சங்கா சின்னையா | மாணாக்கர்களின் இன்றைய தேவை என்ன?
- கற்றல் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
மாணாக்கர்கள் சுயமாக இயங்க வேண்டும்.
மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் குறைந்த வழிகாட்டலில், சுயமாக அதிகம் கற்க வேண்டும்.
காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, குழந்தைகள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் கற்றலே என்பதை நாம் உணர வேண்டும்.
5. குழந்தைகள் தங்கள் விருப்பமானவற்றைச் செய்து, மகிழ்ச்சியுடன் நாள்களைக் கழிக்கலாம். எப்படி?
5.1 ஓவியம் வரைதல்
5.2 விளையாடுதல்
5.3 பெற்றோருக்கு உதவுதல்
5.4 நடனம் ஆடுதல்
5.5 பாட்டுப் பாடுதல்
5.6 வழிபாடு செய்தல்
5.7 வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு இசையமைத்தல்
5.8 உடற்பயிற்சி செய்தல்
5.9 செடிகள் நடுதல்
5.10 நாட்குறிப்பு எழுதுதல்
5.11 விருப்பமான பாடத்தைத் தேர்ந்தெடுத்துக் குரல் பதிவு செய்தல்
5.12 ஆரோக்கிய உணவுகளை மட்டுமே உண்ணுதல்
5.13 திரைப்படங்கள் பார்த்தல்
5.14 எளிய சமையல்
5.15 கதைப்புத்தகம் வாசித்தல்
5.16 இணையத்தில் தேவையான நிகழ்ச்சிகளைப் பார்த்தல்
5.17 இன்னும் பல…
இறுதியாக, ஆசிரியர் கொடுக்கும் பாடங்களைச் செய்தல்…
மேலுள்ளவற்றில் நீங்கள் எதைச் செய்தாலும் அது கற்றலே!
செய்தவற்றை நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; குரல் பதிவோ காணொளியோ இருந்தால் ஆசிரியர்களுக்கு அனுப்பி வையுங்கள்; நீங்கள் செய்யும் சிறிய நடவடிக்கைகள் கூட சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்!
பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான அன்பு வேண்டுகோள்! இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில் வீட்டைப் பள்ளிக்கூடமாக (இக்கால) மாற்றி விடாதீர்கள்! சுவருக்குள்ளேயே சுவரில்லாப் பள்ளியை உருவாக்க முயல்வோம்!
கற்றல் அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்!
இனியொரு விதி செய்வோம்…
சங்கா சின்னையா, பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் – “இப்பதிவு எம் பள்ளிக்கும் எம் மாணாக்கர்களுக்குமானது…ஏனையோர் தேவையேற்படின் கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக!”