யாழில் 800 இளைஞர் யுவதிகள் படையில் இணைக்க நடவடிக்கை !

பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு தொண்டர்கள் என்ற போர்வையில் 800 படை வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட படையின் ஊடக இணைப்பாளர் மல்லவராட்சி இன்று வெளியிட்டார்.படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில்…

சிங்கள இராணுவத்திற்கு பெண்களை கூட்டிக்கொடுத்த நபர்கள் இந்தியாவில் !

இந்தப் படத்தை பார்த்த உடனே உங்களுக்கு தெரியும். ஏதோ ஒரு செய்தியில் இவர்கள் தொடர்பாக படித்திருப்பீர்கள் என்று. ஆம் இவர்கள் தான் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு வேலைசெய்த மானம் கெட்ட தமிழர்கள் ! தற்போது இவர்கள் இந்தியா சென்றுள்ளார்கள் ! அங்கே பல பேட்டிகளை கொடுத்து ஏதோ…

சர்வதேச விசாரணை இல்லை ஆனால் ஏனையவை நிறைவேற்றப்படும்

ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள சர்வதேச விசாரணை என்ற விடயத்தை தவிர ஏனைய அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்த இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை வந்த ஜப்பானிய நாடாளுமன்ற வெளிவிவகார துணை அமைச்சர் செய்ஜி கிஹரா அவர்களிடம் இலங்கை ஜனாதிபதி கூறியதாக…

மே-18 நினைவு நிகழ்வுகளுக்கு சிறிலங்கா அரசு தடை – மீறினால்…

இறந்துபோன விடுதலைப் புலிகளை நினைவு கூரும் பொது நிகழ்வுகளை எவரேனும் நடத்தினால், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரவைப் பேச்சாளர், கெஹலிய ரம்புக்வெல, “விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலுமே நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படாது.…

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நூற்றுக்கணக்கான குடும்பங்களில், சில குடும்பங்கள் மாத்திரம் கடந்த 2011ம் ஆண்டளவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். எனினும் அவர்கள்…

தமிழர்களின் எதிர்ப்பு எதிரொலி. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தமிழகத்தில் இருந்து…

சென்னையில் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகளை தமிழகத்தில் இருந்து இடமாற்றியது பிசிசிஐ கிரிக்கெட் வாரியம். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 18ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 22ம் தேதி சென்னை அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதுதவிர மே 27 மற்றும் 28ல்…

இலங்கை மீதான ஐ.நா விசாரணை தாமதம்!- தீர்மானம் கொண்டு வந்த…

இலங்கை மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 25-வது கூட்டத் தொடரில் தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகள் சிலவற்றுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமை…

துக்க தினமான மே 18 அன்று வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி…

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்களிடம் வடமாகாண போக்குவரத்து, வாணிப மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன்; இன்று  வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் அனுஷ;டிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,…

போராளிகளை நினைவு கூற முயற்சித்தால் சட்ட நடவடிக்கை: அரசாங்கம் எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாக கருதப்படுகின்ற நிலையில், உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவு கூறுவதற்கு முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல…

ஈச்சிலம்பற்றில் சிறிலங்காப் படையினர் சுற்றிவளைப்புத் தேடுதல்

திருகோணமலை இலங்கைத் துறைமுகத்துவாரம் பகுதியில், நேற்று துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறி, சிறிலங்கா படையினர் அங்கு இன்று அதிகாலை தொடக்கம் சுற்றிவளைப்புத் தேடுதல்களை நடத்தி வருகின்றனர். இலங்கைத் துறைமுகத்துவார கடற்படைத் தளத்துக்கு அருகே நேற்று சிறிலங்கா கடற்படையினரால் ரி-56 ரகத் துப்பாக்கி ஒன்றும் ரவைகளும் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்தில்…

உண்மை கண்டறியும் புதிய குழுவை சிறிலங்கா அனுப்புகிறார் நவநீதம்பிள்ளை

சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் சிறப்பு ஆணைபெற்ற பிரதிநிதிகளின் புதிய குழுவொன்றை விரைவில் அனுப்ப ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளார்.  இதுதொடர்பான தகவல், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தில், இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஐநா மனிதஉரிமைகள்…

மக்களுக்கு செலுத்துவதாகக் கூறி பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவீர்கள்! பல்கலை. மாணவர்களிடம்…

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைக் குழுவாகச் சேர்ந்து எவரும் அனுஷ்டிக்க முடியாது. அப்படி அனுஷ்டிப்பதாயின் அதனைத் தனித் தனியே வீடுகளில் முன்னெடுங்கள் என பல்கலை மாணவர்களிடம் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.  பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள், சிரேஷ்ட மாணவ ஆலோசர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியேரை அழைத்து…

கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் இராணுவத்தினரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், அகதிகளாக தப்பி வந்த 10 ஈழத் தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சம் தேடி வந்தவர்களை காவல் துறை இரக்கமின்றி கைது செய்து சிறை வைத்திருப்பது ஒருபுறம்…

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற பாலியல் கொடுமை தொடர்பில் கனடா விவாதிக்கவுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான கனேடிய தூதரகத்தில் இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பான அமர்வு ஒன்று இன்று இரவு நடைபெறுகிறது. இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் போது இலங்கை இராணுவத்தினர் இறுதியுத்தத்தில் மேற்கொண்ட தமிழ் பெண்களுக்கு…

தந்தை செல்வாவின் கோரிக்கையினை ஏற்க மறுத்தமையே ஆயுதப் போராட்டத்திற்கு காரணம்

இந்தநாட்டிலே மாறிமாறி வந்த எந்த அரசாங்கங்களும், தந்தை செல்வாவின் கோரிக்கையை ஏற்றிருந்தால் ஆயுதபோராட்டம் என்ற ஒன்று உருவாகி இளைஞர்கள் வகை தொகையின்றி மடிந்திருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். நேற்று முன்தினம் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில்…

புத்தரை நிந்தித்ததாக வழக்கில் முஸ்லீம் தலைவர் பிணையில் விடுதலை

இலங்கையில் புத்தரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலர் அப்துல் ரபிக்டீன் என்பவரை, கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட…

ஒழுக்கத்திற்காக உயிரைக் கொடுத்து இரத்தம் சிந்தியது தமிழினம்: மாவை

அடிமைகளற்ற வாழ்வே உயர் ஒழுக்கமாக கடைப்பிடித்தவர்கள் எமது தமிழ் மக்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வட்டக்கச்சி மாவடி அம்மன் பிரதேசத்தில் புதிய நூலகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம…

சர்வதேசத்தின் மத்தியில் இருக்கிறோம் என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும்!

இலங்கை சர்வதேச நாடுகளின் மத்தியிலேயே இருக்கிறது என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் செய்யத் தவறிய விடயங்களை சுட்டிக்காட்டியே சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த அழுத்தங்களை சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்படுவதன் ஊடாக தவிர்த்துக் கொள்ள முடியும்.…

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்

இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, இங்கு பிரிட்டனில் இருக்கும் முஸ்லிம்களால் ஒரு கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு என்ற இயக்கத்தின் தலைமையில், பல சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த…

இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் விசாரணை! இம்மாத பிற்பகுதியில்…

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து இம்மாத பிற்பகுதியில் அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் பேச்சாளர் கூறியுள்ளார். இவ்வாறான விசாரணைகளை…

புலம்பெயர்ந்தோர் தொடர்பான இலங்கையின் தடையை இந்தியா ஏற்றுள்ளது – அமெரிக்கா…

16 புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விதித்திருந்த தடையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த தடை செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது, அவர் விமான…

சம்பூரின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிக்க முயற்சி?

சம்பூர் என்ற கிராமத்தின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  ஆங்கில ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. திருகோணமலை - மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரில் இருந்து பொது மக்கள் இடம்பெயர்ந்து 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும் அந்த மக்களை சொந்த இடங்களில்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 54 இராணுவ முகாம்கள்!- த.தே.கூ. திடுக்கிடும்…

இலங்கை இராணுவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 புதிய இராணுவ முகாம்களை உருவாக்கி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்த திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்த இராணுவ முகாம்களுக்காக மொத்தமாக 650 ஏக்கர் காணிப்…