இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.…
பெரிக்காத்தான் தோல்விக்கு பொறுப்பேற்குமா?
மு குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் , ஈப்போ பாராட் .கோவிட் தடுப்பூசியை கையாளும் விதத்தில் மிக மோசமான அடைவு நிலையை கொண்டிருக்கும் பெரிக்காத்தான் அரசாங்கம் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக கையாண்ட விதம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.இதுவே அதன் படு தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது…
சீனாவின் கோவிட்-19 தொடர்பு – விடை காண துடிக்கிறது மனித…
கி. சீலதாஸ் - வரும் ஜூலை மாத முதல் நாள் சீன மக்கள் குடியரசு தமது கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும். பலவிதமான சிக்கல்கள், துயர்கள், உயிர் இழப்புகள் எனத் தொடர்ந்து பரவும் கோவிட்-19 தொற்றுநோய் உலகை வருத்திக் கொண்டிருக்கும் இவ்வேளை சீனாவின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்பதைக் காண…
மீண்டும், ஆட்சி பீடத்தில் அமர துடிக்கும் மகாதீர்
இராகவன் கருப்பையா- விடாக்கண்டன் கொடாக்கண்டன் எனும் வாசகம் அநேகமாக முன்னாள் பிரதமர் மகாதீருக்கு மிகப் பொருத்தமாக அமையும். கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 வருடங்களுக்கும் 2018ஆம் ஆண்டிலிருந்து 22 மாதங்களுக்கும் நாட்டை ஆண்ட அவர் எப்படியாவது இன்னொரு முறை தலைமை பொறுப்பை ஏற்கத் துடித்துக் கொண்டிருப்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த…
கணினிவழியான பொய் செய்திகள், ஒரு ‘பயங்கரவாத’ கலாச்சாரம்!
கி.சீலதாஸ்- பொய் தகவல் கலாச்சாரம் வளர்வதற்கு, அது தீங்கு விளைவிக்க காரணியாக மாறுவதற்கு இன்றைய விஞ்ஞானம் உதவுகிறது. முகநூல் (ஃபேஸ்புக்), புலனம் (வாட்ஸ்எப்), கீச்சகம் (டுவிட்டர்) போன்ற சமூக ஊடகங்கள் செய்திகளை – அவை உண்மையோ, பொய்யோ என்பதைப் பொருட்படுத்தாது உடனுக்குடன் பரவ உதவுகின்றன. அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் தங்களின்…
ஐ.பி.சி.எம்.சி. என்பது இலவு காத்த கிளிதானா?
இராகவன் கருப்பையா -காவல்துறையினர் புரியும் அராஜகங்களை விசாரணை செய்வதற்கு ஐ.பி.சி.எம்.சி. எனப்படும் விசாரணை ஆணையம் அமைக்கப் பரிந்துரைகள் தொடங்கப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆனால் இவ்விவகாரம் இன்னமும் 'இலவு காத்த கிளியைப் போல' உள்ளது நம் அனைவருக்குமே ஏமாற்றமளிக்கும் விசயமாகும். இந்த அக்கரையின்மைக்கு யார் காரணம் என்று தெளிவாகக் குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்குப் பல தரப்பினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் நாம்…
கோவிட்-19 மரணம் சொர்க்கத்துக்கு வழியா?
கி.சீலதாஸ் - கோவிட்-19 தொற்றுநோய் தாக்க ஆரம்பித்தபோது அது தன் உறவினன் சார்ஸ் போல கட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டதால் ஒதுங்கிவிடும் என்று நம்பப்பட்டது. அது தவறான நம்பிக்கையென இப்பொழுது தெளிவாகிறது. அந்தத் தொற்றுநோய் 2019ஆம் ஆண்டில் ஆரம்பித்தது போல் அல்லாமல் சார்ஸைவிட மாறுபட்ட வடிவம்கொள்ளும் தரத்தைக் கொண்டிருக்கிறது. இதனால்…
தடுப்புக்காவல் மரணங்கள்: பிரதமர் என்ன சொன்னார்?
இராகவன் கருப்பையா - கடந்த மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த தடுப்புக்காவல் கைதி கணபதி தொடர்பான சலசலப்புகளும் கண்டனங்களும் கோபமும் சோகமும் இன்னும் தணிந்திராத நிலையில் ஒரு மாதம் கழித்து அதே காவல் நிலையத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு மரணமும் ஜொகூரில் நிகழ்ந்த ஒரு மரணமும் நம்மை மேலும் உலுக்கியுள்ளது. கணபதி…
தடுப்புக்காவலில் பலியாகும் உயிரும், அரசின் கடமையும் – கி.சீலதாஸ்
ஒரு மனிதனின் உயிரை யாராலும் பறிக்க இயலாது. சில குறிப்பிட்ட சட்டங்களின் வழி மட்டும்தான் அது இயலும். நமது வாழ்க்கை பயணம் எவ்வித தடையுமின்றி, தொல்லையுமின்றி, இடைஞ்சலுமின்றி சுமூகமாக அமைந்திருக்க வேண்டுமென நாம் விரும்புவதில், அக்கறை கொண்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. இப்படிப்பட்ட வாழ்க்கைக்கான அடித்தளம் அரசமைப்புச் சட்டத்தில்…
இனவாத பரிணாம அரசியலில் சிக்கிய மக்கள்!
