காமன்வெல்த் மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி முதல் 31-ம் வரை நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் 'நாடு கடந்த தமிழீழம்’ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் தொடங்கி வைத்த கமான்வெல்த்…

TNA-யின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் : கனடா

இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் (TNA) முன்னெடுக்கப்படும் இனப்பிரச்னை தீர்வுக்கான அனைத்து முயற்சிகளுக்கும் தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கனடா தெரிவித்துள்ளது. கனடாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சந்திப்புக்களை நடத்திய கனடிய அதிகாரிகள் இவ்வாறு வாக்குறுதியளித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தற்போது முன்னெடுக்கப்படும் இனப்பிரச்னை தீர்வுக்கான…

தந்தை செல்வாவின் உருவச்சிலை மீண்டும் புத்துயிர்பெற்றது

இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சி நிறுவுனர் தந்தை செல்வநாயகம் அவர்களின் உருவச்சிலை அண்மையில் சிங்கள பேரினவாதிகளினால் சிதைக்கப்பட்டது. உவருச்சிலை சிதைக்கப்பட்ட செயலுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் தங்களது கண்டன குரல்களை எழுப்பின. அதேவேளை சிதைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலையை புனர்நிர்மாணம் செய்து நேற்று மாலை…

அமெரிக்காவிடம் ரகசிய ஆவணம் ஒன்றை TNA ஒப்படைத்துள்ளது

அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில் இலங்கைத் தமிழர்களின் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க அரசதுறை அதிகாரிகள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு இலங்கை மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த 30 பக்க ரகசிய ஆவணமொன்றை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. மனிதஉரிமை மீறல்கள்,…

தமிழீழ அரசியல் தந்தையின் உருவச்சிலை சிதைக்கப்பட்டது!

ஈழத்தமிழர்களின் அரசியல் தந்தை என போற்றப்படும் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் அமரர் தந்தை செல்வநாயகத்தின் உருவச் சிலை இனந்தெரியாத சிங்கள இனவாதிகளினால் சிதைக்கப்பட்டுள்ளது. 1977-ம் ஆண்டு தமிழர்களுக்கென தமிழரசுக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் நினைவாக இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலையின் தலைப்பகுதியை சிங்கள இனவாதிகள்…

ஆஸ்திரேலியாவில் மகிந்தாவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவின் பொர்த் நகரத்தில் கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கை குடியரசுத் தலைவரும் போர்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே கலந்து கொண்டார். இவரின் வருகையடுத்து 28-ம் தேதி வெள்ளிக்கிழமை பெர்த் நகரத்தில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்கள், ஆஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து…

போர்க்குற்ற விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்கவேண்டும்: கமரோன்

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் 22-வது உச்சி மாநாட்டில் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க உலகின் பலநாடுகளின் தலைவர்களும் முன்வைத்த யோசனைகள் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் தலைமையமைச்சர் டேவிட் கமரோன்,…

LTTE பயங்கரவாத அமைப்பு அல்ல : நெதர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அனைத்துலக பயங்கரவாத இயக்கம் அல்ல என்று நெத‌ர்லா‌ந்து ‌நீ‌திம‌ன்ற‌ம் பரபர‌ப்பு ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌த்து‌ள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நன்கொடை வசூலித்தார்கள் என்ற குற்றச்சா‌ற்‌றின் பேரில், நெதர்லாந்‌தி‌ல் உள்ள 5 இலங்கை தமிழர்கள் மீது, ஹேக் நகரில் உள்ள ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை…

ராஜபக்சே மீதான வழக்கை விசாரிக்க முடியாது : ஆஸ்திரேலியா அரசு

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே மீதான போர்க் குற்ற வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என ஆஸ்திரேலிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்தவரும் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான அருணாசலம் ஜெகதீஸ்வரன் (வயது 63) என்ற பொறியாளர், இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே…

