மூடாவுக்கு கூட்டணியாகும் கட்சி – வாரிசானா? – பக்காத்தானா?

இராகவன் கருப்பையா -முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் தோற்றுவித்துள்ள 'மூடா' கட்சி நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்காத்தான் ஆட்சியின் போது மகாதிரின் செல்லப் பிள்ளையைப் போல் இருந்த சைட் சாடிக் தோற்றுவித்த அக்கட்சியின் வளர்ச்சி தற்போது…

இளைஞர்களின் வாக்குகள் ஜொகூரில் வரலாறு படைக்கட்டும் – கி.சீலதாஸ்

ஜொகூர் மாநில பொதுத் தேர்தல் புது இலக்கைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இளைஞர்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும். இது ஜொகூரின் எதிர்காலம் மட்டுமல்ல இளைஞர்களின் பங்கு நாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்ததாகும். கடந்த ஜனவரி திங்கள் 22ஆம் நாள் ஜொகூர் மாநில மந்திரி புசார் (முதலமைச்சர்)…

இந்தியர்களின் மக்கள்தொகை 2020-இல் 6.7%க்கு குறைந்தது!

சமீபத்தில் முடிவடைந்த 2020 -க்கான  தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மலேசியாவின் மக்கள்தொகையில் பூமிபுத்ராவின்  சதவீதம் 69.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சீனர்கள்  மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. 2010-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 28.3 மில்லியனாக இருந்த மலேசியாவின் மக்கள்தொகை  32.4 மில்லியனாக அதிகரித்துள்ளது,…

‘மனைவியை இதமாக அடிக்கலாம்’ என்ற துணை அமைச்சர் ராஜினாமா செய்ய…

அன்மையில் மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் சித்தி சைலா முகமட் யுசோப் பத்திரிகைக்கான ஒரு காணொளியில் கணவன்மார்கள் தங்கள் மனைவியை கண்டிக்க இதமான வகையில் அடிக்கலாம் என்ற ஆலோசனையை வழங்கியிருந்தார். அந்தத் துணை அமைச்சரின் காணொளியில் திருமணமான பெண்கள் எப்படி கணவன்மார்களிடம் மென்மையாக…

ஊழலை ஒடுக்க செல்வாக்கு மிக்கவர்கள் தடையா?- அன்வார்

ஊழலை ஒடுக்குவதற்குச் செல்வாக்கு மிக்கவர்கள் தடையாக இருக்கின்றனர் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். இதற்கு முன்னால் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர்களில் முன்னாள் பிரதமரும் அடங்குவார் என்கிறார் அன்வார். இதுபோன்ற அரசியல் சூழ்நிலையில் நாம் எதையும் குறைவாக மதிப்பிட இயலாது. “செல்வாக்கும் ஆதிக்கமும் கொண்டவர்கள் உண்மையான நாட்டின் சீரமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை”, என்று குற்றம் சாட்டுகிறார் அன்வார்.…

கட்சி தாவல் சட்டம் நாடாளுமன்றத்தினரையே கட்டுப்படுத்தும், அரசியல் கட்சிகளை அல்ல!

தற்பொழுது நாடாளுமன்ற விவாதத்திற்காக, கட்சி தாவல் சட்டம், சார்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சார்பாக கருத்துரைத்த சட்டத்துறை அமைச்சர்  வான் ஜுனைடி துன்கு ஜாபர், இது நாடாளுமன்ற உறுப்பினர்க மட்டுமே கட்டுப்படுத்தும், அரசியல் கட்சிகளை அல்ல என்றார். இந்தக் கட்சி தாவல் சட்டம் பினாங்கு மாநிலத்தில் 2012…

ஊழல் அரசியலில் குளிர் காயும் நாட்டு மக்கள்! – பகுதி…

கி.சீலதாஸ்- பல்லாயிரம் கோடி மக்களின் பணம் சட்டதுக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. இழப்பு யாருக்கு? நாட்டுக்கும் மக்களுக்கும் பல்லாயிரக் கோடி இழப்பு. மக்களின் இழப்பில், துயரில் சுகமாக ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதிகாரத்தில் இருந்த, இருக்கும் அரசியல்வாதிகள்! இதுதான் அம்னோ அரசியல் தலைவர்களின் அரசியல் பயணம் கண்ட பலன்.…

குற்றவாளிக்குத் தண்டனை இல்லை – அம்பலப்படுத்தினால் தண்டனை

இராகவன் கருப்பையா -நம் நாட்டில், ஒரு குற்றத்தை அம்பலப்படுத்துவோர் அனாவசியமாக அழைத்து விசாரணை செய்யப்படுவதும் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ்த் தண்டிக்கப்படுவதும் புதிய விசயம் ஒன்றுமில்லை. இத்தகைய சூழலில் குறிப்பாக ஊடகவியலாளர்கள் சிக்கித் தவிப்பது காலங்காலமாக இயல்பாகிவிட்ட ஒன்றாகவே தெரிகிறது. 'தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப் போல' பல…

ஊழல் அரசியலில் குளிர் காயும் நாட்டு மக்கள்! – பகுதி…

கி.சீலதாஸ்- மலேசியா எப்படிப்பட்ட இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைச் சுதந்திரத்திற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டது. அது சமுதாய நீதி, நேர்மை, திறமை மிகுந்த ஆட்சி, நாட்டில் எல்லா இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வது, பகைமை, வெறுப்புணர்வு போன்றவற்றிற்கு இடமளிக்காத சமுதாய உறவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒரு சிலருக்குப் பாதுகாப்பு…

தமிழ் மொழி வளர்ச்சிக்கு சோதனை மேல் சோதனை

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் தமிழ் பள்ளிகளையும் தமிழ் மொழியையும் பாதுகாக்க  நாம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தொடர்ந்தார்போல் சவால் மிக்க சோதனைகளும் நம்மைத் தாக்கிய வண்ணமாகத்தான் உள்ளன. தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் என அவ்வப்போது விஷக் கருத்துகளைக் கக்கிக் கொண்டிருக்கும் சில தரங்கெட்ட அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவ்வாறு…

‘சிறையில் மரணங்கள்’ திகைப்பூட்டுகின்றன – வழக்கறிஞர் மன்றம்

போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் தொடர்ந்தார்போல் மரணம் அடைந்து வருவது தங்களுக்குத் திகைப்பூட்டுவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றம் கூறுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை ஏழு நபர்கள் மரணமடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தவர்கள். அம்மன்றத்தின் தலைவர்  ஏ.ஜி. காளிதாஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மரணங்கள் கிள்ளான்,…

பதவிகளுக்கான அரசியல் போரட்டத்தில் பலியாகுவது சாதரண மக்களே!

கி.சீலதாஸ் - மலேசியா எப்படிப்பட்ட இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைச் சுதந்திரத்திற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டது. அது சமுதாய நீதி, நேர்மை, திறமை மிகுந்த ஆட்சி, நாட்டில் எல்லா இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வது, பகைமை, வெறுப்புணர்வு போன்றவற்றிற்கு இடமளிக்காத சமுதாய உறவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒரு சிலருக்குப்…

திக்கற்ற நிலையில் ஏழ்மை இந்தியர்கள் – அரசாங்கம் தலையிட வேண்டும்

கா. ஆறுமுகம் - கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழ்மை நிலையிலுள்ள இந்தியர்கள் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வாழும் இவர்களின்  வாழ்வாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். மேலோட்டமாக பார்த்தாலே போதும் கீழ்மட்டத்தில் இருக்கும் இந்தியர்கள் திக்கற்ற நிலையில் உள்ளது தெரியும். இந்தியர்களை…

பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, இன்று காலமானார். கோவிட் நோயால்  பாதிக்கப்பட்டிருந்த அவர் ஜனவரி 8ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். முன்னதாக உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர்…

போலிஸ் காவலில் இந்திய இளைஞர் மரணம் – 53 நாட்களுக்கு…

பினாங்கில் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 34 வயது இந்தியரின் குடும்பத்தினர், சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்தும், தங்களுக்கு எப்படித் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்தும் விசாரணை நடத்தக் கோருகின்றனர். இறந்தவர் குமார் செல்வதுரை, கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி கெபாலா படாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் திருட்டு…

மகாதீர் தேசிய இருதய மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

தேசிய இருதய மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று காலை 8.40-க்கு வீடு திரும்பினார். கடந்த வருடம் டிசம்பர் 16-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் 23 ஆம் தேதி வீடு திரும்பினார். அதையடுத்து மீண்டும் ஜனவரி 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் ஜனவரி 13-ஆம்…

மலேசிய-சீன வாணிப சங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்கு பண உதவி

இன்று கோலாலம்பூர் சீன சமூகம் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நான்கு  தமிழ்ப்பள்ளிகளுக்கு மலேசிய-சீன வாணிப சங்கம் ரிம  27,000 வழங்கியது. அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு உதவும் பொருட்டு மலேசியச் சீன-வாணிப சங்கம் (Malaysia - China Chamber of Commerce)  உதவித் திட்டங்களை முடுக்கி விட்டுள்ளது. அதனடிப்படையில்…

