PKR சட்டமியற்றுபவர்கள், காப்பீடு செய்யப்பட்ட நோயாளிகள் காப்பீடு செய்யப்படாதவர்களை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறார்கள் என்ற கூற்றுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளை வலியுறுத்துகின்றனர். "நுகர்பொருட்கள்" மீது விதிக்கப்பட்ட கட்டணங்கள்மீதான கட்டுப்பாடு இல்லாததற்கு எதிராகவும் அவர்கள் குரல் கொடுக்கிறார்கள். PKR சட்டமியற்றுபவர்கள் குழு ஒன்று, காப்பீடு செய்யப்படாதவர்களுடன் ஒப்பிடும்போது,…
பாஸ் அறிஞர்: ஜிஎஸ்டி இஸ்லாத்துக்கு முரணானது
பொருள்கள் மற்றும் சேவைகள் வரி விதித்தல் இஸ்லாத்துக்கு முரணானது என்று பாஸ் கட்சியின் சமய அறிஞர்கள் பிரிவு கூறுகிறது. பயனீட்டாளர்களின் வருமானத்தின் மீது வரி விதிக்காமல் அவர்கள் செய்யும் செலவு மீது வரி விதிப்பது இஸ்லாத்தின் வரி விதிப்பு கோட்பாட்டிற்கு எதிரானது என்று பாஸ் உலாமா தகவல்…
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
இன்று பிற்பகல் டத்தாரான் மெர்டேகாவைச் சுற்றியுள்ள தெருக்கள் எல்லாம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மே தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்துகொண்டு பொருள், சேவை வரிக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டனர். மாலை 4 மணி அளவில் சுமார் 50,000 பேர் அங்கு திரண்டிருக்கலாம்.…
கர்பால் ஈமச்சடங்கு: காணப்படாத போலீசார் குறித்து விசாரணை
நேற்று நடைபெற்ற கர்பால் ஈமச்சடங்கு ஊர்வலத்தில் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சில போலீசாரே இருந்தனர். பினாங்கு முதலைமைச்சர் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். "நடைபெற்ற பொது ஈமச்சடங்கின் போது காணப்பட்ட குறைபாடுகளுக்காக மக்கள் மன்னிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். "தேவான் ஸ்ரீ பினாங்கிற்கு வெளியில் கூட…
சிவில் சட்டத்தின் கீழ் தமது கடமையைத் தட்டிக்கழித்தார் ஐஜிபி காலிட்
-மு. குலசேகரன், ஏப்ரல் 13, 2014. இஸ்லாத்திற்கு மதம் மாறி விட்ட தமது முன்னாள் கணவர் தமது குழந்தையை தம்மிடமிருந்து பறித்துச் சென்றது குறித்து இந்து தாயார் தீபா செய்துள்ள புகார் மீது போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு நியாயம் கூறிய போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு…
நஜிப் ஆஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார், ஆனால் கேள்விகளைத் தவிர்த்தார்
ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எம்எச்370 விமானத்தைத் தேடும்பணியில் உதவும் ஆஸ்திரேலிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார். சிஎன்என் -இல் நேரடியாக ஒளிபரப்பான செய்தியாளர் கூட்டத்தில் நஜிப் ஓர் அறிக்கையை வாசித்தார். ஊடகங்கள் கேள்வி கேட்கத் தொடங்கியதும் செய்தியாளர் கூட்டத்தைவிட்டுப் …
பிரதமர் உறுதிப்படுத்தினார்: எம்எச்370 இந்திய பெருங்கடலில் காணாமல் போய் விட்டது!
கடந்த 17 நாள்களாக மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட தேடும் பணியைத் தொடர்ந்து, காணாமல் போன மாஸ் விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இன்றிரவு மிக அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் நஜிப் ரசாக் இதனை அறிவித்தார். இச்செய்தியாளர் கூட்டம்…
எம்எம்ஏ: பாலியல் வல்லுறவு பற்றி அமைச்சர் ‘அள்ளிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’
பாலியல் வல்லுறவு என்பதை மலாய்க்காரர்-அல்லாதார் சகஜமானது என்று ஏற்றுக்கொள்வதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜாபார் அள்ளி விட்டிருப்பதைக் கண்டு மலேசிய மருத்துவச் சங்கம் “நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்திருப்பதாக” அதன் தலைவர் டாக்டர் என்.கே.எஸ். தர்மசீலன் கூறியுள்ளார். வான் ஜுனாய்டியின் கூற்று “இழிவானது,…
பள்ளியில் தமிழ், மாண்டரின் பாடங்கள்: கல்வி அமைச்சு ஆழ்ந்து சிந்திக்கிறது
காஜாங் இடைத் தேர்தல் பல அமைச்சர்களையும், குறிப்பாக அம்னோ அமைச்சர்களை, தீவிரமாக சிந்திக்க வைக்கிறது. தேர்தல் காலங்களில் இந்தியர்களையும் சீனர்களையும் ஏமாற்றி அவர்களுடைய வாக்குகளை பிடுங்குவதற்கு என்ன செய்யலாம் என்று அவர்கள் ஆழ்ந்து சிந்திப்பது வழக்கம். இதனை அவர்கள் 1955 ஆம் ஆண்டிலிருந்து வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர்.…
நஜிப் மீதான நம்பிக்கை ஸ்ரீலங்கா பயணத்தால் நொறுங்கியது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தலுக்கு-பிந்திய ஞாபகமறதி என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அதனால்தான் அவர், தாம் எல்லா மலேசியர்களுக்குமான பிரதமர் என்பதை மறந்து போய் விடுகிறார் என வணிகர் ஒருவர் ஆத்திரமாகக் குறிப்பிட்டார். காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும் நஜிப்பின் முடிவு குறித்து கருத்துரைத்தபோது ஜோகூர் இந்திய வர்த்தகச்…
நஜிப் சிறீ லங்காவுக்கு சென்று விட்டார்
இன்று பிற்பகல் மணி 2.00 அளவில் பிரதமர் நஜி ரசாக் மலேசிய மக்களின், குறிப்பாக தமிழர்களின், வேண்டுகோளை துச்சமாக்கி விட்டு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக சிறீ லங்காவுக்கு புறப்பட்டு சென்றார். சிறீ லங்காவில் நவமபர் 15 - 17 தேதிகளில் நடைபெறும் அம்மாநாட்டில் பங்கேற்கும் மலேசிய குழுவிற்கு…
அங்கோர் வாட் இங்கிருந்தால் அதுவும்கூட உடைக்கப்படலாம்
உங்கள் கருத்து ‘வேறுவழி இல்லை, ஐயா. பணக்காரர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமே. அதனால், கோயில் 100 ஆண்டுக்குமுன் கட்டப்பட்டதோ 1,000 ஆண்டுக்குமுன் கட்டப்பட்டதோ உடைக்க வேண்டுமென்றால் உடைக்கத்தான் வேண்டும்” முதலில் சுவரைக் கட்டியது இப்போது மையக் கோயில்மீதே கைவைத்து விட்டது டிபிகேஎல் நூர்டின்: அதிகாரிகளின் செயல் (101ஆண்டு…
எம்பி: செந்தூல் காங்கிரீட் ஆலையின் பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும்
செந்தூலில் உள்ள சிமிண்டையும் காங்க்ரீட்டையும் கலக்கும் ஆலையை மூடி அதனால் சுகாதாரக் கேடு இல்லை என்பது உறுதியான பின்னரே திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பகுதிகளுக்கு அனுப்புவதற்காக காங்க்ரீட்டை உருவாக்கிக் கொடுக்கும் அந்த ஆலையிலிருந்து வெளிப்படும் சிறுசிறு துகள்கள் உடல்நலனுக்குத் தீங்கு செய்யக்கூடியவை என பத்து எம்பி…
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மலேசியாகினி வெற்றி!
மலேசியாகினி நாளிதழ் வெளியிடுவதற்கான உரிமம் வழங்குமாறு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மலேசிய உள்துறை அமைச்சுக்கு விடுத்திருந்த உதரவுக்கு எதிராக மலேசிய அரசாங்கமும் உள்துறை அமைச்சும் செய்திருந்த மேல்முறையீட்டை இன்று செவிமடுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாகத் தள்ளுபடி செய்தது. "நாங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்", என்று மேல்முறையீட்டு நீதிமன்ற மூவர்…
‘அல்லாஹ்’ விவகாரம் மீது பக்காத்தான் பணிந்து போகவுமில்லை, பலவீனத்தை வெளிப்படுத்தவுமில்லை
பக்காத்தான் ரக்யாட் ‘அல்லாஹ்’விவகாரம்மீதான அதன் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்பதை நாளை அதன் தேசிய அளவிலான கூட்டத்துக்குப் பின்னர் அறிவிக்கும். பக்காத்தானின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கையை பாஸ் கட்சி தயாரிக்கும் என பிகேஆர் நடப்பில் தலைவரான அன்வார் கூறினார். “நாங்கள் பணிந்து போகிறோம். பலவீனத்தைக் காண்பிக்கிறோம் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆனால்,…
முக்ரிஸ்: மசீசவும் கெராக்கானும் டிஏபி-யைக் காட்டிலும் ‘இனவாதம் மிகுந்தவையாக’ தெரிகின்றன
சீன வாக்குகளைப் பெற வேண்டும் என்ற வேட்கையில் மசீசவும் கெராக்கானும் ‘இனவாதம்’ பேசுவதில் டிஏபி-யையும் மிஞ்சி விட்டன என்று முக்ரிஸ் மகாதிர் சாடியுள்ளார். “அவற்றின் பேச்சு பிஎன்னை வலுப்படுத்துவதற்கு உதவுமா என்பதை அவை எண்ணிப் பார்க்க வேண்டும். டிஏபி இனவாதம் மிக்கது என்பது தெரிந்ததே. “ஆனால், மசீசவும் கெராக்கானும்…
இழுத்து மூடிவிடுவேன்: ஊடகங்களை மிரட்டினார் ஜாஹிட்
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஊடகங்களை எச்சரிப்பது, மிரட்டுவது போன்ற செயல்களைத் தொடங்கி இருக்கிறார் போலத் தோன்றுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அவர், காணாமல்போன போலீஸ் துப்பாக்கிகள் பற்றிக் கேள்விகேட்ட மலேசியாகினி செய்தியாளரை நோக்கி, “இனி, அதைப் பற்றிப் பேசவே கூடாது” என்று எச்சரித்தார். அதற்கடுத்த நாள், மலாக்கா,…
பெர்சே மக்கள் நீதிமன்ற விசாரணை: ஏஜியை சாடினார் குர்தயாள்
பொதுத் தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்ட மக்கள் நீதிமன்ற விசாரணையை ஒரு விளம்பர பகட்டு வித்தை என்று நேற்று கூறிய மலேசிய சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டெய்லை அந்நீதிமன்ற விசாரணையை வழிநடத்திய பேராசிரியர் குர்தயாள் சிங் நிஜார் கடுமையாகச் சாடினார். "மக்கள் நீதிமன்றம் ஒரு…
ஆலய சச்சரவில் அதிகாரிகளின் நடத்தை மிகைப்படியான ஒன்று- மஇகா
ஜாலான் பி.ரம்லி முனீஸ்வரர் ஆலயத்தில் அமலாக்க அதிகாரிகள் நடந்துகொண்ட முறை அத்துமீறிய ஒன்று என்கிறார் மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம். ஞாயிற்றுக்கிழமை அந்த ஆலயத்தில் 10 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றிக் கருத்துரைத்த அவர், அமலாக்க அதிகாரிகளுக்குக் கூடுதல் பயிற்சி தேவை என்றார். “சில…
‘பள்ளிக்கூடங்கள் நாட்டை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்துகின்றன’
பள்ளிக்கூட முறையின் வழி ஒற்றுமையை ஏற்படுத்த நமது அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்மறையான விளைவுகளைத் தந்து மலேசிய சமுதாயத்தை மென்மேலும் பிளவுபடுத்தியுள்ளதாக ஜனநாயக பொருளாதார விவகார ஆய்வுக் கழகத்தின் (Ideas) தலைமை நிர்வாக அதிகாரி வான் சைபுல் வான் ஜேன் கூறுகிறார். அவர் கல்வி சமநிலைப்படுத்துகிறதா அல்லது பிளவுபடுத்துகிறதா…