கோவிட்-19: 19 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு

கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று 277 பாதிப்புகளாக உயர்ந்து, இன்று மீண்டும் இரட்டை இலக்கங்களாக குறைந்துள்ளது. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 19 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இதனால் மொத்த…

இவ்வாண்டு ஒரு மில்லியன் மக்கள் வேலையின்றி இருப்பார்கள்

புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் வேலையில்லா விகிதம் 2020 ஆம் ஆண்டில் 5.5 சதவிகிதம் அல்லது 860,000க்கும் அதிகமான வேலையற்றோர் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று புத்ராஜெயாவில் குறுகிய கால பொருளாதார மீட்சித் திட்டத்தை வெளியிட்ட போது முகிதீன் இது குறித்து பேசினார். இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மலேசிய…

உலகச் சூழல் நாள் (We Don’t Deserve This Planet)

சங்கா சின்னையா | உலகச் சூழல் நாள் (We Don't Deserve This Planet) ஒவ்வோர் ஆண்டும் சூன் 5ஆம் நாள் உலகச் சூழல் நாள் (World Environment Day) கொண்டாடப்படுகிறது. பல நாள்களைக் கொண்டாடும் நாம் இச்சூழல் நாள் ஏன் கொண்டாடப்படுகிறது, ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்பதைச்…

இன்று பிற்பகல் பிரதமரின் சிறப்பு செய்தி, மக்கள் எதிர்பார்ப்பு

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி.பி) வரும் செவ்வாய்க்கிழமை நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்தும், குறுகிய கால பொருளாதார மீட்புத் திட்டம் குறித்தும் பிரதமர் முகிதீன் யாசினின் சிறப்பு செய்தி இன்று மக்களால் நிச்சயம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு செய்தி உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் சமூக ஊடகங்களின்…

டாக்டர் மகாதீர் இனி பெர்சத்து கட்சி உறுப்பினர் அல்ல –…

செர்சத்து கட்சியில் டாக்டர் மகாதீர் முகமதுவின் உறுப்பிய உரிமை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என்று நேற்று பெர்சத்து உச்ச மன்ற (எம்.பி.டி) கூட்டம் உறுதி செய்தது. டாக்டர் மகாதீரைத் தவிர, உடனடி உறுப்பிய உரிமையை இழந்தவர்களின் பட்டியலில் முக்ரிஸ் மகாதிர், சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான், அமிருதீன்…

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: காவல்துறை அதிகாரி மீது புதிய குற்றச்சாட்டுகள்…

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்ஜின் மரணத்திற்கு நேரடி காரணமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியான டெரெக் சாவின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது இரண்டாம் நிலை கொலை (திட்டமிடப்படாத கொலை)…

15வது பொதுத்தேர்தல் மற்றும் சினி இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க ஜாஹிட்…

இரண்டு நாட்களுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில், 15வது பொதுத் தேர்தல் மற்றும் சினி இடைத்தேர்தலுக்கான தயார் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. கட்சியின் வட்டாரங்களின்படி, இது புத்ராஜெயாவுக்கும், பெர்சத்து அவைத் தலைவரான டாக்டர்…

கோவிட்-19: 277 புதிய பாதிப்புகள், இறப்புகள் ஏதும் இல்லை

நீண்ட நாட்களாக இரண்டு இலக்கங்களில் இருந்த கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை, இன்று மீண்டும் மூன்று இலக்கத்திற்கு உயர்ந்துள்ளது. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 277 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். இதனால்…

மகாதீரின் முகாமில் இருந்து மூன்று பெர்சத்து தலைவர்களை முகிதீன் வெளியேற்றினார்

டாக்டர் மகாதிர் முகமதுக்கு ஆதரவாளர்களாக அறியப்பட்ட மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள மூன்று பெர்சத்து தலைவர்கள் முகிதீன் யாசினால் நீக்கம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் பெர்சத்து உச்ச மன்றத்தின் உறுப்பினர் அக்ரம்ஸ்ஷா முவாம்மார் உபைடா சனூசி, பினாங்கு பெர்சத்து தலைவர் மர்சுகி யாஹ்யா மற்றும் கெடா…

முதல் காலாண்டில் வேலை இழப்புகள் 42 சதவீதம் அதிகரித்துள்ளன –…

கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் காலாண்டில் நாட்டில் வேலை இழப்புகள் 42 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) வேலை காப்புறுதி பிரிவு (எஸ்ஐபி) Sistem Insurans Pekerjaan (SIP) Pertubuhan Keselamatan Sosial (Perkeso) தெரிவித்துள்ளது. 'வேலைவாய்ப்பு, 2020 ஆம் ஆண்டின்…

பள்ளிகள் விரைவில் திறக்கப்படும்!

சங்கா சின்னையா | பள்ளிகள் விரைவில் திறக்கப்படுமா? இன்று ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப்படுகின்ற முக்கிய தலைப்புகளில் இதுவும் ஒன்று. பள்ளிகள் திறக்கப்படக் கூடாது என்பவர்களின் வாதம் இவைதாம்: அ. அவ்வாறு திறக்கப்பட்டால் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா? ஆ. குழந்தைகள் இயல்பாகவே குறும்புத்தனம் மிகுந்தவர்கள். அவர்களால் கூடல் இடைவெளியைப்…

கோவிட்-19: 20 புதிய பாதிப்புகள், 15 இறக்குமதி பாதிப்புகள்

2.6.2020 : இன்று மொத்தம் 20 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இன்றுவரையில் பதிவுசெய்யப்பட்ட மொத்தம் பாதிப்புகள் 7,877 ஆகும். மொத்த செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 1,292 ஆகும். சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய 20 பாதிப்புகளில், 15 இறக்குமதி பாதிப்புகள்…

முகிதீன் குரலை ஒத்திருந்த ஆடியோ, MACCஐ அடைந்தது

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெர்சத்து கட்சியில் சேர வேண்டும் என்றால் அவர்களுக்கு அமைச்சர் அல்லது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி) பதவிகளை கொடுத்து 'ஈர்க்கப்பட வேண்டும்' என்று பரிந்துரைக்கும் முகிதீன் யாசினின் குரலை ஒத்திருந்த ஆடியோ பதிவு ஒன்று வெளிவந்ததைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்.ஏ.சி.சி)…

கோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 51 பேர் குணமடைந்தார்

1.6.2020 - மலேசியாவில் மேலும் 38 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரையிலான மொத்த பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,819 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில் 26 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 12…

டாக்டர் மகாதீரின் நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது’ – ரோசோல் வாஹித்

உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் துறையின் துணை அமைச்சர் ரோசோல் வாஹித், எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் டாக்டர் மகாதிர் முகமது மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை 'பைத்தியக்காரத்தனமான' செயலாக கருதுவதாகக் கூறியுள்ளார். எதிர்க்கட்சியின் தரப்பில் சாய்த்த அந்த அரசியல்வாதிகள் 'மன்னிக்க முடியாத பாவங்களை' செய்ததாகவும் ரோசோல் கூறினார்.…

சையத் சாதிக் நீக்கப்பட்டதால் மூவார் பெர்சத்து கட்சியில் பிளவு

பெர்சத்து கட்சியின் உறுப்பியத்தை இழந்ததை தொடர்ந்து, சையத் சாதிக் அப்துல் ரஹ்மானின் தொகுதியான மூவாரில் உள்ள பெர்சத்து கட்சியில் இப்பொது பிளவு ஏற்பட்டுள்ளது. மூவார் பெர்சத்து கட்சி உறுப்பினர்கள் சையத் சாதிக்கிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்ட ஒரு நாள் கழித்து, இன்று அந்த அறிக்கையில் கையெழுத்திட்ட 21…

கோவிட்-19: 57 புதிய பாதிப்புகள் , 43 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை

மலேசியாவில் மேலும் 57 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்றுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,819 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் 10 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 47 உள்ளூர் நோய்த்தொற்றுகள் என்றார்.…

தானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) செயல்பாட்டு நேரம் நாளை இயல்பு…

அன்றாட வங்கி நடவடிக்கைகளுக்கு வசதியாக அமையும் வண்ணம் தானியங்கி பண இயந்திரத்தின் செயல்பாடு, நாளை முதல் மீண்டும் வழக்கம் போல் தொடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். "இருப்பினும், ஏடிஎம் இயந்திரங்களைக் கையாளும் போது பொதுமக்கள் கூடல் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்" என்று அவர்…

கோவிட்-19: 30 புதிய பாதிப்புகள், 17 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை

மலேசியாவில் மேலும் 30 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,762 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் மூன்று இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 27 உள்ளூர் தொற்றுகள் என்றார்.…

“தேசிய கூட்டணிக்கே ஆதரவு” – ரிட்ஜுவான்

நேற்று, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதாக எதிர்ப்பார்க்கப்பட்ட பிரதமர் திணைக்களத்தில் அமைச்சர் முகமட் ரிட்ஜுவான் யூசோப்பின் பெயர் பரவலாக குறிப்பிடப்பட்டது. சிறப்பு கடமைகளின் அமைச்சராக முகிதீன் யாசினால் நியமிக்கப்பட்ட ரிட்ஜுவான், இன்று அனைவருக்கும் தனது செய்தியை வெளியிட்டுள்ளார். அனைத்து அரசியல் தலைவர்களும் கோவிட்-19 பாதிப்பைத்…

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா?

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா? - ஜி.கே கணேசன் - ஒரு வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதியும் ஆவார். [1]. வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியின் வரலாறு (Westminster system) மலேசிய அரசியலமைப்பு முடியாட்சியும் நமது நாடாளுமன்ற அமைப்பும் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை. உலகெங்கிலும்…

ஜூன் 1 முதல் மாநில எல்லை தாண்ட நிபந்தனையுடனான அனுமதி…

மாநிலத்தின் எல்லை தாண்டிய பயணத் தடையை திரும்பப் பெறுவது குறித்து நிபந்தனை விதிக்கப்படும் என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்துள்ளார். ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி, வேலை, மருத்துவ மற்றும் அவசர சேவைகளுக்காக மாநில எல்லை தாண்டும் நடவடிக்கைகள் மீண்டும் அனுமதிக்கப்படும்…

பெர்சத்து உறுப்பினர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் – முகிதீன்

டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கட்சியின் நடவடிக்கை ஓர் அவசர முடிவில்லை என்று முகிதீன் யாசின் இன்று தெரிவித்தார். எனவே, தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து பொறுமையாக இருக்க வேண்டும் என்று பெர்சத்துவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முகிதீன் வலியுறுத்தினார். "முன்னாள் ஐந்து உறுப்பினர்களான டாக்டர்…