இராகவன் கருப்பையா- தேசிய முன்னணியில் இருக்கும் அம்னோவுக்கு நிகராக எதிரணியான பக்காத்தான் ஹராப்பானிலும்ஒரு மலாய்க்கார கட்சி இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதீர் கண்ட கனவின் விளைவுதான் பெர்சத்துவின் உதயம் என்பது நமக்குத் தெரியும். இனவாதம் வழி ஒரு பெரும்பான்மையைப் பெற்று அதில் அதிகாரத்தைச் சுவைக்கும் அரசியலாகும். 1969-க்கு பிறகு உண்டான அரசியல் பரிமாணம் ஒரு புதிய…
தமிழ்ப்பள்ளி நமது உரிமை: அரசாங்கம் திட்டவட்டம்!
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் உள்ள தமிழ், சீனப் பள்ளிகள் அரசியலமைப்புக்கு உள்பட்ட ஒன்று என அரசாங்கம் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது இவ்வாண்டில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ஒரு இனிப்பு செய்தியென்றால் அது மிகையில்லை. தமிழ், சீனப்பள்ளிகள் நம் நாட்டில் சட்டவிரோதமாக இயங்குகின்றன என தீபகற்ப மலேசிய மாணவர்கள் சங்கம்,…
கல்வியின்யின் பரிணாமமும் அதில் அடைக்கலமாகும் தன்னலமும்
கி.சீலதாஸ் - ஒரு நாட்டின் கல்விக் கொள்கை, அதன் தரம் காலத்தின் மாற்றத்தைப் பிரதிபலிக்க வேண்டும். நாட்டின் கல்வி முறை சமுதாயச் சூழல்களைக் கவனத்தில் கொண்டிருக்கின்றனவா என நாட்டு நலனில் கரிசனம் கொண்ட குடிமகன் கேட்க உரிமை உண்டு. அதற்கான பதிலைச் சொல்லும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. எந்த…
அறிவார்ந்த ஆசிரியம், புதிய தலைமுறை ஆக்கம் – குமரன் வேலு
ஆசிரியர் தினச் சிறப்புக் கட்டுரை | இந்த முழக்கவரி, 21-ஆம் நூற்றாண்டுக்கு எவ்வளவு பொருத்தம் என்பதைப் பார்ப்போம். Berguru எனும் சொல்லாடல் ஆசிரியராக இருத்தலும் ஆசிரியரைப் பெற்றிருத்தலும் எனும் இருமைப் பண்பினைக் குறிக்கிறது. #ஆசிரியராக இருத்தல் ஆசிரியராக இருந்தால் தன்னிடம் இருக்கும் ஆர்ந்த அறிவின் உதவியால் புதியத் தலைமுறையை…
பேய்ச்சி நாவல் குறித்த போலிஸ் புகார் சிறுபிள்ளத்தனமானது
பேய்ச்சி என்ற ம. நவீன் எழுதிய நாவல் கடந்த வருடம் (2020) அரசால் தடை செய்யப்பட்டது. அது ஒரு தரமான படைப்பாக இருந்தாலும் அதில் உள்ள சில பகுதிகளில் ஆபாசமான சொற்கள் இருப்பதால் அதைத் தடை செய்யக்கோரி புகார்கள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட அந்த பகுதிகளை அகற்ற நாவலாசிரியர் மறுத்து விட்டார். கலையில் அடிப்படை அம்சம் சொல்வதல்ல; காட்டுவது.…
வாங்க, சமத்துவத்திற்காக ஓடலாம்! – கோமாஸ் இயக்கம்
மலேசியாவில் சமத்துவம் என்பது ஒரு கேள்விக்குறியாகும். இருப்பினும், மலேசியர்கள் அனைவரும் ஒரு சுமுகமான வாழ்க்கையை அரவணைத்து வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம். விடுதலை மலேசியாவில் வாழ்கின்ற இரண்டாம் தலைமுறையினர், ஒரு இனபேதமற்ற சமத்துவமான மலேசியாவை உருவாக்க வேண்டும் என்ற சமூக சிந்தனையின் உந்துதல், கோமாஸ் மையத்தின் (PUSAT KOMAS) ஒரு திட்டமாக உருவானது. அது…
நியமனத்தில் உள்ள அரசியல் கலப்பும், அக்ரில் சானியிடம் எதிர்பார்பதும்!
இராகவன் கருப்பையா - நாட்டின் 13ஆவது காவல்படைத் தலைவராக கடந்த 4ஆம் தேதியன்று பொறுப்பேற்ற அக்ரில் சானி மீது மக்களின் கழுகுப் பார்வை சற்று அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் புதிதாக பொறுப்பேற்ற காவல்படைத் தலைவர்களை விட இவருக்கு தீர்வு காணப்படாத வேலைகள் நிறையவே காத்திருக்கின்றன. கடந்த…
நம் நாட்டுத் தலைவர்களை மறக்கலாமா!
கி.சீலதாஸ் - இந்த நாட்டில் வாழ்ந்ததாக, வாழ்வதாகச் சொல்லப்படும் இந்தியர்கள், அவர்களின் நன்மைக்காக, உரிமைக்காக உழைத்தவர்கள் தங்களின் வாழ்க்கையையும் வாழ்நாளையும் எவ்வித சலனமும் இன்றி, கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல், நினைக்காமல் வாழ்ந்தவர்கள் யார்? இந்தியச் சமுதாயம் மனிதருள் மனிதராக வாழ வேண்டுமென ஏங்கினவர்கள் யார்? அவர்களின் நல்ல சிந்தைகள் கைகூடாது…
அரசனை நம்பி புருஷனை கைவிடுமா ம.இ.கா.? திக்கற்ற அரசியலில் இந்தியர்கள்!
இராகவன் கருப்பையா- நம் நாட்டின் அரசியல் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் அம்னோவின் தோழமை கட்சியாக பின்னி பிணைந்து உறவாடிய ம.இ.கா. தற்போது தீர்க்கமான ஒரு முடிவு செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் அரசாங்கத்தை கவிழ்த்து கொல்லைப்புற ஆட்சியமைத்த…
தடுப்புக் காவல் மரணம்: கொலையல்ல என்பதை அரசாங்கம் நிருபிக்க வேண்டும்,
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தடுப்புக்காவல் கைதிகள் அடையும் மர்மமான மரணங்களுக்கு இன்னமும் தீர்வு காணமுடியாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது. ஆகக் கடைசியாக கடந்த வாரத்தில் 40 வயதுடைய கணபதியின் இறப்பு இந்த சோகக்தொடருக்கு மேலும் உரமூட்டியுள்ளது. ஏழு வயது மற்றும் ஐந்து வயதுடைய இரு குழந்தைகளுக்குத்…
இந்நாட்டில் திராவிட தேசியம் தேவையா? – கி.சீலதாஸ்
இந்த 2021 ஆம் ஆண்டு ஓர் அற்புதமான சங்கமத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை மார்ச் அல்லது ஆப்ரில் மாத காலத்திலும், வைசாக்கி தினம் ஆப்ரில் பதிமூன்றாம் தேதியிலும், மலையாளப் புத்தாண்டு விஷு ஆப்ரில் பதினான்காம் தேதியிலும் கொண்டாடப்படுவது வழக்கம். நேப்பாளத்திலும் பதினான்கு ஆப்ரில்…
பல்லினங்களின் தனித்துவ பண்பாடுகள் – நமக்கு பலமா? பலவீனமா?
கி.சீலதாஸ் - பல இனங்கள் வாழும் நாட்டில் மொழி, சமய, கலாச்சார வேறுபாடுகள் மலிந்து பிரச்சனைகளாக உருவெடுப்பது விந்தையும் அல்ல, ஆச்சரியப்படத் தக்கதுமல்ல. பல இனங்களின் மாறுபட்ட கலாச்சாரங்களில் ஒரு வகை ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முடியுமா? அல்லது பெரும்பான்மையினரின் கலாச்சாரமே நாட்டின் மூலக் கலாச்சாரமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா? ஒரு…
கோவிட்-19 -க்கு எந்த தடுப்பூசி நல்லது?
இராகவன் கருப்பையா- இவ்வாண்டு இறுதி வாக்கில் மலேசிய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்ற கணிப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று. தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் தொடக்கத்தில் நிலவிய போதிலும் இன்னும் 2 மாதங்களில், பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையை விட அதன்…
வீட்டுக்கடனும் பட்டதாரிகளின் சம்பளக் குறைவும் – ந காந்திபன்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) கணக்கிற்கு ஏற்ப, குடும்பக் கடன்கள் சுமார் 93.3 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மலேசியத் தேசிய வங்கி தனது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பட்டதாரிகளின் சம்பளம் RM2,000 / RM2,500- லிருந்து, இப்பொழுது ஏறத்தாழ RM1,500-ஆக இறங்கியுள்ள நிலையில், அரசாங்கம் மௌனம் காத்து வருவது…
தமிழ்ப் புத்தாண்டை அரசியலாக்குவதா? -கி.சீலதாஸ்
இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்றுதான் இந்திய ஆண்டுக் குறிப்பேடுகள் (காலண்டர்கள்). அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் முப்பது விதமான ஆண்டுக் குறிப்பேடுகள் இருந்தன; அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன. இதைப்பற்றி குறிப்பிட்ட அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, இந்த வேறுபாடுகள்…
























