அக்கினி சுகுமாரின்  ‘இறையாய் இரு கனா’ – நூல் வெளியீடு

இராகவன் கருப்பையா- ஓர் ஊடகவியலாளர், படைப்பாளர், கவிஞரெனப் பன்முகம் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் எழுத்துப் பணியை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த அக்கினி சுகுமார் அவர்களின் தமிழ்ப்பணியைப் பெருமை படுத்தும் வண்ணம் 'இறையாய் இரு கனா' எனும் கவிதைத் தொகுப்பு நூல்  வெளியீடு காணவுள்ளது. சுமார்…

நிலத்தை மீட்டது விவேகானந்தப் பள்ளிவாரியம், மேல்முறையீட்டில் விவேகானந்த ஆசிரமம் தோல்வி!

சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு பெட்டாலிங்ஜெய விவேகானந்தத் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக மத்திய அரசாங்கம் வழங்கியதாகக் கருதப்படும் ரிம 60 இலட்சத்தின் ஒரு பகுதியையும், தற்போது அந்தப்பள்ளி அமைந்துள்ள நிலத்தையும், பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்கக் கோரி விவேகானந்த ஆசிரமத்தின் மீது அந்தப் பள்ளியின் வாரியத்தினர் 2019-இல் வழக்கு தொடுத்தனர். அந்த…

வெள்ளப் பிரச்சினை: மக்கள் மீது பழியா?

இராகவன் கருப்பையா- கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு மக்களவைக் கூட்டத்தின் போது வெள்ளப் பேரிடர் தொடர்பாகப் பிரதமர் சப்ரி ஆற்றிய உரை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் வேதனைக்குள்ளாக்கியது என்றே சொல்ல வேண்டும். அப்பேரிடரை எதிர்கொண்ட விவகாரத்தில் அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும் அதனாலான குளறுபடிகளும் மக்களுக்கு எவ்விதமான பாதிப்பையும சங்கடத்தையும் ஏற்படுத்தியது…

தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 3

கி.சீலதாஸ் - இந்த உண்மைகளை மறந்து செயல்படுவோரைத்தான் நாம் காண்கிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையை மறைப்பதில் காட்டும் உற்சாகம் கல்வி தரத்தில் முன்னேற்றம் காண முற்படாதது வரலாற்றுக்கும், ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கும் மரியாதை செலுத்த மறுக்கும் குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையைத்தான் இலக்கியவாதி சினுவா அச்சிபே நினைவுகூர்ந்தார். இன்று மட்டுமல்ல…

செம்பருத்தி மணியம் காலமானார்

செம்பருத்தி மாத இதழின் முன்னாள் நிருவாக ஆசிரியர் மணியம் சின்னப்பன் இன்று காலமானார்.  1998 முதல் 2011 வரையில் மாத இதழாக வெளியீடு கண்ட செம்பருத்தியின் நிருவாக ஆசிரியராக பணியாற்றிய மணியம் இன்று தமது 63-வது வயதில் காலமானார். “உனதுரிமை இழக்காதே, பிறர் உரிமை பறிக்காதே” என்ற சுலோகத்தை நடைமுறை எழுத்து முறையில்…

தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 2

கி.சீலதாஸ் -   வரலாறு யாரால் எழுதப்படுகிறது? வெள்ளையர்களின் ஆட்சியின்போது வெற்றி கண்ட வெள்ளையர்களே வரலாறு எழுதினார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் பெருமையை, வரலாற்று உண்மைகளை மறைத்து பொய்மைக்கு முதலிடம் தந்தார்கள். இன்று உலக நாடுகள் தங்களின் உண்மையான வரலாறு என்ன என்ற ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது…

தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 1

கி.சீலதாஸ் - நைஜீரியாவின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர் சினுவா அச்சிபே (1930-2013) பத்திரிக்கை நேர்காணலின்போது, “சிங்கங்கள் தங்களுக்கெனச் சொந்த வரலாற்று ஆசிரியர்களைக் கொண்டிருந்தாலன்றி வேட்டையாடல் வரலாறு வேட்டைக்காரனையே பெருமிதப்படுத்தும்" என ஓர் அற்புதமான வாய்மொழியைச் சுட்டிக்காட்டினார். பொதுவாக கருப்பர்களை ஏளனமாகப் பேசுவது, சித்தரிப்பது வழக்கமாக இருந்தது. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு…

மலேசியப் பூப்பந்து வானில் பூத்திருக்கும் தாரகைகள்!

இராகவன் கருப்பையா - கடந்த 70ஆம் மற்றும் 80ஆம் ஆண்டுகளில் நம் நாட்டின் பூப்பந்துத் துறையில் கொடி கட்டிப் பறந்த பஞ்ச் குணாளன் மற்றும் ஜேம்ஸ் செல்வராஜ் ஆகிய இரு ஜாம்பவான்களையும் நம்மில் நிறையப் பேர் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மலேசியாவைப் பொறுத்த வரையில் பூப்பந்து விளையாட்டு சீனர்களால் ஆதிக்கம்…

பக்தியும் பரவசமும் குறையாத மிதமான தைப்பூசம்   

கோவிட்-19 செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) கடைப்பிடிக்கும் கட்டாயத்தில், நாட்டில் உள்ள இந்துக்கள் இன்று தைப்பூசத்தை மிதமான அளவில் கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசக் கொண்டாட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து வரும் இந்துக்களின் கவனத்தை ஈர்க்கும் பத்து மலை  ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலில், SOPகளுடன் நடத்தப்பட்டதால் இந்த ஆண்டு உற்சாகத்தை…

மாமன்னர் தம்பதியினரின் தைப்பூச வாழ்த்துகள்

மன்னர், யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா இன்று அனைத்து இந்துக்களுக்கும் தங்களின் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இஸ்தானா நெகாராவின் முகநூல் மூலம் வெளியிடப்பட்ட அவர்களின் வாழ்த்துச் செய்தியில்,…

நாடு மோசமாவதற்குக் காரணம் – ஊழலும் அரசியல்வாதிகளும் – சீலதாஸ்

மலேசியா ஒரு சிறந்த நாடாகத் திகழ அனைத்தும் இருந்தும் அதன் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது இனவாத அரசியலும் அதன் பின்னணியில் இருக்கும் ஊழலும் ஆகும். நாளுக்கு நாள் நமது நாட்டின் தரத்தில் ஊழல் என்பது ஒரு வகையான ஏற்புடைய செயலாக மாறி வருவதையும் உணர முடிகிறது. இது…

நாட்டின் நாசத்துக்கு – ஊழலும், அரசியல்வாதிகளும் காரணம் – கி. சீலதாஸ்

நாட்டில் நேர்மையான, திறமையுடைய, ஊழலற்ற நிர்வாகம் தேவை என்பது மனித குலத்தின் எதிர்பார்ப்பாகும். பொதுவாகவே நிர்வாகம் எனும்போது அது அரசின் பல துறைகளைக் குறிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் தற்காப்பு, நாட்டினுள் சட்ட ஒழுங்கு, மக்களிடையே முரண்பாடும், பூசலும் இல்லாத வாழ்வு எனப் பற்பல இலக்குகளை அடையும் நோக்கத்துடன்தான்…

ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதே…

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அசாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகளை, ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் முறையாகக் கையாள தவறி விட்டனர் என்கிறார்  பொருளியல் நிபுணர் டரண்ட்ஸ் கோமஸ். இவர் இதற்கு முன்பு அந்த இலாகாவின் ஆலோசகர் மன்றத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தவராவார். அந்த ஆலோசகர் மன்றம் இதற்கு முன்பு  அசாம் பாக்கி எந்த தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.…

அச்சத்தை அதிகரிக்கும் தடுப்பூசி குளறுபடிகள்! – இராகவன் கருப்பையா

நாட்டின் மக்கள் தொகையில் 98 விழுக்காட்டினருக்கும் மேல் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அரசாங்கப் புள்ளி விவரங்கள் காட்டுகின்ற போதிலும் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் மரண விகிதத்திலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை. கடந்த சில வாரங்களாக நாடு முழுமைக்கும் தினந்தோறும் சராசரி 3000 பேர் கோறனி நச்சிலினால்  பாதிக்கப்படுகின்றனர். அதே…

அசாம் பாக்கியின் விசாரணையை பொது மக்கள் காண வாய்பளியுங்கள்- கோமஸ்…

வரும் திங்கட்கிழமை நடக்க இருக்கும் நாடாளுமன்ற விசாரணைக்குழுவின்  விசாரணையை நேரடியாக மக்கள் கண்காணிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு இலாகாவின் தலைமை இயக்குனராக இருக்கும் அசாம் பாக்கி அவர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேச விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். “அவரின் விசாரணையில் முறையான கேள்விகள் கேட்கப்படுகின்றனவா,…

‘பல்லில்லா புலி’யானது புரிந்துணர்வு ஒப்பந்தம்

இராகவன் கருப்பையா -கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்ற இஸ்மாய்ல் சப்ரி அவசர அவசரமாகச் செய்த முதல் காரியம் எதிர் கட்சிக் கூட்டணியை அரவணைத்து அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதுதான். இதன் வழி தனது சிறுபான்மை அரசாங்கத்தை தற்காத்துக்கொண்ட சப்ரி, அம்னோவின் ஊழல்வாதிகளின் நெருக்குதலில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார். அவர் பதவியில் அமர்ந்து சில வாரங்களிலேயே மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை மக்களுக்கு ஓரளவு…

MACC தலைமை அதிகாரி அசாம் மீது விசாரணை – ஹம்சா

பல நிறுவனங்களில் பங்குகளை வாங்க தனது சகோதரர் தனது கணக்கைப் பயன்படுத்தியதாக எம்ஏசிசி தலைவர் அசாம் பாக்கி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான போலீஸ் புகாரைப் பெற்றதால் காவல்துறை விசாரணையைத் தொடங்கும். ஹரியான் மெட்ரோவின் அறிக்கையின்படி, உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின், அசாம் (மேலே) தற்போது செக்யூரிட்டீஸ் கமிஷன்…

வெள்ளை கொடியும், சிகப்பு வறுமையும்!  

இராகவன் கருப்பையா & கா. ஆறுமுகம் - நம் நாட்டில் கோறனி நச்சிலின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது இலட்சக் கணக்கானோர் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றித் தங்களுடைய வீடுகளின் முன் வெள்ளைக் கொடிகளை ஏந்தி உதவிக்குக் கையேந்தி நின்ற அவலம் நம் நினைவுகளிலிருந்து இன்னும் நீங்கவில்லை. அவர்களில்…

ஜானகிராமன் வல்லினம் விருது பெறுகிறார்!

‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் (RM 5,000) மற்றும் நினைவு கோப்பையும் இந்த விருதுவிழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும் 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2022க்கான வல்லினம் விருதை எழுத்தாளர் மா.…

தாய்மொழிப்பள்ளியை எதிர்ப்பவர்கள், தங்களின் புற முதுகைப் பார்க்க வேண்டும்!

இராகவன் கருப்பையா - வெள்ளப் பேரிடரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சீன-தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பு நமக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. நாட்டிலுள்ள 527 தமிழ்ப் பள்ளிகளும், 1,298 சீனப்பள்ளிகளும்  மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் இது சற்று நிம்மதியைக் கொடுக்கிறது. தமிழ், சீனப் பள்ளிகள் இந்நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு முரண்பாடாக இயங்குகின்றன என்று மலேசிய மலாய் மாணவர்கள் சங்கங்களின்…

படகு இருமுறை கவிழ.. தாயை காப்பற்றிய அனுபவம்!  

இராகவன் கருப்பையா- வெள்ளப்பேரிடரில் நாம் கண்ட அனுபவங்கள், மனித நேயம் உள்ள மக்கள் நம்மிடையே பலர் உள்ளனர் என்பதையும், பொது நலம் காப்பதும், துணிந்து உதவுவதும் – ஒரு புதிய இலக்கணத்தை வாழ்வியலில் இணத்துள்ளதையும் உணர முடிகிறது. அந்தப்பிணைப்பு இந்தியர்களிடம் அதிகம் இருந்தாக கருதப்படுவதற்கான காரணம், அரசின் இனவாத…

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதா?

கி.சீலதாஸ் -முன்னொரு காலத்தில் கிராம வைத்தியர் ஒருவர் மிகுந்த புகழுடனும், சிறப்புடனும் வாழ்ந்து வந்தார். எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் அதைக் குணப்படுத்துவதில் வல்லவர். இந்த மருத்துவரிடம் மருத்துவம் பயில வந்த மாணவன், குரு வைத்தியர் போகும் இடமெல்லாம் உடன் செல்வது வழக்கம். ஒரு நோயாளியின் வீட்டுக்குப் போனால் குரு…

இயற்கை பேரிடரின் ஒற்றுமையும் – கட்சி அரசியலின் பிரிவினையும்!  

இராகவன் கருப்பையா - நாட்டை உலுக்கிய வரலாறு காணாத வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து 10 நாள்களைக் கடந்தும் இன்று வரையில் முதன்மையாகப் பேசப்படுவது ஒரே விசயம்தான் - ஒற்றுமை! அரசாங்க இலாகாக்களும் அமைச்சர்களும் கண்டும் காணாததைப் போல ஆழ்ந்த நித்திரையில் இருந்த முதல் இரண்டு மூன்று நாள்கள் மட்டுமின்றி இன்று…