இலங்கை காவல்துறை மீது குற்றச்சாட்டு

இலங்கையில் காவல் துறையினரின் காவலில் இருப்போர் மீதான சித்திரவதைகளும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் அளவின்றி தொடர்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த ஆண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே காவல் நிலையங்களுக்குள் நடந்துள்ள சித்திரவதைகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் என கிட்டத்தட்ட…

கே.பி-யின் நிதிப் பொறுப்பாளரை கைது செய்ய நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத முகவர் குமரன் பத்மநாதனின் (கேபி) நிதிப் பொறுப்பாளரை கைது செய்வதற்கு இலங்கை அரசு, இன்டர்போலின் (அனைத்துலக காவல்துறை) உதவியை கோரியுள்ளது. குமரன் பத்மநாதனின் நிதிப் பொறுப்பாளர் பொன்னையா ஆனந்தராஜாவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபரை கைது செய்யுமாறு…

தமிழர்கள் தன்மீது நம்பிக்கை வைக்கவேண்டுமாம்; மகிந்த கூறுகிறார்

"பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். யாரும் எவருக்கும் அடிமையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்" இவ்வாறு இலங்கை மகிந்த ராஜபக்சே மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தினை மக்களிடம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜபக்சே…

போர்க்குற்றம் தொடர்பில் புதிய சாட்சியத்தை ABC வெளியிட்டது

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய தேசியத் தொலைக் காட்சியான ஏ.பி.சி. நேற்று முன்தினம் புதிய சாட்சியத்தை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு பயணம்

யாழ்ப்பாணத்தை பயணம் செய்துள்ள அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் யாழ்ப்பாண அரசாங்க அதிகாரி திருமதி இமெல்டா சுகுமாரைச் சந்தித்து யாழ்ப்பாணத்தின் சமகால நிலைமைகள் பற்றியும் அது தொடர்பான நிலைப்பாடுகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட போரின் பின் தமிழ் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்களை நேரில் அறிவதற்காக இந்த நாடாளுமன்றக் குழுவினரின்…

லண்டன் தமிழர்களின் முதலீட்டை எதிர்பார்த்த லியம் பொக்ஸ்

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சராக இருந்து தற்போது பதவி விலகிய லியம் பொக்ஸ், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தானியக் கிளையின் முன்னாள் தலைவர் கலாநிதி ரோஜர் சிறிவாசன் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை, பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத் தமிழ்…

அடக்குமுறைகளை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!

"தமிழர்ப் பகுதிகளில் காணிப்பதிவு உட்பட தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள குரோதச் செயற்பாடுகளை இலங்கை அரசு உடன் நிறுத்தாவிட்டால் தமிழ் மக்களைத் திரட்டி போராட்டங்களைப் பல வடிவங்களில் முன்னெடுப்போம். தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழுகின்றார்களோ அங்கெல்லாம் எமது சாத்வீகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்." இவ்வாறு தமிழ்த்…

இலங்கையில் இலத்திரனியல் பதிவு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது

இலங்கையர் அனைவரையும் இலத்திரனியல் பதிவுக்கு உட்படுத்தவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென தேசிய இலத்திரணியல் பதிவொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்பதிவுகளை மேற்கொள்வதற்கென 14.5 பில்லியன் இலங்கை ரூபாக்கள் செலவிடப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக சகலரும் மேற்படி நடைமுறையின் கீழ் இலவசமாக உள்வாங்கப்படவுள்ளனர்.…

புலிகளை தடை செய்யுமாறு நோர்வேயிடம், இலங்கை கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு நோர்வே அரசாங்கத்திடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை மீண்டும் தடை செய்வது குறித்து நோர்வே அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொஹான் கார் ஸ்ட்ரோ…

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது என ஐரோப்பிய ஒன்றிய நடாளுமன்ற உறுப்பினர் போல் மார்பி தெரிவித்துள்ளார். நீதியையும் உண்மையையும் நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே நல்லிணக்கத்தை எட்ட முடியும் என மற்றுமொரு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராவுல் ரொமேவா ருயுடா தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களை மூடி…

இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டுமாம்

இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதன்பொருட்டு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய தலைமையமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா…