அவசரகாலச் சட்டங்கள் ரத்து செய்யப்படவில்லை – கி.சீலதாஸ்

மலேசிய அரசியல்வாதிகள் அடிக்கடி அரசமைப்புச் சட்டச் சிக்கல்களைக் கிளப்புவதில் ஆர்வமுடையவர்களாகத் திகழ்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது நாடாளுமன்றமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கோவிட்-19 காரணமாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கும். அதன் கடுமையும், கொடுமையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிப்புற்றோரின் எண்ணிக்கையும்…

நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 2

இந்த நீல பெருங்கடல் வியூகம் (Blue Ocean Strategy), யாரோ ஒரு சில கல்விமான்களின் ஏரணச் சிந்தனையில் உதித்த உத்தி அல்ல. இது கல்விக் கோட்பாடும் (academic theory) அல்ல. இது நடைமுறையில், பயன்பாட்டில் உள்ள உத்திகளின் தொகுப்பு. காலங்காலமாக (100 ஆண்டுக்கும் மேல்) நிலைத்து நிற்கும் பல்வேறு…

நீல பெருங்கடல் வியூகம்  – பாகம் 1

வணிக முன்னேற்றம் தொடர்பான உத்தியாக தொடங்கி, இன்று எல்லா வகையான முன்னேற்றத்திற்கும் தோதான ஓர் உத்தியாக, ஒரு பகுத்தாய்வுக் கருவியாக, ஒரு பகுப்பாய்வுச் சிந்தனை ஊக்கியாக மிளிர்கிறது நீல பெருங்கடல் உத்தி அல்லது வியூகம் (Blue Ocean Strategy). இயக்கம் நடத்துவோர், சொந்தத் தொழில் புரிவோர், கல்விக் கூடங்களை…

கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்குங்கள் – கவிதா கருணாநிதி

தற்போது கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும் என்ற அரசாங்க ஆலோசனையின் கீழ் நம்மில் பெரும்பாலோர் இந்தத் தடுப்பூசியைப் போட வரிசையில் நிற்கிறோம். இருப்பினும் ஒரு தரப்பினர், இந்தத் தடுப்பூசியைப் போட மறுக்கின்றனர். இது ஒவ்வொருவரின் மனநிலையைச் சாற்றிய ஒன்றாகக் கருதினாலும், எது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது என…

நாடாளுமன்றமா, நாடகமேடையா?

இராகவன் கருப்பையா - ஜூலை 26ஆம் தேதியிலிருந்து 5 நாள்களுக்கு நாடாளுமன்றம் கூடும் என அரசாங்கம் அறிவித்த அன்றே, நடக்கவிருக்கும் இலட்சணத்தை கணித்திருப்பார்கள், அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட நாட்டு மக்கள். தற்போது உள்ள 220 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தரங்கெட்ட போக்கை அறிந்து வைத்திருக்கும் பொது மக்கள் அந்த…

அரசியல் பொறுப்புணர்வு உணர்த்த புரட்சிதான் ஆயுதமா? – கி.சீலதாஸ்

இராமாயண பாலகண்டத்தில் அற்புதமான ஒரு காட்சி. மாமுனிவர் விசுவாமித்திரர் தசரத மன்னனைக் காணுவான் வேண்டி பின்னவனின் அரண்மனைக்குச் செல்கிறார். விசுவாமித்திரரின் வருகையை ஏவலாளியிடம் இருந்து அறிந்த தசரதன் உடனடியாக மாமுனிவரை வரவேற்கச் சென்று அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ததும், விசுவாமித்திரர் திருப்தியடைந்து, “அயோத்திய மக்களின் நல்வாழ்வு, நாட்டு வளம்”…

இனவாதமும் சமயமும் கொண்ட அரசியல் நாட்டுக்கு நல்லதா?

கி.சீலதாஸ்- நம் நாடு எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது என மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அரசியல் குழப்பம் நீடிப்பதைக் காணும் மக்கள் கவலையில் வெம்புகிறார்கள். இதை, “இன்றைய அரசியல் நிலையைத் தவறாகப் புரிந்துகொள்வோரின் மனநிலை” என்ற பலவீனமான சாக்குப்போக்கு சொல்வோர் ஏராளம். ஆனால், அதுபோன்ற குற்றச்சாட்டு எடுபடாது. இந்த நாட்டில்…

கோவிட் இறைவனால் தரப்பட்டதா? யாருக்கு அதிகாரம், அரசா? மாமன்னரா?

