இலங்கையில் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை தீர்மானிக்கும் சக்தியாக புலம்பெயர் மக்கள்!

வடகிழக்கு மக்களுக்கு நம்பிக்கை ஒளியாக இருந்து அவர்களினுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவர்களினது விடுதலைக்காக அயராது பாடுபடுபவர்கள் புலம்பெயர் மக்கள்தான் இவர்களை ஒதுக்கிவிட்டு த.தே.கூட்டமைப்பு அரசியல் செய்ய முடியாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பிரித்தானியாவில் உள்ள நம்பிக்கை ஒளி…

தமிழர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் இலங்கை அரசு உடனடியாகப் பதில் சொல்ல…

தமிழர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் இலங்கை அரசு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டிய கடைசி வாய்ப்பு இதுவென இந்திய நாளிதழான தி இந்து தெரிவித்துள்ளது.  அதன் முழுமையான விபரம் வருமாறு:  இலங்கைக்கு எதிராக முக்கியமான காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா. போருக்குப் பின்னரும்கூடத் தமிழர்கள் விவகாரத்தில் இலங்கை அரசு காட்டிவரும்…

இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்படும்: பிரித்தானியா

இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்படும் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் மீண்டும் தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவையின் தலைமையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். கடுமையான ஓர் தீர்மானத்தை நிறைவேற்றும் நோக்கில் உறுப்பு நாடுகளின் ஆதரவு திரட்டப்பட்டு வருகின்றது. சர்வதேச விசாரணைகளுக்கு ஐக்கிய…

சுதந்திரமாக வாழும் உரிமையைவிட வேறு மனித உரிமையில்லை: மகிந்த ராஜபக்ஷ

போர் நடைபெற்ற காலத்தில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவது சில அரசியல்வாதிகளுக்கும், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு பிரச்சினையாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கல்கிஸ்சையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும்…

எல்லா அமெரிக்க தீர்மானங்களிலும் உள்ள தில்லு முல்லு என்ன!

எல்லா அமெரிக்கத் தீர்மானங்களும்.... 1. எம்மை ஒரு தனித்துவமான தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. 2. தேசிய இன முரண்பாடு பற்றி பேசவில்லை. 3. சர்வதேச சுயாதீன விசாரணையை, ஐ.நா. கொண்டுவராமல் தடுக்க முயற்சிக்கின்றது. 4. சீனாவும், ரஷ்யாவும், இந்தியாவும், இலங்கைக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்படுவதால், அமெரிக்காவானது ஈழத்தமிழர்களுக்கு…

தீர்மானம் தோற்றுவிடும் என்ற அச்சத்தில் அமெரிக்கா – தமிழ் தேசிய…

தமது தீர்மானம் தோல்வி அடைந்துவிட கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பொது செயலாளருமான மாவை சேனாதிராஜா இதனை உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்தப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்க மனித உரிமைகள் மாநாட்டின் பெரும்பாலான…

இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த நவனீதம்பிள்ளைக்கு அதிகாரமில்லை: ரஷ்யா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த அதிகாரம் கிடையாது என ரஷ்யாவும், சீனாவும் தெரிவித்துள்ளன. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை குழுவொன்றை நியமிக்க நவனீதம்பிள்ளைக்கு அதிகாரம் கிடையாது. இவ்வாறான விசாரணை நடாத்த அதிகாரம் இருந்தால் அது குறித்து…

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் வலுப்பெறும் அறிகுறி

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையம் எத்தகைய விசாரணைப் பொறிமுறையையை உருவாக்கலாம் என்பது தொடர்பாக நேற்று ஜெனிவாவில் ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக நடைபெற்ற, முறைசாரா கலந்துரையாடலின் போதே இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்த…

இலங்கை பொதுநலவாயத்தின் விழுமியங்களை காக்க தவறியுள்ளது!

பொதுநலவாயத்தின் தலைமை ஏற்றுள்ள இலங்கை அரசாங்கம் அதன் விழுமியங்களை பாதுகாக்க தவறியுள்ளதாக கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுநலவாய தினத்தை முன்னயிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கனேடிய பிரதமர், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என கனடா தொடர்ந்தும் வலியுறுத்தி…

ஐ.நா.சபை முன்றலில் வரலாறு காணாத தமிழர்களின் பேரெழுச்சி

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இனப்படுகொலைக்கு நீதி கோரி வரலாறு காணாத ஆர்ப்பட்டப் பேரணி நேற்று இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 25வது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையகத்திற்கு, எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதிமன்றில்…

இலங்கை மீதான தீர்மானம் மேலும் பலமடைய வாய்ப்புக்கள்

  'தீர்மானத்திற்கு ஆதரவான நாடுகளின் கருத்தே அவையில் மேலோங்கி இருந்தது'   இலங்கை தொடர்பான விசாரணைக்கான பொறுப்பை ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையிடம் ஒப்படைக்கும்போது, எந்தவிதமான பொறிமுறையை உருவாக்க முடியும் என்பது தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற…

