இந்திய பரப்புக்குள் சீனத் துருப்புக்கள்; இந்தியா எச்சரிக்கை

இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் 'தக்க நடவடிக்கை' எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார். இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்தோனி…

யாழ் வலிகாமத்தில் 6 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரிப்பு

இலங்கையின் வடக்கே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 6 ஆயிரத்து 381 ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1990-ம் ஆண்டில், இந்தப் பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட…

எனக்கென்னானு இருக்காத (புண்ணியவான்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

நைஜீரியா: மோதல்களில் சிக்கி 185 பேர் பலி

நைஜீரியாவின் வடக்கில் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த உக்கிர சண்டையில் குறைந்தபட்சம் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சாட் நாட்டுடனான எல்லைக்கு அருகில் உள்ள பாகா என்ற ஊரில் ராக்கெட் எறிகுண்டு வீச்சுகள் மற்றும் பெருமளவான துப்பாக்கிச் சூட்டுடன் கடந்த வெள்ளியன்று கடும்…

மனோ கணேசன் தரப்பினர் மீது தாக்குதல்

இலங்கையில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்பட்ட 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மீது சிலர் நடத்திய தாக்குதலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். கொட்டகலை நகரில் இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின்…

‘மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்’ – அமெரிக்கா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படும் இலங்கையில் பலவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா தனது நாடுகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் இலங்கை அரசாங்கம் இருப்பதாக…

இலங்கையில் நீதித்துறை சுதந்திர மீறல்களை ஆராய சட்டத்தரணிகள் குழு

இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படியாக இடம்பெறும் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிலையியற் குழுவொன்றை நியமித்துள்ளது. நாடுமுழுவதிலும் நடக்கின்ற இவ்வாறான சம்பவங்கள் பற்றி அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த தமது பிரதிநிதிகள் ஊடாகவும் பொதுமக்கள் ஊடாகவும் தகவல்களைப் பெற்று இலங்கை…

தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வோம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பணிகள் இடம்பெற்று வருவதோடு எதிர்வரும் மே-18ம் நாள் உலகத் தமிழர்களின் முரசறைவாக தமிழீழ சுதந்திரச சாசனம் முரசறையப்படவிருக்கின்றது. உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழினமே ஈழத் தமிழினத்தின் பாதுகாப்பு அரணாக மட்டுமல்லாது…

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான முஸாரப்புக்கு வீட்டுக்காவல்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான ஜெனரல் முஸாரப் அவர்கள் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் அவரது சொந்தவீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் 6 வருடங்களுக்கு முன்னதாக நீதிபதிகளை சட்டத்துக்கு விரோதமாக தடுத்து வைத்தது குறித்து நீதிமன்ற வழக்கு ஒன்றில் அவர் முன்னதாக ஆஜராகியிருந்தார். அப்போது அந்த நீதிபதிகள் மீது…

ஆஸியிலிருந்து 39 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 39 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை(18.4.13) ஆஸ்திரேலிய அரசின் சிறப்பு விமானம் மூலம் கொழும்பு விமான நிலையம் சென்றடைந்துள்ளனர். இதில் 31 தமிழர்கள், 8 பேர் சிங்களவர்கள் என்றும், அதிலும் இருவர் சிறுவர்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள்…

Hindraf’s victory riddled with ambiguity

COMMENT The Hindu Rights Action Force (Hindraf) has pulled off a victory by getting caretaker Prime Minister and BN chief Najib Abdul Razak to sign an agreement that promises action to fulfill four of the…

மலேசியத் தமிழர்கள் மடையர்களாக இருந்தால் இனி ஹிண்ட்ராப்பை நம்புவார்கள்!

ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களின் நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்று கூறியது தொடங்கி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலும் படித்தவர்கள்.  அவர்கள் தொணி இவ்வாறு…

இந்து மதத்தை இழிவுபடுத்தியவருக்கு நஜிப் அங்கிகாரம்; இந்தியர்கள் கொதிப்பு

இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்தியர்களிடையே கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) இந்து சமயத்தையும் இந்துக் கடவுள்களையும் பகிரங்கமாக இழிவுபடுத்திப் பேசி, இந்தியர்களின் மனதைப் புண்படுத்திய முன்னாள்…

யாழ் சிறார் காப்பகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் ?

யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள இரட்சணிய சேனை சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சிறுமிகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் சிறுமியொருவரைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த இல்லத்தில் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச்…

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட்

ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிடிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகாததால் நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதனால் நெல்லை 3வது நீதிமன்றத்தின் அடிசனல் செசன்ஸ் நீதிபதி பிடிவாரண்ட்…

பெங்களுரூ பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 13 பேர்…

பெங்களூரு : பெங்களூருவில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த ‌குண்டு வெடித்தது. இதில் 8 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் தற்போது பெங்களுரூவில் குண்டுவெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களுரூவையடுத்த, மல்லேஸ்வரம்…

“பீரின் சுவையே ஒருவரை குடிகாரராக்கும்”

ஒருவருக்கு பிடித்தமான பீரின் சுவை கூட அவரது மூளையை தூண்டி, மேலும் அவரை குடிக்கத்தூண்டுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பீரின் சுவையே அதை குடிப்பவரின் மூளையிலிருந்து டோபோமைன் என்கிற வேதிநொதிமத்தை உருவாக்கி அவர்கள் மேலும் அதிகமாக குடிக்கவேண்டும் என்கிற உணர்வை உருவாக்குவதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதாவது பீரில்…

இரானில் கடும் நிலநடுக்கம்- 40 பேர் பலி?, டில்லியில் கட்டிடங்கள்…

இரானின் தென்கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 7.8 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. இலகுவில் செல்ல முடியாத, சனநெருக்கடி மிக்க சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பலியாகியிருப்போரின் எண்ணிக்கை குறித்து குழப்பம் காணப்படுகிறது. எவரும் இதில் உயிரிழக்கவில்லை என்று மாகாண…

“ஆப்பிரிக்கர்களை நாய் போல நடத்துகின்றனர் இந்தியர்கள்”

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையிலும் சுற்றியுள்ள இடங்களிலும் தங்கியுள்ள ஆப்பிரிக்கர்கள், Read More

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அனாதையாகக் கிடந்த சூட்கேஸால் வெடிகுண்டுப் பீதி ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்ட உள்நாட்டு விமான முனையம் சமீபத்தில் தான் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு விமான புறப்பாடு பகுதியில் பயணிகள் வாகனங்களில் வந்து இறங்கும் இடத்தில் இன்று காலை 6…

அனைத்து துறைகளிலும் இந்திய பணியாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

இலங்கையில் கட்டுமானத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய பயணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது. இலங்கையின் முதலீட்டு சபையிடம் இந்திய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதை நிறுத்த இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது என்று அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

பேனர் அடித்து பணத்தை வீணடிக்காதீர், ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

பல நடிகர்கள் தங்கள் படங்கள் வெளியாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. தியேட்டர்களில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் செய்வது போன்ற விசயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்…

இலங்கைக்கான நிதியுதவியை 20% குறைக்கும் அமெரிக்கா

இலங்கைக்கு அளித்து வரும் நிதியுதவில் 20 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதேசமயம் மாலத்தீவுக்கான நிதி உதவியை அதிகரித்துள்ளது. இதற்கான பரிந்துரையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். இலங்கையின் வடகிழக்கு பகுதியில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா முயற்சி…