவுள்ள…

வாக்கு மூலம்!- முள்ளிவாய்க்காலை முழுமையாக அனுபவித்த மனித நேய போராளியின்…

2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.  எமது உரிமைக்காக எமது வாழ்வியலுக்காக சுயநிர்ணய உரிமைப் போரை ஈழத்தில் தமிழர்கள் நடத்தினார்கள். அதனால்தான் எமது உரிமைப் போராட்டத்தில் நாம் நிம்மதியாக வாழவேண்டும்…

தமிழகத்தின் அழுத்தம் இன்றி இலங்கை தொடர்பில் இந்தியா தீர்மானம் மேற்கொள்ளும்!-…

நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளதால், அது இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆதரவு இன்றி இந்தியாவில் ஆட்சி அமைக்க கூடியதாக இருப்பதால், தமிழகத்தின் அழுத்தங்கள் இன்றி இலங்கை தொடர்பில்…

இலங்கை விடயத்தில் ஐ.நா. மௌனம்!- ஏன் என்கிறது இன்னர் சிட்டி…

ஈழத் தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து மௌனமாக செயற்படுகிறது என்று இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கு தடைவிதித்திருந்தது. இது தொடர்பில் கடந்த வாரம் முழுவதும் பலதடவைகள் இன்னர் சிட்டி பிரஸ்…

இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா! புகைப்பட ஆதாரம் வெளியானது

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் காரணமாக தமிழீழ மண்ணில் வாழ்ந்த மக்களால் மிகவும்…

இராணுவம் அடக்குமுறையை கையாண்டால் வடக்கு ஆலயங்களில் மணி ஒலிப்பு போராட்டம்!-…

வடக்கில் எந்த பகுதியிலும் இன்றும், நாளையும் ஆலயங்களில் மணி அடித்து ஒலி எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் இந்த தடையை விதித்திருப்பதாக  வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார். இவ்வாறு மணி ஒலியை ஏற்படுத்துமிடத்து, இராணுவத்தினர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக…

கிரைமியாவில் புட்டின் போன்று, இலங்கையில் மோடியும், லேடியும் செயற்படலாம்!

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் புதிய அரசாங்கம் செயற்படுவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று அறிவுறுத்தியுள்ளது. குறித்த பத்திரிகை இன்றைய தமது ஆசிரிய தலையங்கத்தில் இந்த விடத்தை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இந்திய மத்திய அரசாங்கம் அமைக்கப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியின்…

உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர உரிமையில்லா கேவலமான ஆட்சியில் வாழ்கிறோம்!- வடமாகாண…

இன்று நாம் எங்களின் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கு தடை விதிக்கும் கேவலமான ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமென மே 18 நினைவேந்தல் நாள் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்த காலணித்துவ ஆட்சிக்காலத்திற்கு முன்பே ஈழத்தமிழர்கள் தனி இராச்சியமாகவே வாழ்ந்து…

நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு மகிந்த நடத்திய மூன்றரை மணி நேரப்…

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான நரேந்திர மோடிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் காலை 11 மணிக்கே பாஜக ஆட்சியமைப்பதற்கான தெளிவான சமிக்ஞைகளை காண்பித்திருந்தன. உடனடியாகவே சிறிலங்கா அதிபர் மகிந்த…

ஆட்சி மாறும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தடையை 5…

இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாள் முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு…

அன்று வெள்ளைப்புலி! இன்று கறுப்புப்புலி! மோடி வந்தால் இலங்கைக்கு ஆபத்து!…

அன்று வெள்ளைப்புலி சொல்ஹெய்மினால் முடியாது போன தமிழீழத்தை, இன்று கறுப்புப்புலி ரமபோஸாவைப் பயன்படுத்தி உருவாக்க சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்தியாவின் புதிய பிரதமராக மோடி பதவியேற்றால் இலங்கைக்கு ஆபத்து எனவும் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின்…

நவனீதம்பிள்ளையின் பிரதான சாட்சியாளர் ஓர் இலங்கையர்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசேட ஆணைக்குழுவின் பிரதான சாட்சியாளர் ஓர் இலங்கையர் என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இலங்கையர் ஐந்து பெயர்களில் தோன்றியவர் என ஐரோப்பாவில் கடமையாற்றி வரும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த…

உதயகலாவை நாடு கடத்துமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரிக்கை

உதயகலா என்ற பெண்ணை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரியுள்ளது. அண்மையில் தமது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் உதயகலா இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தார். கடந்த 5ம் திகதி தனுஸ்கோடி பொலிஸார் உதயகலா உள்ளிட்டவர்களை கைது செய்திருந்தனர். யாழ்ப்பாணத்தை வதிவிடமாகக் கொண்ட உதயகலா, நபர்களை பிரித்தானியாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்து…

பல இலட்சங்களைச் சுருட்டிய உதயகலாவின் மோசடி

மோசடி ராணி உதயகலா குறித்த பல்வேறு தகவல்களும் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இலண்டன் அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட உதயகலா பாதிக்கப்பட்ட சிலருடன் ஆரம்பத்தில் கைத்தொலைபேசியில் உரையாடிய சில பதிவுகள் பெறப்பட்டுள்ளன. இலண்டன் தூதரகத்துக்கு நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவுடன் உதயகலா, பரந்தனைச் சேர்ந்த சிவா என்பவருடன்…

நாடாளுமன்றத் தேர்வுக் குழு: டக்ளஸ் அழைப்பு, ததேகூ நிராகரிப்பு

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் விடுத்திருக்கும் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர். பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் இனப்பிரச்சினையை ஒரு காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவாலேயே முடியும்…

முள்ளிவாய்க்கால் வெற்றி அரசாங்கத்துக்கு அல்ல, தமிழர்களுக்கே: வடமாகாண கல்வி அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வு கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் புஸ்பராசா தலைமையில் தருமபுரத்தில் அமைந்துள்ள கல்வி அமைச்சரின் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள்…

தொடரும் முள்ளிவாய்க்கால் பீதி! மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடமும் விசாரணை!!

கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவரென இலங்கை அரசு நிறுவ முற்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை புலிகளுடன் தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மே-18 ஆம் திகதி…

முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்கல்ல! படையினருக்கு இன்று அஞ்சலி!!

முள்ளிவாய்க்காலில உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகின்ற நிலையினில் குறித்த யுத்த வெற்றியினை நினைவு கூரும் வகையினில் அந்த யுத்தத்தில் பலியான இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னியினில் நடத்தப்பட்டுள்ளது. இவ்வைபவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினில் இலங்கை இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ…

இராணுவத்தினர் தமது அதிகாரத்தை கொண்டு தமிழர்களின் காணிகளை பறிக்கின்றனர்: சிவாஜிலிங்கம்

இராணுவத்தினர் தமது அதிகாரத்தை காட்டி தமிழர்களின் காணிகளை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக சந்தேசிய என்ற பிபிசியின் சிங்கள சேவை தெரிவித்துள்ளது. கீரிமலை பிரதேசத்தில் இராணுவத்தினர் 300 ஏக்கர் காணியை சுவீகரித்துள்ளமையை சுட்டிக்காட்டியே சிவாஜிலிங்கம்…

வட மாகாண ஆளுநராக படை அதிகாரிகள் வேண்டாம்: எம்.ஏ. சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு படை அதிகாரிகளை நியமிப்பதை தமிழ்த் தேசியக் கூட்மைப்பு எதிர்க்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண ஆளுநரின் பதவிக்காலம் அடுத்த ஜூன் மாதம் முடிவடைகிறது. அந்த பதவிக்கு மீண்டும் படை அதிகாரிகளை நியமிப்பதை கூட்டமைப்பு…