அமெரிக்கத் தீர்மானம் கோருவது ‘சர்வதேச விசாரணையே’: சம்பந்தன்

  'நாங்களும் தீர்மானத்தை எதிர்த்தால் சர்வதேச சமூகம் தமிழர் பிரச்சனையை கைகழுவி விட்டுவிடும்': சம்பந்தன்   ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானம் சர்வதேச விசாரணையைக் கோருவதையே நோக்காகக் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார்.…

சானல் 4 தொலைக்காட்சியின் புதிய வீடியோ

''இலங்கைப் போரில் அருவருக்கத்தக்க மீறல்களுக்கான புதிய வீடியோ ஆதாரம்'' என்னும் தலைபில் சானல் 4 தொலைக்காட்சி நேற்று ஞாயிறன்று வீடியோ செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. கலம் மக்ரே அவர்களால் தயாரிக்கப்பட்ட, அந்த குறிப்புக்கான வீடியோ ஆதாரத்தை பிரித்தானிய தமிழர் பேரவை வழங்கியிருந்ததாக அந்தத் தொலைகாட்சி கூறியிருந்தது. விடுதலைப்புலிகளின்…

போர் தொடர்பில் விசாரணை நடத்த இலங்கை மக்களுக்கே உரிமையுண்டு! –…

தமக்கு தேவையேற்பட்டால் இலங்கையில் போர் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் முடியாது. இலங்கை மக்களுக்கு இவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளமுடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கம்பஹாவில்  இன்று  ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நாட்டில் நல்லது கெட்டது என்பன…

இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு டேவிட் கமரூன் தனிப்பட்ட…

இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்பதில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனிப்பட்ட ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் இந்த தகவலை டௌனிங் ஸ்டீட்டில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமர் அலுவலக பேச்சாளர் இதனை குறிப்பிட்டு;ள்ளார். இலங்கையின் இறுதிப்போரின் பின்னர் இலங்கைப்படையினர் கொல்லப்பட்ட போராளிகள் மீது பாலியல் குற்றங்கள்…

அமெரிக்கா பின்வாங்கியது ஏன்?

இலங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் போரின் இறுதியில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சமூகத்தினால் நீதி வழங்கப்படுமா? என்ற கேள்வி இப்போது பலரிடம் மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் போரில் குற்றங்களை…

எதிர்வரும் நாட்களில் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தர்மசங்கடமான நிலையை…

இலங்கை தொடர்பில் அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைத்துள்ள பிரேரணையானது இலங்கையின் அரசியல் யாப்பை மீறி இருப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகள் ஏற்பாடு செய்திருந்த இலங்கை தொடர்பான விசேட கூட்டம் ஒன்றில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா இந்த பிரேரணையின் மூலம் இலங்கையின்…

அமெரிக்காவின் இராஜதந்திர முன்னெடுப்பில் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது!- சர்வதேச விசாரணை…

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணை கடந்த வாரம் ஊடகங்களுக்கு கசிந்திருந்தது. ஆனால் இந்த பிரேரணையானது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான ஏற்பாடுகளை கொண்டிருப்பதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். இதில் இலங்கைக்கு எதிரான விசாரணை ஒன்றுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருக்கவில்லை என்று புலம்பெயர்ந்த தமிழர் தரப்பிலும், இலங்கை அரசாங்கத்தின் தரப்பிலும்…

அமெரிக்க பிரேரணை தொடர்பில் இந்தியா விசேட அறிக்கை!– ஆய்வு செய்ய…

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் இந்திய அரசாங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளது. குறித்த பிரேரணை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமெரிக்காவின் பிரேரணையையும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் மனித உரிமை சூழ்நிலைகள்,…

குற்றச்சாட்டுகள் குறித்தும், பிரேரணை குறித்தும் கவலை இல்லை!– ராஜபக்ச

அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் அது குறித்த வாக்கெடுப்பு தொடர்பில் தாம் கவலை கொள்ளவில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரடிய செவ்வி ஒன்றின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும்,  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஒன்றும்…

நவநீதம்பிள்ளை ஒரு பொய்யர்: இலங்கை ஆவேசம்

இலங்கை தொடர்பில் ஆக்ரோஷத்துடன் இருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு பொய்யர் என இலங்கை அரசாங்கம் அவரை கடிந்து கொண்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் இன்று பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இவ்வாறு சாடியுள்ளார். சில நாடுகளிடம் இருந்து…

இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா…

இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா பயணம் செய்ய உள்ளனர். பிரிட்டனின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்ப் பிரதிநிதிகளும் ஜெனீவா நோக்கிப் பயணம் செய்ய உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சர்வதேச…

இலங்கை குறித்து விசாரணை நடாத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படலாம்?

இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவுள்ளன. இந்த தீர்மானம் தொடர்பில் விசாரணை நடாத்த…