 கி.சீலதாஸ் -  நாட்டில் நிலவிய கோவிட்-19 பெருந்தோற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பிரதமர் டான் ஶ்ரீ முஹிடீன் யாசின் நல்கிய ஆலோசனையை ஏற்று நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார் மாமன்னர். இதன் விளைவு, நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டது. நெருக்கடி காலத்தின்போது நாடாளுமன்றத்தைக் கூட்ட இயலாது. பெருந்தோற்று நோயின் கொடுமையைக்…

பாட்டாளிகள் பணத்தில் வாங்கப்பட்ட ரினி தோட்ட நிலம், இப்போது அவர்களுக்குச்…

நாமதி | 1978-ல், ஜொகூர், ஸ்கூடாய், ரினி தோட்டத்தில், 6.5 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள், தற்போது அந்நிலம் தங்களுக்குச் சொந்தமானதாக இல்லை என்பதை மலேசியாகினியிடம் வருத்தத்துடன் தெரிவித்தனர். 2021, ஜூலை 2-ம் தேதி, தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகம் (கே.பி.ஜே.) மற்றும் அதன் தலைமைச் செயலாளர் எஸ் கோபாலகிருஷ்ணன்…

பரிதாபநிலையில் அம்னோ! இந்தியர்கள்?  

இராகவன் கருப்பையா - மலேசிய அரசியல் வானில் அஞ்சா சிங்கமாகக் கொடி கட்டிப் பறந்த அம்னோ தற்போது கோவிட் கண்ட நோயாளி போல் மூச்சுவிட தடுமாறி  அல்லோலப்படுவதைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பேராசைப்பட்டு பிரதமர் மஹியாடினின் அரசாங்கத்தில் இணையாமல் கொஞ்சம் பொறுமையாக எதிர்க்கட்சியாகவே …

நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் – பிரதமருக்கா- மாமன்னருக்கா?

 கி.சீலதாஸ் - மனிதன் இயல்பாகவே அச்சத்தில் வாழ்பவன், அவ்வாறு வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டான். சுமார் ஓராண்டுக்கு மேலாக அவன் புது விதமான அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். பல இலட்சக் கணக்கில் மனித உயிரிழப்பு உலகெங்கும் நேர்ந்தது. இதற்குக் காரணம் கோவிட்-19. அது, இதுகாறும் மனிதனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு…

பொம்மலாட்ட அரசியலில் கொரோனா ஆட்சி!

இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டு முற்பகுதியில் பிரதமர் மஹியாடின் கொல்லைப்புறமாக வந்து அரசாங்கத்தை  கைப்பற்றாமலிருந்து பக்காத்தான் ஹராப்பானே இன்னும் ஆட்சியிலிருந்தால் கோறனி நச்சிலின் ஆட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என்பதுவே மக்களின் தற்போதைய பொதுவான கருத்தாக உள்ளது. ஆட்சி மாற்றமும் நோய்த் தொற்றும் கிட்டதட்ட ஒரே சமயத்தில் நம்மைப் பீடித்த இரு…

 கோவிட் அரசியலில் சிக்கிய மக்கள் – பூனைக்கு யார் மணி…

கி. சீலதாஸ் - நாட்டில் தொடர்கின்ற முழு அடைப்பு பல பிரச்சினைகள் உருவெடுக்க உதவுகிறது எனின் அது மிகைப்படுத்துவதாகக் கருத இயலாது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டதற்கான காரணங்களை ஆய்ந்துப் பார்க்கும்போது அது வணிக முடக்கம், வணிகக் கட்டுப்பாடு, நடமாட்டத் தடை, உற்பத்தி சாலைகள் இயங்க முடியவில்லை, முழுமையாகச் செயல்பட முடியவில்லை.…

மக்களவை எப்போது கூடும், இன்னல்கள் எப்போது தீரும்?

இராகவன் கருப்பையா - கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி நாட்டில் அவசரகாலச் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்து வருகிற போதிலும் கடந்த சில வாரங்களாக அந்த நெருக்குதல் அதிகம் தீவிரமடைந்துள்ளது. மக்களவையை விரைவில் கூட்டுங்கள் என பேரரசர்…

பெரிக்காத்தான் தோல்விக்கு பொறுப்பேற்குமா?

மு குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் , ஈப்போ பாராட் .கோவிட் தடுப்பூசியை கையாளும்  விதத்தில் மிக மோசமான அடைவு நிலையை  கொண்டிருக்கும் பெரிக்காத்தான் அரசாங்கம்  அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக  கையாண்ட விதம் குறித்த  குற்றச்சாட்டுகளுக்கு  பதில் சொல்லியாக வேண்டும்.இதுவே அதன்  படு தோல்விக்கு முக்கிய காரணமாக  விளங்குகிறது…

சீனாவின் கோவிட்-19 தொடர்பு – விடை காண துடிக்கிறது மனித…

கி. சீலதாஸ் - வரும் ஜூலை மாத முதல் நாள் சீன மக்கள் குடியரசு தமது கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும். பலவிதமான சிக்கல்கள், துயர்கள், உயிர் இழப்புகள் எனத் தொடர்ந்து பரவும் கோவிட்-19 தொற்றுநோய் உலகை வருத்திக் கொண்டிருக்கும் இவ்வேளை சீனாவின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்பதைக் காண…

மீண்டும், ஆட்சி பீடத்தில் அமர  துடிக்கும் மகாதீர்

இராகவன் கருப்பையா- விடாக்கண்டன் கொடாக்கண்டன் எனும் வாசகம் அநேகமாக முன்னாள் பிரதமர்  மகாதீருக்கு மிகப் பொருத்தமாக அமையும். கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 வருடங்களுக்கும் 2018ஆம் ஆண்டிலிருந்து 22 மாதங்களுக்கும் நாட்டை ஆண்ட அவர் எப்படியாவது இன்னொரு முறை தலைமை பொறுப்பை ஏற்கத் துடித்துக் கொண்டிருப்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த…

கணினிவழியான பொய் செய்திகள், ஒரு ‘பயங்கரவாத’ கலாச்சாரம்!    

கி.சீலதாஸ்- பொய் தகவல் கலாச்சாரம் வளர்வதற்கு, அது தீங்கு விளைவிக்க காரணியாக மாறுவதற்கு இன்றைய விஞ்ஞானம் உதவுகிறது. முகநூல் (ஃபேஸ்புக்), புலனம் (வாட்ஸ்எப்), கீச்சகம் (டுவிட்டர்) போன்ற சமூக ஊடகங்கள் செய்திகளை – அவை உண்மையோ, பொய்யோ என்பதைப் பொருட்படுத்தாது உடனுக்குடன் பரவ உதவுகின்றன. அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் தங்களின்…

ஐ.பி.சி.எம்.சி. என்பது இலவு காத்த கிளிதானா?

இராகவன் கருப்பையா -காவல்துறையினர் புரியும் அராஜகங்களை விசாரணை செய்வதற்கு ஐ.பி.சி.எம்.சி. எனப்படும் விசாரணை ஆணையம் அமைக்கப் பரிந்துரைகள் தொடங்கப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆனால் இவ்விவகாரம் இன்னமும் 'இலவு காத்த கிளியைப் போல' உள்ளது நம் அனைவருக்குமே ஏமாற்றமளிக்கும் விசயமாகும். இந்த அக்கரையின்மைக்கு யார் காரணம் என்று தெளிவாகக் குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்குப் பல தரப்பினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் நாம்…

கோவிட்-19 மரணம் சொர்க்கத்துக்கு வழியா?

கி.சீலதாஸ் -     கோவிட்-19 தொற்றுநோய் தாக்க ஆரம்பித்தபோது அது தன் உறவினன் சார்ஸ் போல கட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டதால் ஒதுங்கிவிடும் என்று நம்பப்பட்டது. அது தவறான நம்பிக்கையென இப்பொழுது தெளிவாகிறது. அந்தத் தொற்றுநோய் 2019ஆம் ஆண்டில் ஆரம்பித்தது போல் அல்லாமல் சார்ஸைவிட மாறுபட்ட வடிவம்கொள்ளும் தரத்தைக் கொண்டிருக்கிறது. இதனால்…

தடுப்புக்காவல் மரணங்கள்: பிரதமர் என்ன சொன்னார்?

இராகவன் கருப்பையா - கடந்த மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த தடுப்புக்காவல் கைதி கணபதி தொடர்பான சலசலப்புகளும் கண்டனங்களும் கோபமும் சோகமும் இன்னும் தணிந்திராத நிலையில் ஒரு மாதம் கழித்து அதே காவல் நிலையத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு மரணமும் ஜொகூரில் நிகழ்ந்த ஒரு மரணமும் நம்மை மேலும் உலுக்கியுள்ளது. கணபதி…

தடுப்புக்காவலில் பலியாகும் உயிரும், அரசின் கடமையும் – கி.சீலதாஸ்

ஒரு மனிதனின் உயிரை யாராலும் பறிக்க இயலாது. சில குறிப்பிட்ட சட்டங்களின் வழி மட்டும்தான் அது இயலும். நமது வாழ்க்கை பயணம் எவ்வித தடையுமின்றி, தொல்லையுமின்றி, இடைஞ்சலுமின்றி சுமூகமாக அமைந்திருக்க வேண்டுமென நாம் விரும்புவதில், அக்கறை கொண்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. இப்படிப்பட்ட வாழ்க்கைக்கான அடித்தளம் அரசமைப்புச் சட்டத்தில்…