அம்னோவின் வீழ்ச்சியும் – மதவாதத்தின் எழுச்சியும்  

இராகவன் கருப்பையா - மலேசிய அரசியலில் அசைக்க முடியாத ஜாம்பவானாக 60 ஆண்டுகளுக்கும் மேல் தடம் பதித்த மூத்தக் கட்சியான அம்னோ தற்போது வரலாறு காணாத வகையில் பள்ளத்தில் விழுந்துக் கிடக்கிறது. இரும்புக் கரங்களுடன் அரசாங்கத்தை நிர்வகித்த அக்கட்சி ஒரு விடயத்தை வெளிக் கொணர்ந்தால் அதுதான் நாட்டிற்கே வேத வாக்காக…

விக்னேஸ்வரன் பதவி விலகினால் மஇகா மீட்சி காணுமா?

இராகவன் கருப்பையா -நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று அதன் தலைவர் விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என அடி மட்ட உறுப்பினர்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். பொதுவாகவே தேசிய முன்னணியின் அனைத்து கட்சிகளும் மிகவும் மோசமான வகையில் பின்னடைவு அடைந்தனர். அதோடு…

சின்ன அரசியல் கட்சிகளின் சின்ன சின்ன ஆசை

இராகவன் கருப்பையா - நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் சார்பில் போட்டியிட்ட 3 'கொசு'க் கட்சிகள் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டுள்ளது சற்று வேதனையாக உள்ளது. ஐ.பி.எஃப்., மக்கள் சக்தி மற்றும் கிம்மா, ஆகிய அம்மூன்றுக் கட்சிகளும் முறையே ஜெலுத்தோங், நிபோங் தெபால், பூச்சோங் ஆகியத் தொகுதிகளில் போட்டியிட்டன.…

ஹாடி அவாங், முகைதீன் யாசின் கூட்டணியின் தாக்கத்தை நாடு தாங்காது

  கி.சீலதாஸ் - நாடாளுமன்றத்தைக் கலைத்து பதினைந்தாம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மாமன்னருக்கு ஆலோசனை நல்க வேண்டுமெனத் தேசிய முன்னணியை வழிநடத்தும் அம்னோ வற்புறுத்தியது. அன்றையப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூட அம்னோவுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் பொதுத் தேர்தல் நடத்துவதற்குத் தயார் என்று சொன்னார்.…

அம்னோவை சீர்திருத்துவது பக்காத்தானின் பொறுப்பு

இராகவன் கருப்பையா - 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை' என்பதற்கு நாட்டின் தற்போதைய சூழ்நிலையைவிட சிறந்ததொரு உதாரணம் இருக்கவே முடியாது. 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று தமிழ்த் திரையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சும்மாவா சொன்னார்? அவ்வளவும நிதர்சனம் என்பதில் துளியளவும் ஐயமில்லை. தேர்தலுக்குப்…

மத-இனவாத அரசியலையும் மீறி பிறந்துள்ளது பொற்காலம்

இராகவன் கருப்பையா - தமது 40 ஆண்டுகால அரசியல் பயணத்தில் 2 முறை அநியாயமாக வஞ்சிக்கப்படு சிறை சென்ற போராட்டவாதியான அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் 10ஆவது பிரதமராக அரியணை அமர்ந்தது நாட்டின் பொற்காலத்திற்கு ஒரு திறவுகோலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஸ் கட்சி ஆட்சி அமைத்து அட்டகாசம் புரிவதைத் தடுக்கும்…

மாறுகின்ற அரசியலில் மதவாதம் வென்றது

வே. இளஞ்செழியன் -  15-ஆவது பொதுத்தேர்தலில், இதற்கு முன்பில்லாத அளவுக்குப் பல கருத்து கணிப்புகள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் நம்பிக்கை கூட்டணியே அதிகமான வாக்குகள் – அதாவது ஏறத்தாழ 85 முதல் 105 இடங்களைக் கைப்பற்றும் அளவுக்கு – பெறும் என்று கணித்திருந்தன. அக்கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் சற்று குறைவாக,…

இருபத்திரண்டு மாதங்களில் நாட்டைக் காப்பாற்றியது நம்பிக்கை கூட்டணி      

   கி.சீலதாஸ் -       என்  நண்பர்  சொன்ன  ஒரு  சம்பவத்தை   உங்களோடு  பகிர்ந்து  கொள்வேன்.  ஒருவர்  பிரமாண்டமான  வீட்டைக்  கட்டினார்.  வீட்டின்  அழகை,  அதன்  சுற்றுப்புறத்தைப்  பார்ப்பவர்கள்  அனைவரும்: “ஆகா…  ஓகோ…”  என்று   புகழ்ந்தனர்.  அந்த  வீட்டைச்  சுற்றி  ஆழமான  வாய்க்கால்   போடப்பட்டிருந்தது.  கடும்  மழைக்காலத்தின்போது  மழை  வெள்ளம் …

மலேசியாவைக் காப்பாற்ற நம்பிக்கை கூட்டணி தேவை

கி.சீலதாஸ் - தேர்தல் காலங்களில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பேச்சுகள், அபிப்பராயங்கள், பழைய தவறுகளை மறைக்கும் முயற்சிகள், விளக்கங்கள் யாவும் தேர்தல் காலத்தின் சர்வசாதாரண அணுகுமுறைகளாகும். தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். தாய்மொழிக் கல்விக்கான பாதுகாப்பைப் பற்றி மலாயாவின் சுதந்திரத்திற்கு முன்பே பேசி ஒரு முடிவு காணப்பட்டது. சீனம், தமிழ்…

முன்னால் நம்பிக்கை கூட்டணி ஆட்சி கவிழ்தது ஒரு சகுனித்தனமானதா?

கி.சீலதாஸ் - 2015ஆம் ஆண்டில் வடிவம் கண்ட நம்பிக்கை கூட்டணி நான்கு கட்சிகளின் ஒற்றுமையுடன் 2018ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலைச் சந்தித்தது. மக்களின் புரட்சிகரமான தீர்ப்பானது நாட்டின் அரசியல் பாதையில் புது திருப்பத்தைக் காணும் என்ற நம்பிக்கையைத் தந்தது. நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் துன் டாக்டர் மகாதீர்…

தேசிய முன்னணி அறிக்கையில், ‘யானை’ மட்டும் கண்களுக்கு தெரியவில்லை

பிலிப் ரோட்ரிக்ஸ்- பாரிசான் நேஷனல், நாட்டின் சில முக்கியப் பிரச்சனைகளைச் சரிசெய்வதற்காக,  சக்கரை கலந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, மார்தட்டும் நிலையில் உள்ளார்கள் . மக்களுக்கான ஒரு "புதிய ஒப்பந்தம்" என்று விவரிக்கப்படும் இந்த அறிக்கையானது, "நாட்டை வளர்ந்த நாடு நிலைக்குக் கொண்டு செல்வது" என்று விளம்பரப்படுத்தப்பட்ட பழைய கருப்பொருளையே மீண்டும் கொண்டுள்ளது. காரணம், மலேசியா இன்னும் சிக்கலில் சிக்கியிருப்பது போல் தெரிகிறது, மேலும்…

வாக்குரிமையைப் பயன் படுத்த ஊக்குவிக்கப்பட  வேண்டும். – மு. குலசேகரன்

மலேசியர்களின் வாக்குரிமையைப் பயன் படுத்த அனைத்து தரப்பினரும் ஊக்குவிக்கப்பட  வேண்டும். மக்களாட்சி என்பது வாக்குரிமையில் இருந்து தொடங்கிகிறது. புதிய அரசை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அனைத்து மலேசியர்களும் இருக்கின்றோம். சிலருக்கு வெளியில் சென்று வாக்களிப்பதில் சிக்கல்கள்  இருக்கலாம். சிலர் வேலை முடிந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கலாம். சனிக்கிழமை…

அரசியல் அறிமுகம்: துளசி மனோகரன்

இராகவன் கருப்பையா -அரசியல்வாதியாகும் துடிப்பும் பொறுப்புணர்வும் கொண்ட இளம் வழக்கறிஞர் துளசி திவானி மனோகரன், அதை ஓர் அத்தியாவசிய மனித உரிமை உணர்வின் வெளிப்பாடாகும் என்கிறார். பேராக் மாநிலத்தின் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜ.செ.க.வைப் பிரதிநிதித்துக் களமிறங்கும் துளசி, தெலுக் இந்தான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரனின்…

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள்  – கி.சீலதாஸ்

பணத்திற்கு வாக்களிப்பதால்தான் ஊழல்வாதிகள் உருவாகிறார்கள். நாடு குட்டிச்சுவராகிறது. இலஞ்சம் வாங்காத நீதிபதியாக மக்கள் திகழ வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் -ஆர் ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சி என்று பொருள். தங்களை ஆளுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டிருப்பவர்கள் மக்கள். அந்த உரிமையை மக்கள் பயன்படுத்தும்போது எந்த ஒரு தவறான போக்கை…

சார்ல்ஸ் சந்தியாகோவை நீக்கியது, கணபதிராவுக்கு பாதிப்பாகுமா?

இராகவன் கருப்பையா- தொடர்ந்தாற்போல் 3 தவணைகளுக்கு கிள்ளான் தொகுதியில் மக்களின் நாயகனாக விளங்கிய சார்ல்ஸ் சந்தியாகோ எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது தொர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. சந்தியாகோவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குமுறும் அத்தொகுதி மக்களின் கோபம் இன்னமும் தனியாத நிலையில் ஜ.செ.க.வுக்கு எதிர்பாராத அளவு அங்குப் பின்னடைவு…

தேர்தலில் இந்திய பெண்களின் பங்கெடுப்பு புறக்கணிக்கப்படுகிறது

இராகவன் கருப்பையா - நாடு தழுவிய நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில் வேட்பாளர் அறிவிப்புப் படலம் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. பக்காத்தான் ஹராப்பானும் தேசியக் கூட்டணியும் மாநில வாரியாக தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் வேளையில் பாரிசான் இன்னமும் மவுனமாகவே உள்ளது. எனினும் இதுவரையில்…

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? – கி.சீலதாஸ்

மலைக்கள்ளன் திரைப்படத்தைப் பார்க்காதவர்களோ அறியாதவர்களோ மிகக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம். கடந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்ததாகச் சொல்லப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட, போற்றப்பட்ட நாமக்கல் கவிஞர் எனப் புகழ்வாய்ந்த இராமலிங்க பிள்ளையின் படைப்பு தான் அது. இராமலிங்க பிள்ளை…

தேர்தல் காலங்களில் மட்டுமே தோசை சுடும் அரசியல்வாதிகள்

இராகவன் கருப்பையா- பிரதமர் சப்ரி தனது பெரா தொகுதியில் இந்தியர் ஒருவரின் இல்லத்தில் தோசை சுடுவதைப் போலவும் முறுக்குப் பிழிவதைப் போலவும் பாசாங்கு செய்தக் காட்சிகளை கடந்த வாரத்தில் பத்திரிகைகளிலும் சமூக வலைத் தலங்களிலும் காண முடிந்தது. இத்தகைய அரசியல் 'டிராமா'க்கள் மலேசியர்களைப் பொறுத்த வரையில் புதுமையான ஒன்றல்லை. காலங்காலமாக…

15வது பொதுத் தேர்தல் – தேசிய முன்னணிக்குக் கடுமையான பரீட்சை

கி. சீலதாஸ் -மலேசிய கூட்டரசின் பதினைந்தாம் பொதுத் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டுமென அம்னோ தலைவர்கள் கடுமையாக வற்புறுத்துவதை அறிந்திருப்பீர்கள். இன்றையப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி அம்னோவின் துணைத்தலைவர், அம்னோவின் தலைவர் டத்தோ ஶ்ரீ சாஹிட் ஹமீடி பல குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவர். ஒரு வழக்கில்…

இந்திய அமைப்புகளின் 15ஆம் பொதுத் தேர்தலுக்கான கோரிக்கைகள்

‘இந்தியர்கள் 25’ (I25) என்ற இந்திய சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு 15 -வது பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய சமூக மேம்பாட்டுக்கான தேர்தல் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கை மனு அனைத்து அரசியல் தரப்பினர்களிடமும் சமர்பிக்கப்படும் என்று கூறுகிறார் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கருப்பையா. “எங்களின் நோக்கம் இந்திய…

காற்றுள்ள போதே தூற்றவில்லை: நட்டாற்றில் வேதமூர்த்தியின் கட்சி

இராகவன் கருப்பையா - முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சர் வேதமூர்த்தி தொடக்கிய மக்கள் முற்போக்குக் கட்சி தற்போது இலக்கற்றுத் தவிப்பதாகத் தெரிகிறது. அக்கட்சியின் அரசியல் சித்தாந்தம் அறிவு பூர்வமாக இருந்தாலும் அதன் பின்னணியில் ஒரு மக்கள் விழிப்புணர்ச்சி நிலையும் அதன் உந்துதலுக்கு ஏற்ற காரணிகளும் வேண்டும். மலேசிய சோசியலிஸ்ட் கட்சி அடித்தளத்தில்…

தமிழை வளர்க்கும் மாணவர்களை உதாசீனப்படுத்துகிறது சமுதாயம்

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் தமிழ் மொழி தொடர்ந்து செழித்தோங்கி இருப்பதற்கு அயராது பாடுபடும் தரப்பினரில் உயர் கல்வி மாணவர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் அவர்களுக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தக் கடப்பாடு கொண்டுள்ள நம் சமூகத்தின் பங்கு, குறிப்பாக அரசியல் தலைவர்களின் அலட்சியப் போக்கு பெருத்த ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. மலாயா…