வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
மழை ஓய்வில் வருவாய்
துவைக்காமலே காய்வாய்
அலசுகிறாய் மழையில் நீ
அஸ்ட்ரோவும் அப்படிதான்
சாயங்கள் அதிகம்
உன் ஊடகவியலில் தமிழன்
இன்றும் கருப்பு வெள்ளைதான்
நீ மாற்றி துவைத்தாலும்
நிறம்மாறாத என் இனம்
24 மணி நேரமும் விடியும் வரையும்
நனைந்து கொண்டே இருக்கிறது
அசுத்தம் மட்டும் நிற்கிறது
நீ பாலைவன வறட்சிக்கு போ
காய்ந்த மணலில் போதிமரம் செய்
அதுவாவது ஏழாம் அறிவை தரும்
உன்னை நீ நிமிர்த்த பார்
இனத்தை அறிவில் வளைத்து வா
போதுமே பேடிகள் பண்ணது
பணம்தான் உன் கேடித்தனம் என்றால்
என்னவர்கள் என்ன பாவமோ
புதிய சமுதாய சேனல் உண்டு
போய் உன் படிப்பை தொடரு
அஸ்ட்ரோ வான் வில்லியே போ போ
வசந்தம் மீட்டு வா வா
-பொன்.ரங்கன்
ராஜா மணிக்கு பணத்தில் தான் குறி அவருக்கு மலீசிய நலன் பற்றி அவருக்கு என்ன கவலை
அஸ்ட்ரோ வானவில்லின் நிகழ்ச்சிகள் தரம் குறைந்துவிட்டது உண்மையே!. அவர்களுக்கு காசின்மீதுதான கண். தரமான நிகழ்ச்சிகள்போய் வெகுகாலமாகிவிட்டது. கூத்தும் கும்மாளம் அடிக்கும் கலைஞ்சர்களை போட்டு வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்மொழிக்கு முக்கியம் கொடுப்பதில்லை. திரு. ராசாமணி ஒரு தமிழரா என்ற சந்தேகம்.
உண்மைதான். தமிழ் நாட்டு தமிழனிடம் ஊடகவியலை ஒப்படைத்தால் தமிழ் பற்றையும், தமிழ் கலாசாரத்தையுமா எதிர்பார்க்க முடியும். அங்கு எப்படி தாய் தமிழை கொலை செய்கிறார்களோ அதையேதான் அதிகாரத்தை கொடுத்தால் இங்கேயும் செய்வார்கள். கலை என்ற பெயரில் விரசமான நவீன சினீமா பட காட்சிகளை நிகழ்சிகளின் இடை-இடையே [இடைவேளை] ஒலிபரப்பி நமது இளம் தலைமுறையினரை கெட்டு குட்டிச்சுவராக்கி விட்டார்கள். ஏன் அதற்கு பதில் நல்ல எழுச்சிமிக்க பழைய பாடல்களை ஒலிபரப்ப வேண்டியதுதானே. தமிழ் நாட்டு கலாசாரத்தை இங்கே புகுத்தினால் பிறகு இங்குள்ள இளைய தலை முறையினருக்கும் அவர்களைப்போலவே இனப்பற்று மொழிப்பற்று இல்லாமல் போய்விடும்.
மக்கள் பயன் பெறக் கூடிய தகவல் என்றால் அது கட்டி என்ன விலை எனக் கீட்பவர் ராஜமணி இன்ட அரசியலை புரிந்து காய் நகர்த்துபவர் ராஜாமணி .
ஆஸ்ட்ரோ குறித்து கருத்து சொன்னால் இவர்கள் விளம்பரம் கொடுக்கமாட்டார்கள்
அஸ்ட்ரோ ஒரு வியாபார நிறுவனம். அங்கு வருமானம் தான் முக்கியம். ராஜாமணி அங்கு வேலை செய்பவர். அவர் வருமானத்தைப் பெருக்கினால் தான் அவரால் அங்கு பேர் போட முடியும். அவரால் முடிந்த வரையில் பல நல்ல நிகழ்ச்சிகளை ஒளியேற்றத்தான் செய்கிறார். நாம் எப்போதுமே நல்லவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுவதில்லை. பொன் ரங்கனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்தால் அவர் மட்டும் என்ன 24 மணி நேரமும் சமுதாயம் நலன் பெறுமாறு நிகழ்ச்சிகளைப் படைப்பாரா! நாம் எல்லாருமே வெத்து வேட்டுகள் தான்!
மூன்று மாதங்களுக்கு பின் ஒரு வானவில் அப்ரஹம் தேராஹ்…. பேரை தமிழில் எழுதிப பார்த்தேன் இப்படித்தான் சமஸ்கிரிதம் நுழைத்தது. உங்கள் தகவலுக்கு ராஜாமணிக்கு முன் அந்த பதவிக்கு நானும் விண்ணபித்து இருந்தேன். காரணம் 5000 திரைப்படங்களுக்கு பழைய படங்களுக்கு Rights வைத்திருந்த காரணத்தால். வசந்தம் ஞாபகம் இருக்கும் அதன் ஊடருவல்தான் வானவில் ..ஒரு அரசியல் இந்திரன் அம்மையார் ஏமாந்தங்க எல்லாம் மார்ஷல் ஆட்டமானது அஸ்ட்ரோ”கு நான் பரிந்துரை கொடுத்த பேர் “தமிழொளி” நிபுணத்துவத்தில் நான் ஒரு ஊடகவியலாளார். விளம்பரத துறை எனக்கு அத்துப்படி. என்னை விளம்பர படுத்த தெரியாத பாக்கு பொடி.
Media ethics / Advertising ethics தமிழில் ஊடக தர்மம் என்று சொல்ல்வார்கள். ஒன்றை சொல்வேன் வசூல் TV கள் தங்கள் நிகழ்சிகள் Pre promo தவிர விளம்பரங்கள் செய்யகூடாது. ஆனால் அஸ்ட்ரோ வில் நம் பணத்தையும் நேரத்தையும் விழுங்கும் சுறாக்கள் தண்ணிக்குள் கரணம் அடிக்கிறது. இதற்கு “அலையோசை” என்ற எதிர்ப்பு நடத்தினோம் வந்தவன் எல்லாம் டிராமா தயாரிக்க திரைக்கு பின்னால் திரை போட்டார்கள்..தமிழ் ஒளியும், ஒலியும், ஒழிப்பும் பிரகாசிக்கிறது. இனம் கேளிக்கையானது. வேடிக்கை பார்க்கும் கூட்டம் விண்மீன்களாய் வானத்தை வாடிக்கையாக்கிக கொண்டது. விடியலை காணோம்.