வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்…..,
தமிழர்களே..
இங்கேயும்
அப்படித்தான்…….!
ஆனால்…..
கொஞ்சம்
மாற்றம்
செய்துக் கொள்ளுங்கள்….!
முறைவாசல் தேடி
முதுகெலும்மை
முட்டுக்கொடுப்பதும்….!
பறை வாசம் தேடி
பாட்டாக பாடி வைப்பதும்
பட்டையை கிழித்தக் கதைத்தான்….!
ஊரு இரண்டுப்பட்டா…….
ரொம்பப் பேருக்கு
கொண்டாட்டம்தான்….!
உணர்ச்சி பிழம்ப
உதட்டுச் சாயம்
முகத்துக்குப் பூசி….!!!!
உள்ளம் உருக
சௌரஸ்தா போலப் பாடி
போட்டுடைக்கும் சட்டி
தமிழன்
தலைச் சட்டித்தான்…!
கூத்தாட்டிக்கு கொண்டாட்டம்….!
கோல மயில்
கும்மாலம் போடுவதுப்போல
கால மயில்கள் சில
கச்சேரி நடத்துதுப்பார் தம்பி நாட்டுல…..!
“தம்பியின்” பெயரைச் சொல்லி
தும்பியைப்போல் ஓடுது விம்பி..,
எல்லாமே வயிற்றுக்குத்தான் வேசம்,
இந்தக் கதையெல்லாம்
ஈழத் தமிழனுக்கு
இங்கே மட்டுமல்ல
அங்கேயும் பாண்டவர்கள்
ஐந்து ஐந்து ஐந்து
பாண்டவர் புரண்ட இடமெல்லாம்
ஆனதுபார்
ஆறாவதாக…..
கிழித்தெரிந்த நாள்காட்டித் தாள்….!
ஓட்டையிலே சம்பாரிச்சு
ஒருத்தன் மட்டும் வாழனுமென்று
பாட்டினிலே
பாடையை கட்டி
பறந்து சென்று இனத்துவம் பேசி……,
ஊர் முழுக்க ஓசியில சுத்தி
ஒருத்தனை மட்டும்
வேசியில் திட்டி
தமிழனைப் பத்தி பேசிட்டோம்
சூராவளிப்போல…….
பிடிங்கிட்டு வரும் விடுதயிலைன்னு,,,,
வந்து சேரும்
படை “களை” த்தை
எங்க ஊரு பாசையில
வந்துட்டாய்யா
“ச்சாரி மக்கான்”
ஊரு இரண்டு பட்ட
அரசியல் வாதிக்கும்கூட
கொண்டாட்டம்
கும்மாலம்……!
இதுல….
ஈழத்துப் பரணி மக்கள்
குத்துயிரும்
குலவுயிருமாய்….,
தலைகளுக்கு மட்டும்
ஆறு மாதம் அரசியல் ஓடுதுபார்
தம்பி
தங்க
கம்பி……..!