வங்கதேசத்தில் வன்முறை: காளி கோவில் எரிப்பு

தாகா: வங்கதேசத்தில், தேர்தலையொட்டி நடந்த வன்முறையில், காளி கோவில் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில், சென்ற, 5ம்தேதி, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. 'பிரதமர், ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி, நடுநிலையான அரசு மூலம், தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்த கோரிக்கை…

வெனிசுலா அழகி சுட்டுக் கொலை

காரகாஸ்: முன்னாள், 'மிஸ் வெனிசுலா' அழகியையும், அவரது கணவரையும், கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து, வெனிசுலா நாட்டு போலீஸ் அதிகாரி, ஜோஸ் கிரகெரியோ செரில்டா கூறியதாவது: முன்னாள் வெனிசுலா அழகியான, மோனிகா ஸ்பியர், 29, அவரது, பிரிட்டிஷ் கணவர், தாமஸ் ஹென்றி பேரி, 39, மற்றும் மகள் மாயாவுடன்,…

நைஜீரியாவில் இனமோதல்: 30 பேர் பலி

மத்திய நைஜீரியாவில் இரு சமுதாயத்தினர் இடையே மூண்ட மோதலில் 30 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலை ஃபுலானி முஸ்லிம் பிரிவினர் நடத்தியதாக சோனாங் பிரிவு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஃபுலானி முஸ்லிம் பிரிவினர் மறுத்துள்ளனர். சம்பவ…

வங்கதேசத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் வங்கதேசத்தில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. தற்போது வங்கதேசத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் திங்கள்கிழமை…

நியூசிலாந்தில் திமிங்கலங்கள் சுட்டுக்கொலை

உலகிலேயே அதிக கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குமிடமாக நியூசிலாந்து கடற்பகுதிகள் உள்ளன. இங்கு வருடத்திற்கு 300 டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்த்தின் தெற்கு தீவு பேர்வெல் ஸ்பிட் கடற்கரை பகுதியின் தூரத்தில் நேற்று முன் தினம் இரவு 39 திமிங்கலங்கள் கரை…

மனித வெடிகுண்டாக செயல்பட வந்த 10 வயது சிறுமி மீட்பு

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த இருந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சிறுவர், சிறுமிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சிறுமி, தன் மீது பொறுத்தியிருந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்பாக காப்பாற்றப்பட்டதாக உள்துறை அமைச்சம் தகவல் வெளியிட்டுள்ளது. வெடிகுண்டை…

தெற்கு சுடான் மோதலில் இராணுவ ஜெனரல் ஒருவர் பலி

தெற்குசுடானின் ''போர்'' நகருக்கு வெளியே நடந்த கடுமையான சண்டையில் ஒரு இராணுவ ஜெனரல் கொல்லப்பட்டிருக்கிறார். அந்த நகருக்கு கூடுதலாக அனுப்பப்பட்ட வாகனத் தொடரணி ஒரு இடத்தில் வழிமறித்து கடுமையாக தாக்கப்பட்டதாக, அங்கு முன்னேறிக்கொண்டிருக்கும் அரசாங்கப் படைகளுடன் இருக்கும் ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் துணை அதிபரான ரெய்க்…

வங்கதேசத் தேர்தலில் வன்முறை, 12 பேர் பலி

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல்களில் வாக்குப்பதிவு இன்று கடும் வன்முறைகளுக்கிடையே நடந்து வருகிறது. எதிர்க்கட்சித் தொண்டர்களுக்கும் போலிசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல நாட்களாக நடந்த வன்செயல்களில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர். வங்கதேசத்தில் பொதுத் தேர்தல்கள் நடக்கும்போது…

மீண்டும் முதலிடம் பிடித்தார் பில்கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ், பணக்காரர் தரவசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். புளும்பெர்க் நிறுவனம்,2013ம் ஆண்டின், 300 பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பில்கேட்சின் கடந்தாண்டின் சொத்து மதிப்பு 1,580 கோடி டொலர் அதிகரித்து, 7,850 கோடி டொலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற மே மாதம் வெளியான…

அல் கைதாவின் லெபனான் தளபதி மரணம்

தடுத்து வைக்கப்பட்டிருந்த லெபனானிய அல்கைதாவின் முக்கிய தளபதியான மஜீட் அல் மஜீட் அவர்கள் உடல்நிலை மோசமானதன் காரணமாக இறந்துவிட்டதாக லெபனானின் இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரகம் பழுதடைந்திருந்ததாக இன்னுமொரு செய்தி கூறுகிறது. கடந்த வருடங்களில் மத்திய கிழக்கெங்கிலும் குண்டுத் தாக்குதல்களை…

உலக நாடுகளை ஆட்டிப் படைக்கும் பனிப்புயல்

உலக நாடுகள் பலவற்றிலும் பனிப்புயலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் பனி அதிகமாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அமெரிக்காவின் பல இடங்களில் கடும் குளிரும், பனிப்பொழிவும் காணப்படுகிறது. மேலும், பல பகுதிகளில் சீதோஷ்ணம் மைனஸ் அளவில் இருந்தது. நியூயார்க்…

வளர்முக நாடுகளில் ‘உடல்பருமன்’ வேகமாக அதிகரிக்கிறது

உலகில் செல்வந்த நாடுகளைவிட, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் (வளர்முக நாடுகள்) வாழும் மக்கள் மத்தியில் உடல்பருமன் (ஒபேசிட்டி) கொண்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக பிரிட்டனின் முன்னணி சமூக நிறுவனமொன்று எச்சரித்துள்ளது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில், அளவுக்கு அதிகமாக உடல் எடை கொண்டோர் அல்லது உடல்பருமன் கொண்டோரின் எண்ணிக்கை 2008-ம் ஆண்டில் 100…

தீவிரமடைந்து வரும் மத கலவரம்! சிறுவர்களின் தலை துண்டிக்கப்படும் கொடூரம்

மத்திய ஆப்ரிக்க குடியரசில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான சண்டையில் 2 சிறுவர்கள் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது. மத்திய ஆப்ரிக்க குடியரசில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் 2 சிறுவர்கள் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும்…

உலக சமாதானத்துக்கு அமெரிக்காவே முதன்மை அச்சுறுத்தல்!- பாகிஸ்தான் சீனாவுக்கு 2ம்,3ம்…

உலக சமாதானத்துக்கு அமெரிக்காவே அச்சுறுத்தலாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 68 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் மாத்திரமல்லாமல், அமெரிக்காவின் தோழமை நாடுகளான துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது. உலகளாவிய சுதந்திர வலையமைப்பும் கோல்அப் நிறுவனமும் இணைந்து…

பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவேன்: ரஷ்ய ஜனாதிபதி சூளுரை

ரஷ்யாவின் வோல்காகிரேட் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், அங்கு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் அங்கு ஒரு ரயில் நிலையத்திலும், டிராலி பஸ்சிலும் கடந்த 26, 27 திகதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்தக் குண்டு வெடிப்புகளில் 34 பேர்…

ஐரோப்பாவில் ருமேனியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் தடை நீங்குகிறது

ருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும். இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த…

முதன் முறையாக கஞ்சா விற்க அதிகாரப்பூர்வ அனுமதி

அமெரிக்காவில் முதன் முறையாக மாகாணம் ஒன்றில் கஞ்சா விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் முதன் முறையாக கஞ்சா விற்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் டென்வர் உட்பட குறித்த மாகாணம் முழுவதும் ஜனவரி 1ம் திகதி முதல் கஞ்சா விற்பனை தொடங்க உள்ளது. கஞ்சா…

பேச்சுவார்த்தைகளுக்கு செல்கின்றனர் தெற்கு சூடான் கிளர்ச்சியாளர்கள்

தெற்கு சூடான் தொடர்பில் எத்தியோப்பியாவில் நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு, தான் ஒரு குழுவை அனுப்புவதாக கிளர்ச்சித் தலைவர் ரெயிக் மச்சார் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். எனினும் போர் நிறுத்தம் கிடையாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனிடையே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த போர்(Bor) நகரை தெற்கு சூடானின் அரச படைகளிடமிருந்து, தமது…

ஷ்யாவில் தொடர் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

ரஷ்யாவில் நேர்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரஷ்யாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற 40 நாட்களே உள்ள சூழ்நிலையில், அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 900 கி.மீட்டர் தொலைவில் உள்ள வோல்கோக்ராட் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.…

விளையாட்டு விபரீதமானது! கோமா நிலையில் பிரபல வீரர்

கார் பந்தய போட்டியில் கொடிகட்டி பறந்தவர் மைக்கேல், தற்போது கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உலகில் அதிக பார்முலா1 போட்டிகளில் வெற்றி பெற்ற பெருமை ஜேர்மனியின் மைக்கேல் ஷுமேக்கரையே(வயது 44) சாரும். இவர் கடந்த 2012ம் ஆண்டுடன் கார் பந்தயத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று…

மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகளை நீக்கலாம்!

லண்டனில் தேவையற்ற கெட்ட நினைவுகளை நீக்கும் மின் அதிர்வு சிகிச்சையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள நிஜ்மெகன் ராட்பட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மார்ஜின் குரோஸ் மற்றும் அவரது சகாக்கள் இணைந்து, மின் அதிர்வு சிகிச்சையின் மூலம், தேவையற்ற நினைவுகளை நீக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். நினைவுகள் நிரந்தரமானதல்ல என்பதன்…

அதிகமாக சம்பாதிப்பவரா? 75 சதவீத வரி செலுத்துங்கள்!

பிரான்ஸ் நாட்டில் அதிகமாக சம்பளம் பெறும் நபர்களிடம் 75 வீத வரியை வசூலிக்க பிரான்ஸ் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது ஆண்டு வருமானத்தில் இருந்து 75 வீத வரி வசூலிக்கப்பட உள்ளது. வருடத்திற்கு ஒரு மில்லியன் யூரோக்களை சம்பளமாக பெறும்…

அமெரிக்க இராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் கொடுமைகள்

அமெரிக்க இராணுவத்தில் ஆண்டு பாலியல் கொடுமைகள் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக இராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான அரசுத் தகவல்களை ஆய்வு செய்ததில், கூடுதலாக 5000 பாலியல் முறைப்பாடுகள் வந்திருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை…