ஐ.நா உரையை எழுத்திக் கொடுத்து மகிந்த படித்ததாக தகவல்

இலங்கை  குடியரசுத் தலைவர் ஐ.நா மன்றத்தில் ஆற்றிய உரையை பிரிட்டனில் இருக்கும் ஒரு தொழில் ரீதியான பிரச்சார ( லாபியிங்) நிறுவனம் எழுதிக் கொடுத்தது என்று பிரபல பிரிட்டிஷ் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தகவலை இலங்கை அரசு கடுமையாக மறுத்துள்ளது. ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் அல்லது தனி…

மகிந்தவின் கூட்டாளிக்கு ‘மகாத்மா காந்தி’ விருது!

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் கட்சியைச் சார்ந்த முதலமைச்சர் மஹிபால ஹேரத்திற்கு 'மகாத்மா காந்தி' விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மகிந்த அரசினால் படுகொலை செய்யப்பட்டு குருதிகூட இன்னும் காயவில்லை; அதற்குள் இனப்படுகொலை செய்தார் என கூறப்படும் மகிந்தவின் நண்பரும் அவரின் கட்சி முதலமைச்சருமான ஒருவருக்கு…

தமிழர் நிலங்களை அபரிக்கும் சிங்கள படையினர்

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் உயர்பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டு வருகின்றமையினைக் கண்டித்து மாதகல் மக்கள் நேற்று (05.12.2011) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை வலிதென்மேற்கு பிரதேச மன்றம் முன்றலில் நடத்தியுள்ளனர். மாதகல் ஜே152 பகுதியில் சிங்கள கடற்படையினரினால் பாரிய முகாமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் இந்தப்பகுதியைச் சேர்ந்த சுமார்…

கே.பியை கைதுசெய்யுமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவு!

ஆயுதங்கள் கடத்தியமை மற்றும் வெடிமருந்துகளை பயன்படுத்தி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதான ஆயுத கொள்வனவாளரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு சென்னை நீதிமன்றமொன்று அனைத்துலக காவல்துறையினரிடம் (interpol) பிடியாணையொன்றை பிறப்பித்துள்ளது. இத்தகவலை இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

அன்ரன் பாலசிங்கத்தை புலிகளில் சிலர் ஓரங்கட்ட முயன்றனர்

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று இலங்கை அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார். இவ்வாறு 2002-ம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில்…

ஆட்கள் காணாமற்போதல் சம்பவங்கள்; இலங்கைக்கு 2-ம் இடம்!

ஆட்கள் காணாமற் போதற் சம்பவங்கள் அதிகளவில் தீர்க்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கை 2-ம் இடத்தை வகிக்கிறது என்று அனைத்துலக மன்னிப்பு சபையின் இலங்கைக்கான நிபுணர் யோலண்டா பொஸ்டர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான காணாமற் போதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை எனவும் இதனால் பல குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்கி…

அனைத்து சிறைச்சாலைகளிலும் தமிழ் கைதிகள் போராட்டம்

இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் அனைத்துச் சிறைகளிலும் உள்ள தமிழ் கைதிகள் சிலர் அடையாள உண்ணாநோன்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற தாக்குதல் சம்பவங்கள், இதற்கு முன்னரும் கண்டி…

பிரபாகரனின் புகைப்படம் வைந்திருந்ததாக மாணவன் ஒருவர் மட்டக்களப்பில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தைத் தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பில் மாணவர் ஒருவரை காவல்துறையினர் நேற்றுக் கைது செய்தனர். மட்டக்களப்பு அரசடித்தீவைச் சேர்ந்த குறித்த மாணவன் இவ்வாண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எழுதியவராவார். நேற்று மாலை மட்டக்களப்புக் காத்தான்குடிப் பகுதிக்குச் சென்ற…

தமிழர்களை ஒன்றினைத்தது சுவிஸ் மாவீரர் நாள் நிகழ்வு

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈந்த எமது தேசத்தின் செல்வங்களை வணங்கும் தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் உலகின் பல நாடுகளில் கடந்த 27-ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. இதேபோன்று, மாவீரர் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகளோடு சுவிஸ் Forum Fribourg மண்டபத்தில் வரலாறு காணாத மக்கள் நிறைந்திருக்க…

இரகசியத் தடுப்பு முகாமில் கர்ணல் நகுலன் படுகொலை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்ணல் நகுலன் இலங்கையின் மின்னேரியா பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக 'லங்கா நியூஸ் வெப்' எனும் இலங்கை செய்தி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கர்ணல் நகுலன் கடந்த 2009-ம் ஆண்டின் பிற்பகுதியில்…

தமிழீழத்தில் ஏற்றப்பட்ட மாவீரர் நாள் ஈகச் சுடர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளின் தண்ணீர் தாங்கி உச்சியில் நேற்றுமாலை 6.05 மணிக்கு திடீரென மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. தகவல் அறிந்ததும் உடனடியாகப் சிறீலங்கா இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் நேற்றிரவு சில மணிநேரம் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவின. மாணவர்கள்…

உலகப் போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க தயாராம்!

ஈரான் மீது மேற்குலக நாடுகள் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும் அவ்வாறானதொரு சூழ்நிலையினை எதிர்நோக்க இலங்கைத் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச. குறிப்பாக உலகப் போர் ஏற்பட்டால் இலங்கையில் ஏற்படக் கூடிய உணவுப் பற்றாக்குறையை தீர்க்கக்…

கிளிநொச்சியில் மட்டும் 2,841 பேர் காணமல் போயுள்ளனர்!

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 2,841 பேர் காணாமல் போயுள்ளனர் என்று கிளநொச்சி பிரதேச செயலக பணிமனைத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் போர் முடிவடைந்த பின்னர் போரினால் பாதிக்கபட்ட 21 ஆயிரத்து 793 குடும்பங்களைச் சேர்ந்த 66 ஆயிரத்து…

விடுதலைப் புலிகளுடன் இந்தியா இரகசிய சந்திப்பு

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இந்திய அதிகாரிகள் இரகசியமாக சந்தித்திருந்தனர். அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதில் இந்தியா முக்கிய பாத்திரம் வகித்தது. இவ்வாறு நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரும்…

பிரச்னைகள் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் மறுப்பு

தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான, 'சார்க்' அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, மாலத்தீவு வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்திய தலைமையமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்த்தும் பிரச்னை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, மன்மோகன்…

சவேந்திர சில்வாவை தூதர் பதவியிலிருந்து தூக்கி வீசுங்கள்

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் துணைத் தூதர் மேஜர் ஜனரல் சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி பத்து அனைத்துலக மனித உரிமைகள் குழுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளன. சித்திரவதைகள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான பீரங்கித்…

கடைசி நேரத்தில் இந்தியாவை ஏமாற்றிய இலங்கை!

திருகோணமலை, சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் கைச்சாத்திடப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அது இலங்கை அரசால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே அமைச்சரவையின் விசேட அனுமதியுடன் மின்நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகியிருந்தது. இதற்காக இந்தியாவின் மின்சக்தி எரிபொருள் அமைச்சரும்…

சானல் 4 தயாரிக்கும் “இலங்கையின் கொலைகளம்” பாகம்-2

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை பிரித்தானிய அனைத்துலக ஊடகமான சானல்-4 ஆதாரங்களுடன் வெளியிட்டது. இலங்கையின் கொலைகளம் என்ற தலைப்பில் சானல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் பாகம் 2-ஐ தயாரித்து வெளியிடும் பணியில் தற்போது சானல்-4 ஊடகம் ஈடுபட்டுள்ளது. "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்ற…

இலங்கையில் ரகசிய முகாம்களில் சித்ரவதை

சித்ரவதைகளுக்கு எதிரான ஐநா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் இந்த ரகசிய முகாம்களை நடத்தியதாகவும் இதில் சில முகாம்கள் இன்னமும் செயல்படலாம் என்ற சந்தேகத்தையும் அனைத்துலக பொதுமன்னிப்பு மன்றம் (Amnesty…

தேசியத் தலைவர் பிரபாகரன் மீது ஆணை கூறி பதவியேற்பு

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது பழனி நகராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சோலை கேசவன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் மீது ஆணை கூறி பதவியேற்றுள்ளார். பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளை செயலாளரான…

“உச்சிதனை முகர்ந்தால்” – சிறப்புக் கண்ணோட்டம்

கவிதை பேசும் விழிகள் முழுக்க கனவுகளோடு மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் பட்டாம்பூச்சி போல் சுற்றித் திரிந்த புனிதவதி என்ற 13 வயது ஈழத்துச் சிறுமியின் வாழ்க்கை எப்படி சிதைந்து போகிறது என்ற உண்மைக் கதையை உருக்கமாகச் சொல்கிறது "உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படம். இனவெறி சிங்களத்தினால் சிதைத்துச் சீரழிக்கப்பட்ட…