வாழ்க்கை

இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

அந்த வானத்தைபோல் 
அருமை வேண்டும் 
இந்த பூமியைப்போல் 
பொறுமை வேண்டும் 
ஐம்புலனை அடக்கும் 
வல்லமை வேண்டும் 
நல்வழியில் பொருளீட்டும் 
திறமை வேண்டும் 
சிறந்த குடிமகனாக 
பெருமை வேண்டும் 
நட்பு வட்டாரத்தை 
பெருக்க வேண்டும் 
ஈகை குணம் 
வளரவேண்டும் 
அதர்மத்தை 
தட்டிகேட்கும் 
அஞ்சாமை 
குணம் வேண்டும் 
நிதி வேண்டும் 
நல்மதி வேண்டும் 
வாழ்வின் அந்தம் வரை 
உனை என்றும் மறவா 
நல்கதி வேண்டும் 
ஆண்டவனே 
இவையனைத்தையும் 
எல்லோரும் பெறவேண்டும்

-செல்வமுத்து மன்னார்ராஜ்

TAGS: