இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் சிறப்பாக விளக்கியுள்ளோம்- ஸ்டாலின்
ஈழத் தமிழரின் இன்னல்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் சிறப்பாக விளக்கியுளள்ளோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஐ.நா. சபையிடமும், ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்திடமும் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அளித்து விட்டு நேற்று சென்னை திரும்பினார் ஸ்டாலின். விமான நிலையத்தில்…
நல்லிணக்க செயற்பாடுகளை விரைந்து அமுல்படுத்துங்கள் : பான் கீ மூன்…
இலங்கை அரசாங்கம் காலதாமதமின்றி நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொண்டு அங்குள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பை விரைந்து உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தோன்றியுள்ள பல பிரச்னைகள் மற்றும் முரண்பாடுகள்…
ஆயுத மோதலில் தொடர்புபடாத கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனரா?
இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுதமோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக்கூடத்துக்கு வெளியில் அழைத்துவரப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். மோதல்களில் சம்மந்தப்படாது சிறைக்கூடங்களுக்குள் ஒதுங்கியிருந்த சில கைதிகள் காலை 4 மணிக்குப் பின்னர் வெளியில் கூட்டிவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி…
இலங்கையில், இராணுவம் மீது சிறைக்கைதிகள் தூப்பாக்கிச் சூடு; 27 பேர்…
கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஆயுத மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் வரை காயமடைந்துள்ளனர். 27 சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுள்ளதாகவும் காயமடைந்த 37 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் சிங்களவர்கள் என்றும் கொழும்பு…
விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியொருவர் பிரான்ஸில் சுட்டுக்கொலை!
நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி என்பவர் பிரான்ஸ் தலைநகரில் வைத்து இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சிங்கள அரசின் கைக்கூலிகள் என நம்பப்படும் உந்துருளியில் வந்த முகமூடி அணிந்திருந்த…
தம் மீதான ஊழல் புகார்களுக்கு இலங்கை தலைமை நீதிபதி மறுப்பு
இலங்கைத் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவரின் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு விரிவான அறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். கொழும்பில் இருந்து செயல்படும் நீலகந்தன் மற்றும் நீலகந்தன் என்ற சட்ட நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தலைமை…
நல்லிணக்க பரிந்துரைகள் ஜனவரியில் ஆய்வு : நவநீதம்பிள்ளை
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கையில் ஆய்வு மேற்கொள்ளப்போவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை, மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அதன் தலைவர் நவநீதம்பிள்ளையை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு…
மாகாண சபைகளை ரத்துச் செய்யுமாறு சிங்கள அமைச்சர்கள் கோரிக்கை
இலங்கையில் மாகாண சபைகளை ரத்துச் செய்ய வேண்டும் என்று ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் இருவர் குரல் எழுப்பியுள்ளார்கள். நாட்டின் அபிவிருத்திக்கு மாகாண சபைகள் முறைமை தடையாக இருப்பதாகக் கூறி, அதனை ரத்துச் செய்ய வேண்டும் என்று அந்த இரு அமைச்சர்களும் ஒரு செய்தியாளர் சந்திப்பில்…
புலிகள் மீண்டும் எழுந்து வர வேண்டுமா? சிங்கள அமைச்சருக்கு தமிழ்…
விடுதலைப் புலிகளுக்கு பயந்தே அதிகாரப் பகிர்வு கொள்கையும், மாகாணசபை முறைமையும், பதிமூன்றாம் திருத்தமும் கொண்டு வரப்பட்டது என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பதிலடி கொடுத்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு பயந்துத்தான், அதிகாரப்பகிர்வு கொள்கை கொண்டுவரப்பட்டதென்றால் இன்று தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை…
‘இலங்கை அரசு ஐநாவில் வெற்று உறுதிமொழிகளையே முன்வைத்துள்ளது’
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்தில் (யூபிஆர்) இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள 'வெற்று' உறுதிமொழிகளை ஐநாவின் உறுப்பு நாடுகள் நம்புவதை நிறுத்த வேண்டும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையில் காட்டியுள்ள பல விடயங்களுக்கும் உண்மையில் இலங்கையில்…
இலங்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இலங்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகவுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவந்துள்ள பதவிநீக்க கண்டன தீர்மானம் திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பில் நடந்துள்ளது. ஜனநாயகத்தைக் காக்கும் மக்கள் அமைப்பின் உறுப்பினர்களும் சட்டத்தரணிகளுமாக நூற்றுக்கணக்கானோர் கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து கோட்டை ரயில் நிலையம்…
வட மாநில முதலமைச்சர் பதவிக்கு கேபி- டக்ளஸ் தேவானந்தா போட்டி?
