என் தேசம்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

eelamtஎன் தேசம் எங்கும் அநாதை இல்லங்களும்
கோயில்களும் தான் நிறைந்து கிடக்கிறது.

மாற்றி உடுத்த குழந்தைகளுக்குத்தான் 
ஒற்றை துண்டு இல்லை – கடவுள்களுக்கோ
நாளுக்கொரு புது பட்டு வந்து சேர்கிறது.

வாய்க்கால் தண்ணீரை அள்ளி தலை 
கழுவுவதற்கும் சில சின்னன்களுக்கு கையே 
இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது – சிலைகள் 
மஞ்சலில் மொழுகி பாலில் குளிக்கிறது.

யாரும் அற்ற அந்த யீவன்கள் ஒரு வேளை 
உணவுக்காய் நாள் முழுக்க போராடுகிறது. 
வாய் பேசாத தெய்வங்களுக்கோ – வடை கடலை
மோதகம் என வித விதமாய் படையல் இடப்படுகிறது.

மண்ணெண்ணை விலையேறி விட்டதால் 
மழலைகளுக்கு வெளிச்சம் பார்கவும் கிடைப்பதில்லை 
மின்குமிழ் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் – இறைவனுக்கு 
விடியும் வரை நெய் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.

-நெடுந்தீவு முகிலன்

TAGS: