இன்று மாலை ரிட்ஜுவான், ஷாருதீனின் பத்திரிகையாளர் சந்திப்பு

அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்ற ஊகம் வெடித்திருக்கும் இவ்வேளையில், பிரதமர் திறை அமைச்சர் ரிட்ஜுவான் முகமட் யூசோப், பெர்சத்து தலைமையகத்தில் இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். அவருடன் மேலும் ஓர் அமைச்சர், ஷாருதீன் முகமட் சால்லேவும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…

கோவிட்-19: 103 புதிய பாதிப்புகள், 84 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை

மலேசியாவில் 103 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இன்றுவரை, மொத்தம் 7,732 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் அதிகரிப்பு வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட தொற்றுநோய்களுடன் தொடர்புடையது என்றுள்ளார். 103 புதிய பாதிப்புகளில், ஏழு இறக்குமதி…

“என்னை நீக்க விரும்பினால், நான் அலுவலகத்தில் காத்திருக்கிறேன்’

முகிதீன் யாசினுக்கு ஆதரவாக பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீனின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்னர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பெர்சத்து தலைமையகத்தில் டாக்டர் மகாதீர் முகமட் வந்து சேர்ந்துள்ளார். "நான் இப்போது பெர்சத்து தலைமையகத்தில் தான் இருக்கிறேன். என்னை பதவியிலிருந்து அகற்ற நினைத்தால், நான் அலுவலகத்தில் காத்திருக்கிறேன்"…

டாக்டர் மகாதீர்: முகிதீனை சரியான முறையில் வெளியேற்ற விரும்புகிறோம்

முகிதீன் யாசினை, உரிய செயல்முறையின் மூலம் பதவி நீக்கம் செய்ய விரும்புவதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். இன்று பிற்பகல் பெர்சத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாதீர், முகிதீனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு உச்ச மன்ற கூட்டத்தின் மூலம் மட்டுமே எடுக்கப்படும் என்றார்.…

‘ஓப் பெந்தேங்’ தீவிரம்

நோன்பு பெருநாளைக் கொண்டாட தங்கள் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள வெளிநாட்டினர் மலேசியாவுக்கு திரும்ப மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதற்காக, நாட்டின் அனைத்து எல்லைகளிலும் ‘ஓப் பெந்தேங்’-கை அரசாங்கம் தீவிரப்படுத்தும். கோவிட்-19 இறக்குமதி பாதிப்புகள் பரவுவதைத் தடுக்க, நாட்டினுள் நுழையும் ‘எலி பொந்துகளில்’ அதிகாரிகளின் கண்காணிப்பு மேம்படுத்தப்படும் என்றார் மூத்த…

“பல்கலைக்கழக கட்டணங்களைக் குறைக்கவும்” – சையத் சதிக்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது பெரும்பாலான பொருளாதார செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலையில், பல்கலைக்கழகக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான். கல்விக் கட்டணங்கள் இன்னும் செலுத்தப்பட வேண்டியிருப்பதாக மாணவர்களிடமிருந்து புகார்கள் வருவதாக அவர்…

‘முகிதீன் அம்னோவுக்குத் திரும்புவதும், மீண்டும் நீக்கப்படுவதும் ஆச்சரியமில்லை’

பிரதம மந்திரி முகிதீன் யாசின் பெர்சத்து கட்சியில் இருந்து வெளியேறி அம்னோவில் மீண்டும் இணைந்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் ஏ காதிர் ஜாசின் கூறினார். இருப்பினும், அம்னோவால் அவர் மீண்டும் ஏமாற்றப்படுவார் என்பதும் ஆச்சரியமாக இருக்காது என்று அவர் கூறினார்.…

சமீபத்திய நோன்பு பெருநாள் நடமாட்டத்தை தொடர்ந்து பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு

நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கோவிட்-19 பாதிப்புகளில் அதிகரிப்பைக் காணலாம் என்று மலேசிய சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "சமீபத்திய ஹரி ராயா கொண்டாட்டத்தின் போது மக்கள் மேற்கொண்ட மாநில எல்லை கடந்த பயணங்கள், உபசரிப்புகள், சந்திப்புகள் மற்றும்…

கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், 42 பேர் குணமடைந்துள்ளனர், இறப்புகள்…

தொடர்ச்சியான இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று கோவிட்-19 புதிய நோய்த்தொற்றின் எண்ணிக்கை மீண்டும் இரண்டு இலக்கத்திற்கு திரும்பியது. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 15 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,619…

கோவிட்-19: 187 புதிய பாதிப்புகள், 62 பேர் குணப்படுத்தப்பட்டனர், இறப்புகள்…

ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது நாளாக, நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான புதிய பாதிப்புகள் தொடர்ந்து மூன்று இலக்கங்களை பதிவு செய்கின்றன. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 187 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும்,…

குடிபோதையில் வாகனம் ஓட்டும் பிரச்சினை தீர்க்கப்படும் வரை மது விற்பனைக்கு…

குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் தீர்க்கப்படும் வரை உடனடியாக மது உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி வைக்குமாறு பாஸ், அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் ஒரு சிறப்பு அமைச்சரவைக் குழுவையும் அமைக்க வேண்டும் என்று பாஸ் தலைமை தகவல் அதிகாரி கமாருசமான்…

“தோல்வியை தவிர்க்க, சினி இடைத்தேர்தலைத் தவிர்க்கவும்”

முவாபாக்காட் நேசனலின் (Muafakat Nasional) பலத்தை எதிர்க்க முடியாது என்பதால், தோல்வியைத் தவிர்ப்பதற்காக சினி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று பக்காத்தான் ஹராப்பானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பி.என் மற்றும் பாஸ் கூட்டணியின் வலிமையுடன் பாக்காத்தான் ஈடுகொடுக்க முடியாததால் சினி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அம்னோ மூத்த பொதுச்செயலாளர் முஸ்தபா…

அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்

நோன்பு பெருநாளுக்குப் பிறகு அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று பொதுச் சேவை இயக்குநர் முகமட் கைருல் ஆதிப் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (பி.கே.பி.பி) போது மாநிலத்தின் எல்லை தாண்டும் தடையை மீறி, தங்கள்…

கட்சி தாவிய உறிப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் அழைப்பு

தேசிய கூட்டணிக்கு (பிஎன்) ஆதரவளிக்க, மாநில அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பினாங்கு அமைச்சர் செள கோன் யியோவுக்கு மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலிக் மெகதாப் முகமட் இஷாக் (பெர்தாம்) மற்றும் சோல்கிப்லி முகமட் லாசிம் (தெலுக்…

கோவிட்-19: மலேசியாவில் மீண்டும் மூன்று இலக்க பாதிப்புகள்

மலேசியாவில் மேலும் 172 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,417 ஆக உள்ளது. நண்பகல் நிலவரப்படி, மேலும் 34 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,979 ஆக உள்ளது. இது செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் தற்போதைய…

ஈகைத் திருநாளின் இரண்டாவது நாள்

இன்று நோன்பு பெருநாளின் இரண்டாம் நாள். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியதைத் தொடர்ந்து விருந்தினர் வருகை மற்றும் உபசரிப்புகளை இனி தொடர முடியாது. கோவிட்-19 பரவல் ஏற்படுவதைத் தடுக்க, நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் முதல் நாளில் மட்டுமே அரசாங்கம் அந்த அனுமதியை வழங்கியது. அதுவும், 20 நெருங்கிய குடும்ப…

டாக்டர் மகாதீரின் நோன்பு பெருநாள் வாழ்த்து

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுடன் நோன்பு பெருநாளை வரவேற்று கொண்டாடும் மலேசியர்களுக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் வாழ்த்து கூறிய அதே நேரத்தில், மலேசியாவில் கோவிட்-19 இன் நிலைமை மற்ற நாடுகளைப் போல் மோசமாக இல்லை என்பதற்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார். "இந்த…

கோவிட்-19: செப்பாங் குடிநுழைவு தடுப்பு முகாமில் புதிய திரளை

மலேசியாவில் மேலும் 60 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,245 ஆக உள்ளது. நண்பகல் நிலவரப்படி, மேலும் 33 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,945 அல்லது மொத்த நிகழ்வுகளில் 82 சதவீதமாகக் உள்ளது. குணப்படுத்தப்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு,…

எல்லை கடக்கும் முயற்சியில் சிலாங்கூர் முன்னிலை

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடை மீறியதற்காக 1,158 வாகனங்கள் திரும்பி செல்ல உத்தரவிடப்பட்டன. எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும், சிலர் நோன்பு பெருநாளை கொண்டாட கிராமத்திற்குத் திரும்ப நாடு முழுவதும் இன்னும் முயற்சிப்பதை இது குறிக்கிறது. நேற்று இரவு நாடு முழுவதுமான சாலைத் தடைகளில், சிலாங்கூர் (460 வழக்குகள்), மலாக்கா (121 வழக்குகள்)…

தேசிய மசூதிக்கு முன்னால் கூடியிருந்த கூட்டத்தை காவல்துறையினர் கலைத்தனர்

நோன்பு பெருநாள் தொழுகையை நடத்த கோலாலம்பூரில் உள்ள தேசிய மசூதிக்கு முன்னால் கூடியிருந்த ஒரு குழுவினரை போலீசார் இன்று கலைத்தனர். இந்த குழு இன்று அதிகாலை மசூதிக்கு வெளியே சென்று வழிபாட்டைச் செய்தது. இருப்பினும், தொழுகைக்கு முன்னர் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது…

மலேசியாகினியின் நோன்பு பெருநாள் வாழ்த்துகள்!

மலேசியாகினியின் நோன்பு பெருநாள் வாழ்த்துகள் மலேசியாகினி நமது முஸ்லிம் வாசகர்கள் அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. Selamat Hari Raya Aidilfitri dan Maaf Zahir Batin!

கோவிட்-19: 48 புதிய பாதிப்புகள், 53 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் மேலும் 48 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,185 ஆக உள்ளது. நண்பகல் நிலவரப்படி, 53 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,912 ஆக அல்லது மொத்த பாதிப்புகளில் 82.1 சதவீதமாக உள்ளது.…

இரண்டு பினாங்கு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பாக்காதானுக்கான ஆதரவைத் திரும்பப்…

பினாங்கில் உள்ள இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பாக்காத்தான் ஹராப்பான் மாநில அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். பெர்தாம் சட்டமன்ற உறுப்பினர் காலித் மெஹ்தாப் முகமட் இஷாக் மற்றும் தெலுக் பஹாங் சட்டமன்ற உறுப்பினர் சுல்கிப்லி முகமட் லாசிம் ஆகியோர் மலேசியாகினியிடம் இந்த விஷயத்தை இன்று காலை உறுதிப்படுத்தினர்.…