பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
லெபனான் குண்டு வெடிப்பில் முன்னாள் நிதியமைச்சர் பலி
லெபனான் தலைநகர் பேய்ரூட்டில் நடந்துள்ள பெரிய குண்டு வெடிப்பொன்றில் முன்னாள் நிதியமைச்சர் மொஹமட் சாட்டா உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சுன்னி முஸ்லிம் சமூகத்தவரான முன்னாள் நிதியமைச்சர் முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரீரியின் ஆலோசகராகவும் செயற்பட்டவர். கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக…
கனடா, அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்: 24 பேர் பலி
கனடா மற்றும் அமெரிக்காவில் தொடர்ந்து வீசி வரும் பனிப்புயலின் தாக்கத்திற்கு இதுவரையிலும் 24 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கனடாவின் கிழக்குப் பகுதியிலும் கடந்த வார இறுதியில் வீசிய பனிப்புயலால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளும் கடுமையாக…
தீவிரமடையும் போராட்டம்: தாய்லாந்தில் அமைதியின்மை தொடர்கிறது
தாய்லாந்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தால், மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். தாய்லாந்தின் முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ராவும், அவரது கூட்டாளிகளும் அந்நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதி மக்களின் ஆதரவுடன் கடந்த 2001ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றனர். அரச…
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தீவிரவாத இயக்கமாக அறிவிப்பு
எகிப்தில் செயல்பட்டு வந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை, தீவிரவாத இயக்கம் என்று அந்நாட்டு ராணுவ ஒத்துழைப்புடன் நடைபெற்று வரும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது. "இந்த அமைப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் பொருளாதார ரீதியாக இந்த அமைப்புக்கு ஆதரவு அளிப்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் எகிப்து அமைச்சரவைக்…
இராக்கில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் : பலர் பலி
இராக்கின் தலைநகர் பாக்தாதில் கிறிஸ்த்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது இருபது பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதலாவது குண்டுத் தாக்குதல் கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொண்டு பக்தர்கள் ஒரு தேவாலயத்தைவிட்டு வெளியே வரும்போது நடைபெற்றது. அதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இரண்டாவது குண்டு, பெரும்பாலும்…
தெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்கள் சுட்டுக்கொலை
தெற்கு சூடானில் மோசமான கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. ஒருவாரத்துக்கு முன்னர் அங்கு வெடித்த இன வன்முறைகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்றை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் தன்னிடம் பேசியுள்ளதாக ஜூபாவில் உள்ள செய்தியாளர் ஒருவர்…
ஏகே 47: உலகை ஆட்டுவித்த ஆயுதம்
சோவியத் ஒன்றியப் படையணியின் முக்கிய துப்பாக்கியாக இருந்த ஏகே 47, பின்னாளில் உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றான ஏகே 47 துப்பாக்கியை இராணுவ வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தத் துப்பாக்கியை…
தெற்கு சூடான் மக்களை கைவிட மாட்டோம்: ஐநா அதிகாரிகள்
தெற்கு சூடான் மக்களை கைவிட்டு விடப்போவதில்லை என அங்குள்ள ஐநா அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கடந்த ஒருவார காலமாக நடந்துவரும் இன வன்முறைகளின் தொடர்ச்சியாக, அங்கு சிவில் யுத்தமொன்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. ஐநா வளாகத்துக்குள் தஞ்சமடைந்துள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இப்போதைக்கு பாதுகாப்பாக இருப்பதாக ஜூபா நகரில்…
கலாஷ்னிக்கோவ் துப்பாக்கியை உருவாக்கியவர் காலமானார்.
கலாஷ்னிக்கோவ் துப்பாக்கியை கண்டுபிடித்தவரான மிகெயில் கலாஷ்னிக்கோவ் மரணமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் கூறுகின்றன. அந்தத் தாக்குதல் துப்பாகியை உருவாக்கிய அவருக்கு வயது 94. மிகவும் வறிய ஒரு குடும்பத்தில், 17 பேர்களில் ஒருவராக ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் 1919 ஆண்டு கலாஷ்னிக்கோவ் பிறந்தார். எனினும் அவரது துப்பாக்கி முன்னாள்…
செயற்கை மனித இதயம்: பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனை
லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் செயற்கையான மனித இதயத்தை பிரான்ஸ் மருத்துவர்கள் உருவாக்கினார்கள். இந்த செயற்கை இதயத்தை முதல் முறையாக தலைநகர் பாரிசிஸிலுள்ள ஒரு மருத்துவமனையில் 75 வயது முதியவருக்கு பொருத்தி வெற்றிகரமாக இயங்க செய்தனர். உயிருள்ள உறுப்பை போன்று இயங்கும் இந்த செயற்கை இருதயம் 5…
திமிங்கில வேட்டையைக் கண்காணிக்கும் அவுஸ்திரேலியா
திமிங்கிலங்களை வேட்டையாடும் ஜப்பானிய கப்பல்களை கண்காணிக்க தென் சமுத்திர பகுதிக்கு மேலாக விமானத்தை பறக்க விடப் போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த விமானம் திமிங்கிலங்களை வேட்டையாடுவோருக்கும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும் இடையிலான பிணக்குகளைத் தீர்க்க உதவுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் நம்புகிறது. திமிங்கிலங்களை வேட்டையாடுதல் என்பது அவுஸ்திரேலியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையில்…
துணைத் தூதர் கைது விவகாரம்: இந்தியா-அமெரிக்கா இடையே தீவிர பேச்சுவார்த்தை
துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்க தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இத்தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். "தேவயானி கோப்ரகடேவுக்கு தூதர் என்ற முறையில் சட்டப் பாதுகாப்பு கிடையாது' என்று அமெரிக்கா தொடர்ந்து…
பாகிஸ்தானில் ரகசிய அணு உலை: அம்பலப்படுத்தும் அமெரிக்கா
பாகிஸ்தான் ரகசியமாக அமைத்து வரும் நான்காவது அணு உலையின் கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளதாக, அமெரிக்காவின் அறிவியல் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அணு உலையில், அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான மூலப் பொருள் தயாரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் கட்டி வரும்…
சிங்கப்பூரிலிருந்து 52 இந்தியர் வெளியேற்றம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில், கலவரத்தில் ஈடுபட்ட, இந்தியர்கள், 52 பேர் நேற்று, வெளியேற்றப்பட்டனர். சிங்கப்பூரில், 8ம் தேதி, "லிட்டில் இந்தியா' பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம், சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, குமாரவேலு, 33, என்ற கட்டுமான தொழிலாளி, பஸ் மோதி இறந்தார். இதைப் பார்த்ததும், அவருடன் வந்த நண்பர்கள், உறவினர்கள், பஸ்…
மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
தேவயானி கோப்ரகடேக்கு எதிரான வழக்கை கைவிட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா வெள்ளிக்கிழமை நிராகரித்து விட்டது. வழக்கு விசாரணையை கைவிடவோ அல்லது இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவோ முடியாது என்று அமெரிக்கா அறிவித்துவிட்டது. விசா மோசடி செய்ததாக இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேயை கடந்த வாரம்…
அமெரிக்காவின் போர்க் கப்பலை தாக்கியழித்த சீனா
அமெரிக்காவின் கப்பல் ஒன்றை தாக்கி அழித்ததாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 5ம் திகதி, தமது கப்பல் ஒன்று சீனாவினால் நிர்மூலமாக்கப்பட்டிருந்தாக அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தது. இது தொடர்பில் தொடர்ந்து மௌனம் காத்து வந்த சீனா, தற்போது தங்களின் யுத்தக் கப்பல் ஒன்றை, அமெரிக்க கப்பலை தாக்கி…
மலேசியாவில் அபாயத்தை எதிர்நோக்கும் ஐ நா பாரம்பரியத் தலம்
மலேசியாவில் ஐ நாவால் உலக பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் மாகாண அரசு முன்னெடுக்கும் வர்த்தக நடவடிக்கைகளை ஹிண்ட்ராஃப் அமைப்பு விமர்சித்துள்ளது. மலாக்கா மாநிலத்திலுள்ள கம்புங் செட்டிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் அவர்களது பாரம்பரியங்களும் பாதிக்கப்படுவதாக ஹிண்ட்ராஃப் அமைப்பு…
அதிக ஓய்வூதியம் கோரும் ஹாலந்து பாலியல் தொழிலாளர்கள்
நெதர்லாந்தில் பாலியல் தொழிலாளர்கள் ,தங்களுக்கு கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அதே மாதிரியான ஓய்வூதிய உரிமைகள் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். நெதர்லாந்தில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களில் ஒரு மாதத்துக்கு 5,000 யூரோக்கள் வரை வருமான வரி விலக்குடன் போட்டுவைக்கலாம். பாலியல்…
மியான்மாரில் அதிகரிக்கும் கஞ்சா சாகுபடி : கவலையில் ஐ நா
மியான்மாரில் இந்த ஆண்டு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு கஞ்சா உற்பத்தி அதிகரித்துள்ளதாக ஐ நா கூறுகிறது. இதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்ற அளவீடுகள் குறித்த அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது. விவசாயிகள் தமது வாழ்வாதாரங்களுக்கு மாற்றுவழி…
வரலாற்று சிறப்பு வாய்ந்த நபர்களின் பட்டியல்: 2-ம் இடத்தில் நெப்போலியன்
வரலாற்றில் சிறப்பு வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிரான்ஸ் சர்வாதிகாரியான நெப்போலியன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கூகுள் பொறியியலாளரான சார்லஸ் வார்டு மற்றம் ஸ்டீவன் கெய்ன் ஆகியோர் இணைந்து புதிய மொன்பொருள் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வரலாற்றில் சிறப்பு வாய்ந்த நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.…
சீனாவின் அச்சுறுத்தல்: பாதுகாப்பை விஸ்தரிக்கும் ஜப்பான்
ஜப்பானின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நிதியினை அதிகரிப்பதற்கான அனுமதியை ஜப்பான் அமைச்சரவை வழங்கியுள்ளது. சீனாவின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிதி அதிகரிப்பு இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியினுள் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்தள்ளது. இதுதவிர ஜப்பானில் நீரியல் பிரதேசத்தில் விசேட…
குண்டுப் பயணிகளால் தொல்லை! எடைக்கு ஏற்ப விமான கட்டணம்
பயணிகளின் எடைக்கு ஏற்ப விமான கட்டணத்தை வசூலிப்பது குறித்து பல்வேறு நாட்டு விமான நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. உலகிலேயே முதல்முறையாக கடந்தாண்டு இறுதியில் இத்திட்டத்தை சமோவா ஏர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அப்போது இது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த கட்டண முறை வெற்றிகரமாக…
நவீன அடிமை குற்றங்களைத் தடுக்க பிரிட்டன் திட்டம்
நவீனகால- அடிமை முறை மற்றும் மனிதக் கடத்தல்களை தடுப்பதற்காக பிரிட்டன் அரசாங்கம், கடுமையான தடை நடவடிக்கைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளை பிரிட்டன் உள்துறை அமைச்சர் தெரசா மே முதலில் முன்வைத்திருந்தார். இவ்வாறான மனிதக் கடத்தல்கள் மற்றும் நவீனகால- அடிமை முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனைக் காலத்தை 14…