ஹடி விலங்கியல் நிபுணராகலாம் – சாடுகிறார் ஜஹிட்

பாஸ் கட்சியின் நடத்தையைச் சகிக்க முடியவில்லை என்கிறார் அம்னோ கட்சியின் தலைவர் ஜஹிட் ஹமிடி. பாஸ் கட்சியின் தலைவர் அடிக்கடி மிருகங்களை இணைத்துப் பேசுவதால்  அவர் அரசியல்வாதியாக இருப்பதைவிட விலங்கியல் நிபுணராக இருக்கலாம் என்று விமர்சித்தார் ஜஹிட். அன்மையில் ஹடி, அம்னோவை ஒரு நொண்டி வாத்து என்று வர்ணித்தார். பாஸ் கட்சி கடந்த தேர்தலில் பலம் இழந்து காணப்பட்ட அம்னோவை  ஆதரித்ததின் பயனாகத்தான் அது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.…

ஊழலைச் சுட்டிக் காட்டியவர் மீது போலீஸ் விசாரணை

ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் முதன்மை கமிசனர் அசாம் பாக்கி அவர்கள்  பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பங்குகள்  வைத்திருந்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற வகையில் ஒரு அறிக்கையை லலிதா குணரட்ணம் வெளியிட்டிருந்தார். அதன் சார்பாக போலீசார் லலிதா அவர்களை இன்று விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.…

ஊழலுக்கு வக்காளத்தா? – கி.சீலதாஸ்

ஊழலால் விளையும் கேடுகளைப் பற்றி உணராத, உணர மறுக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை; ஆட்சி அவர்கள் கையில் இருக்கும் வரை ஊழல் நடவடிக்கைகளை, ஊழல் கலாச்சாரத்தை ஒடுக்கவோ, ஒழிக்கவோ முடியாது; முடியும் என்று நினைப்பது வெறும் பகற்கனவாகும். இலஞ்சம் வாங்குவோர்க்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று சட்டம் சொல்கிறது.…

கேலிக் கூத்தாகியுள்ளது அஸாம் பாக்கி மீதான ஊழல்!

இராகவன் கருப்பையா- ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்று என அனைத்துலக ரீதியில் முத்திரை குத்தப்பட்டுள்ள  மலேசியா அப்பட்டமான ஒரு ஊழல் விவகாரத்தை எப்படிக் கையாள்கிறது என்பதற்கு அஸாம் பாக்கி தொடர்பான சர்ச்சையை விட வேறு சிறப்பான உதாரணம் ஏதும் இருக்க முடியாது. இவ்விவகாரம் தொடர்பாகச் சுடச்சுட அன்றாடம் வெளியாகும்…

அடுத்த பிரதமராக அம்னோ யாரை முன்மொழியும்?  லிம் கிட் சியாங்

அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், அதன் வழி வரும் பிரதமர் அம்னோவை சார்ந்தவராகத் தான் இருப்பார். அந்நிலையில் தற்பொழுது இருக்கும் தலைவர்களில் யாரை அம்னோ பிரதமராக முன்மொழியும் என்ற கேள்வி எழுகிறது. அது இஸ்மாயில் சபரியாக இருக்குமா அல்லது ஊழல் நிரம்பிய நஜீப் துன் ரசாக் அவர்களாக இருக்குமா? நஜிப் அவர்கள் மீண்டும் பிரதமராக வரக் கூடிய சூழல் இருக்குமானால் அது மலேசியாவுக்குக் கிடைக்கும் மாபெரும் அவமானம் ஆகும். நஜிப் பதவி…

பாஸ் கட்சி தலைவர்களை நம்புங்கள்,  கேள்விகள் கேட்காதீர்கள் – ரஸ்மான்…

பாஸ் கட்சியின் முன்னாள் பொருளாளர் சர்க்காரியா இன்று பாஸ் அங்கத்தினர்களை அதிக கேள்விகள் கேட்க வேண்டாம், அதற்கு பதிலாக பாஸ் கட்சியின் தலைமையில் உள்ள தலைவர்களை நம்புமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அடித்தள மக்களாக இருக்கும் அங்கத்தினர்கள் தலைமையில் வைத்து இருக்கும் பாஸ் கட்சியின் தலைவர்கள் மீது முழுமையான நம்பிக்கை…