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை அரசுத் தரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு பொறுப்பாளராக இருந்த கேபியும் தற்போது அமைச்சராக உள்ள ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தாவும் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. இலங்கையின் வடக்கு மாநில சட்டமன்ற தேர்தலை…
சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தக் கோரி வழக்கு தாக்கல்
கேப்பாப்பிலவு மக்களை தமது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றப் போவதாக அழைத்துச் சென்று, முல்லைத்தீவு மாவட்டம் சீனியாமோட்டையில் (வேறிடத்தில்) குடியேற்றப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பகுதி மக்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக இலங்கை…
ஒபாமா அதிபரானால்… இலங்கைத் தமிழர்களுக்கு என்ன மாற்றம் வரும்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்தால் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துமா அல்லது ஏதாவது முன்னேற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், சீனாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி இந்தியாவுக்கு மறைமுக நெருக்கடியை இலங்கை கொடுத்து…
தலைமை நீதியரசர் விவகாரம்: இலங்கை அரசின் நடவடிக்கையில் சந்தேகம்
இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டனத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஃப்ரீ மார்ச் என்ற சட்டத்தரணிகளின் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது. தலைமை நீதிபதிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருக்கின்றமை, அந்த…
தலைமை நீதிபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையில்லை: அமெரிக்கா
இலங்கை தலைமை நீதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டாம் என இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் ஷிராணி பண்டாரநாயகே (வயது 54). இவர் இலங்கையின் முதல் பெண் நீதிபதியாவார். இவர் மீது தனது அதிகார வரம்பை மீறியது, முறையற்ற நடவடிக்கைகளில்…
இலங்கை மனித உரிமை நிலை குறித்து ஐநாவில் விவாதம்
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமையன்று ஆரம்பித்த 'யுனிவர்சல் பிரியாடிக் ரெவ்யூ' என்ற பொறிமுறையின் கீழான இலங்கை குறித்த விவாதத்தின் துவக்கத்தில் இலங்கை அமைச்சர் மஹிந்த சமரங்க இலங்கை அரசு மனித உரிமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் சில…
இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச சமூகம் கூடுதல் கவனம் செலுத்தவில்லை:…
இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் கூடுதல் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக சூடான் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற ஆயுத முரண்பாடு வருந்தத்தக்கது எனவும் அதற்காக அனுதாபப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான சூடான் பிரதிநிதி அலி ஒஸ்மான் தெரிவித்துள்ளார். சூடானில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்வதேச குற்றவியல்…
சரக்குக் கப்பலை இலங்கை கடற்பரப்பில் மூழ்கடித்த நிலாம் புயல்!
கொழும்பு: மியான்மரிலிருந்து இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் நிலாம் புயலில் சிக்கி இலங்கை கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணித்த 22 பேரில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. வியட்னாம் நாட்டுக்கு சொந்தமானது சாய்கோயின் குயின் என்ற…
ஆஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி
ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் Read More
இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: ஐநாவில் இன்று விவாதம்
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோற்கடிக்கப்பட்ட போதிலும் –…
ஈரான் மீதான தண்டனைத் தடைகளால் சிலோன் டீ ஏற்றுமதியில் பாதிப்பு
ஈரான் மீது விதிக்கபட்டுள்ள சர்வதேச தண்டனைத் தடைகள் இலங்கை தேயிலையின் ஏற்றுமதி விலையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக இலங்கையின் தேயிலை வர்த்தகர்கள் கூறுகின்றனர். இலங்கையிடம் இருந்து மிக அதிகமாக தேயிலை வாங்கும் நாடுகளில் ஒன்று இரான் ஆகும். இரானுக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி தொழிலில் தற்போது நிலவரம்…
அரசியலில் நுழையும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: கே.பி
இலங்கை அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவருமான குமரன் பத்மநாதன் (கேபி) தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் - அரியாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை…