பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
காராக் வட்டாரத்தில் தடுப்பூசி – காமாட்சி பாராட்டினார்
ஜூன் 2 முதல் கராக் செத்யா இடைநிலைப் பள்ளியில், செயல்படத் தொடங்கிய கோவிட் 19 தடுப்பூசி மையத்தைப் பார்வையிட சென்ற சபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு, முதன்மையாக அங்குத் தடுப்பூசி மையம் அமைத்த சுகாதார அமைச்சுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். தான் கொண்டு வந்திருந்த முககவசம்,…
தடுப்புக் காவலில் இன்னொரு மரணமா? எப்பொழுது ஓயும் இந்த மரண ஓலங்கள்…
"கிள்ளான் போலீஸ் தடுப்பு காவலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உமார் பாருக் அப்துல்லா ஹெமநாதன் என்ற இன்னுமொருவரின் அதிர்ச்சி மரணம் என்ற செய்தி நம்மை அதிரவைக்கிறது." "இன்னும் எத்தனைக் காலங்களுக்கு இந்த காவல்துறையினரின் அடாவடி செயல்களை நாம் பொறுத்துக் கொள்ளவேண்டும்." "நாம் ஏமாளிகள், பலவீனமானவர்கள், கொட்டக் கொட்ட…
தடுப்புக்காவல் மரணங்கள்: பிரதமர் என்ன சொன்னார்?
இராகவன் கருப்பையா - கடந்த மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த தடுப்புக்காவல் கைதி கணபதி தொடர்பான சலசலப்புகளும் கண்டனங்களும் கோபமும் சோகமும் இன்னும் தணிந்திராத நிலையில் ஒரு மாதம் கழித்து அதே காவல் நிலையத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு மரணமும் ஜொகூரில் நிகழ்ந்த ஒரு மரணமும் நம்மை மேலும் உலுக்கியுள்ளது. கணபதி…
தடுப்புக்காவலில் பலியாகும் உயிரும், அரசின் கடமையும் – கி.சீலதாஸ்
ஒரு மனிதனின் உயிரை யாராலும் பறிக்க இயலாது. சில குறிப்பிட்ட சட்டங்களின் வழி மட்டும்தான் அது இயலும். நமது வாழ்க்கை பயணம் எவ்வித தடையுமின்றி, தொல்லையுமின்றி, இடைஞ்சலுமின்றி சுமூகமாக அமைந்திருக்க வேண்டுமென நாம் விரும்புவதில், அக்கறை கொண்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. இப்படிப்பட்ட வாழ்க்கைக்கான அடித்தளம் அரசமைப்புச் சட்டத்தில்…
இனவாத பரிணாம அரசியலில் சிக்கிய மக்கள்!
இராகவன் கருப்பையா- தேசிய முன்னணியில் இருக்கும் அம்னோவுக்கு நிகராக எதிரணியான பக்காத்தான் ஹராப்பானிலும்ஒரு மலாய்க்கார கட்சி இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதீர் கண்ட கனவின் விளைவுதான் பெர்சத்துவின் உதயம் என்பது நமக்குத் தெரியும். இனவாதம் வழி ஒரு பெரும்பான்மையைப் பெற்று அதில் அதிகாரத்தைச் சுவைக்கும் அரசியலாகும். 1969-க்கு பிறகு உண்டான அரசியல் பரிமாணம் ஒரு புதிய…
தோட்டமக்களின் நாயகன் பால் சின்னப்பன் இயற்கை எய்தினார்.
மக்கள் கூட்டுறவு நாணயச் சங்கம், மக்கள் சேவை இயக்கம் போன்றவற்றின் முன்னோடி அமைப்பாளரும் சமூகச் சேவையாளருமான டாக்டர் பால் சின்னப்பன் அவர்கள், நேற்று, 24 மே 2021 இயற்கை எய்தினார். 24.5.1950-இல் பிறந்த அன்னாரின் வயது 71 ஆகும். ச கடந்த சில மாதங்களாக உடல் நலம் குறைவால்…
தமிழ்ப்பள்ளி நமது உரிமை: அரசாங்கம் திட்டவட்டம்!
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் உள்ள தமிழ், சீனப் பள்ளிகள் அரசியலமைப்புக்கு உள்பட்ட ஒன்று என அரசாங்கம் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது இவ்வாண்டில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ஒரு இனிப்பு செய்தியென்றால் அது மிகையில்லை. தமிழ், சீனப்பள்ளிகள் நம் நாட்டில் சட்டவிரோதமாக இயங்குகின்றன என தீபகற்ப மலேசிய மாணவர்கள் சங்கம்,…
பி40-இல் உள்ளவர்களும் முன்கள பணியாளர்களே!
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி நடவடிக்கைகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து மருத்துவத்துறை மற்றும் காவல்துறை போன்ற முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இந்த 2 தரப்பினருக்கு அடுத்தபடியாக எந்தத்துறையைச் சார்ந்தவர்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை. உதாரணமாக, பி40 பிரிவில் உள்ள மக்கள், உடல் உழைப்பைக் கொண்டு வாழ்பவர்கள். இவர்கள் தான் கீழ்மட்ட வேலைகளிலும், நெருக்கமான…
காவல் நிலையத்தில் மேலும் ஒரு மரணம், திறந்த விசாரணை தேவை – மு. குலசேகரன்
கணபதி என்பவர் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டு மரணமடைந்தார் என்கின்ற குற்றச்சாட்டு நம் மனதைவிட்டு மறையும் முன்னரே இன்னொரு மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 42 வயது நிரம்பிய சிவபாலன் சுப்ரமணியம் என்னும் ஒரு பாதுகாவலர் கோம்பாக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் இறந்துவிட்டர் என்கின்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.…
கோரோனா எல்லை மீறிவிட்டது – முஹிடின் அரசாங்கம் முழுப்பொறுப்பேற்கவேண்டும் – குலாவின் சாடலும்…
"இந்த ஓரு வருடத்தில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக நான் கருதுகிறன் . நமது அண்டை நாடுகளான , சிங்கப்பூர் தாய்லாந்து, வியட்நாம் இவைகளை விட மலேசியா நாட்டின் கொரோனா தொற்று மிக மோசமான நிலைமையை எட்டிக்கொண்டிருக்கிறது. மக்கள் எண்ணிக்கையில் நம்மை விட பல மடங்கு அதிகமாக உள்ள…
கோறனி நச்சிலுக்கு எதிரான போராட்டத்தில், நாம் வெற்றியா அல்லது தோல்வியா?
இராகவன் கருப்பையா- நம் நாட்டின் தற்போதைய பிரதான எதிரியான கோறனி நச்சிலுக்கு எதிரான போரில் நாம் வெற்றியா அல்லது தோல்வியா? அண்மைய வாரங்களாகச் சற்று மோசமாகி வரும் நிலைமையைப் பார்த்தால் ஒருவித அச்சம் நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் மரண எண்ணிக்கை நமக்கு மிகுந்த கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது.…
தமிழகத்திற்கு நிதி திரட்டும் ம.இ.கா !
இராகவன் கருப்பையா- 'உலகத் தமிழர்களே, உயிர் காக்க நிதி வழங்குவீர்' என தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் அரைகூவல் விடுத்திருந்தது நம் அனைவருக்குமே தெரியும். கோறனி நச்சிலின் தற்போதைய வீரியத்தை சமாளிப்பதற்கு மருந்து வகைகள், படுக்கைகள் மற்றும் பிராணவாயு, முதலியவை அதிக அளவில் தேவைப்படுவதால் புலம்…
பெஞ்சானா கெர்ஜாய திட்டத்தில் ஊழல் என போலிஸ் புகார்! “நடவடிக்கை எடுங்கள்” – குலசேகரன்
புதிய தொழிலாளர்களைச் சேர்ப்பதற்கான பெஞ்சானா கெர்ஜாய என்ற ஊக்கத் தொகை திட்டம் அதன் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும், அதில் முறைகேடுகள் இருப்பதாகவும் அவை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் என்கிறார் முன்னாள் மனித வள அமைச்சர் மு.குலசேகரன். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் அதிகமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே இந்த பெஞ்சானா கெர்ஜாய திட்டமாகும். கோவிட் 19 தொற்றின் காரணமாகப் பலர்…
கல்வியின்யின் பரிணாமமும் அதில் அடைக்கலமாகும் தன்னலமும்
கி.சீலதாஸ் - ஒரு நாட்டின் கல்விக் கொள்கை, அதன் தரம் காலத்தின் மாற்றத்தைப் பிரதிபலிக்க வேண்டும். நாட்டின் கல்வி முறை சமுதாயச் சூழல்களைக் கவனத்தில் கொண்டிருக்கின்றனவா என நாட்டு நலனில் கரிசனம் கொண்ட குடிமகன் கேட்க உரிமை உண்டு. அதற்கான பதிலைச் சொல்லும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. எந்த…
அறிமுகம்: சூரியா டீச்சர் – ஒரு பன்முக சாதனையாளர்
இராகவன் கருப்பையா -எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 'மாதா பிதா குரு தெய்வம்' என பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் உள்ளனர் என்ற போதிலும், இறைவனுக்கு சமமாக போற்றப்பட வேண்டியவர்கள்தான் ஆசிரியர்கள். வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டுள்ள எல்லாருக்குமே ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் ஆசிரியர்கள் ஏணிப்படியாக இருந்திருப்பார்கள் என்றால்…
பேய்ச்சி நாவல் குறித்த போலிஸ் புகார் சிறுபிள்ளத்தனமானது
பேய்ச்சி என்ற ம. நவீன் எழுதிய நாவல் கடந்த வருடம் (2020) அரசால் தடை செய்யப்பட்டது. அது ஒரு தரமான படைப்பாக இருந்தாலும் அதில் உள்ள சில பகுதிகளில் ஆபாசமான சொற்கள் இருப்பதால் அதைத் தடை செய்யக்கோரி புகார்கள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட அந்த பகுதிகளை அகற்ற நாவலாசிரியர் மறுத்து விட்டார். கலையில் அடிப்படை அம்சம் சொல்வதல்ல; காட்டுவது.…
வாங்க, சமத்துவத்திற்காக ஓடலாம்! – கோமாஸ் இயக்கம்
மலேசியாவில் சமத்துவம் என்பது ஒரு கேள்விக்குறியாகும். இருப்பினும், மலேசியர்கள் அனைவரும் ஒரு சுமுகமான வாழ்க்கையை அரவணைத்து வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம். விடுதலை மலேசியாவில் வாழ்கின்ற இரண்டாம் தலைமுறையினர், ஒரு இனபேதமற்ற சமத்துவமான மலேசியாவை உருவாக்க வேண்டும் என்ற சமூக சிந்தனையின் உந்துதல், கோமாஸ் மையத்தின் (PUSAT KOMAS) ஒரு திட்டமாக உருவானது. அது…
சந்தி சிரிக்கிறது இந்திய தலைவர்களின் சர்ச்சை! – இராகவன் கருப்பையா
கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவரும் 3 நமிடம் 42 விணாடிகளிலான ஒரு காணொலியைக் கண்டு சிரிப்பதா வெறுப்பதா வெட்கப்படுவதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை. முன்னாள் மனிதவள அமைச்சர் குலசேகரனும் இந்நாள் மனிதவள அமைச்சர் சரவணனும் அந்த காணொலியில் நன்றாகவே கூத்தடிக்கின்றனர் என்றுதான் சொல்ல…
நியமனத்தில் உள்ள அரசியல் கலப்பும், அக்ரில் சானியிடம் எதிர்பார்பதும்!
இராகவன் கருப்பையா - நாட்டின் 13ஆவது காவல்படைத் தலைவராக கடந்த 4ஆம் தேதியன்று பொறுப்பேற்ற அக்ரில் சானி மீது மக்களின் கழுகுப் பார்வை சற்று அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் புதிதாக பொறுப்பேற்ற காவல்படைத் தலைவர்களை விட இவருக்கு தீர்வு காணப்படாத வேலைகள் நிறையவே காத்திருக்கின்றன. கடந்த…
நம் நாட்டுத் தலைவர்களை மறக்கலாமா!
கி.சீலதாஸ் - இந்த நாட்டில் வாழ்ந்ததாக, வாழ்வதாகச் சொல்லப்படும் இந்தியர்கள், அவர்களின் நன்மைக்காக, உரிமைக்காக உழைத்தவர்கள் தங்களின் வாழ்க்கையையும் வாழ்நாளையும் எவ்வித சலனமும் இன்றி, கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல், நினைக்காமல் வாழ்ந்தவர்கள் யார்? இந்தியச் சமுதாயம் மனிதருள் மனிதராக வாழ வேண்டுமென ஏங்கினவர்கள் யார்? அவர்களின் நல்ல சிந்தைகள் கைகூடாது…
அரசனை நம்பி புருஷனை கைவிடுமா ம.இ.கா.? திக்கற்ற அரசியலில் இந்தியர்கள்!
இராகவன் கருப்பையா- நம் நாட்டின் அரசியல் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் அம்னோவின் தோழமை கட்சியாக பின்னி பிணைந்து உறவாடிய ம.இ.கா. தற்போது தீர்க்கமான ஒரு முடிவு செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் அரசாங்கத்தை கவிழ்த்து கொல்லைப்புற ஆட்சியமைத்த…
தடுப்புக் காவல் மரணம்: கொலையல்ல என்பதை அரசாங்கம் நிருபிக்க வேண்டும்,
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தடுப்புக்காவல் கைதிகள் அடையும் மர்மமான மரணங்களுக்கு இன்னமும் தீர்வு காணமுடியாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது. ஆகக் கடைசியாக கடந்த வாரத்தில் 40 வயதுடைய கணபதியின் இறப்பு இந்த சோகக்தொடருக்கு மேலும் உரமூட்டியுள்ளது. ஏழு வயது மற்றும் ஐந்து வயதுடைய இரு குழந்தைகளுக்குத்…
இந்நாட்டில் திராவிட தேசியம் தேவையா? – கி.சீலதாஸ்
இந்த 2021 ஆம் ஆண்டு ஓர் அற்புதமான சங்கமத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை மார்ச் அல்லது ஆப்ரில் மாத காலத்திலும், வைசாக்கி தினம் ஆப்ரில் பதிமூன்றாம் தேதியிலும், மலையாளப் புத்தாண்டு விஷு ஆப்ரில் பதினான்காம் தேதியிலும் கொண்டாடப்படுவது வழக்கம். நேப்பாளத்திலும் பதினான்கு ஆப்ரில்…
























