நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில் நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன். பால்ராஜன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த…

நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் புலனாய்வு பிரிவினரால் கைது

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஆதரவு அரசியல் கட்சியொன்றின் (ஸ்ரீடெலோ) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டியமைக்காகவும் சந்தேகத்தின்பேரில் இவர்கள்…

மாவீரரே பிறந்து வாரும் தாய் மண்ணிலே…

வாழ்வே அர்த்தமற்றுப் போய் தனிமை விரக்தியில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கையில், "நாம் தனியன்கள் இல்லை - ஒரு தேசிய இனமாகக் கூடி நிற்கிறோம். எனவே எமது மரணங்களை விலையாய் கொடுத்து; எத்தனை பேர் செத்தேனும் விடுதலையை அடைந்தே தீருவோம்" என்ற பேருறுதியுடன் வாழ்வுக்கும் மரணத்துக்கும்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் தாங்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வழிசெய்யப்பட வேண்டும் எனக்கோரி நேற்று வகுப்புக்களைப் புறக்கணித்திருக்கின்றார்கள். இது இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் இரண்டு நாட்களாக மாணவர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலின்…

இலங்கை நாடாளுமன்ற-நீதிமன்ற மோதல் முற்றுகிறது

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீதோ, நாடாளுமன்றத்தின் மீதோ அல்லது சபாநாயகரால் நியமிக்கப்பட்ட எந்தவொரு குழுவின் மீதோ எந்த ஒரு வெளி நிறுவனமும் அதிகாரம் செலுத்த முடியாது என்று இலங்கை சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணை குறித்து தனது…

மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012

கடந்த ஆண்டுகள் போலவே மாபெரும் எழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் நிகழ்வாக, 2012 நிகழ்வு கனடாவின் மாக்கம் நகரில் நடைபெற்றது. கனடாத் தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் வழமைபோல் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாபெரும் மாவீரர் நினைவு மண்டபத்தில் அதிகாலை 6.45 மணிக்கே முதல் அமர்வு ஆரம்பமாகியது.…

புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை கேபி என்ற குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்களை அறிய இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (TID), புலிகளின் அனைத்துல முன்னாள் பொறுப்பாளர் கே.பி-யிடம் மேற்கொண்ட…

இலங்கையின் முதல் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முயற்சியால், 'சுப்ரீம் சாட் 1' என்று பெயரிடப்பட்ட இலங்கையின் முதல் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த தொலை தொடர்பு செய்மதி செவ்வாய் கிழமை மதியம் ஷி ஜாங் விண்வெளி நிலையத்தில் இருந்து இலங்கை நேரம் 3. 43-க்கு விண்ணில்…

சிங்களப் படையினரின் கெடுபிடிக்கு மத்தியில் தமிழீழத்தில் மாவீரர் நாள் நிகழ்வு

இலங்கையில் தமிழர் தயாகப் பகுதிகளில் நிலவும் கடும் பாதுகாப்பு நெருக்கடிக்கு இடையிலும் விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளாகிய செவ்வாய்கிழமையன்று தமிழீழ விடுதலைப் போரில் உயர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றப்பட்டு மாவீரர் நாள் அங்கு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூர்ந்து தமிழர்கள் விளக்கேற்றி தடுப்பதற்காக சிங்களப்…

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்ட மலேசிய கப்பலில் தத்தளிக்கும் சிப்பந்திகள்

இலங்கை கடற்பரப்பில் கடந்த 4 மாதங்களாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலேசிய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சாக் சிரியஸ் என்ற சரக்குக் கப்பலில் சிக்குண்டுள்ள சிப்பந்திகள் உணவுக்கும் தண்ணீருக்கும் கஷ்டப்படுவதாகக் கூறுகின்றனர். மலேசிய கப்பல் நிறுவனத்துக்கும் அதற்கு கடன் கொடுத்த வங்கி ஒன்றுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக நீதிமன்ற…

கார்த்திகை நாள் வழிபாடுகளில் சிங்கள இராணுவம் தலையிடுவதாக குற்றச்சாட்டு

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் இலங்கை பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27-ம் தேதியன்றே…

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!

உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது…

மகிந்த ராஜபக்சே மீது மட்டக்களப்பில் தாக்குதல்; பதற்றத்தில் இராணுவம்!

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவின் உருவப்படம்  தாங்கிய பதாகைகள் மீது அடையாளம் தெரியாத சிலர் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ராஜபக்சேவின் பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு நகருக்கு அண்மையில் உள்ள நாவற்குடா- கல்லடி பகுதிகளின் பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த ராஜபக்சேவின்…

பொதுநலவாய மாநாட்டை கனடா புறக்கணிக்க வேண்டும்; வலியுறுத்துகிறார் ராதிகா எம்பி

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் அங்கு நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிப்பதற்கான தீர்மானத்தை கனேடிய அரசு மேற்கொள்ள வேண்டுமென ராதிகா சிற்சபை ஈசன் தெரிவித்துள்ளார் கனேடிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா…

சிங்கள இராணுவத்திற்கு தமிழர்களை இணைப்பது நல்லிணக்கமல்ல: மனோ எம்பி

இலங்கையின் வடகிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக போரில் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுக்கின்றது. எனவே அராசங்கத்தின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்ல என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். வடக்கில் இராணுவத்தை குறைத்து போலிஸ்…

ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கையின் நட்பு நாடுகள் நீக்கம்

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் நட்பு நாடுகள் சுழற்சி முறையில் நீக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.…

இலங்கை சிறைச்சாலையில் நடந்த திட்டமிட்ட படுகொலைகள்

அண்மையில் இலங்கையின் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது பல கைதிகள் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையில் வன்முறை அடக்கப்பட்ட பின்னர் கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை இராணுவ கமாண்டோக்களால்…

படுகொலையை தடுக்காத பான் கீ மூனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த…

இலங்கையில் 40,000க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை பலி கொடுத்துதான் இலங்கை அரசாங்கம் புலிகளை ஒழித்தது என்ற உண்மையும் சிங்கள அரசின் இனப்படுகொலை போரில் இருந்து தமிழ்மக்களை காப்பாற்ற ஐநா மன்றம் தவறிய உண்மையையும் சார்ல்ஸ் பெற்றி குழுவினர் ஆய்வு செய்து ஐ.நா. செயலாளரிடம் வழங்கியுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின்…

இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்களை சேர்க்கும் சிங்கள அரசு

ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் பெண்கள் 100 பேரை இலங்கை இராணுவத்தில் இணைக்கவுள்ளது. இராணுவத்தில் சேர விண்ணப்பித்தவர்களின் தகுதிகள் உறுதிசெய்யப்பட்டு 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூர்ய தெரிவித்தார். இராணுவத்தில் சேரவுள்ள தமிழ் பெண்கள், இலங்கை இராணுவத்தின் பெண்களுக்கான படைப்…

தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றத் தீர்மானம் தவறானது : ஐநா…

இலங்கையில் தலைமை நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டுள்ள குற்றத் தீர்மானம் குறித்த நடைமுறைகள் சர்வதேச நியமங்களுக்கு எதிராக உள்ளதாக நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் கப்ரியல்லா நவுள் கூறியுள்ளார். இந்தக் குற்றத் தீர்மானம் நடைமுறைகள் நிறுவனங்களுக்கு இடையில் அதிகாரத்தை பிரிப்பதற்கான…

ஐ.நாவின் இரகசிய அறிக்கை கறுப்பு மையினால் அழிப்பு!

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக்கட்டப் போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா மன்றம் தவறியது குறித்து அறிக்கையை ஐ.நா பொதுச்…

ஐநா அதிகாரிகளை மிரட்டியதான குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் (2009) ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களை பயமுறுத்தி பணிய வைத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்திருக்கிறது. பிபிசிக்கு கசிந்த ஒரு ஐநா அறிக்கையில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றிருந்தன. பொதுமக்களை பாதுகாக்க ஐநா தவறியது என்று தன்னைத் தானே ஐநா குற்றஞ்சாட்டிக்…

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐநா தவறியது: ஐநா மீதான ஆய்வறிக்கை

இலங்கையில் மூன்றரை ஆண்டுக்கு முன் போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது. ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை…